Thursday, November 21, 2013

மாதிரிப் பள்ளிகள் எனும் மாயை

சங்கொலி தலையங்கம்

உலக மயம், தனியார் மயம், தாராளமயம் நாட்டின் அனைத்து சமூக, அரசியல்
மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீரழிவை கொண்டுவந்தது போலவே, கல் வித்துறையிலும் புகுந்து சிதைத்து வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவையும் இன்றியமையாதன ஆகும். ஆனால், இவை இன்று அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு பெரும்பாலும் தனியார் கைகளுக்கு போய் விட்டன. அரசியல் சட்டத்தின் பிரிவு 21 அடிப்படை உரிமைகள் குறித்து பேசு கிறது. இதில் சட்டப் பிரிவு 21ஏ என்பது அரசியல் சட்டத்தின் 86 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, 2002 ஆம் ஆண்டில், கல்வியும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது.

இதன்படி,நாட்டிலுள்ள 6வயது முதல் 14வயது வரை உள்ள குழந்தைகள் அனை வருக்கும் அடிப்படைக் கல்வி புகட்டுவது என்பது சட்டப்பூர்வமாக்கப் பட்டது. பின்னர் 2009 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 2010 ஏப்ரல் 1 ஆம் நாள் நடை முறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம், (Right to Education Act-RTE)  குழந்தை களின் கல்வி உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கு சில வழிகாட்டுதல் களை அளித்தது. இதன் மூலம் தனியார் மய கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்ட துடன், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் தெரிவிக்கிறது.

குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வியை உறுதி செய்ய வேண்டிய
கடமையில் உள்ள அரசு, தனது பொறுப்பை தனியார் பள்ளிகளின் மீது ஏற்றிய தின் மூலம் கல்வித்துறையில் தனியார் ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கி யது. அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, குறைபாடுகளை அகற்றி, கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு அடிப்ப டைக் கல்வியை இலவசமாக அளித்து மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக் கு உள்ளது.

ஆனால், இன்று சந்தையில் விற்கப்படும் பண்டமாக கல்வியை மாற்றியது
மத்திய-மாநில அரசுகளே. அரசுப் பள்ளிகள் என்றாலே தரம் குறைந்தவை, தனி யார் பள்ளிகளின் மூலம்தான் சிறந்த கல்வி பெற முடியும் என்ற நிலை மக்களி டையே உருவானதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு.


தனியார் கல்வித் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ‘ராஷ் டிரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற பெயரில் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற் பில் (Public Private Partnership-PPP) பள்ளிகளை உருவாக்க முடிவு எடுத்துள்ளது. இதன்படி 2007 ஆம் ஆண்டு, பிரதமர் அறிவித்த ‘மாதிரிப் பள்ளித் திட்டம்’ (Model School Scheme) 2008 நவம்பர் முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் 6,000 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், இதில் 3,500 மாதிரிப் பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய
பகுதிகளில் மாநில அரசுகள் மூலம் தொடங்கப்படும் என்றும், எஞ்சிய 2,500
பள்ளிகள், கல்வியில் பின்தங்கி இராத ஏனைய பகுதிகளில் அரசு-தனியார்
கூட்டுப் பங்கேற்பில் தொடங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக
இவை திகழும். இங்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமும், ஆங்கிலமொழி பயிற்றுத்
திட்டமும் தான் நடைமுறைப்படுத்தப்படும். மாதிரிப் பள்ளிகளில் 40 சதவீதம்
மாணவர்கள் நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கப்படுவர். எஞ்சிய 60 சதவீத
மாணவர்களை தனியார் பள்ளி உரிமையாளர்கள் தமது விருப்பத்திற்கேற்ப
சேர்த்துக்கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு
மேலே கட்டணம் உண்டு. 60 சதவீத மாணவர்களின் கல்விக் கட்டணத்தை
கல்வி நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

மேலும், ஆசிரியர்கள் சம்பளம், இதர பணி நிலைகள் எல்லாம் தனியார் விருப் பப்படி அமைத்துக் கொள்ளலாம். பள்ளியை கல்வி சாராப் பணிக்கும் பயன் படுத்திக்கொள்ளலாம். மத்திய அரசு பத்து ஆண்டு காலம் மட்டுமே மானியம் அளிக்கும். இத்திட்டப்படி தமிழகத்தில் 356 பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு தாக்கீது அனுப்பி இருக்கிறது.

