காங்கிரசு அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது களத்தில் நிற்க ஆயத்தமாவோம் என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கொள்கை விளக்க அணிச் செயலா ளர் க.அழகுசுந்தரம் எழுச்சி உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:
சிவகாசியிடம் இருந்து பிரிக்க முடியாதது தீபாவளியும், பட்டாசும் மட்டுமல்ல
வைகோவும்,நாடாளுமன்றமும்தான் என்று திசைகள் திரும்பிப் பார்க்கிற இந்த
மாநாட்டில் “முன்னேறிச் செல் அதிகாரத்தைக் கைப்பற்று” என்று கரூர் பிரக டனத்திற்கு விருதுநகரில் வெள்ளோட்டமோ என்கிற அளவுக்கு எப்போதும் இல்லாத எழுச்சியோடும்,எதிர்பார்ப்போடும் நடைபெறுகின்ற பேரறிஞர் அண் ணா பிறந்தநாள் விழா மாநாட்டுத் தலைவர் உயர்நிலைக்குழு உறுப்பினர், கழக நிகழ்ச்சிகளை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தொலைக்காட்சி இல்லையே என்று நாம் கவலைப்பட்டபோது, இதோ!நான் இருக்கிறேன் என்று தக்க சமயத்தில் தோள்கொடுத்த அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்களே,
மாற்று அரசியலுக்கு வாசல் திறந்து வைக்கப் போகிற மாநாட்டைத் திறந்து
வைத்த ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்,சிறுகதை மன்னன் தென்னரசும், கொம் புக்கார னேந்தல் திராவிட இயக்கத்துக்கு தந்த நெம்புகோல் அண்ணன் தா.கிரு ஷ்ணனும், வேலும் வாளுமாகச் சுழன்ற சிவகங்கைச் சீமையில் வைகோவின் வரிப்புலியாக களமாடும் புலவர் செவந்தியப்பன் அவர்களே,
வரவேற்புரை ஆற்றிய விருதுநகர் மாவட்டக் கழகத்தின் செயலாளர்,திராவிட
இயக்கத்தில் புயல்வீசிய 90களின் தொடக்கத்தில் வைகோவை வைத்துக் கூட் டம் நடத்தக்கூடாது என்று கோபாலாபுரம் கொக்கரித்த வேளையில், தம்பி வா! தலைமை தாங்க வா! நரிக்குடிக்கு வா! நான் இருக்கிறேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தினுடைய இலட்சியப் பயணத்திற்கு அகரம் எழுதிய ஆற்றல் அரசர் ஆர்.எம்.எஸ். அவர்களே,நிறைவாக உரை முழக்கம் செய்ய விருக்கின்ற கரை கடந்த தமிழர்களின் கலங்கரை விளக்கம், நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒன்றையொன்று ஒட் டிக் கொள்ளும் என்பார்கள்.
இயக்கத்தில் புயல்வீசிய 90களின் தொடக்கத்தில் வைகோவை வைத்துக் கூட் டம் நடத்தக்கூடாது என்று கோபாலாபுரம் கொக்கரித்த வேளையில், தம்பி வா! தலைமை தாங்க வா! நரிக்குடிக்கு வா! நான் இருக்கிறேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தினுடைய இலட்சியப் பயணத்திற்கு அகரம் எழுதிய ஆற்றல் அரசர் ஆர்.எம்.எஸ். அவர்களே,நிறைவாக உரை முழக்கம் செய்ய விருக்கின்ற கரை கடந்த தமிழர்களின் கலங்கரை விளக்கம், நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒன்றையொன்று ஒட் டிக் கொள்ளும் என்பார்கள்.
ஆனால், என் தம்பிகளே, என் கையில் இருக்கிற நம்பிக்கை நாரினால் உதிர்ந்த
பூக்கள் மாத்திரமல்ல, உதிர்ந்த நட்சத்திரங் களையும் ஒன்றையொன்று பற்றிக் கொள்ளும் என்கிற அளவுக்கு உரை யாற்ற காத்திருக்கிற வணக்கத் திற்கும், வழிகாட்டுதலுக்கும் உரிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழகத் தின் நிர்வாகிகளே,கொடிகளை ஏற்றி வைத்து,கண்காட்சிகளை திறந்து வைத்து, தியாகிகளின் திருவுருப் படங்களை திறந்து வைத்திருக்கின்ற இயக் கத்தின் தளகர்த்தர்களே, திரளாகக் கூடியிருக்கிற தமிழ்க்குடி மக்களே, தாய் மார்களே, பாராட்டுதலுக்குரிய பத்திரிகையாளர்களே, பூனைக்குட்டி களெல் லாம் யானைக்குட்டிகள் என்று ஆர்ப்பரிக்கிற போது, புரட்சிப் புயலின் புலிக் குட்டிகள் நாங்கள் என்று புயவலிமை காட்டப் புறப்பட்டு வருகைத் தந்திருக் கின்ற வைகோவின் வானம்பாடிகளே, வணக்கம்.
என்னை பேச அழைக்கிறபோது, கெட்டி வயலிலே முட்டிப் பாய்கின்ற கட்டி
வளர்த்த ஜல்லிகட்டுக் காளையொன்று அடிமாடாகிவிட்டதால், ஓடி ஆடித் திரிந்த கன்றுக் குட்டியை காளங்கன்றை வயலில் அவிழ்க்க, வடக்கில் பூட்ட,
மஞ்சு விரட்டுப் பழக்க, மூக்கணாங்கயிறு குத்துவதைப் போல, என் தலை வனே, கொள்கை விளக்கச் செயலாளர் என்கிற பொறுப்பு என் தோள்களில் சுமத்தி இருப்பதலோ என்னவோ, வழக்கமாக வார்த்தை சிக்சர்களை வீசுகிற என்னால் இன்றைக்கு உங்கள் முன்னால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நின்று உரை ஆற்ற வேண்டி தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கிறேன்.
அறிஞர் பெருந்தகை அண்ணாவினுடைய நூற்றாண்டு விழா மாநாடு மதுரை யில், அந்த மாநாட்டு நிகழ்வுகளையெல்லாம் நீங்கள் பார்க்க வருகிற பொழுது நீங்கள் சொன்னீர்கள்,1960களின் தொடக்கத்தில் நான் மாணவனாக மதுரை மாநாட்டுக்கு வந்த போது, நண்பன் காளிமுத்து நான்மாடக் கூடலிலே எழுதி வைத்திருந்த வாசகம்,இன்றைக்கும் என் அடிமனதில் அப்படியே பதிந்து இருக் கிறது என்று சொன்னீர்கள். முத்து மதுரை இது.முத்தமிழ் மதுரை இது.
முன்னேற்றக் கழகத்தின் கொடி பறக்கும் கோட்டை இது. என்று அன்றைக்கு
எழுதிய உங்கள் நண்பன் இன்றைக்கு இருந்திருந்தால் இந்த மாநாட்டைப்பார்த் திருந்தால் “வைகோ விருதுநகர்,பெருந்தலைவர் பிறந்த நகர், மறுமலர்ச்சி
தி.மு.க. மறுபடியும் வெல்லும் நகர்”என்று சொல்லும் அளவுக்கு தமிழக அரசி யலில் உங்கள் அத்தியாயம் ஆரம்பமாகி விட்டது என்று அகிலத்திற்கு அறி விக் கின்ற மகாநாட்டில்.
இந்த மாநாட்டிலே காலையில் இருந்து பேசுகின்ற சொற்பொழிவாளர்களை,
தலைமைக் கழகத்தின் செயலாளரும், ஆய்வு மையச் செயலாளரும் கலந்து
ஆலோசித்த போது, என்னை ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ என்று பேச வேண் டும் என்றும், எல்லா தலைப்பிலேயும் தலைவர் பெயரைச் சேர்த்து எழுத வேண்டும் என்று அய்யா பெரியவர் தமிழ்மறவன் சொன்னபோது, இராமன் இல்லாத அயோத்தி சீதைக்கு சூனியமாகத் தெரிந்ததைப் போல, பத்தாண்டு காலம் நீ இல்லாத நாடாளுமன்றத்தை படம் பிடிப்பதற்குத்தான் தவமாய் தவம் கிடந்தேன்.
ஆனால், நாடாளுமன்றத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம் அதை விடவும்
ஒரு பேராபத்து இன்றைக்கு இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களை சூழ்ந்தி ருக்கிறது.ஆகையினால் சூலக்கரையில் இருந்து குறி வைக்க வேண்டிய இடம் ஈழக்கரை என்று சொன்ன காரணத்தினால் “காமன் வெல்த்தும் பேராபயமும்” என்று எல்லோரையும் போல் நானும் ஒரு ஐந்து மணித்துளிகளுக்குள்ளாக உரையாற்றி விடைபெற விரும்புகிறேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாற்றில் பொன்
எழுத்துகளால் பொறிக்கத்தக்க வகையில் இந்த மாநாட்டில் பல்லவியை தொ லைத்துவிட்ட பாட்டு வரிகளாய்,வெளிச்ச பூக்களை இழந்து தவிக்கிற இருட் டுக் குருடர்களாய், அலைபாயும் கடலில் கவிழும் கட்டுமரங்களாய்,அகிலத்து வீதிகளில், பன்னாட்டு வீதிகளில் சர்வதேச சாலைகளில் பஞ்சைப் பராரிக ளாய் நொந்தலைந்த போது, கிழக்கு வெளுக்கும் கீழ் வானம் சிவக்கும் தொடு வானம் தூரமில்லை! கொலைவாளினை எடுப்போம், சிங்களக் கொடியோன் கொலை அறுப்போம் என மீண்டும் பிரகடனம் செய்ய தம்பி வருவான் தமிழ் ஈழம் தருவான் என்கிற நல்ல செய்தியை நடவுசெய்திருக்கின்ற பொற்காலத் தில்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, தீ பட்ட காயத்திலே தேள் வந்து
கொட்டுவதைப்போல, இடி விழுந்த வீட்டை பூகம்பம் தாக்குவதைப்போல,
இலங்கையிலே காமன்வெல்த் மாநாடு.அதை வரிந்து கட்டிக்கொண்டு நடத்து வதற்கு பின்புலத்திலே இந்திய சர்க்கார் என்றால், நாடாளுகின்ற பிரதமருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டின் மூலம் தெரிவித் துக் கொள்ளுகின்ற செய்தி, எங்கள் உடம்பின் கடைசி சொட்டு இரத்தம் இருக் கின்ற வரையிலும் பஞ்சாபை இந்தியாவில் இருந்து வெட்டி எடுக்காமல் விட மாட்டோம் என்று வாளோடு உலவிய தாராசிங்கம் போல், தமிழ்நாட்டு இளை ஞர்களுக்கும் வீரம் உண்டு என்பதை இந்த மாநாட்டின் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இலங்கையிலே காமன்வெல்த் மாநாடா? மறுமலர்ச்சி திமுக மாணவர் படை என்ன செய்ய போகிறது என்று ஈரோடு மாவட்ட மாணவர் அணி நடத்திய குறு வட்டை காலையிலே வெளியீட்டீர்கள். பல்வேறு இணையதள நண்பர்கள் என் னிடத்திலே கேட்டார்கள். ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாமா? என்று இன் னொரு தம்பி கேட்டார். இல்லை யில்லை இந்திய வெளியுறவு கொள்கையை தீக்கு இறையாக்கலாமா? அதையும் தாண்டி ஒரு நண்பன் சொன்னார். அண் ணா மூன்று மாநிலங்களை கடந்து, நான்காயிரம் மைல்களுக்கு அப்பால் பட்சி சோலைக்கு சென்றார் நம்முடைய தலைவர்.இன்னும் 30 மைல்கள்தான் இருக் கிறது என்றெல்லாம் சிந்திருக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் சிந்தித் துச் செயல்படுகிறார்கள்.
ஆக, ஆதவன் மறையாத சாம்ராஜ்யத் திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின் பிடியிலே இருந்து விட்டு விடுதலையான நாடுகள், தங்க ளுடைய பழைய பாராளுமன்ற ஜனநாயகத்தை அந்த உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப் பட்ட காமன்வெல்த் என்கிற அமைப்பு, அந்த அமைப்பிலே இருந்து பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு அமைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
ஜிம்பாவே என்கிற நாட்டிலே கொண்டு வந்த நிறச்சீர்திருத்த சட்டத்தின் கார ணமாக அங்கே ஏற்பட்ட நிலை குலைவின் காரணமாக ஓராண்டு காலம் அந்த நாடு நீக்கிவைக்கப்பட்டிருந்தது.கர்த்தர் அருளினார், கருப்பர் அடிமைகள் கை, கால் ஒழிக்க என்று நிறவரிக் கொடுமையை ஏற்படுத்திய தென்னாப் பிரிக்கா நீண்டகாலம் காமன்வெல்த் அமைப்பிலே இருந்தது நீக்கிவைக்கப் பட்டிருந் தது.
பக்கத்திலே இருக்கின்ற பாகிஸ்தான் நாடு இரண்டு முறை இராணுவத்தின்
பிடியிலே பர்தேஸ் முஷரப் அவர்கள் நவாஷ் ஷெரிப்பை தூக்கி வீசியபோது
அது காமன் வெல்த்திலே இருந்து நீக்கிவைக்கப் பட்டது. அதைப்போல சிரி என் கிற சின்னஞ்சிறிய தீவில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த மகேந்திர சவுத்ரி
ஆட்சியை தூங்கி எறிந்த போது,இராணுவத்தின் பிடியிலே ஆட்சியைக் கைப் பற்றியபோது காமன்வெல்த் அமைப்பிலே இருந்து இருமுறை நீக்கிவைக்கப் பட்டிருந்தது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக இலங்கையிலே தமிழர்கள் இருப்பதைப்போல, நைஜீரிய வடபகுதியில் இருக்கிற ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மைஇனத்திற்கு பெயர் ஒகோனிய மக்கள்.அந்த மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தவனுடைய பெயர் கன்சிவோமா. அவனோடு 9 பேர் கைது செய்யப்பட்டு காராக்கடத்தில் அடைக்கப்பட்டு வழக்கு விசாரணை என்கிற நாடகம் அரங்கேற்றப்பட்டு மரண
தண்டனை விதிக்கப்பட்டது. 9 பேரும் தூக்கிலிடப்பட்டார்கள்.
இதற்கு தலைமை தாங்கிய சர் திவான்.பொடா என்கிற பொல்லாத சட்டத்தில்
அந்த எட்டு பேரும் நாயகன் வைகோவும் கைது செய்யப்பட்டபோது பூவிருந்த
வல்லி நீதிமன்றத்திலே நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் நான் விடு தலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன்.
அந்த எட்டு பேரும் பேசவில்லை என்று சொன்னதைப்போல, அந்த ஒகோனி
மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்த விவாஸ் சொன்னான். நான்தான் குற்றவாளி. அந்த எட்டு பேரையும் விட்டுவிடுங்கள் என்று சொன்னதற்கு பிற கும் அந்த எட்டு பேரையும் அவனுக்கு முன்னால் துடிக்க துடிக்க தூக்கில் போடப்பட்டு கடைசியாக விவாவையும் தூக்கில் போட்டார்கள். இது அநீதி, அராஜகம், அக்கிரமம் என்று சொல்லி சர்வதேச சமுதாயம் கதறி அழுதது. பன் னாட்டு மன்றம் பரிதவித்த போது அந்த நாடு நைஜிரியா காமன்வெல்த் அமைப் பிலே இருந்து நீக்கிவைக்கப்பட்டது.
