Wednesday, November 13, 2013

காமன்வெல்த்துக்கு எதிரான போராட்டம்:வணிகப் பெருமக்களுக்கு நன்றி! வைகோ அறிக்கை

காமன்வெல்த்துக்கு எதிரான போராட்டம்: தமிழகத்தில் மகத்தான வெற்றி! வணிகப் பெருமக்களுக்கு நன்றி! #வைகோ அறிக்கை

மனிதகுல வரலாற்றில் அடால்ப் ஹிட்லரின் நாஜிகள் யூதர்களைக் கொன்று குவித்ததைப் போல, இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவின் சிங்களப் பேரினவாத அரசின் அநீதி யான அக்கிரமங்கள் நிறைந்த கோரக்கொடுமைகளை எதிர்த்து, தமிழக மக்கள் நேற்று (12.11.2013) நடத்திய முழு அடைப்புப் போராட்டமும், குறிப்பாக கடை அடைப்புப் போராட்டமும், இரயில் மறியல் போராட்டமும் மகத்தான வெற்றி யைப் பெற்றது.

வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட இருபது தன்மானத் தமிழர்கள் தங்கள் உடம்பில் பெட்ரோலை ஊற்றி அணைத்துக்கொண்ட மரணத் தீ, தமிழர்களின் நெஞ்சில் அணையாத நெருப்பாகவே கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை தமிழக மக்கள் நேற்று நிரூபித்துவிட்டனர்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதற்காக வணி கப் பெருமக்கள் நவம்பர் 12 ஆம் தேதி கடைகளை அடைக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஆதரித்து நானும் மூன்று அறிக்கைகள் கொடுத்தேன்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க., ஆண்ட கட்சியான தி.மு.க., பொதுவுடைமைக் கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட இன்னும் பல கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கும், கடை அடைப்புக்கும் எந்த ஆதரவும் தர வில் லை. அறிக்கையும் தரவில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது உருக்கமான வேண்டுகோள் கடிதம் துண்டுப் பிரசுரங்களாக இலட்சக் கணக்கில் அச்சடிக் கப்பட்டு, நவம்பர் 11 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கடை கடையாகச் சென் று பிரசுரங்களைத் தோழர்கள் தந்தபோது, வியாபாரிகள் முகம் சுளிக்காமல் அன்போடு அதைப் பெற்றுக்கொண்டு, கடைகளை அடைப்பதாக அவர்கள் கூறி ய செய்தி அறிந்து மனதில் ஆறுதல் கொண்டேன்.

பொருள் நட்டத்தைப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் பல்வேறு நகரங்க ளிலும் ஏராளமான கிராமங்களிலும் வியாபாரிகள் முழுமையாகக் கடைகளை அடைத்துள்ளனர்.

மற்ற நகரங்களிலும் 70 விழுக்காடு கடைகளை அடைத்துள்ளனர். அந்த வணி கப் பெருமக்களுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியை யும் தெரிவிக்கிறேன்.

அதைப்போலவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கூட்டிய பல்வேறு அமைப்புகளின் கூட்டத்தில், நவம்பர் 12 ஆம் தேதி இரயில் நிறுத்தப் போராட் டம் நடத்துவதென எடுக்கப்பட்ட முடிவினை செயல்படுத்த, தலைநகர் சென் னையிலிருந்து அனைத்து இரயில் நிலையங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது. தமிழ் உணர் வாளர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று, பல்லா யிரக்கணக்கில் இதில் கைதாகினர்.

தமிழ்ச் சாதி நாதியற்றுப் போகவில்லை என்பதை தாய்த் தமிழகம் உலகத்துக் கு உணர்த்தி உள்ளது. கொடியவன் ராஜபக்சே கூட்டத்தையும், அவர்கள் நடத்தி ய தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசையும் பன்னாட்டு நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்கும் தமிழ் இனத்தின் இளம் தலைமுறையினர் அடுத்த டுத்து அறப்போர்களை முன்னெடுக்கவும், தாய்த் தமிழகம் கடமையாற்றவும் சபதம் ஏற்போம்.

‘தாயகம்’                                                                     வைகோ
சென்னை - 8                                              பொதுச்செயலாளர்
13.11.2013                                                      மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment