Saturday, November 30, 2013

தமிழர்களின் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா!

தமிழர் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா என்று விருதுநகர் மாநாட்டில் எழுத்தாளர் மதுரா உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தெள்ளமுதாய், தெள்ளமுதின் மேலான முத்துக் கனியே என் முத்தமிழே வணக்கம். குஞ்சரமில்லை,குடையில்லை, படையில்லை, பதாகையில்லை
ஆயினும் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கோ வைகோ.

இனமான தலைவர் வைகோ வின் கண் அசைவில் நடைபெறுகின்ற அண்ணா வின் பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்ற என் இதயத்திற்கு
இனிய இமயம் ஜெபராஜ் அவர்களே, நெஞ்சிலே பாசம் வைத்து விழிவழி நேசம் காட்டுகிற என் அண்ணன் தாமிரபரணி மைந்தன் வைகோ அவர்களே, என்
இதயத்திற்கு இனியவர்களே வணக்கம்.


ஒரு நிமிடம். ஒரே கேள்வி? சூறாவளி பார்த்திருக்கிறீர்களா? தூசியும் தும்பு மாய் சுற்றி அடிக்கிற காற்றுதான் சூறாவளி. காய்ந்து கிடக்கிற பங்குனி மாதத் துக் குளங்களில் சறுகும் தும்புமாய் சுழன்று அடிக்கிற சூறாவளி பார்த்து இருக் கிறீர்களா? என் கால்சட்டை பருவத்தில் அப்படி ஒரு சூறாவளியைப் பார்த் தேன்.

இன்னொரு சூறாவளியைச் சந்தித்தேன். அதைச் சந்திக்கிற காலத்தில் எனக்கு 20 களில் பயணம் செய்கிற வயது. கபடியும் காதலுமாய், தோளில் மன்மத வில் லோடு ஊர் சுத்தித் திரிகிற பருவம். அப்படி ஒரு பருவத்தில் இன்னொரு சூறா வளியைச் சந்தித்தேன்.

கன்னிக்கிறான் குருவி கடுமழைக்கு ஆற்றாது.மின்மினி பூச்சொடித்து விளக் கெரிக்கிற ஒரு கார்காலத்தில் அந்த சுழன்று அடிக்கிற சூறாவளியைச் சந்தித் தேன். மேடையில் வைகோ. அதுதான் தமிழ் சூறாவளி. அந்த நிமிடம் எனக்குத் தெரியாது அதுதான் திராவிடச் சூறாவளி என்று. அந்த திராவிடச் சூறாவளி தான் அண்ணன் வைகோ. அகிலம் அன்னாந்து பார்த்த அதிசயம்.

தமிழ்த்தாயின் தலைமகன். காஞ்சி தந்த கரிபால்டி.தமிழ்நாட்டின் இங்கர்சால். தென்னக நாட்டின் பெர்ணாட்சா. அண்ணா படைப்புகளை நினைத்துப் பார்க் கிறேன். தலைகளை நடுங்க வைத்த தலையங்கங்கள். உரைக்களத்து படைக் கலங்களாய் கட்டுரைகள். முடங்கியவனையும் எழச் செய்யும் முடங்கல்கள். புத்துலத்திற்கு இழுத்துச் செல்லும் புதினங்கள்.

நாட்டியத் தமிழாடும் நாடகங்கள். வரலாற்று ஆவனங்களாய் சிறுகதைகள். அவர் எழுதிய தம்பிக்கு கடிதங்கள், தமிழன்னையின் இலக்கிய காதணிகள்.
கொட்டிக்கிடக்கும் இலக்கிய முத்துக்களில் ஒன்றை மட்டுமே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஒரு கதைக்கு முக்கியம் தலைப்பு. அண்ணா தலைப்பு வைக்கிறார் பாருங்கள். “கன்னி விதவையான கதை” இந்த தலைப்பைக் கேட்டவுடன் நாம் அதிர்ச்சி
அடைகிறோம். இந்தக் கதையின் ஒவ்வொரு இடத்திலும் அவர் ஒரு சிறுகதை யைச் சொல்கிறார். அந்த சிறுகதையைக் கொண்டு வருகிற ஒவ்வொரு இடத் திலும் ஒவ்வொரு நயத்தைக் காட்டுகிறார். மாற்றத்தைக் காட்டுகிறார். இந்தக்
கதையிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மாற்றம் வருகிறது. அந்த மாற்றத் தை மிகவும் அழுத்தமாக நாம் படித்துப் பார்த்தால் பரவசப்படக்கூடிய அள விற் கு அவர் சொல்லி வார்த்தை யை அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டே வரு கிறார்.

ஒரு வேங்கை இருக்கிறது என்றால், அந்த வேங்கைக்கு ஒரு வேகம் இருக்க வேண்டும். அந்த வேகம் எப்போது வரும். கோபம் வரும்போது அந்த வேங் கைக்கு வேகம் வரும். கோபம் வந்தவுடன் அந்த வேங்கைக்கு வேகம் வரும். வேகம் வந்தால் மட்டும் போதாது. வேகம் வந்தவுடன் குறிப்பறிகிற தன்மை வேண்டும். இரை எங்கே இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.அந்த இரை இருக்கிற இடத்தை பாய்ந்து தாக்க வேண்டும்.அதுதான் ஒரு வேங்கையின்
நோக்கம்.

ஆமாம் கோபம் வந்தால்தான் வேங்கை இரையை தேடுகிற நோக்கம் வரு கிறது.ஆனால் அதன் இரையாக இருக்கிற முயல் இருக்கிறதே அது கண்களில் ஒரு மருச்சி இழைகிறது. அந்த மிரட்ச்சி ஒரு அழகாக இருக்கும். அதைத்தான் அந்த கதைகளில் அழகாக வார்த்தைகளில் வசப் படும் வகையில் ஒவ்வொன் றாக சொல்லி வருகிறார். அதுதான் வாழ்க்கை என்கிறார். வேங்கையும் முய லும் வாழ்கிற வாழ்க்கை என்கிறார்.

இப்படி ஒவ்வொரு கதைகளிலும் அழகாக சொல்லி வரும் நேர்த்தியைப் பார்க் கும்போது, அந்த நேர்த்தியே ஒரு அழகாக இருக்கிறது. இது வல்லவா அண் ணாவின் பேச்சு என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி சிறுகதைகளில் ஒவ் வொரு சிறுகதைகளிலும் வெற்றி காண்கிறார். குறிப்பிட்ட சில நிமிடங்களே இருக்கின்ற காரணத்தால் நான் ஒரு கதை சொல்லி விளக்க ஆசைப்பட்டேன்.
ஆனால் இன்னொரு தருணத்தில் ஒரு இலக்கிய கூட்டத்தில் உங்கள் முன் பந்தி வைப்பேன்.

தமிழ் மண்ணை ஆள்வதில் வெற்றி கண்ட அண்ணா, தமிழ் இதயங்களில் வாழ் வதில் வெற்றி கண்ட அண்ணா,தமிழ் எழுத்துகளில் வாழ் வதில் வெற்றி கண்ட அண்ணா,கடைசி ஒரு வார்த்தை மற்றும் கூறி விடைபெற ஆசைப்படு கிறேன்.

எம் தலைவர் வைகோ, தூயவனே! நீ தூங்குகிற உன் கனவில் தமிழ் ஈழம்தான் மலர்கிறது. மன்னவனே! மலர் கீரிடத்தை மறுக்கிற தென்னவனே, நீ மறுத் தாலும் விடமாட்டோம், காலம் அரியணையில் ஏற்றும்.

இனியவனே நீ இருக்கும் வரை தமிழர்களுக்கு வேலியாகத்தான் இருப்பாய். அப்பழுக்கற்றவனே அரிதாரம் பூசியவர்கள் அரசியலை விட்டுவிட்டு அந்தப் புரம் போகட்டும். பால்கனி பாவைகள் பரதேசம் போகட்டும். வாள் உன் கைக்கு வரும்.நீதி உன் சிரசை அலங்கரிக்கும். விடைபெறு கிறேன். வணக்கம்.

இவ்வாறு எழுத்தாளர் மதுரா உரை ஆற்றினார்

No comments:

Post a Comment