Saturday, November 30, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?

நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:

மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.

உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

விவசாயிகள் உற்பத்திச் செலவைக் குறைத்திடும் வகையில் விவசாய இடு பொருள்களின் விலையினைக் கட்டுப்படுத்தும் எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல், உற்பத்திச் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விவசாய விளைபொருளுக்குக் கட்டுப்படி யாகக்கூடிய விலை கிடைப்பதற்கான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.

விவசாய வேலைகளுக்கு பணியாட்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகி உள் ளதால், குறைந்த செலவில் இயந்திர பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டமும்
இல்லை.

தற்போது நடைமுறையில் உள்ள,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப் புத் திட்டத்தின் காரணமாக, விவசாய வேலைகளுக்கு பணியாட்கள் கிடைப்ப தில்லை. எனவே, விவசாயப் பணிகளுக்கு அரசு வழங்கும் ரூபாய் 100க்கு மேல் கூலி தரவேண்டியுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளார்கள். இந்த நிலை தொடருமானால் விவசாய உற்பத்தி குறைவ தையும் அதன் காரணமாக விலைவாசி உயர்வதையும் தடுக்க முடியாமல் போகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தினை முறைப்படுத்தி, அப்ப ணியாளர்களை விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். தற்போது ஊராட்சி மன்றங்களில் வேலையே இல்லா விட்டாலும் இவர்களுக்கு வேலை
தரப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தும் நிலை, தமிழகம் போன்ற பல பகுதி களில் நடைமுறையில் உள்ளது.

ஊராட்சி மன்றத்தில் முன்பதிவு செய்து,தேவையான பணியாளர்களுக்கு உரிய
கூலியினை ஊராட்சி மன்றத்தில் செலுத்தும் விவசாயிகளின் நிலங்களுக்கு, இவர்களை பணிக்கு அனுப்புவதன் மூலம் 100 நாள் வேலை என்பது போக ஆண்டு முழுவதும் அவர்களுக்கு வேலை தர முடியும்.விவசாயிகள் இவர் களுக்கு உரிய கூலியை ஏற்றுக்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் செலவினம் தவிர்க்கப்படும். எனவே, இத்திட்டத்தின் பயனாளிகளும் பாதிக்கப்படாமல்
கிராமப்புறத்தில் விவசாயமும் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் இத்திட் டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து ஆய் வு செய்து முறைப்படுத்திட வேண்டும்.

வறட்சியாலும் வெள்ள சேதத்தாலும் உணவு உற்பத்தியில் ஏற்படும் இழப்பை யும்,அரசுக்கு ஏற்படும் நிவாரணப்பணி மற்றும் உதவிக்கான பெருந்தொகை செலவினைத் தடுத்திடவும், சாத்தியப்படும் நதிகளின் இணைப்பு - உதாரண மாக, தென்னக நதிகள் இணைப்பு போன்ற திட்ட அறிவிப்புகள் எதுவும் இல்லா தது பெரும் ஏமாற்றத்தையும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அச்சத்தை யும் உருவாக்கியுள்ளது.

பாசன வசதியைப் பெருக்கவும், பாசன வசதியுள்ள நிலப்பரப்பை அதிகமாக்க வும் பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை.

ஏழை எளிய நடுத்தர மக்கள் என்றுமில்லா அளவில் உச்சத்திற்கு உயர்ந்துள்ள விலை ஏற்றத்தால் துன்புறும் நிலையில், வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல விலைவாசி மேலும் உயரும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை உள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பாலும், நிலக்கரி மீதான வரிவிதிப்பாலும் மின்சார கட்டண உயர்வாலும், சேவை வரியாலும் மேலும் மேலும் விலை வாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

வேளாண்மை வளர்ச்சிக்குத் தேவையான ஊக்குவிப்புத் திட்டங்கள் ஏதும் அறி விக்கப்படவில்லை. குறித்த காலத்தில் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தும்
விவசாயிக்கு 2 விழுக்காடு வட்டி குறைப்பு என்பது கண்துடைப்பு அறிவிப்பாக வே உள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு கோடிக்கணக்கில் 4 விழுக்காடு வட்டிக் கு கடன் தரும் அரசு, விவசாயிகளின் கடனுக்கு மட்டும் வட்டி 7 விழுக்காடு என அறிவித்துள்ளது,விவசாயிகளுக்கு அரசு விளைத்துள்ள கடுமையான கொடுமையாகும்.

இரயில்வே துறை தனியான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதுபோல,
வேளாண்துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண் டும்.விலைவாசி ஏற்றத்துக்கு பெரும் காரணமாக உள்ள ஊரக வணிகம், இணையதள வணிகம் இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் இந்த நிதி நிலை அறிக் கையில் இல்லை.

சில்லரை விற்பனையில் தாராளமயத்தை அனுமதிப்பது கோடிக்கணக்கான சிறு வணிகர்களையும், அதை நம்பி உள்ள தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றிய பொதுத்துறை நிறுவனப் பங் குகள் விற்பனை செய்யப்படும் என்று வெளியிட்டுள்ள அறிவிப்பு, லாபம் ஈட் டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியாகும்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் ஏதும் இந்த அரசின் நிதி நிலை அறிவிப்பில் இல்லை. கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

பின்னலாடை உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சாயக்கழிவுகளை
சுத்திகரிக்கும் பணிக்கு, மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 200 கோடி ஒதுக்கி
இருப்பதை வரவேற்கிறேன்.பின்னலாடைத் தொழில் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதி மட்டுமல்லாமல் ஈரோடு மாவட் டத்தில் காவேரி ஆற்றங்கரை,பவானி நதிக்கரையிலும் எண்ணற்ற சலவை ஆலைகள் இயங்குகின்றன.

அதேபோல், ஈரோடு, சென்னிமலை போன்ற கைத்தறித்துறையின் முன்னணி
நகரங்களில் சிறு சிறு சாயச் சலவைச் சாலைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
அதேபோல், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையிலும் இரசாயனக் கழிவு கள் நிலத்தடி நீரில் கலந்து ஈங்கூர், சென்னிமலை, பெருந்துறைப் பகுதிகளில்
குடிதண்ணீர் மாசுபட்டுள்ளது.

இந்த சாயச் சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால், காவிரி
ஆறும் பவானி ஆறுகளும் அதன் மூலம்பாசனம் பெறும் விவசாய நிலங்களும்
பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. குடி தண்ணீரும் மாசுபட்டுள்ளது. எனவே,
திருப்பூருக்கு என மாசுபட்ட சாயக்கழிவை சுத்தப்படுத்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை அரசே மேற்கொள்வது போல, ஈரோட்டிலும் சாயக் கழிவின் பாதிப்பில் இருந்து விவசாயிகளையும், குடிதண்ணீரையும் பாதுகாத்திட, ஈரோட் டிலும் பொது சுத்திகரிப்பு நிலையம் அரசே அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


ஏற்றுமதிக்குரிய புகையிலைக்கு விதிக்கப்படும் வரி விகிதத்தைப் போலவே, சுருட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கழிவுப் புகையிலைக்கும் வரி விதித்தி ருப்பது,ஒட்டுமொத்த சுருட்டுத் தொழிலையே அழித்துவிடும் நிலையுள்ளது. எனவே,சுருட்டுக்கு பயன்படுத்தப்படும் புகையிலைக்கு வரிவிலக்கு அளித்து,
அத்தொழிலைக் காப்பாற்ற வேண்டுமென இந்த அரசைக் கேட்டுக்கொள் கிறேன்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பயன் படும் வகையில் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.ஏற்கனவே விலை வாசி உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில், இந்த நிதி நிலை
அறிக்கையில் விவசாய வளர்ச்சித் திட்டத்துக்கோ, உணவு உற்பத்திப் பெருக் கத்துக்கோ எந்தத் திட்டமும் இந்த அறிக்கையில் இல்லை. மொத்தத்தில்
இந்த நிதி நிலை அறிக்கை - ஏழை, எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் நிதி நிலை அறிக்கையாகும்.

ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி.,இவ்வாறு உரையாற்றினார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 5

No comments:

Post a Comment