‘ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா’ கல்வித் திட்டத்தின் மூலம் அனைவருக்கும்
சமமான தரமான கல்வி வழங்குவது என்ற அரசியல் சாசனத்தின் சட்ட விதி களை மத்திய அரசு புறக்கணித்து இருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்து
கல்வியை தனியார் துறைக்கு தள்ளிவிடும் அப்பட்டமான தனியார்மய கொள் கையை இதன் மூலம் மத்திய அரசு சட்டபூர்வமாக்கியது மட்டுமின்றி, மாநி லங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு இடுகிறது.

பொதுப் பள்ளிகள் - அருகாமைப் பள்ளிகள் மூலம் குக்கிராமங்களில் உள்ள
ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் கல்வி பெறும் உரிமையை அரசே தட்டிப்
பறிக்கிறது. தனியார் துறையே கல்வியில் சிறந்தது என்ற மக்களின் மனோ
நிலையை மேலும் வலுவூட்டி, தனியார்மய புதைமணலில் கல்வித்துறையை
சிக்க வைத்திடும் முயற்சிதான் இத்திட்டம். அரசுப் பள்ளி முறையைக் காட்டி லும், தனியார் கல்வி முறையே சிறப்பானது என்று மத்திய அரசு ஒப்புக்கொண் டதின் மூலம், கல்வி ஒட்டுமொத்தமாக தனியார்துறையின் கட்டுப்பாட்டிற்குச் செல்ல வழி வகுக்கப்பட்டு இருக்கின்றது.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் தேசிய கலைத் திட்டம் போன்றவற் றின் பல விதிகளை மீறுவதாக மாதிரிப் பள்ளிகளின் செயற்திட்டம் இருக்கின் றது. தற்போதைய நிலையில் கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, அரசின் சட் டத் திட்டங்கள் கல்விக் கொள்கைகள் எவற்றையும் மதிக்காமல் தான்தோன் றித் தனமாக தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில்
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளை என்பது தனியார் கல்வி
நிலையங்களில் சர்வ சாதாரணமாக தலைவிரித்து ஆடுகிறது. தமிழ் நாட்டில்
தனியார் பள்ளிகளின் கட்டணங்களை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட நிபுணர்
குழுக்களின் பரிந்துரைகள் தனியார் கல்வி நிறுவனங்களால் நடைமுறைப்
ப டுத்தப்படவில்லை. தமிழக அரசும் முறையான கண்காணிப்பு செய்திட வில் லை.

தமிழ்நாட்டை எல்லா வகையிலும் சீர்குலைத்த கருணாநிதி ஆட்சியும், ஜெய லலிதா ஆட்சியும் கல்வித்துறையையும் விட்டுவைக்கவில்லை. அரசியல்
சட்டம் வலியுறுத்தும் சமமான கல்வியை வழங்க வேண்டிய பொதுப் பள்ளி களுக்கு மூடுவிழா நடத்தி, தனியார் மயத்துக்கு தள்ளியதற்கு இரண்டு ஆட்சி களும் காரணம். மத்திய அரசின் மாதிரி பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடம்
அளிக்க வேண்டாம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார் (தினத்தந்தி
05.11.2013).

உடனே அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக் கையில் (தினத்தந்தி 11.11.2013) மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் திட்டத்திற்கு கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில், 22.7.2009 இல் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். கரு ணாநிதி-ஜெயலலிதா லாவணி கச்சேரி எப்போதுமே ஓயாது. ஆனால், தமிழ் நாட்டில் முறையான கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தாதற்கு இருவ ருமே பொறுப்பாளிகள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

விடுதலைக்கு முன்பு வரை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த
பொதுப்பள்ளிகள் 1947க்குப் பிறகு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. அவசர நிலை காலத்தில் கல்வித்துறை மாநில அதிகாரப்பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து மாநில அரசு கள் கல்வித்துறையை சிறிது சிறிதாக கை கழுவி, இப்போது முற்றிலும் தனி யார் மயத்திற்கு வழிகோலிவிட்டன.

1976 இல் தமிழகத்தில் இருந்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் எண்ணிக்கை
வெறும் 25. 1999 இல் இவை 2000 ஆக உயர்ந்தன. இப்போது தமிழ்நாடு முழுவ தும் தனியார் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 4,600. இவற் றில் 5 இலட்சம் குழந்தைகள் பயில்கிறார்கள். சுமார் 2000 மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளிகளில் 6 இலட்சம் மாணவ-மாணவியர் பயின்று வருகின் றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாண வர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவே என்றா லும், அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிக் கல்வியும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் சுமார் 50 சதவீத
மாணவர்கள் மட்டுமே 10 ஆம் வகுப்பு முடித்து மேல்நிலைப் பள்ளிகளில் சேரு கிறார்கள். அதற்கு மேல் 15 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே இள நிலை பட்டப்படிப்பில் சேருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத் திற்கும் குறைவானவர்களே பட்ட மேற்படிப்புக்கும், அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கும் போகிறார்கள். இதற்கு தமிழக அரசின் கல்விக் கொள்கையின் அலட்சியம்தான் காரணம்.

உலக வங்கிக் கடன் பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித் திட் டத் தின் சார்பில், 2012-2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, தமிழகத்தில் 2,253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர். 16 பள்ளிகளில் ஆசி ரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அரசே நிர்ணயித் திருக்கின்ற விகிதமாகும். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்
பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொறுத்தவரை நூறு மாணவர் களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது.

21,931 ஆசிரியர் பணியிடங்கள் நீடிப்பதுதான் இந்த நிலைக்குக் காரணம்.கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது தனியார் கல்விக் கொள் கையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.

ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமை, போதிய நிதி ஒதுக்கீடு
செய்யாதது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது என் பது மட்டுமின்றி, எந்த வரை முறையும் இன்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்துக் கொண்டிருக்கும் அரசு, தனியார் கல்வி வியாபாரிகளின் வேட்டைக்காடாக கல்வித்துறையை மாற்றிவிட்டது.

போதாக்குறைக்கு,தாய் வழிக் கல்வியை முற்றிலும் ஒழித்துக்கட்ட 3,500 தொடக்  கப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்த ஜெய லலிதா அரசு அறிவித்து இருக்கின்றது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் போல அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில பயிற்று வழி கல்வி கிடைக்கும்என்று மக்களை மயக்கி வருகிறார்கள். 

இதன் மூலம், தனியார் பள்ளிகள் மேலும் தழைக்குமேயொழிய அரசுப் பள்ளி கள் செழித்துவிட முடியாது. பொதுப் பள்ளிகளிலும், அருகாமைப் பள்ளிகளி லும் தாய் மொழியில், தமிழில் கல்வி புகட்டியதால்தான் தமிழ்ச் சமூகம் கல்வி
அறிவில் மேலோங்கி நின்றது. இன்று அரசே, பொதுப்பள்ளிகளுக்கு கல்லறை
எழுப்பியதால்தான் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டே
இருக்கின்றன.

சமச்சீர் கல்வி வந்தவுடன் தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் மெட்ரிகுலே ஷன் பள்ளிகள் மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு (சி.பி.எஸ்.இ.)மாறிவிட்டன. இதன் மூலம் அப்பள்ளிகள் மத்திய கல்வித் திட்டத்தின் கீழ் வந்துவிட்டன. மேலும் நவோதயா,கேந்திர வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகள் பெருகி வருகின்றன.

தற்போது மாதிரி பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கிவிட்டால், ஒட்டு மொத்த மாக தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் ஆங்கில வழியில் பயின்று இந்தி, சமஸ் கிருதம் போன்றவற்றையும் விருப்ப மொழிகளாக படித்து தமிழ்ச் சமூகம் தமி ழோடு-தமிழ் பண்பாட்டோடு அந்நியமாகிவிடும்.

தமிழ்நாட்டின் மரபார்ந்த கல்வி உரிமைகள் தாய்வழிக் கல்வி சிந்தனைகள் முற்றிலும் அழிவதோடு,சமூக நீதி கொள்கையும் ஒழிக்கப்பட்டு விடும். என வே,  மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகளை மட்டுமல்ல, தமிழக அரசின் கல்விக் கொள்கையையும் எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் வந்து விட்டது

No comments:

Post a Comment