Thursday, November 7, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 4

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

இசையும், கலையும்

இசை வளர்த்த இடம் இந்த தஞ்சை மண்டலம். இங்கேதான், மாரிமுத்தா பிள் ளையும் அருணாசல கவிராயரும் - முத்துத் தாண்டவரும் வாழ்ந்தார்கள். இந் தத் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். இங்கே வாழ்ந்த ஆபிரகாம் பண் டி தர், ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற அற்புதமான ஒரு இசைக்காவியத்தைத் தந்து இருக்கிறார். இந்த நூலிலும் கூட, கல்கி ஆசிரியர் பழைய செய்திகளை எல்லாம் சொல்கிறார்.

காவிரி வளத்தைச் சொல்கிறார். இசையின் சிறப்பைச் சொல்கிறபோது

‘கொன்றைன் தீங்குழல் கேளாமோ தோழி
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி’

என்கின்ற சிலப்பதிகாரப் பாடல் வரிகளைப் பாட வைக்கிறார்.


இந்தத் தீங்குழல் என்பது, புல்லாங்குழல் என்று சொன்னார்கள் அல்லவா? அந் தக் குழலில் நாதம் பிறக்கிறது. இந்தக் குழல் மட்டும் அல்ல, தோலினால் செய் யப்பட்ட இசைக் கருவிகள், நரம்பினால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், யாழ் கருவிகள், 5000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பயின்ற கருவிகள் - மொ கஞ்சதாரோ ஹராப்பா அகழ்வு ஆராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்டன. இன் றைக்கு இலண்டன் நகர அருங்காட்சியகத்தில், தமிழர்கள் பயன்படுத்திய யாழ் இருக்கிறது. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. நமது இசைப் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.

வந்தியத்தேவனின் தந்திரம்

இங்கே, சோழப் பேரரசின் சபைக்கு வந்தியத்தேவன் வருகிறான். அந்தக் காட்சி
கள், ரொம்ப அற்புதமாக இருக்கும். எப்படி தப்பித்து வருகிறான் - கோட்டைக்கு உள்ளே வருகிறான். இந்தக் கோட்டையைக் காக்கின்ற படைவீரர்களைப் பற் றிச் சொல்கிறபோது, வேளக்காரப் படையினர் மன்னருக்காகத் தலைகளை வெட்டி, உயிர்களைத் தரக்கூடிய வீரர்கள். அந்த வேளக்காரப் படையினர் பாது காப்புக்கு இருக்கிறார்கள்.இவன் அரண்மணைக்கு உள்ளே வருகிறான்.ஆதித்த கரிகாலனின் ஓலையை, சுந்தரச் சோழச் சக்கரவர்த்தியிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். வந்தியத்வேன் ரொம்பத் திறமையாக, கெட்டிக்காரத்தன மாக உள்ளே நுழைகிறான். அதை எல்லாம் எத்தனை தடவை வேண்டுமானா லும் படிக்கலாம்.

ஓலையை கொடுக்கிறபோது சக்கரவர்த்தியிடம் அவன் பேசுகிற திறமையைப் பற்றி வானவன் மாதேவி - அவள் திருக்கோவிலூர் மலையமான் திருமுடிக் காரி என்கிற மாபெரும் மன்னனின் மரபில் வந்தவள், அவள் கூறுகிறாள், ‘இந்தப் பிள்ளையின் நாவில் சரஸ்வதி தேவியே குடிகொண்டு இருக்கிறாளே’ என்கிறாள். அப்பொழுது புலவர்கள் எல்லாம், சுந்தரச்சோழர் குறித்துப் பாடுகி றார்கள். சுந்தரச்சோழர் ஒரு குறிப்பை கொடுத்து, அதை எல்லோரையும் பாடச் சொல்கிறார். ஒரு புலவர் வந்து பாடுகிறார். அந்தப் பாட்டை எல்லோரும் ரசிக் கிறார்கள்.

அந்தப் பாடலில் சுந்தரச்சோழர் புகழப்படுகிறார். இந்திரனுக்குக் கரி அளித்தார், பரி அளித்தார். யாருக்கு? செந்நிற மேனி தினகரனுக்கு.

“இந்திரன் ஏற்க கரி அளித்தார்
பரி ஏழளித்தார் செந்திரு மேனித்தினகரற்கு
சிவனார் மணத்துப் பைந்துகிலேளப் பல்லக்களித்தார்
பழையாறை நகர்ச்
சுந்தரச் சோழரை யாவரொப்பார்கள்
இத்தொன்னிலத்தே!”

இது அந்தப்புலவர் பாடியது.

அதற்கு விளக்கம் தருகிறார்கள். என்னவென்றால், “தேவேந்திரனுக்கும் விருத் தாசுரனுக்கும் யுத்தம் வந்து விட்டது. விருத்தாசுரன் தாக்குதலில், தேவேந்திர னின் ஐராவதம் செத்துப்போய்விட்டது. யுத்த களத்தில் ஏறிச்செல்வதற்கு யானை இல்லையே என்று அவன் கவலைப்பட்டபோது, சுந்தரச்சோழரிடம் வந்தான். சுந்தரச்சோழர் தன் யானை லாயத்திற்கு அழைத்துப் போனார். ‘இங் கே நிற்கக்கூடிய போர் யானைகளில் உனக்கு எந்த யானை வேண்டும்? என்று கேட்டார்.
தேவேந்திரன் திகைத்து விட்டான். ‘எந்த யானையைத் தேர்ந்து எடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை’ என்கிறான்.

உடனே சுந்தரச்சோழ சக்கரவர்த்தி, சரியான போர் யானையைக் கொடுத்து, ‘இதை வைத்து விருத்தாசுரனிடம் சண்டைக்குபோ’ என்றார்.

அப்போது, இதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது - இதை அடக்குவதற்கு என்னிடத்திலே வஜ்ராயுதம் இல்லையே’ என்றான்.

பரி (குதிரை) அளித்தார் தினகரனுக்கு. எதற்கு? இராகுவுக்கும், சூரியனுக்கும் சண்டை வந்தது. சூரியனின் வெப்பத்திலே இராகு தளர்ந்தாலும்கூட, இராகு வின் விஷயத்தில் சூரியனின் ஏழுகுதிரைகளும் இறந்து விட்டன. சூரியன் திகைத்தான். நாம் பயணம் செய்ய முடியாதே?

என்ன செய்வது என்று, அவனும் சுத்ரச் சோழரிடம் மனு போட்டான். ‘கவலைப் படாதே. நான் என் ரதத்தில் பூட்டப்படுகிற ஏழு குதிரைகளை அனுப்பி வைக்கி றேன்.நீ பயப்படாமல் போய் உன் பயத்தைத் தொடர்’என்று சொன்னான். அனுப் பியும் வைத்தான்.

அடுத்து சிவனுக்கும் - பார்வதிக்கும் திருமணம் நடக்கிறது. அவசரத்தில் பெண் வீட்டார் பல்லக்குக் கொண்டு வரவில்லை. என்ன செய்வத என்று திகைத்துச் சுந்தரச்சோழரிடம் வந்தார்கள். ’நாங்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டோம்’ என்றார்கள். அதற்கு அவர், ‘நான் முத்துப் பல்லக்கை அனுப்பி வைக்கிறேன். சிறப்பாக நடைபெறட்டும் வரவேற்பு வைபவம் என்று முத்துப் பல்லக்கை அனுப்பி வைத்தான்.

இதையெல்லாம் சொல்லி,இப்படி எல்லாம் அனுப்புவதற்குச் சுந்தரச்சோழனை விட வேறு யாரால் முடியும்? என்று அந்தப் புலவர் பாடினார். உடனே சுந்தரச் சோழர் கேட்கிறார். ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று தெரியுமா?’ உடனே புலவர் பெருமக்கள் எல்லாம், யார் இந்த அற்புதமான பாட்டை எழுதியவர்? என்று யோசிக்கிறார்கள்.

உடனே சுந்தரச்சோழர் சொல்கிறார். ‘நான்கு வரிகளுக்கு உள்ளே இவ்வளவு பொய்யைச் சொன்னவன், வெட்கப்பட்டு பெயரைச் சொல்லாமல் போய் விட் டான். யார் எழுதியது?’ என்று தெரியவில்லை.

இந்த நேரத்தில் திடீரென்று வந்தியத்தேவன் உள்ளே நுழைகிறான். ‘மன்னா, இதைப் பொய் என்று இழிவுபடுத்தக் கூடாது. இது இல்பொருள் உவமை அணி பாராட்டவது வழக்கம்.’

யார் இந்தப் பிள்ளை, ரொம்ப சூட்டிகையாகப் பேசுகிறானே என்று நினைத்து ’யார் இந்தப் பாடலை எழுதியது?’ என்று கேட்கிறார்கள்.

‘இவ்வளவு பொய் சொல்லி எழுதியது வேறு யாரும் இல்லை, அடியேன் தான் எழுதினேன்’ என்கிறார் சுந்தரச்சோழர். 

காரணம் சொல்ல வேண்டும் அல்லவா?

தொடரும் .....

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 3

No comments:

Post a Comment