அப்படியானால் இந்த மாநாட்டின் மூலமாக நான் தெரிவிக்கின்ற செய்தி 9 பே ரை தூக்கிலே போட்டதற்காக ஒரு நாடு காமன்வெல்த் அமைப்பிலே இருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்றால், 9 பேர், 18 பேர் அல்ல, ஆயிரம் பேர் ஈராயிரம் பேர் அல்ல, இலட்சக்கணக்கான தமிழர்களை ஒரே நாளில் முள்ளி வாய்க்கா லிலே கொள்ளி வைத்த கொடுமை.
அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் காலையிலே பேசுகிறபோது தம்பி மணி வேந்தன் சொன்னானே, அங்கே போன பன்னாட்டு மன்றத்துடைய மனித உரி மை ஆர்வளர் நவநீதம்பிள்ளையின் கால்களிலே விழுந்து கைகளைப் பற் றிக் கொண்டு கதறி அழுகின்ற சம்பவங்கள்.நிலமிழந்து, வாழ்விழந்து, வள மி ழந்து எல்லாம் இழந்ததற்கு பிறகு பாஞ்சால நாட்டு பெருவீதிகளில் யாசகம் கேட்கிற பாண்டுவின் பிள்ளைகளாக இன்றைக்கு கதறி கண்ணீர் வடிக்கிறார் களே.
எங்கள் இனங்களை கருவருத்தீர்களே,அப்படியானால் இலட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த,அந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இந்தியா இலங்கையிலே காமன் வெல்த்திலே கலந்து கொள்ளக் கூடாது என்பது மறு மலர்ச்சி தி.மு.க.வின் நிலைப்பாடு.
இலங்கையிலே காமன்வெல்த்தே நடக்க கூடாது.இலங்கையை காமன் வெல்த்திலே இருந்து நீக்க வேண்டும்என்று இந்தியா முடிவெடுக்க வேண்டும்.
இல்லையென்றால் இந்தியாவில் நாங்கள் இருக்க வேண்டுமா? என்று முடி வெடுக்க வேண்டிவரும் என்பதை அடக்கத்தோடு பதிவு செய்ய விரும்புகி றேன். இது நான் சொன்ன செய்தி அல்ல.
நமது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் 67 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்திலே மக்களவையிலே பேசு கிறபோது சொன்னார். 67 ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடுகிற நாம் நூற் றாண்டு கொண்டாடுகிறபோது, இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது.
ஆனால், இந்தியாவில் இருந்து தமிழகம் துண்டாகி விட வேண்டும் என்று என்
அறிவு சொல்கின்ற அளவிற்கு மத்திய சர்க்கார் இன்றைக்கு இருக்கிற காங் கிரஸ் அரசாங்கம் தொடர்ந்து இலங்கை தமிழர் பிரச்சனையில் எங்களை வஞ் சிக்கிறது.
இலங்கையிலே காமன்வெல்த் நடைபெறக் கூடாது. காமன்வெல்த்திலே இருந்து இலங்கையை நீக்க வேண்டும்.நிறைவாக உரை முழக்கம் செய்ய
இருக்கின்ற பொதுச்செயலாளர் அவர்களே, அறிவியுங்கள் களத்திற்கு ஆயத்த மாக இருக்கிறோம். நன்றி வணக்கம்.
இவ்வாறு க.அழகுசுந்துரம் உரை ஆற்றினார்.
இருக்கின்ற பொதுச்செயலாளர் அவர்களே, அறிவியுங்கள் களத்திற்கு ஆயத்த மாக இருக்கிறோம். நன்றி வணக்கம்.
இவ்வாறு க.அழகுசுந்துரம் உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment