திண்ணைப் பேச்சிலிருந்து தெருமுனை வரையிலும் #வைகோ - வைகோ - வைகோ
மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகும். நாம் விரும்பினாலும், விரும்பா
விட்டாலும் காலத்தின் ஒவ்வொரு அசைவிலும் மாற்றத்தையும் மறுமலர்ச்சி யையும் கொண்டு வருகிறது.அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?வாய்ப் பைக் கண்டு கொள்வது - அதைக் கைப்பற்றுவது - சரியாகப் பயன் படுத்துவது
என்கிற இந்த மூன்று நிலைகளையும் மக்களிடமிருந்து கண்டு கொள்வதற்கா கவே வைகோ அவர்களின் மறுமலர்ச்சிப் பயணம் பெரிதும் பயன்பட்டது.
“வாய்ப்பு வரும்போது காலத்தைக் கருத்தில் கொண்டு, நாம் அதை அழுத்தமா கப் பற்றிக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று முன்னாள் பிரத மர் பெஞ்சமின் டிஷ்ரேலி கூறுவார்.
வரலாற்றைப் புரட்டிப் போடும் வல்லமை வாய்ந்த தலைவர்கள் சில சமயங் களில் போகிற போக்கில் மொழிந்திடும் சிறு சொற்கள் கூட, மாபெரும் மாற் றங்களை உருவாக்குவது உண்டு. இத்தகைய அதிசயங்களை வரலாற்று நெடுகிலும் காணமுடிகிறது.
வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்களின் மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணம் அதைச் செய்திருக்கிறது.விருதுநகர், ஈரோடு, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலும், தொகுதிகளிலும் மறுமலர்ச்சிப் பிரச்சாரம் மக்களை உசுப்பிவிட் டிருக்கிறது என்பதே உண்மையாகும்.
“நான் உங்களுக்குத் தொண்டாற்றிட ஆயத்தமாக இருக்கிறேன். எனக்கு உத்தர விட நீங்கள் தயாராகுங்கள்” என்று சொல்வதைப்போல அப்பயணம் அமைந்தி ருந்தது. மத்திய அரசால் அலட்சியப்படுத்தப்படும் நமது பிறப்புரிமைகளை வென்றெடுத்திட உரிய இடத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
கடலில் மிதந்து கொண்டு மான் வேட்டையாட முடியாது. காட்டில் உலவிக் கொண்டு மீன்வேட்டையாட முடியாது. டெல்லியில் தொலைத்து விட்ட உரி மைகளை தூத்துக்குடியில் பெற முடியாது. உங்களது அனுமதி கிடைத்தால் என்னால் அதைக் கொண்டு வந்து உங்கள் காலடியில் கொட்ட முடியும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சின்ன வித்தியாசம்தான் உள்ளது:
கடமை யைச் செய்தால் வெற்றி! கடமைக்காகச் செய்தால் தோல்வி!!
இந்த அரிய தத்துவத்தை வைகோ அவர்களின் உணர்ச்சிமிகு உரைவீச்சில்
காண முடிந்தது. கழகக் கண்மணிகளும் பொதுமக்களும் இந்த அதிசயத்தத்து வத்தை உள்வாங்கிக் கொள்ளத் தவறவில்லை.
“This is our finest hour” இது நமது உன்னதமான நேரம், என்று அண்மைக் காலத்தில் வைகோ அவர்கள் சுட்டிக் காட்டிய காலக்குறிப்பைக் கழகத் தோழர்கள் மீண் டும் எண்ணிப் பார்த்தனர். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை உணர்ச்சி அவர்களை உந்தித்தள்ளியது.
அரசியலில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ஓர் அழைப்பு வந்தது.
வீழ்ச்சியின் விளிம்பில் நின்று தள்ளாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட் டைக் காப்பாற்றித் தூக்கிநிறுத்திடும் ஆற்றலும், துணிவும் உங்கள் ஒருவருக் குத்தான் உண்டு. சுற்றிச் சூழ்ந்துவரும் எதிரிகளின் கோரப்பசிக்கு இங்கிலாந்து இரையாகிவிடாமல் காப்பாற்றுவதற்குத் தகுதிவாய்ந்த தலைவர் களத்திற்கு வரவேண்டும் என்று நாட்டின் ஒருமித்த நம்பிக்கைக் குரல் வின்ஸ்டன் சர்ச் சிலைத் தட்டி எழுப்பியது.
இங்கிலாந்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சர்ச்சில் பேசினார்.
