Sunday, November 24, 2013

வரலாற்று உண்மைகளை மறைப்பது ஏன் ?

“அறிவு பூர்வமான வெறுப்பு மிகவும் மோசமானது”

திராவிடர் கழகம்-தி.மு.கழகம் இரண்டு மட்டுமே திராவிட இயக்கக் கட்சிகளா கும் என்கிற அரிய கண்டுபிடிப்பை அண்ணன் எல்.ஜி. அவர்கள் வெளியிட் டிருக்கிறார்கள்.

“இன்று எத்தனையோ கட்சிகள் திராவிட என்ற சொல்லை தங்கள் கட்சிகளோ டு இணைத்துக் கொண்டிருக்கின்றன.என்னைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு கட்சிகள் தான் திராவிட இயக்கக் கட்சிகள் என்று ஏற்றுக் கொள்வேன். ஒன்று திராவிடர் கழகம்,மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகம்.குறிப்பாக அ.தி.மு.க. திராவிட இயக்கக் கட்சி என்று ஏற்றுக்கொள்ள வில்லை.” - குடும்ப நாளேடு முரசொலி (7.11.2013)

தி.க.; தி.மு.க.வை ஏற்றுக்கொள்வது, சரி.அ.தி.மு.க. திராவிட இயக்கக் கட்சி என்று ஏற்றுக் கொள்ள வில்லை என்பதும் மிகச் சரியானதே.

கடந்த காலத்தை எண்ணி, மறுமலர்ச்சி தி.மு.க.வை சிறிது நினைத்துப் பார்த்தி ருக்கலாம்.

எல்.ஜி. தனது பேச்சினூடே ‘மறுமலர்ச்சி’பற்றி குறிப்பிட்டு,“மறுமலர்ச்சி என்ற
கருத்து ஆங்கில நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே சீர்திருத்த இயக் கம், மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. அந்த மறுமலர்ச்சியை ‘அறிஞர் அண் ணா மறுமலர்ச்சி திட்டம்’என்று கொண்டு வர ஒரு கலைஞரால் தான் முடிந்த து” என்ற அளவோடு கூறிவிட்டு,திராவிட இயக்க வரிசையில் மறு மலர்ச்சி தி.மு.க.வை கூறாமல் வசதியாக கண்களை மூடிக்கொண்டார். மறுமலர்ச்சி தி.மு.க.வை தவிர்க்க இயலவில்லை. திசைமாறி மறுமலர்ச்சி திட்டத்திற்குள் போய்விட்டார்.

இவர் இப்படி என்றால், மனசாட்சி மாறன் “மறுமலர்ச்சியை நாம் தான் 1992 இல்
முறையாகத் தொடங்கினோம். ஆனால், இன்று யாரோ, திருடிக்கொண்டு போய் விட்டார்கள்” (தினத்தந்தி 16.09.1995) என்று முப்பெரும் விழாவில், கண் ணான அண்ணாவில் கண்ணியத்தைக் கடற்கரை காற்றில் பறக்கவிட்டு முழங்கினார்.


திராவிடர் கழகத்திலிருந்து தான் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. அப்படியானால், ‘திராவிடர்-கழகம்’ திருடப்பட்டதா? 

அய்ரோப்பிய வரலாற்றில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மறு மலர்ச்சி (RENAISSANCE) என்கிற ஆங்கிலச் சொல்லின் மொழி ஆக்கமே மறு மலர்ச்சி.

மறுமலர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் தானே!

மறுமலர்ச்சி திமுக வின் தோற்றம் இதைத்தானே வெளிப்படுத்துகிறது. 1945 இல் சிதம்பரத்தில் அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி என்ற தலைப்பிலும், சென் னை கோகலே ஹாலிலும் மறுமலர்ச்சிக்கு விளக்கம் தந்து ‘காலத்தால் கனி வது மறுமலர்ச்சி கட்டாயப்படுத்தி கனிய வைப்பது புரட்சி’ என்று அற்புதமாக
பேசினார்களே!

1992 இல் மறுமலர்ச்சியை முதல் முறையாகத் தொடங்கியதாகக் கூறிய மாற னுக்கும் இது தெரியும்.

மறுமலர்ச்சி தி.மு.க வை மூடி மறைக்க இவர்கள் வசதியாக மனமயக்கம் கொள்கிறார்கள். மறுமலர்ச்சியை ‘மறுபிறவி’ என்கின்றனர் அறிஞர் பெரு மக்கள்.

நீதிக்கட்சி அரசியல் செல்வாக்கை முற்றாக இழந்த நிலையில், திராவிட இயக் க உணர்வோடு செயல்பட திராவிடர் கழகமாக இருந்த நிலையிலேயே 1942 இல் சி.வி.எம்.அண்ணாமலை, என்.வி.நடராசன் ஆகியோரைக் கொண்டு காஞ் சியில் திராவிட மறுமலர்ச்சி கழகத்தை அண்ணா உருவாக்கினார்கள்.

“அண்ணா வகுத்துத் தந்த சகாப்தத்தை மறுமலர்ச்சி திமுக உருவாக்கும்.” -இரா.செழியன் பேச்சு, 15.09.1997 

“இளைஞர்களுக்கு கொள்கைகளை விளக்கி எழுதினால் அதனை அவர்கள்
ஏற்றுக் கொள்வார்கள்” என்கிற திராவிட இயக்க எழுத்தாளர் ஏ.எஸ்.வேணு
“மறுமலர்ச்சி தி.மு.க. பற்றி என்னிடம் கூறுகிறவர்கள் ‘பழைய தி.மு.க.’ மாதிரி யாகவே அது வளர்ந்து வருகிறது என்று கூறுகிறார்கள் பெரிதும் மகிழ்ச்சி
அடைந்தேன்” என்கிறார்.

மேலும் அவர்,இந்த அணுகுமுறையில் அந்நியனைவிட சகோதரன் மிக நெருக் கமானவன் தான்! ஆனால், அவன் ‘சுத்தி’ செய்யப்பட வேண்டியவனாக இருக் கிறான் என்பதே என் கவலை” என்றார்.

இந்த வகையில் சுத்திகரிக்கப்பட வேண்டிய சகோதரர்களில் தாங்களும் ஒரு வராக இடம் பெறுவது தான் பெரும் கவலை. இனி சுத்திகரிக்க முடியாது என் பதும் திண்ணம்.

வரலாறு, வரலாறாகவே இருக்கட்டும்;‘வரலாற்றில்’ என்னைப் பொறுத்த வரை, உன்னைப் பொறுத்தவரை என்ப தெல்லாம் ஒன்று கிடையாது. மனித
உள் இயல்பே ஆசைப்படுவது தான். 

கனவு காண்பது நல்ல காட்சிக்காக; சொல்வதற்கு அல்ல.

அதனால், உங்கள் ஆசைப்படி உங்களுக்கு அந்த இரண்டு கட்சிகளுமே இப் போ தைக்கு திராவிட இயக்க கட்சிகளாக இருந்துவிட்டுப் போகட்டும்!

‘காலத்தால் கனிவது மறுமலர்ச்சி’ -அறிஞர் அண்ணாவின் கூற்றை இன்று
கண்கூடாகக் காண்கிறோம்.

கண்ணந்தங்குடியில் பேசுகிறபோது,கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார்!
“திராவிட முன்னேற்றக் கழகம்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் ஒரே மேடையில் கருத்துகளை சொல்கின்ற இந்த நிலை அண்மைக் காலமாக இது புதிதல்ல என்றாலும்கூட, திராவிட இயக்கத்தைப் பற்றிய கருத் துகளைச் சொல்வதில் இது ஒரு ‘புதுநிலை’ என்று பெருமிதம் கொண்டாரே!

அதே கூட்டத்தில் தலைவர் வைகோ -

‘நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்,நான் கலைஞரால் வளர்க்கப்பட்ட வன்.அவரது நிழலில் நின்று வளர்ந்தவன்.எனக்கு உதட்டளவில் பேசிப் பழக்க
மில்லை. என் பேச்சு, உணர்வு பூர்வமானது. அது உள்ளத்தின் அடித்தளத்தில் ஏற்பட்டது.’”

- எல்.ஜி. எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் (20.2.2000)

எல்.ஜி. அவர்களின் திராவிட இயக்கம் பற்றிய பேச்சு வெளிப்படையானதா...
உதட்டிலிருந்தா... உள்ளத்திலிருந்தா? பரிகாரமா! எம்மால் புரிந்துகொள்ள
முடியவில்லை.

வரலாற்றில் இன்னொரு திரிபு வேலையும் அங்கே பேசப்பட்டிருக்கிறது.

கலைஞர் கருணாநிதி குண்டூசியால் குத்தி இரத்தம் எடுத்த கதைதான் அது.மிக வும் சிலாகித்துப் பேசி இருக்கிறீர்கள்.

அண்ணன் அவர்களே, நீங்கள் தானே உங்கள் ‘இலட்சியப்பாதை’யில் (22.4.1994) “கழகக் கொடிகளை கலைஞர் உருவாக்கினாரா?” என்ற நண்பர் க.திருநாவுக் கரசு அவர்களின் கட்டுரையை வெளியிட்டிருந்தீர்கள்.

கொடியை உருவாக்கி வடிவமைத்துத் தந்தவர் ஈரோடு சண்முக வேலாயுதம்
என்றே பதிவுகள் கூறுகின்றன என்று அடுக்கடுக்கான அசைக்க முடியாத
ஆதாரத்துடன் எழுதினாரே!

“உண்மை வரலாறுகள் பதிவானவைகள் வேறாக இருக்க கலைஞர்தான் திரா விடர் கழக தி.மு.கழகக் கொடிகளுக்கு வடிவமைத்துக் கொடுத்தார். என்பது
நமது மாபெரும் தலைவர்களான தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவை யும் மாசுபடுத்துவது ஆகாதா? வரலாற்றைத் திரிப்பவர்கள் இதை உணர வேண் டும்”

அடியில் சென்று மூழ்குவதைவிட நான் சந்தர்ப்பவாதியாக இருந்து கொள்கை
களை கழுத்தில் கட்டிக்கொண்டு மிதந்திருப்பேன். - ஸ்டான்லி பால்ட்வின் பிரிட்டிஷ் மேதகை.

கட்டுரையாளர் :- சங்கொலி நெடுமாறன்

No comments:

Post a Comment