Monday, November 11, 2013

ஸ்டெர்லைட் வழக்கு; வைகோ மேல்முறையீடு ஏற்பு !

ஸ்டெர்லைட் வழக்கு; #வைகோ மேல்முறையீடு ஏற்பு !

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றுவதற்காக, கடந்த 17 ஆண்டுகளாக, நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி வருகின்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஆகஸ் ட் 8 ஆம் தேதியன்று, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில்,ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று வழங்கிய ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் மேல்முறையீடு, விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பட்நாயக், நீதிபதி நிஜார், நீதிபதி இப்றாஹிம் கலிஃபுல்லா ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பசுமை அமர்வு, இன்று அறிவித்தது.

இன்றைய விசாரணையின்போது, வைகோ அவர்களுடன், ம.தி.மு.க. சட்டத் துறைச்செயலாளர் தேவதாஸ் தலைமைக்கழக வழக்கறிஞர் ஆனந்தசெல்வம்  ஆகியோர் உடன் இருந்தனர்.

‘தாயகம்’                                                           தலைமைக் கழகம்
சென்னை - 8                       மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
11.11.2013

No comments:

Post a Comment