I have nothing to offer but blood, toil, tears and sweat.
“நான் உங்களுக்கு வழங்கப் போவது இரத்தம், உழைப்பு, கண்ணீர், வியர்வை
தவிர வேறு ஒன்றுமில்லை” என்றார்.
ஒருகாலத்தின் உலகத்தின் பெரும் பகுதிகளைக்கட்டி ஆண்ட பெருமை மிகு இங்கிலாந்து மக்கள் உற்சாகத்தில் நெஞ்சை உயர்த்தி நின்றனர். சர்ச்சிலின்
சாதுர்யமான பேச்சு பிரிட்டனின் நம்பிக்கை வேருக்கு வார்த்த நீராக அமைந்து துளிர்விடத் தொடங்கியது.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் சர்ச்சில் பேசினார்:
You ask, what is our aim? ? நம் குறிக்கோள் என்ன? என்று கேட்பீர்கள்.
““It is victory.... victory, however long and hord, the road may be.....”
“வெற்றி! வெற்றி! பாதை எவ்வளவு நீண்ட தொலைவாயினும் கடினம் ஆயி னும் வெற்றி! இதுவே நமது குறிக்கோள்.
1940 ஜூன் 4 ஆம் நாள் காமன் சபையில் வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய உரை இது.உலக வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத அத்தியாயத்தை உருவாக் கிய வரலாற்று வரிகள் இவை.
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் இந்த வீர உரையை விஞ்சுகின்ற அளவில்
30.09.2013அன்று தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வைகோ ஆற்றிய உரை வீச்சு வாக்காளர்களை வசப்படுத்தும் தேனருவியாகப் பாய்ந்து சென்றது. அள்ளிப் பருகிய மக்கள் ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தனர்.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே...
என்று பாடிய பாரதியை நினைவு கூர்வதில் தவறில்லை. ஆனால், அதே நேரத் தில் கப்பல் ஓட்டிய தமிழன்,செக்கிழுத்த தியாகி வ.உ.சிதம்பர னாரைத் தமிழன் என்ற ஒரே காரணத்தால் ஆரியக் கூட்டம் எப்படி வஞ்சித்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி,திலகருக்கு அளித்த மரியாதையை, தனி இடத் தை - செக்கிழுத்த சிதம்பரனார் வ.உ.சிக்கு அளிப்பதில்லை.ஏனென்றால் அவர் ஆரியர் அல்லர்.வாழ்நாளின் இறுதிக் காலத்தில் சிதம்பரனார் கொடிய வறு மைப்பள்ளத்தில் தள்ளப்பட்டிருந்த சோக வரலாற்றை நினைத்துப் பார்த்தாலே
போதும் வடக்கின் வஞ்சனையைப் புரிந்து கொள்ள முடியும்.
வ.உ.சி. அவர்கள் இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடியவர் அத்துடன் தமிழ் இன உணர்வும்,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பும் கொண்டவர். காங்கிரசில் உள்ள திலகர் பார்ப்பன ஆதிக்கத்தின் கூர்முனையாக விளங்கியவர். அதனால் தான் திலகருக்கு அளிக்கின்ற மரியாதையை, மதிப்பை, வ.உ.சிதம்பரனாருக்கு வடக்கு வழங்குவதில்லை.
காங்கிரஸ் ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என்று வைகோ வீராவேச மாகப் பேசியதற்கு, வ.உ.சி தோன்றிய மண்ணின் மகத்துவமும் ஒரு காரண மாகும். வடக்கால் வஞ்சிக்கப் பட்ட சிதம்பரனார் சிந்திய செங்குருதியும், வடித் த கண்ணீரும் இதுவரை உலரவில்லை. அந்த வேதனைதான் வைகோ அவர் களின் உரை வீச்சு முழுவதும் சிவப்பாகவே இருந்தது. தமிழினம் என்றாலே மத்திய அரசு இன்றுவரை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருவ தை ஊர்மக்களுக்கு உணர்த்தியது.
அரசியல் மாற்றத்திற்கு இது ஓர் அடித்தள மாகும். நம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிற நாடாளுமன்றத்தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.க. மா பெரும் வெற்றியினை ஈட்ட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டும் சூளுரை.
நேற்று என்பது போய்விட்டது. இன்று என்பதும் போய்விடும். நாளை என்பது
நமதாக வேண்டும். அதற்கு ஆற்ற வேண்டிய பணிகளும், அணுக வேண்டிய
முறைகளும், மாற்ற வேண்டிய தடைகளும் ஏராளமாக உள்ளன.
