தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-#மதிமுக ஆதரவு
தென்காசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவ திப்பட்டனர்.
சுமார் 2 ஆண்டுகள் கழித்து சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. கனரக வாக னங் கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக மாற்றிவிடப்பட்டன. இலகுரக வாக னங்கள் சர்வீஸ் ரோட்டில் சென்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடை பெற் ற மேம்பாலப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.மேம்பாலப்பணி நிறைவு பெற்றதால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத்திறக்கப் படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
இருசக்கர வாகனங்களைக்கூட மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்காமல் மேம்பாலம் தொடங்கும், நிறைவு பெறும் இடத்தில் மண் மற்றும் முட்கள் வைத்து அடைக்கப்பட்டது. இலகுரக வாகனங்கள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் கனரக வாகனங்கள் சென்று வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரி கள் ரயில்வே மேம்பாலம் வழியாக பாதசாரிகள் செல்வதற்கு கூட அனுமதிய ளிக்காமல் கெடுபிடி செய்து வருகின்றனர்.
மேம்பாலம் திறக்கப்படாததால் போக்குவரத்து நெரிசலில் தென்காசி சிக்கித் தவிக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் ரயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ம.தி.மு.க.,கம்யூ.,சார்பில் மேம்பாலம் திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பா.ஜ., நகராட்சி கவுன்சிலர்கள் மேம்பாலத்தை திறக்க கோரி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இருப்பினும் மேம்பாலம் திறக்கப்படவில்லை.
இதனால் பொறுமை இழந்த தென்காசி வர்த்தக சங்கத்தினர் அதிரடி போராட் டம் நடத்தி மேம்பாலத்தை திறக்க முடிவு செய்தனர். இன்று (6ம்தேதி) முழுக் கடையடைப்பு நடத்தி, சாலைமறில் போராட்டம் நடத்தி மேம்பாலத்தை பொது மக்களைத் திரட்டி திறந்துவிட வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு புதிய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கத்தினர், வாடகை கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர், ம.தி.மு.க., மற்றும் பொதுநல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment