Sunday, November 3, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 28

நாள்:-23.06.2008

இந்தியப் பிரதமர், இலங்கை செல்லக் கூடாது!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் மண்ணின் மைந்தர்களா ன தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, இலங்கை அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்திய அரசின் வெளிப்படையான, ரக சியமான, நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால், அது மேலும் தெளி வாகத் தெரிய வருகிறது.
2008, ஜூன் 20ஆம் தேதி வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்புச்
செயலாளர் திரு.விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர் மட்டக் குழு, இலங்கை அரசுடன் கலந்து ஆலோசிப்பதற்காகக் கொழும்பு சென் றதாக, இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளி யாகி இருந்தது.

அங்கு சென்ற இந்தியக் குழு, அந்நாட்டு அதிபர் திரு.மகிந்த ராஜபக்சேயையும்,
பாதுகாப்புச் செயலாளர் திரு.கோட்டபயா ராஜபக்சேயையும், அதிபரின் செய லாளர் திரு.லலித் வீரதுங்கா அவர்களையும் சந்தித்ததாக நம்பத்தகுந்த வட்டா ரங்களில் தெரிய வருகிறது. அவர்களது பயணம், பரம ரகசியமாக வைக்கப் பட்டு இருந்தது.

இலங்கை அதிபர் அலுவலகத் தரப்பில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்ட செய் தியில், இலங்கை வந்து உள்ள இந்திய உயர்மட்டக் குழு, இலங்கைத் தீவின் பாதுகாப்பு அம்சங்கள், வடக்குப் பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெறு கின்ற இராணுவத் தாக்குதல், வடமேற்கு இலங்கைக் கடற்பகுதியில் ஊடுரு வும் இந்திய மீனவர்கள் பிரச்சினை, மேலும் ஆகஸ்டு முதல் வாரத்தில் கொழும்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாடு உள்ளடக்கிய பல்வேறு செய்திகளையும், வெள்ளி, சனி ஆகிய இருநாள்களிலும் விவாதிக்க இருப்ப தாகக் குறிப்பிட்டு உள்ளது.

இலங்கையில் மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படு கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இலங்கை இனவாத அரசுக்கு, இந்திய அரசு அளிக்கின்ற அனைத்து இராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நேரிலும், கடிதம் மூலமாகவும் நான் மீண்டும் மீண்டும் தங் களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட கோரிக்கை, சிறிதும் அக்கறை இன்றி, பொறுப்பு அற்ற முறையில் தூக்கி வீசப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 இல் இந்திய - இலங்கை பாதுகாப்பு
ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், இந்திய அரசு இலங்கை அர சுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தளவாடங்களையும் வழங்கி, அந் நாட்டு இராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை செய்வதற் கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

இந்திய அரசு இலங்கை விமானப்படைக்கு ராடார்களைக் கொடுத்ததன் விளை வாக, அந்நாட்டு விமானப்படை குண்டு வீசித் தாக்கி அப்பாவித் தமிழர்கள் பலர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டார்கள். அத்தாக்குதலில் செஞ்சோலை படு கொலை குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.

தமிழர்களின் குருதி தோய்ந்த கைகளோடு இந்தியா வந்த இலங்கை அதிபரை யும், அந்நாட்டு அமைச்சர்களையும் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து வர வேற்றது மாபெரும் தவறு என்று இந்திய அரசை நான் குற்றம் சாட்டுகிறேன்.

வெறும் 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலரை இலங்கை அரசின் பாது காப்பு அமைச்சகத்துக்குக் கடனாக வழங்கியதால்,அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, தமிழ்  இனத்தையே அழிக்க முற்படுகிறார்கள். அதற்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொலை
செய்தும் வருகிறது.தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமையில் இருந் து இந்திய அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறேன். 
போதாதென்று, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல இந்திய அதி காரிகளின் உயர் மட்டக்குழு, தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு எதிராக, இலங்கை அரசுடன் விவாதித்துக் கொண்டு இருக்கிறது. (குறிப்பு : நாளிதழ் களில் இந்த வரிகள், ‘‘தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து’’ என்று தவறு தலாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.)

இந்தியக் கடல் நீர்ப்பரப்புக்கு அருகில், பன்னாட்டுக் கடல்நீர்ப்பரப்பில் கடலுக் கு அடியில் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்க, இலங்கை அரசுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது, இந்திய இறையாண்மையை மாற்றாருக்கு அடகு வைத்த செயல் ஆகும் என்று இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை வாழ்     தமிழர்களுக்காக தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் பன்னாட்டுச் செஞ்சிலுவைச்
சங்கத்தின் வழியாக, இலங்கைத் தமிழர்களுக்கு அளிப்பதற்கு அனுமதி மறுத்த இந்திய அரசு, மனிதாபிமானத்தை ஆழ் கடலில் புதைத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறேன்.

பண்டித ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி ஆகியோரது தொலை நோக்குப் பார்வையால் வரையறுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தமிழ்  இனத்தைப் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டு செயல்படும் இனவாத இலங்கை அரசுக்கு, மேலே குறிப்பிட்டு உள்ள மூன்று இந்திய அதிகாரிகளும் துணைபோகிறார்கள் என்று மிகுந்த வேதனை யோடு குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தீவில் கொல்லப்படும் தமிழர்களின் உயிருக்கு,இந்திய மக்கள் மன் றத்திலே பொறுப்பு ஏற்கவும்,பதில் சொல்லவும் கடமைப்பட்டு இருப்பது ஐக்கி ய முற்போக்குக் கூட்டணி அரசும்,அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளு மே ஆகும்.

மேலே குறிப்பிடப்பட்டு உள்ள உண்மைகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு வில் நடக்க இருக்கின்ற ‘சார்க்’ உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது எனும் எனது தெளிவான கருத்தை நான் இங்கு பதிவு செய் கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 27 

No comments:

Post a Comment