காலம் காலமாக மனிதர்கள் இரண்டு வர்க்கமாகப் பிரிந்து நின்றுதான் சண்டை
போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கார்ல் மார்க்ஸ் கூறுவார்..
ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் நடந்த சண்டைதான் மனித குலத்தின் கேள் வி ஞானத்தையும் அறிவியல் திறன்களையும் வளர்த்து வந்திருக்கிறது.
ஆண்டான்களுக்கும், அடிமைகளுக்கும் தொடர்ந்து நடந்த சண்டைதான் மனித
குலத்தின் அரசியல், பொருளாதார உரிமைகளை மாற்றியமைத்திட வழிகண் டது.
பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் நடந்த சண்டைதான் தார்மீக உரிமை
களுக்கான நியாயத்தை நிலைநாட்டிட கதை வடிவில் துணைபுரிந்தது.
“தர்மத்திற்கு ஆபத்து நேரிடும் போது, நான் அவதரிப்பேன்” என்று வாக்களித்த
கிருஷ்ணபகவான் அரசியல்துறையில் ஏற்படும் அநீதி, ஆபத்துகளைத் தடுக்க
வரவில்லையே ஏன்? அப்படி வந்தால் கிருஷ்ணபகவான் அவனது கீரிடத் தை யே பறிகொடுத்துவிட்டு ஓடவேண்டி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும்.
தமிழக அரசியலில் இரண்டு அணிகள் உருவாகி பாவாத்மா எனும் தமிழ் இனத் தைப் பகடைக்காயாக்கிக் கொண்டு ஆடாத ஆட்டங்களை எல்லாம் ஆடிவரு கிறது.
அரசியலை வைத்து ஆதாயம் தேடும் கும்பல் அந்த இரு அணிகளிலும் இணைந் துள்ளன. ஒரு கும்பல் கருணாநிதிக்கு முன்னர் கைகட்டி நிற்கிறது. இன்னொரு கும்பல் செயலலிதாவுக்கு முன்னால் வாய் பொத்தி நிற்கிறது. இப்படிப்பட்ட மக்களைத்தான் திருவள்ளுவர் மாக்கள் என்று கூறுகிறார். மக்க ளுக்கும் மாக்களுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு.
இதற்கு இடையில் மாபெரும் மாந்தர் கூட்டம் வைகோ அவர்களைச் சுற்றிச்
சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் தாம் மக்கள் எனும் மதிப்புக்கு உரிய வர்கள்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கண்ட தன்மானத்தமிழர் கூட்டம் இது. இந்த மக்கள் கூட்டத்தை வழி நடத்தும் வைகோ அவர்களைப் பார்த்து - “அதோ பார் அவர்தான் இளைய தமிழகத்தின் இரண்டாம் அண்ணா” என்று
போற்றிப் புகழ்கிறது.
திண்ணையிலிருந்து தெருமுனை வரையிலும் வைகோ - வைகோ - எனும்
பேச்சு பொதுமக்களின் உச்சரிப்பில் எங்கும் எதிரொலித்துக் கொண்டு இருப்ப தை மாற்றாரும் கூட மறுக்க மாட்டார்கள்.
வடக்கை அடக்க வந்த வைகோ அவர்களை முன் நிறுத்திட -புதிய போர்க்களம் அமையப்போகிறது. நமக்கு என ஒரு தனிநாடு இல்லை. நமது பிறப்புரிமை களுக்காகப் போராடும் ஒரே இடம் நாடாளுமன்றம்தான். அதற்கான வாய்ப்பை நல்கிடும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள்தாம்.
அதனால் மக்களிடம் சென்று மனங்களை வசப்படுத்தும் பணியில் மறுமலர்ச் சிப் பிரச்சாரப் பயணத்தை வைகோ மேற்கொள்ளும் சாதனைச் சரித்திரம் உரு வானது.
பொல்லாதவர்கள் வைகோவின் வளர்ச்சியைச் சிதைக்க நினைக் கிறார்கள்.
பொதுமக்கள் வைகோ அவர்களை எம்.பி. ஆகச் செதுக்க ஆசைப்படுகிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும் மக்கள் குரலே மகேசன் குரல்!
மக்கள் விருப்பத்திலேயே வெற்றி மலர்கிறது. வாழ்க வைகோ!
கட்டுரையாளர் :-கவிஞர் தமிழ்மறவன் மதிமுக தலைமை நிலையச்செய லாளர்
No comments:
Post a Comment