Tuesday, November 26, 2013

வாய்மையின் மறுபெயர் வைகோ!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக தியாகச் சுடர் திலீபன் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை ராயபேட்டையில் நடந்தது. அக்கூட்டத்திற்கு சென் றிருந்தேன். தலைவர் #வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்ட மேடையின் முன்பகுதியில் வைகோ, பிரபாகரன், திலீபன் ஆகியோர் வன்னி காடுகளில் நின்றுகொண்டு இருக்கும் புகைப்பட பேனர்கள் வைத்திருந்தார் கள்.

பேனரில் இந்த படத்தில் ஒரு சிறிய மாற்றம் காணப்பட்டது. அது என்ன மாற் றம் என்றால் தலைவரின் இடது பக்கத்தில் பிரபாகரன் இருக்கிறார் வலது பக் கத்தில் புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் அவர்களுக்கு பதில், திலீபன் அவர்கள் படத்தை மாற்றி அங்கு வைத்திருந்தார்கள். இதை தலைவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே நான் பார்த்தேன். இது தவறான செயல் ஆயிற்றே! தலைவர் அவர்கள் வன்னி காடுகளுக்கு சென்ற போது திலீபன் மறைந்து விட்டாரே என்று எண்ணினேன்.

இந்தத் தவறை யாரிடம் சொல்வது என்று ஒருவித தயக்கத்துடன் யோசித்து கொண்டிருந்தேன்.ஏனென்றால் நண்பர்கள் பெரிய பொருட்செலவில் அந்த விளம்பர பேனர்களை வைத்திருப்பார்கள், நாம் இதை சொல்லி அவர்கள் கோபப்பட்டால் என்ன செய்வது என்று யாரிடமும் சொல்லமால் இருந்துவிட் டேன்.

தலைவர் வைகோ அவர்கள் எட்டு மணியளவில் மேடை ஏறினார். இரவு 9.30 மணிக்கு பேசத் தொடங்கினார்.பேச்சின் இடையே அந்த படத்தை பார்க்கும் பொழுது (சுட்டிக் காட்டுகிறார்) எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் என் மன தில் வந்து செல்கிறது. நானும் தலைவர் பிரபாகரன் அவர்களும், பொட்டு அம்மன் அவர்களும் வன்னி காடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுது மேடையில் இருந்தவர் “அது பொட்டு அம்மன் இல்லை திலீபன்” என்று கூறினர்.

உடனே தலைவர் அவர்கள் பேச்சின் இடையே இந்தப்படம் தவாறனது,கணினி வடிவமைப்பில் மாற்றி உள்ளார்கள். இது மிகவும் தவறானது என்று கூறினார். மேலும் நான் ஈழத்திற்கு 1989 இல் தான் பயணம் செய்தேன். அதற்கு முன்னரே திலீபன் இறந்துவிட்டார் என்று கூறினார்.

மேலும் அந்தப் புகைப்படம் வன்னி காட்டில் எடுக்கபட்டது என்றும் என்னு டை ய வலது பக்கத்தில் பொட்டு அம்மன் தான் அன்று இருந்தார் என்றும் தெரிவித் தார். அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எந்தச் செயலை நான் தவறு என்று நினைத்தேனோ அதையே தலை வர் சுட்டி காட்டி விட்டாரே என்ற மகிழ்ச்சி. இப்பேர்பட்ட தலைவனை அடைய நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண் டேன்.

ஆம் நண்பர்களே நன்றாக யோசித்து பாருங்கள், தன் பிறந்தநாளுக்கு போப் ஆண்டவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்றும், சேனல் 4 தொலை காட்சி இயக்குனர் என்னிடம் அலைபேசியில் பேசினார் என்றும் நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லும் தலைவர்கள் இருக்கையில் தானே முன்வந்து என் அருகில் அன்று திலீபன் கிடையாது என்று மேடையில் தெரிவித்த என் தலைவனுக்கு இணையாக யார் உளர்?

வாய்மையின் மறுபெயர் வைகோ! வைகோ!! வைகோ!!!

கட்டுரையாளர் - வைகோ கார்த்திக்

No comments:

Post a Comment