Sunday, November 10, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 6

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

விஜயாலயச் சோழனின் வீரம்


இந்தச் சூழலில், சோழ மன்னர் குடும்பத்தினரைக் கொலை செய்யத் திட்ட மிடு கிற பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் , ஒரு இடத்தில் கூடுகிறார்கள், அந்த இடம்தான் திருப்புறம்பியம் பள்ளிப்படைக் கோவில். இப்பவும் இருக்கிறது திருப்புறம்பியம். அங்குதான் சதி நடக்கிறது. இந்தத் திரும்புறம்பியத்திற்கு, ஒரு வரலாறு இருக்கிறது. இந்தத் திருப்புறம்பியம் போர்க்களம் தான் விஜயா லயச் சோழனின் வீரத்தைப் பறை சாற்றியது. விஜயாலயச் சோழனுக்கு 96 விழுப்புண்கள். ‘90 ம் சுமந்தோன்’ என விஜயாலயச் சோழனுக்கு ஒரு பெயர் உண்டு.

“எண்கொண்ட தொண்ணூற்றின்
மேலுமிரு மூன்று
புண்கொண்ட வெற்றிப் புரவலன்”

என்பது பாடல்!

விஜயாலாயச் சோழன் ஒரு சிறிய மன்னன். சோழ சாம்ராஜ்யம் அப்போது அமையவில்லை. பிற்காலச் சோழ சாம்ராஜயத்திற்கு அடிகோலியவனே இந்த விஜயாலயச் சோழன்தான். அந்தப் போர்க்களம்தான் ‘திருப்புறம்பியம் போர்.’ வரகுண பாண்டியனுக்கும் - அபாராஜித பல்லவனுக்கும் யுத்தம் நடக்கிறது. அபராஜிதனுக்குச் சோழர்கள் துணையாகப் போகிறார்கள். காங்க நாட்டுப் பிரதி வீபதி துணையாக வருகிறான். போர்க்களத்திலே பிரதிவீபதி மிகப்பெரும் ஆற் றலைக் காட்டி யுத்தம் செய்துவிட்டு, வீரமரணம் அடைகிறான்.

பல்லவர் படையும்-சோழர் படையும் தோற்று ஓடிவருகிறது. அப்பொழுது விஜ
யாலயச் சோழன்அந்தப் போர்க்களத்திற்கு வருகிறான். இரண்டு காலும் நடக்க முடியாத நிலைமையில் வருகிறான். படைகள் தோற்றுப் பின்வாங்கி வருகிற போது நினைக்கிறான்.இதோடு சோழ நாடு அழிந்து போய்விடும்.இந்தப்போரில் தோற்றால் இனி எழ முடியாது. இது ஒரு திருப்புமுனை. இதில் வென்றால் தான், இனி சோழர் குலம் தழைக்கும் என்று முடிவு எடுத்து, இரண்டு கால்களும் இயங்காத அந்த நிலைமையில்தான் அவன் வேளக்காரப் படையினரை அழைக்கிறான்.

ஒரு யானை கொண்டுவாருங்கள்’ என்றான். யானைப்படையும் அழிந்துவிட் டது என்றனர். ஒரு குதிரை கொண்டு வாருங்கள்’ ஏறிச்செல்கிறேன் என்கி றான். குதிரைகள் எல்லாம் இறந்து விட்டன என்றனர். ‘அப்படியா? சோழநாட் டுச் சுத்த வீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந் தால் வாருங்கள்’ என்றார் விஜயாலயன்.

இருவருக்குப் பதிலாக இருநூறு பேர் முன்னால் வந்தார்கள். “பீமசேனர்களைப் போன்ற உடல் ஆகிருதி பெற்ற வீரர்கள் வாருங்கள். இரண்டிரண்டு பேராக நில்லுங்கள். என்னை உங்கள் தோள்களில் தூக்கிச் கொள்ளுங்கள். எனது பாட்டன் காலத்தில் வீசிய வீர வாள்களை நான் ஏந்தி வருகிறேன். என்னைத் தூக்கி வருகிற வீரர்கள், அம்பு பாய்ந்து-வெட்டுப்பட்டுச் சாய்ந்தால், அடுத்த இரண்டு பேர் தூக்கிக்கொள்ளுங்கள்’ என்கிறார்.

அப்படித் தூக்கிக் கொண்டு உள்ளே போகிறபோது சக்ரஹாரமாக விஜயால யன் வாள் சுழன்றாதால். தோற்று ஓடிய படை, உணர்வு பெற்றுத் திரும்பச் செல்கிறது.

தளபதியின் உறுதி


எந்த யுத்தமும் தலைவனைப் பொறுத்துத்தான் வெற்றி பெற முடியும். உலகம் முழுவதும் இதுதான். எந்தப் போர்க்களமாக இருக்கட்டும். அலெக்சாண்டர் காலத்தில் இருந்து - நெப்போலியன் காலத்தில் இருந்து - அன்னிபால் காலத் தில் இருந்து - எந்த யுத்தகளத்திலும் தலைமை தாங்கிச் செல்கிறவனைப் பொறுத்துத்தான் வெற்றி இருக்கிறது.அந்த உணர்ச்சியை ஊட்டமுடியும்.சிறிய படையை வைத்துக்கொண்டு, அலெக்சாண்டர் பாரசீகப் பெரும்படையை வென்ற வரலாற்றை நான் படித்து இருந்தேன்.

அவனே முன்னே செல்வான். செல்லும்போது, தலையில் இருக்கிற கிரீடத் தில், சிவப்பு நிறத்திலே பறவை இறகுகளால் செய்யப்பட்ட கொண்டை, உயர்ந் த இடத்தில் இருக்கும். அவனுடைய துணைத்தளபதிகள் செல்வார்கள், ‘நீங்கள் முன்னால் செல்கிறீர்கள், உங்கள் உயிருக்கு ஆபத்து, என்று.

அலெக்சாண்டர் சொல்வார்: ‘நானே முன்னிலையில் சென்று மரணத்தோடு போராடுவதைப் பார்த்தால்தான், என் வீரர்கள் இன்னும் உறுதியாகப் போராடு வார்கள்’ என்றான். அப்படித்தான் ஒவ்வொரு களத்திலும் அவன் வெற்றி பெற் றான்.

திருப்புறம்பியம் சதி


அதைப்போல, விஜயாலயச் சோழனே இப்படி வாள்வீசி வந்தவுடன், அனைத் துச் சோழ-பல்லவ வீரர்களுக்கும் வீரம் வந்தது. அந்தச் சண்டையில் வெற்றி பெற்றார்கள். கங்க நாட்டுப் பிரதிவீபதி இறந்துபோனானே, அவனுக்கு நடுக் கல்லாக அமைக்கப்பட்டதுதான் பள்ளிப்படை கோவில் திருப்புறம்பியத்தில்! அங்குதான் சதி ஆலோசனை நடக்கிறது. பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள், பாண்டிய மன்னனுக்காகத் தலைகளை வெட்டிக் கொள்வோம் என்று சத்தியம் செய்தவர்கள், அவர்கள்தான் இங்கே வந்து, சோழர் குலத்தை அழிக்க வேண் டும் என்று சதி செய்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில், இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் இருக்கிறார். இந்த நிலைமையில், சக்கரவர்தியிடம் அருள்மொழிவர்மரைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும், அழைத்து வந்துவிட வேண்டும் என்று குந்தவைப் பிராட்டி முடிவு செய்கிறாள். காரணம், சோழ சாம்ராஜ்யத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி. அதற்கு என்ன செய்வது என்பது பற்றி யோசிக்கும்போது, வந்தியத்தேவனை அனுப்ப முடிவு செய்தார்கள்.

குந்தவைப் பிராட்டியும் - வானதி தேவியும், வந்தியத்தேவனைச் சந்திக்கிற இடமே, குடந்தை சோதிடர் வீட்டில்தான். கொடும்பளூர் பராந்தகன் பெரிய வேளார், யுத்தகளத்தில் இறந்து போனாள். அவருடைய மகள்தான் இந்த வானதி. இது எல்லாம் சரித்திரம்.

இலங்கையில் நடைபெற்ற சண்டையில்,சோழ நாட்டு ரகுநாத மன்னன் காலத் தில் வர்ணகுலத்தான் சென்றான் சங்கிலி மன்னனுக்கு உதவியாக என்று சொல்வார்கள். அதுபோல இங்கிருந்து சென்ற சோழ நாட்டுப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளர் பூதி விக்கிரமகேசரி அவர் அந்தச் சண்டையில் இறந்து விட்டார். இவரின் மகள் தான் வானதி தேவி. பின்னாளில், ராஜராஜனின் மனைவியானார்.

குந்தவைப் பிராட்டியும்-வானதி தேவியும் மிகவும் நெருங்கிய தோழிகள். இவர் கள் இருவரும் குடந்தை சோதிடர் வீட்டுக்கு வருகிறார்கள். வந்தியத்தேவ னும் வருகிறான்.விவகாரம் பிடித்த ஆள் வந்தியத்தேவன்.ஆனால்,குந்தவைப் பிராட்டியாரின் நெஞ்சில் இடம் பெறுகிறான். பின்னாளில், குந்தவையின் கண வன் ஆகிறான். இது கல்வெட்டில் இருக்கிறது. திருவாலங்காட்டுச் செப்பு ஏடு களில் இருக்கிறது. அந்த வந்தியத்தேவன் இலங்கைக்குச் செல்கிறான்.

இதில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதும் அங்கே போர் நடந் தது, நான் பேசிகொண்டு இருக்கிற இந்த நேரத்திலும், இலங்கையில் போர் நடக் கிறது. இந்த மண்டபத்துக் உள்ளே இருக்கிற சகோதர்களுக்குச் சொல் வேன், உங்கள் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்கு பாட்டன் காலத்தில், உங்கள் முன்னோர்கள் வேலும் வாளும் தாங்கிச் சென்று ஈழத்தில் போர் புரிந் தார்கள்.

அதனால்தான், காலாந்த கண்டனார் சின்னப் பழுவேட்டரையர் இந்த இடத்திற் கு வந்து, நல்லன்சாத்தனார் என்ற கவிஞரை அழைத்து, சின்னப் பழுவேட்டரை யரே, ‘நீ ஒரு பாடல் பாடு’ என்கிறார். அந்தப் பாட்டு,

உருத்திரங்கண்ணனாரின் பாடலைத் திரும்ப எடுத்துப் பாடுகிறார்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடலைப் பிறந்த பொன்னும் மணியும்
குமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
ஈழத்து உணவும் காளத்து ஆக்கமும்

என்று பாடுகிறார் கவிஞர்.

‘உடனே நிறுத்து’ எனச் சொல்கிறார் சுந்தரச் சோழர். ஈழத்தில் இருந்து அப்போ து நமக்கு உணவு வந்தது. இன்றைக்கு இருக்கிற உணவை எல்லாம் அங்கே இருக்கிற ஈழ நாட்டில் போர் புரிகிற சோழப்படைகளுக்கு அனுப்புவதால் இங் கே பஞ்சம் வந்து விட்டது என்று பிரச்சாரம் நடக்கிறது. பூங்குழலி படகு ஓட்டிக் கொண்ட போகிறாள்.

‘அலைகடல்தான் ஓய்ந்து இருக்க
அகக்கடல்தான் பொங்குவது ஏன்?’

என்று பாடுகிறாள். தியாகவிடங்கர் மகள் பூங்குழலி, இலங்கைக்குப் போகி றாள். அருமையான நிகழ்ச்சி!

தொடரும் ....

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 5

No comments:

Post a Comment