மதுக்கரை-வாளையாறு இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணி யை நிறைவேற்ற மாநில அரசின் ஆதரவு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என #மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள் ளார்.
இது குறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கப்பள்ளி-வாளை யாறு வரையிலான தேசிய நெடுஞ்சாலை-47-ஐ அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதில் மதுக்கரை - வாளையாறு வரையிலான 15 கி.மீ. தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள் ளது.
இதன் காரணமாக நாள்தோறும் விபத்துகள் நடக்கின்றன. கேரள மாநிலத்தேடு இணைக்கும் பிரதான சாலையாக இச்சாலை திகழ்கிறது. சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற் பட்டு வருகிறது.
தமிழகத்தில் நடைபெறுகின்ற தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக அண்மையில் மத்திய அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற் றது. அப்போது, தமிழக அரசு சார்பில் நெடுஞ்சாலைத் துறை முதன்மை செய லாளர் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை- 47 பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போதிய நிதி இல்லாத காரணத் தால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசின் ஆதரவு ஒப்பந்தம் போடப்படாததால் தனியார் வங்கி கடன் வழங்க மறுத்து வருகிறது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக மாநில அரசின் ஆதரவு ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment