Wednesday, November 20, 2013

தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை!-பாகம் 1

முள்ளிவாய்க்கால் முற்றம்,ஈழத்திற்கு கலங்கரை விளக்கம் தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை என்று தஞ்சையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத் திறப்பு விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் பேருரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனைப் பேழைகளை, பேயிருள்
சூழ்ந்திடும் கானக மீதினில் பகைவர்களைப் புதைகுழிக்கு அனுப்பிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை,இதுவரை உலகம் கண்டும் கேட்டுமிராத வீரச்சமர்களை நடத்தி, யானை இறவில் சிங்களவனைப் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட வைத்து, போர்க்களங்களின் வரலாற்றில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்திக் காட்டி, ஓயாத அலைகளில்,அக்னி அலைகளில், சிங்களர் படைகளைச் சின் னாபின்னம் செய்து சிதறடித்து, ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடித்தார்கள் என்றால், விமான ஓடுதளத்தையே ஒரு பாயைப் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் அடர்ந்த காட்டுக்கு உள் ளே இருந்துகொண்டு ஏவிய விமானங்கள்,கொழும்பு வரை சென்று தாக்குதல்
நடத்தியதால், மண்ணுக்குள் இருந்து ரைட் சகோதரர்கள் வீரவணக்கம் செலுத் தக்கூடிய வரலாறைப் படைத்த பிரபாகரன் அவர்களின் வீரப்படைகளை, ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியோடு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,வஞ்சகத்தோடு தந்த பேருதவியால்,ஆயுதங்களால், அள்ளிக் கொடுத்த ஆயிரக்கணக்கான கோடிப் பணத்தால், எவராலும் வீழ்த்த முடியாத சதியால் வீழ்த்தி விட்டது.

ஆயினும் அவர்கள் ஆயுதம் ஏந்திய சமர்க்களங்கள், அவர்கள் சிந்திய இரத்தத் துளிகள், விண்ணில் இருந்து சிங்கள விமானங்கள் வீசிய குண்டு மழையில் கொத்துக் கொத்தாக மடிந்த தமிழர்கள், தங்கள் மணிவயிற்றில் வீரப்பிள்ளை களைச் சுமந்த தாய்மார்கள்,கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிறு கிழிக்கப்பட்டு, உள்ளே வளர்ந்து வருகின்ற குழந்தையின் கரம் கூட வெளியே தெரிகிறதே, இந்தக் காட்சிகளை எல்லாம், கல்லில் செதுக்கி,நம் இருதயங்களில் கல்வெட் டாக ஆக்கித் தந்து இருக்கின்ற முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் -



மானம் அழிந்து விடவில்லை தாய்த் தமிழகத்தில் என்று, மரணத் தீயை அரவ ணைத்தார்களே முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர், அவர்களின் வீரத்திருவுரு வங்கள் கல்லில் சிலையாக,பேசும் சிலையாக வடிக்கப்பட்டு இருக்கின்ற முள் ளிவாய்க்காலில் -

தலை தாழ்ந்திடாது தமிழ் என்பதைக் காட்டுகின்ற வகையில் கம்பீரமாகத்தமிழ் அன்னையின் சிலை, ஒளிமயமான எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுகின்ற
விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

இங்கே, களமாடிய மாவீரர்களின் சரிதங்களைச் சொல்லுகின்ற மாவீரர் மண் டபம். தமிழுக்குத் தொண்டு ஆற்றிய பேரறிஞர்கள், கவிஞர்கள், கலை உலக வித்தகர்களுடைய திருவுருவப் படங்கள், அடிமை விலங்குகளை உடைப்ப தற்கு வங்காளி வாள் ஏந்துவதற்கு முன்பு, சீக்கியர்கள் வாள் ஏந்துவதற்கு முன்பு, மராட்டியர்கள் வாள் ஏந்துவதற்கு முன்பு, எங்கள் தென்னாட்டில் தான் வாளை உயர்த்தினார்கள், நெற்கட்டுஞ்செவலிலே, பாஞ்சாலங்குறிச்சியிலே, சிவகங்கைச் சீமையிலேய என்ற வீரச்சரிதங் களைச் சொல்லுகின்ற சித்திரங் கள் அடங்கிய முத்தமிழ் மண்டபம்.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்
திறப்புவிழா என்பதுகூட, அடக்கு முறையை உடைத்து எறிகின்ற நிகழ்ச்சியாக வே இரு தினங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கலைகளின் சிகரமாகத் திகழ்கின்ற தஞ்சைத் தரணி யில், பந்தல் கலைத் திலகம் சிவா அமைத்து இருக்கின்ற இந்த அழகிய பந்த லில், மாவீர மகன் பாலச்சந்திரன் அரங்கத்தில், வீரத்தியாகி முத்துக்குமார் திட லில், தமிழர் வரலாற்றின் திருப்புமுனை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அன்புச் சகோதரர் நடராசன் அவர்கள் தலைமை ஏற்று இருக் கின்றார்கள்.

குன்றுதோறாடும் குமரன்; குறிஞ்சித் திணைக் குமரன்; துள்ளி வருகுது வேல்
தமிழ்ப்பகையே தள்ளி நில் என்ற சொல்லுக்கு உரிய குமரன், அறுபடை வீடு களில் இருக்கிறான்; அவனுக்கு,நான்மாடக் கூடலுக்கு அருகில், அழகர் மலை யில், பழமுதிர் சோலையில் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார் பழனியப்பனார்.

நான் பகுத்தறிவுவாதி. ஆனால் நாட்டில் நிலவுகின்ற கருத்துகள், ஏட்டிலே எழு தப்பட்டு இருக்கின்ற பாடல்கள்,நக்கீரன் திருமுருகாற்றுப்படையில்  வருணித் து இருக்கின்ற சொற்கள்,இவையெல்லாம் தமிழர் பண்பாட்டில்,தமிழ் மண் ணோடு கலந்து இருப்பதால் சொல்லுகிறேன்.

அந்த முருகன்,வீரத்தில் சிறந்த சூரனை வதைத்தானே தவிர, அவனையே தனக்குச் சின்னமாக, சேவற்கொடி யாகவும், பறந்து செல்லுகின்ற மயிலாக வும் ஆக்கிக் கொண்டான் என,எந்தச் சமயத்திலும் காணப்பட முடியாத ஒரு செய்தியைச் சொல்லக்கூடிய, சூர சம்ஹாரம் நடந்ததாகக் கருதப்படுகின்ற
இந்த நாளில் பேசுகிறேன்.

அன்று பழனியப்பனார் பழமுதிர்ச் சோலைக் கோயிலைக் கட்டினார்; அவரது அருமை மைந்தன் பழ.நெடுமாறனார், இந்த முள்ளிவாய்க்காலைக் கட்டி இருக் கின்றார்.(கைதட்டல்). உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், இலங்கைத்
தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் நெடு மாறன் அவர்களுக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே தஞ்சை இராமமூர்த்தி அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டதைப் போல, பல களங்களிலே பாண்டியர்கள் எங்களிடம் தோற்றது உண்டு; சோழர்
களிடம் தோற்றது உண்டு; திருப்புறம்பியம், பள்ளிப்படைக் காடு இவையெல் லாம் அதற்குச் சாட்சியம்; ஆதித்த கரிகாலன் மரணமும் அதற்கு ஒரு சாட்சி யம்; வீரபாண்டியன் தலை கொண்டான் கரிகாலன் என்பதும் ஒரு சாட்சியம்; ஆயினும், தலையாலங் கானத்தில் அனைவரையும் வென்றான் எங்கள் பாண் டியன் என்பதனால்,கோப்பெருஞ்சோழனுக்கு நண்பன், பிசிராந்தை எங்கள் பாண்டிய நாட்டுக்காரன் என்பதனால்,அந்தப் பாண்டிய நாடு இன்றைக்கு வென் றது என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.உணர்ச்சிப் பாவலர் காசி. ஆனந்தன்
அவர்கள் இங்கே கொடி உயர்த்தினார்கள்.

1983 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள், இராமநாதபுரம் சீமையில், அன்று நான் இயங்கிக் கொண்டு இருந்த கட்சியின் சார்பில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பேசும்போது சொன்னேன்: பிரபாகரா,தமிழ்த்தாயின் வீரமகனே, இங்கே வா;எங்கள் தாயகத்துக்கு வா; உன் காயங்களை நாங்கள் கண்ணீரால்
குளிப்பாட்டுகிறோம்; உன் காயங் களுக்கு நாங்கள் முத்தம் இடுகிறோம் என்று அழைப்பு விடுத்தேன்.

இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கின்ற, இலங்கைத் தமிழரசுக்கட்சி யின் துணைத்தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினருமான அன்புச் சகோதரர்,மா.வை. சேனாதிராசா அவர்களே, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே, ஸ்ரீ தரன் அவர் களே, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரன் அவர்களே, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களே, 

அவர்களோடு இங்கே வருகை தந்து இருக்கின்ற, மரண பூமியாக்கப்பட்ட  ஈழத் தமிழர்களின் தாயகத்தில் இருந் து, இந்தப் புவியின் பல்வேறு நாடுகளிலே, இருள் விலகாதா?ஒளி மலராதா? விடியல் பிறக்காதா? எங்கள் துன்பம் தீராதா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றவர்களின் சார்பில், பல்வேறு நாடுகளில் இருந்து இங்கே வருகை தந்து இருக்கக்கூடிய எங்கள் தொப்புள் கொடி உறவு களே, இந்த உரையை, இந்த அரங்கத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை, ஒலி வாங்கியில் நான் உரை ஆற்றினாலும், அதை ஒளிப்படங்களாக இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக, இந்த உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந் து நேரடியாகக் கண்டும்,கேட்டுக்கொண்டும் இருக்கின்ற தமிழ்ச்சொந்தங்களே வணக்கம். அலைகடலைத் தாண்டி இங்கே வந்து இருக்கின்ற எங்கள் உறவு களே கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கின்றோம். (பலத்த கைதட்டல்).

வாழ்க்கையையே போராட்டமாக ஆக்கிக்கொண்டாரே என் சகோதரன், துன்ப துயர முட்களைச்சுமந்து கொண்டு இருந்தாலும்,சொந்த வாழ்விலே துயரங்கள் சூழ்ந்து இருந்தும், ஈழ விடுதலைக்காகவே வாழ்கிறாரே, இங்கே விருது பெற் றாரே சகோதரர் வீர.சந்தானம், அவரது தூரிகை வரைந்து இருக்கின்றது பல படங்களை. இங்கே அமைக்கப்பட்டு இருக்கின்ற சிலைகளின் கண்கள் பேசு கின்றன.அவற்றின் முகபாவங்கள் பேசுகின்றன.அவற்றை வடிவமைத்த சிற்பி களின் சார்பில் விருதுகளைப் பெற்றுக் கொண்டார் முருகன். அவர்களது உள்
மனதின் உணர்வுகளைத்தான் இங்கே சிலைகளாக வடித்து இருக்கின்றார்கள்.
அதனால்தான் அவற்றில் உயிரோட்டம் இருக்கின்றது.

அந்தச் சிலைகள் பேசுகின்றன. அந்தத் துயரங்களை நம் இருதயங்களில் கொண்டு வந்து பதிய வைக்கின்றன. இதை வடித்த சிற்பிகள் அனைவருடைய
கைகளையும் பற்றிக்கொண்டு பாராட்ட எனக்கு ஆசைதான். அவர்களின் பிரதி நிதியாக இங்கே வந்த முருகன்,இந்த முற்றம் எழுவதற்காக, முழுக்க முழுக்க அண்ணன் நெடுமாறன் அவர்களோடு, நடராசன், சாமிநாதன் ஆகியோரோடு, தன்னையும் ஒப்படைத்துக்கொண்டு உழைத்த, கட்டடக் கலை விற்பன்னர், அன்புக்குரிய ஜான் கென்னடி ஆகியோரைப் பாராட்டுகிறேன்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் பொன்.
இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றிச்சிறப்பித்து இருக்கின்றார்கள்.

இன்றைக்கு எட்டாம் தேதி. இன்னும் மூன்றே நாட்கள். 12 ஆம் தேதி, தமிழகம்
ஒன்று சேர வேண்டும்; உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்; முழு கடை
அடைப்பில் பங்கு ஏற்க வேண்டும்.எதற்காக? இந்தியா பங்கு ஏற்கக் கூடாது
என்பதற்காக அல்ல; நான் தொடக்கத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.பொது நல ஆயமான காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண் டும் என்பதற்காக; அப்படி நீக்கினால்தான், இந்த மாநாடு கொழும்பில் நடக்காது
என்று சொன்னேன்.

ஆனால்,மாநாடு நடக்கத்தான் போகிறது.அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது. உலகம் இந்தக் காமன்வெல்த் அமைப்போடு சுருங்கி விடவில்லை. ஆயினும், வஞ்சகத்தை, துரோகத்தைத் தோல் உரித்துக் காட்டுவதற்கு, தாய்த்
தமிழகத்தின் உணர்ச்சிகளைக் காட்டு வதற்கு, பொங்கி எழுந்தது தமிழகம்;
வெடித்துக் கிளம்பியது என்பதைக் காட்டுகின்ற விதத்தில், வணிகர் சங்கப்
பேரவையின் தலைவர், அன்புச் சகோதரர் வெள்ளையன் அவர்கள் அழைப்பு
விடுத்து இருக்கின்றார். வணிகர்களே, அங்காடிகளை மூடுங்கள் 12 ஆம் தேதி.
கடைகளை மூடுவதால், பொருள் நட்டம் ஏற்படும்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டதை எண்ணிப் பார்ப் போம். முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துத் தந்தனர். அந்த ஒருநாள் பொருள் இழப்பைப் பொருட்படுத்தாதீர்கள். இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத் தமிழகத்து வணிகப் பெருமக்களைப் பணிவோடு வேண்டுகிறேன். நான் பிறந்த பொன்னாடாம் இந்தத் தமிழகம் தழைப்பதற்கும், தரணியில் தமிழ்க்குலம் தழைப்பதற்கும், இயன்ற அளவுக்குத் தொண்டு ஆற்று கின்ற ஒரு ஊழியன் என்ற முறையில், இருகரம் கூப்பி வேண்டுகிறேன்; 12 ஆம் தேதி கடைகளைத் திறக்காதீர்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மணியரசன் போன்ற
உணர்வாளர்கள் பங்கு ஏற்ற நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு, 12
ஆம் தேதி தொடர்வண்டிகளை மறிப்பது; முழு அடைப்பு. மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத் தோழர்களை மட்டும் அல்ல, உணர்வுள்ள தமிழர்கள்
அனைவரையும் வேண்டுகிறேன். இந்தத் தமிழகத்தில், 1965 மொழிப்போரில்
போராடியவர்கள், துப்பாக்கிகளை எதிர்த்து நின்றார்கள். நாம் தொடர் வண்டி களை மறிப்போம். அணியணியாகச் சென்று மறியலில் பங்கு ஏற்றுக் கொள் ளுங்கள். ஒரு அணி கைது செய்யப்பட்டபின்பு, அடுத்த அணி போக வேண்டும். கட்சிகளைப் பார்க்காதீர்கள்.உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள்.

பொதுமக்களே, உங்களுக்குத் தொல்லை தருவதாகக் கருதிவிட வேண்டாம். இடிந்தகரை மக்கள் இரண்டு ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கின் றார்கள். எனவே, 12 ஆம் தேதி மட்டும் உங்கள் பயணத்தைத் தவிர்த்துக் கொள் ளுங்கள். மருத்துவமனை வண்டிகள் போகட்டும். தடுக்க வேண்டாம். திரும ணங்கள் நடக்கட்டும்.அதேபோலத் துக்க நிகழ்வுகள். இவை தவிர்த்து, வேறு எந்த வண்டிகளும் இயங்கக் கூடாது.

அதற்காக நாம் கலவரம் செய்யப் போவது இல்லை. தமிழகத்தின் உணர்வு களை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த அறப்போரை, யார் முன்னெ டுத்துச் செல்வது என்ற பேச்சுக்கு இடம் இல்லை.தன்முனைப்பு கூடாது. வெள் ளையன் அறிவித்து இருக்கின்றார்; அவருக்குத் தோள் கொடுப்போம். தந்தை பெரியார் திராவிடர் கழகம் போராடுகிறதா, துணை நிற்போம்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சிக்கலாம், புதிய பாசிச அரசு.
அமைதியாகப் பேசக்கூடிய அண்ணன் நெடுமாறன் அவர்களே பொங்கி எழுந்து
விட்டார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பீர்களா? இடிப்பதற்கும் ஒரு
எண்ணம் வருமா? யாரேனும் இடிக்க முனைந்தால், அவர்களது இடுப்பு முறிந் து போகும். (பலத்த ஆரவாரம்).

இது வெறும் உணர்ச்சிப் பேச்சு அல்ல,ஆவேசம் அல்ல. இது மடிந்த மாவீரர் களின் இரத்தம். இதை இடிக்க வேண்டும் என்று மனுப் போடுவதற்கு என்ன திமிர் இருக்க வேண்டும்? கொளத்தூர் மணி சேலம் சிறையில் இருக்கின்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறைக்கு உள்ளே செல்லுகின்ற வாய்ப்பை, இந்த அரசாங்கம் எனக்குக் கொடுத்தது.பாளையங்கோட்டைச் சிறையில் மிசா
கைதியாக அடைபட்டுக் கிடந்த என்னை, சேலத்துக்குக் கொண்டு போய், 1976 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 19 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு அந்தச் சிறைக் குள் அடைத்தார்கள். 1977 பிப்ரவரி 3 ஆம் தேதி, அதிகாலை ஐந்து மணிக்கு, அந் தச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.எனவே, இரண்டு வேளைகளிலும், சிறை வாயிலைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.அதற்குப்பிறகு அங்கே நான் சென்றதே இல்லை. இப்போதுதான் பார்த்தேன்.

கொளத்தூர் மணி மீது, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவி இருக்கின்றது இந்த
அரசு. இதே அடக்குமுறைச் சட்டத்தை,நீதிமன்றத்தில் உடைத்து எறிந்து இருக் கின்றோமே? அவர் எத்தனையோ சிறைகளைப் பார்த்தவர்.எத்தனையோ ஆண் டுகள் சிறையில் இருந்தவர்.கர்நாடகச்சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்தபோதும், அதைப் பேசி, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது இல்லை. கடல் கடந்து தமிழ் ஈழத்துக்குச் சென்று, தலைவர் பிரபாகரனின் நம்பிக்கை யைப் பெற்றவர்.விடுதலைப்புலிகளுக்குத் தனது தோட்டத்தில் பயிற்சிக் களம் அமைத்துக் கொடுத்தவர். ஒருபோதும் வன்முறையில் ஈடுபடாதவர். அவரைத்
தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து இருக்கின்றீர்களே? இது ஒரு எதேச் சாதிகார அரசு. சர்வாதிகாரப் போக்கில் போய்க்கொண்டு இருக்கின்றது. இப்ப டிப் போனவர்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதை அறிந்தும், இன்னுமா பாடம் கற்றுக் கொள்ளவில்லை?

தமிழ் ஈழ விடுதலைக்காகவும், சமதர்மம் மலர்வதற்காகவும், தன் வாழ்வை
அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்ற சகோதரர் மணியரசன் அவர்கள், இந்த
நிகழ்ச்சியில் அரியதோர் உரை ஆற்றி,நியாயமான கேள்விகளை முன் வைத் தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் மகேந்திரன் அவர்கள், கருத்து
களை எடுத்து உரைத்து இருக்கின்றார்கள். 1963 இல், தூத்துக்குடிக்கு அருகே இருக்கின்ற குறுக்குச்சாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கலை இலக்கியப்பெருமன்ற விழாவில்,தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலை மையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில், ஒரு அணிக்குத் தலைமை தாங்கிப் பேசினார். எதிர் அணியில், கல்லூரி மாணவனான நான் தலைமை தாங்கிப் பேசினேன்.

மறுநாள் நிகழ்ச்சியில் கம்ப இராமாயணத்தைப் பற்றிப் பேசினார்.அவரது அந் தப் பேச்சு, இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த அற்புதமான உரையைத் தந்த சொற்பொழி வாளர்தான், இன்று இங்கே பேசிய
தஞ்சை இராமமூர்த்தி அவர்கள்.இங்கே பெருந்திரளாகத் திரண்டு இருக்கின்ற வாலிபப் பட்டாளம் நம்பிக்கையைத் தருகின்றது. தமிழ் ஈழ விடுதலையில் நாட்டம் கொண்டு இருக்கின்ற ஆர்வலர்களும், தாய்மார் களும் திரண்டு வந்து இருக்கின்றார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,பாய்ந்தோடி வருகின்ற பொன்னிநதிக்குக் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்கிறபோது, அதற்கான கட்டுமானக் கற் களின் மீது உளி பட்டு ஓசை எழுந்தது. அதற்கு ஆயிரம் ஆண்டு களுக்குப் பின் னர், இராஜராஜேச்சுரம் என்று சொல்லப்படுகின்ற தஞ்சைப் பெருவுடையார் கோயிலில்,உலகத்தையே பிரமிக்க வைக்கின்ற அளவுக்கு, 80 டன் எடையுள்ள ஒற்றைக் கல் கோபுரத்தின் உச்சத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டு இருக் கின்றதே,அந்த ஆலயத்தில் சிற்பங்களைவடிக்கையில் உளியின் ஓசை கேட் டது.ஆயிரக்கணக்கான சிற்பிகளின் கைகள்செதுக்கின. அத்தகைய பெருமைக் கு உரியது இந்தத் தஞ்சைத் தரணி. கடல் கடந்து பல நாடுகளுக்குச் சென்று
வெற்றிக்கொடி நாட்டிய சோழ மன்னர்கள் உலவிய தஞ்சைத் தரணி.

இங்கே, விளார் ஊருக்குச் செல்லுகின்ற வழியில், அந்த ஊராட்சிக்கு உட்பட்ட
பகுதியில், இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்துக்காகக் கற்களின் மீது உளிக ளின் ஓசை கேட்டது. மகேந்திர வர்மனும், நரசிம்மவர்மனும் அரசோச்சினார் களே பல்லவப் பேரரசில்,அங்கே மாமல்லபுரத்தில் உளிகளின் ஓசை கேட்டது. சிலைகள் எழுந்தன;உலகத்தைக் கவர்கின்றன. இன்றைக்கு நமது தமிழகத்துக் கோயில்களில் உள்ள சிலைகளைப் போல, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. நான் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன் தான். ஆனால், இந்தத் தமிழகத்து ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங் களை, அமெரிக்காவில் கண் காட்சிக்குக் கொண்டு போய்க் காட்சிப்பொருளாக வைக்கக்கூடாது என்று, நாடாளுமன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பித் தடுத்தி நிறுத்தியவன் நான்.

பாளையங்கோட்டைக்குப் பக்கத்தில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்குச் சென்று
பாருங்கள். அந்தச் சிலைகள் பேசும்.திருவில்லிபுத்தூரை, மதுரையை, கன்னி யாகுமரிக்குப் பக்கத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயத்துக்குப் போய் பாருங்கள். அங்கே உள்ள கற்களைத் தட்டிப் பாருங்கள். ஏழுவித மான ஓசை எழும். அதைப்போலவே, மதுரையிலும், நெல்லையிலும் இருக்கின்றது. இப்ப டிப்பட்ட சிற்பக் கலை, தமிழர்களுக்கே உரித்தானது.

ஆனால், இந்த முள்ளிவாய்க்கால் சிற்பங்கள் நம் இருதயத்தை உடைக் கின் றன. வீரமும், தியாகமும்,துன்பங்களும் நிறைந்த ஒரு வரலாறு இங்கே தீட்டப் பட்டு இருக்கின்றது.கொத்துக்கொத்தாக வானில் இருந்த பொழிகின்ற குண்டு கள், பாட்டனும்,மூதாதையர்களும் வாழ்ந்த மண்ணைவிட்டு, கைக்குழந்தை களோடு தமிழர்கள், நாதி அற்றவர்களாகச் செல்லுகிறார்களே, அந்த அவலக்
காட்சிகள், இங்கே சிலை வடிவிலே!

தமிழர்களின் பிணங்களைக் காக்கை கழுகுகள் கொத்தித் தின்றன; நாய் நரிகள் கடித்துத் தின்றன என்று,லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதியதே, அந்தக் காட்சி இங்கே சிலை வடிவில். மற்றொரு பக்கத்தில்,முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளின் சிலைகள். முறையாகத் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

அன்புக்குரியவர்களே, அமெரிக்காவின் தெற்கு டகோடாவில், ரஷ்மோர் மலை யில் நான்கு சிலைகள் இருக்கின்றன. குடியரசுத் தலைவர் களாகப் பொறுப்பு வகித்த நான்கு பேர்களது முகங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. ஜார்ஜ் வாஷிங் டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன். 1927 ஆம் ஆண்டு தொடங்கிய பணிகள், 1941 ஆம் ஆண்டு நிறைவு பெற்றன. கட்ஜான்
போர்க்லாம் என்கின்ற பெல்ஜிய வழித்தோன்றலான அமெரிக்கர், அவரது மகன் லிங்கன் போர்க்லாம் ஆகியோர் இந்தச் சிலைகளைச் செதுக்கினார்கள்.
முதலில் இடுப்பு வரையிலும் வடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.பண நெருக்கடியால், முகத்தை மட்டும் செதுக்கினார்கள். இப்போது, ஆண்டுக்கு 30 இலட்சம் பேர் அங்கே வந்து, அந்தச் சிலைகளைப் பார்க்கின்றார்கள்.

மராட்டியத்தின் எல்லோராக் குகைக் கோயில்களுக்குப் போய்ப் பாருங்கள்.
அங்கே சிலைகள் பேசும்.தமிழகத்தில் எத்தனையோ இடங்களில் உள்ள கோயில் களைப் போய்ப் பாருங்கள்.

தொடரும் ....

No comments:

Post a Comment