கோவில்பட்டியில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) #மதிமுக சார்பில் மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ம.தி.மு.க.மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.‘‘நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி சார்பில் வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பஸ் நிலையம் அரு கில் உள்ள சவுபாக்கியா டவர்சில் உள்ள கூட்ட அரங்கில் போட்டி நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ–மாணவிகள், கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடனோ அல்லது கல் லூரியில் படிப்பதற்கான அடையாள அட்டையுடனோ பங்கேற்கலாம்.
போட்டியில் 7 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அரசியல் கட்சி யை சாராத கோவில்பட்டி தமிழ் அறிஞர் படிக்கராமு, திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, நாசரேத் மர்காசியஸ் கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் காசிராஜன் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்த உள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு, 24–ந் தேதி நடைபெறும் மண்டல போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப் படும். மண்டல போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 பேர், டிசம்பர் மாதம் 22–ந் தேதி சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் பங்கேற்கலாம்.
மாவட்ட, மண்டல, மாநில பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ–மாண
விகளின் சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் வருகிற ஜனவரி மாதம் 5–ந் தேதி நடை பெறும். அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ பரிசுகளை வழங்குவார். தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2–வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் 3–வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment