ஈழத்தில் நடந்த இனக்கொலையும், இதயத்தில் வடிந்த ரத்தத்தையும், அதனால் ஏற்பட்ட ரணத்தையும் தாங்க இயலாதவர்களாய் நம் தாய்த் தமிழகத்து மக்கள் வடிந்த கண்ணீரை மட்டுமே காணிக்கையாகத் தரமுடிந்தது.
2009-ல் முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவத்தோடு அனைத்தும் முடிந்தது. அது வரை அங்கீகாரம் இல்லாத தமிழீழ அரசை நமது மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்கள் கட்டி எழுப்பிய தமிழீழ வைப்பகம், மாவீரர் துயிலகம், செஞ்சோலைக் காப்பகம், பள்ளிகள்,பணிமனை, வீடுகள் என அனைத்தையும் இடித்து மகிழ்ந்த சிங்கள அரசு, முடிவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பேய் பெற்ற பிசாசு மகிந்த ராஜபக்சே தன் கோரப் பசிக்கு தமிழர் இரத்தம் குடித்துக் கோரத்தாண்டவம் ஆடியபோது கை கட்டி, வாய் பொத்தி மெளனியாய் ஆட்சியில் இருந்தார் தமிழகத்தில் கருணாநிதி.
இத்தாலி சோனியாவின் அருளாசி -பொருளாசி அனைத்தும் பெற்ற கொழுப் பில், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை இலங்கைக்கு வரவழைத்து விருந்த ளித்து உபசரித்தான் ராஜபக்சே.கதறக் கதறக் கற்பழித்து, முழு நிர்வாணமாய் அழைத்து வந்து, சிங்கள வெறி நாய்கள் சுட்டுக் கொன்ற இசைப்பிரியாவின் முகம் இன்னும் நம் மனதை விட்டு மறைய வில்லை. ஒளி படைத்த கண் ணையும், உறுதிமிக்க தேகத்தையும், அன்பொழுகும் மழலை முகத்தோடும் அமர்ந்திருந்த அந்த கள்ளமில்லா தம்பி பாலச்சந்திரனை கொன்றொழித்த சோகம் இன்னும் அகலவில்லை. நாடாண்ட நம் இனம் முள் வேலி வதை முகாம்களில் சிக்கி வலி சுமந்த வடுக்கள் இன்னும் ஆறவில்லை.
நம் மூதாதையர் பூமிதான் தமிழ் ஈழம் என்றாலும், அந்நிய சிங்களன் நம்மை
அழிக்க நினைத்ததும், நம் சுவடுகள் அத்துனையும் தொலைக்க முற்பட்டதும்
பாதகம்தான். ஆனாலும், நம் மூவேந்தர் ஆண்ட மண்ணாம் தமிழகத்தில் தமிழ்
ஈழத்தின் துயரத்தை, முடிந்து போன முள்ளிவாய்க்கால் சோகத்தை காலம்,
காலமாக நம் தமிழக மக்கள் கண்டு களத்தில் தன்னுயிர் ஈந்த ஈகிகளை நினைத்து, நினைத்து வீரவணக்கம் செலுத்தும் வகையில் ராஜராஜன் உலவிய
நெஞ்சை அள்ளும் தஞ்சை விளாரில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்
தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் முயற்சியால் உலகத்
தமிழர்கள் அனைவரும் திரட்டித் தந்த நிதியில் கட்டப்பட்ட நினைவிடம்தான்
முள்ளிவாய்க்கால் முற்றம்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தலைவர் வைகோ அவர்களும், இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் அடிக்கல் நாட்டிட,
கட்டுமானப் பணிகள் தொடங்கப்பெற்றது.கிறித்துவர் களுக்கு ஒரு ஜெருசலம்,
இசுலாமியர்களுக்கு ஒரு மெக்கா மதினா,உலகத் தமிழர்களுக்கு ஒரு வழிபாட் டு நினைவிடம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றார் தலைவர் வைகோ.
அவ்வப்போது நம் தலைவர் வைகோ,திருச்சிக்கு- புதுக்கோட்டைக்கு- நாகைக் கு வரும்போதெல்லாம் அய்யா நெடுமாறனுடன் சேர்ந்து பார்த்து, பார்த்து
கட்டியதுதான் இந்த முற்றம்.
இம்மாதம் 8-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தை திறப்பதென்றும், அத னைத் தொடர்ந்து 9,10 ஆகிய தேதிகளில் தஞ்சையில் விழாக்கள் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் துறையை வைத்து வழக்குப் போடுவது மான பித்தலாட்ட அரசியலை ஜெயலலிதா அவ்வப்போது நடத்தி வந்தது அனைவரும் அறிந்ததுதான்.
முற்றம் திறக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும்
தமிழக அரசு சார்பில் மனு போட்டது இந்த அம்மையாரின் அரசு. இதனால் அவ சர, அவசரமாக 6-ந்தேதி அன்றே அய்யா நெடுமாறனும், தோழர்களும் முற்றத் தைத் திறந்து வைத்தனர். திட்டமிட்டபடி நடந்த 8 ஆம் தேதி தொடக்க விழா வில் திரண்ட பல்லாயிரக்கணக்கான கூட்டத்தினர் முன்னால் நம் தலைவர் வைகோ பேசும் போது, உணர்ச்சிப் பிழம்பாக நின்று கர்ஜனை செய்தார். முற் றத்தை எவரும் இடிக்க முனைந்தால் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பேன் என்றார்அண்ணன் நெடுமாறன், அவர் உயிர் தரவேண்டியதில்லை. நானும், என் தோழர்களும் தகுந்த ஏற்பாட்டோடு வந்து முள்ளிவாய்க்கால் முற்றத் தைக் காப்போம் என்றார் தலைவர் வைகோ.
11 ஆம் தேதி புது தில்லி உச்சநீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை அகற் றப்பட வேண்டும் என்று வழக்காடி விட்டு, அன்றைய தினம் மாலையில் புறப் பட்டு சென்னை வந்து, இரவோடு,இரவாக காரில் பயணித்து, 12 ஆம் தேதி அதி காலை மதுரை வந்து, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க
வேண்டும் என்பதை வலியுறுத்தி விடியற் காலை 6.30 மணிக்கு மதுரை ரயில்
நிலையத்தில் ஆயிரக் கணக்கான தோழர்களுடன் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டார் தலைவர் வைகோ.
அப்போது காவல் துறையினர் உடனடியாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் வருவதற்கு ஆர்வமாக இருந்த நேரத்தில் மத்திய நடுவண் அரசும், மாநில அரசும் முற்றம் திறக்கக் கூடாது என்பதிலும், அதைத் தகர்த்துவிட வேண்டும் என்றும் போட்டி போட்டுச் செயல் பட்டு வந்தன.
ஒரு புறம் ஈழத் தமிழர்களின் ‘புதிய தாயாக’உருவெடுத்து, அவ்வப்போது சட்ட
மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நம்மை ஏமாற்றுவதும், அதன்பின்னர் மாவீரன் பிரபாகரன் படம் வைக்கக் கூடாது,மாவீரர் தினம் நடத்தக் கூடாது என காவல் முயல, உங்கள் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம்தானே, நீங்கள் தமிழர் கள் தானே,ஏன், இப்படி நடந்து கொள்கின்றீர்கள்,நாங்கள் திட்டமிட்டவாறு அனைத்து ரயில்களையும் மறிப்போம், எமது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று காவல் துறையை ஒரு பிடி, பிடிக்க அப்படியே மொத்தக் காவல் துறை யினரும் விலகி நின்றார்கள்.
அதன் பின்பு ஒன்றரை மணி நேரம் தலைவர் வைகோ முழக்கமிட்ட பின்னரே
கைதானார்கள். அன்றைய தினம் மாலை நடந்த தமிழக சட்டமன்றத்தின் சிறப் புக் கூட்டத்தில் இந்தியாவிலிருந்து எவறும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று முதல்வர் தீர்மானம் நிறைவேற்றினார்.
13-ந் தேதி அதிகாலையில் 3 ஜே.சி.பி எந்திரங்களுடன் நூற்றுக் கணக்கான
காவல் துறையினரை வைத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பை, பூங் காவை, நீரூற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.
நீதி கேட்க வந்த அய்யா நெடுமாறன், நமது மாவட்டச் செயலாளர் உதயகுமார், தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் விடுதலை வேந்தன் உள்பட 20-க்கும் அதிகமானவர் களை காவல் துறையினர் கைது செய்தனர்.இவர்களுக்கு ஆதர வாகவும், முற்றத்தை இடித்ததைக் கண்டித்தும் சாலை மறியல் செய்த உணர் வாளர்கள் பலரையும் கைது செய்தனர்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்த தலைவர் வைகோவுக்கு இச் செய்தி சொல்லப்பட, தேள் கொட்டியதைப் போல அதிர்ச்சியும், அடக்க முடி யாத கோப அலைகளும் மேலோங்க,உடனடியாக தஞ்சைக்குப் புறப்படுவோம் என்று அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், மதுரை
மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், தொண்டர் அணிச் செயலாளர்
பாஸ்கர சேதுபதி படையணியுடன் காரில் வந்தார்.
அன்றைய தினம் மாலை சைதை சுப்பிர மணியின் சகோதரர் மணவிழா வர வேற்பு நிகழ்வுக்கு தாம் வர இயலாது, முற்றம் காப்பதே முழுப்பணி என நமது நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தியை அங்கு செல்லுமாறு தொலை பேசியில் தகவல் பரிமாறியவாறே திருச்சி மாநகருக்குள் நுழைகின்றார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், திருச்சி புறநகர் மாவட்டப் பொ றுப்பாளர் டி.டி.சி.சேரன், அரியலூர் மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா ஆகி யோர் உடன்வர, நாம் போருக்குப் போகிறோம்,உடல் நலன் பொருட்டு நீங்கள் வர வேண்டாம் என அய்யா மலர்மன்னனை அனுப்பிவிட்டு தஞ்சைக்குச் சென்றார்.
தஞ்சை நகர எல்லையில் துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ் ணன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் க.சந்திரசேகரன், அரசி யல் ஆலோசனைக் குழு உறுப்பினர் முப்பால்,நாகை மாவட்டச் செயலாளர் குத்தாலம் மோகன் வரவேற்க, திரண்டிருந்த கூட்டத்தினரிடம் காவல் துறை எந்த அடக்குமுறையில் ஈடுபட்டாலும், நீங்கள் அமைதி காக்க வேண்டும், யாரும் கற்களைக் கொண்டு எறிந்து விடக் கூடாது என எச்சரித்தார்.
அப்போது, தஞ்சை நகரச் செயலாளர் எஸ்.கே.ரவிச்சந்திரன், முள்ளிவாய்க் கால் முற்றத்திற்குள் எவரையும் காவல் துறை அனுமதிக்கவில்லை, தடை விதித்திருக்கிறார்கள் எனச்சொல்ல காரில் ஏறும்... நான் பார்த்துக் கொள் கி றேன், நான் முன்னே போகிறேன், அனைவரும் என் காரை பின் தொடருங்கள் எனக் கூறி விட்டு அடக்க முடியாத கோபக் கனலோடு, போர்க்களம் செல்லும் தீரத்தோடு விளார் நோக்கி விரைந்தார் தலைவர் வைகோ.
முற்றத்தின் சாலை முழுவதும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் வரி சை,வரிசையாக அணிவகுத்து நிற்க, கார் ஓட்டுநர் பொன்னாங்கனைப் பார்த்து யார் மறித்தாலும் நிறுத்தாதே போ..எனச் சொல்ல, காவல் துறை கூட்டத்திற் குள் நம் தலைவரின் கார் அசுர வேகத்தில் பாய்ந்து வர இருபுறமும் காவலர் கள் சிதறி ஓடினார்கள்.
முற்றத்தின் வாசலிலும் ஏராளமான காவல் துறையினர் நிற்க, முன்னே சென் ற தலைவரை ஒரு காவல்துறை அதிகாரி கையைப் பிடித்து தடுத்தது தான் போதும். பாஸ்கர சேதுபதியின் படையணியும், தஞ்சை நகரச் செயலாளர் எஸ்.கே.ஆர். உள்ளிட்ட தோழர்களும் காவல் துறையினர் மீது பாய, அதிர்ச்சிக் கு உள்ளான காவலர்கள் பின் வாங்கினார்கள். தொடர்ந்து முன்னேறிய நமது படையணியை, தோழர் களை கண்டித்து நம் தலைவர் கட்டுப்படுத்தினார். அதற்குள் காவல்துறை அதிகாரிகளில் ஓரிருவர் இப்ப நாம் என்ன செய்வ துன்னே தெரியலியே.. பேசாம அவரை விட்டு விடுவோம், பிரச்னை பெரிதாகி விடும் என முணுமுணுக்க, காவல் துறை கண்காணிப் பாளர் ஓடிவந்து நீங்கள் உள்ளே போகலாம், நாங்கள் விலகிக் கொள்கிறோம் எனச்சொல்ல, தலைவர் வைகோ போர்க்கோலம் கொண்டு, கண்கள் சிவக்க, முகம் படபடக்க, வார்த் தை சட்.. சடாரென்று தெரித்ததில் கொலையுண்ட கோவலனின் பிரிவு தாளாத கண்ணகி பெருந்தேவி,தன்னை வழிமறித்த பாண்டிய நெடுஞ் செழியனின் தர் பார் மண்டபத்தில் நீதி கேட்டு முழங்கியதைப் போல, ஆவேச மான பேச்சால் ஆட்சியாளும் ஜெயலலிதாவின் செயலை அம்பலப்படுத்தினார்.
உங்கள் அடக்குமுறை தேசப் பாதுகாப்புச் சட்டம் எங்கள் கால் தூசுக்குச் சமம்.
காட்டாட்சி நடத்துகின்ற ஜெயலலிதா வுக்கும், ராஜபக்சேவுக்கும் என்ன வேறு பாடு.. நேற்று தமிழர்களை ஏமாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம், இன்று அதி காலை முற்றத்தின் வாயில், உயர்ந்த கல்லினால் செதுக்கிய நீரூற்று, பெயர்ப் பலகை என அனைத்தையும் உடைத்து நிர்மூலமாக்கிய பாவத்திற்கு மன்னிப் பே கிடையாது. இங்கே முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளுக்கு கற்சிலைகள் எழுப்பப்பட்டுள்ளது.
சிங்கள வெறியர்களின் குண்டுவீச்சுக்கு பலியானவர்களின் முகங்கள் செதுக் கப்பட்டு உள்ளது. மாவீர மகன் பாலச்சந்திரன், சார்லஸ் ஆண்டனி, நடேசன் சிலைகள் நிற்கிறது. நடுவில் தமிழ்ப் பாவை விளக்கோடு ஒரே கல்லில் உயர்ந் து நிற்கிறாள், மாவீரர் மண்டபம், முத்து மண்டபம் என ஈழத் தமிழர் களின்
அவலத்தை, ஈகியரின் தியாகத்தை உரித்துக் காட்டுகின்ற பதுமைகள் உள்ள
முற்றத்தை இடிக்கலாமா?
மாவீரன் பிரபாகரன் படத்தை வைத்ததற்காக அண்ணன் நெடுமாறன் உள்ளிட் ட தோழர்கள் மீது வழக்கு போடுகிறீர்களா,நாட்டில் கோடிக் கணக்கான இளை ஞர் களின் நெஞ்சத்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ன செய்யப் போகிறாய்? எதற்கு இந்த இழிநிலை, உலகத் தமிழர்கள் இச்செயலுக்குக் காரணமானவர் களை காரி உமிழ்வார்கள் என தலைவர் வைகோ ஊடகவியலாளர்களிடம் ஆர்ப்பரித்து,ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தொடர்ந்து எங்கள் முற்றத்தில் மாவீரர் மண்டபத்தின் வாசலில் நானும், எம்
தோழர்களும் கொலுவிருப்போம். வரட்டும் உமது சேனை, தொட்டுப் பார்க்கட் டும் முற்றத்தை எனக்கூறியவாறு மண்டபத்தின் வாசலில் பகல் ஒரு மணிக்கு
இயக்கத்தவர் களோடு நம் தலைவர் அமர்ந்தார். பகல் உணவை தவிர்த்தார்,
தோழர்களுக்கு உணவு கொடுங்கள்,முற்றத்திற்கு வெளியில் அழைத்துச் சென் று சாப்பிடுங்கள், ஒரு குப்பை கூட இந்த புனித மண்ணில் விழக் கூடாது என் றார். அதுவரை எவரையும் முற்றத்தின் பக்கம் அனுமதிக்காத காவல் துறை, நம் புயலின் சீற்றத்திற்குப் பிறகு யாரையும் தடுக்கவில்லை.
கூட்டம், கூட்டமாக பொதுமக்களும்,இளைஞர்களும் வந்து இந்த அறப்போராட் டத்திற்கு ஆதரவு நல்கினார்கள்.கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்த
அய்யா நெடுமாறனை தொலைபேசியில் அழைத்து, நானும் தோழர்களும் முற் றத்தில் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள். இனி காவல் துறையின் ஒரு துருப்பு கூட உள்ளே வரமுடியாது என்றார் தலைவர் வைகோ.
சாவி தரச் சொல்கிறேன் மாவீரர் மண்டபத்திற்குள் இருங்கள் வைகோ என
அவர் சொல்ல, வேண்டாம் அண்ணே, மிக நேர்த்தியாகவும், கம்பீரமாகவும் உள்ள அந்த மண்டபத்திற்குள் மொத்தக் கூட்டமும் இருக்க இயலாது, அது
தேவையும் இல்லை. கொடியவன் ராஜபக்சேவை எதிர்த்து சாஞ்சிக்குப் போன போது சாலையிலே தானே மூன்று நாட்கள் இருந்தோம். இந்த புனிதமான
இடத்தில் தோழர்களோடு வெளியிலேயே அமர்ந்து கொள்கிறேன் என்று பதில்
சொன்னார்.
துளி நீர் கூட பருகாது, கால்களை தொங்கப் போட்ட நிலையிலேயே, அசதி யோ,அலுப்போ, பசியோ, தாகமோ, தளர்ச்சியோ,முதிர்ச்சியோ எதுவுமின்றி நம் தலைவர் இருந்த இருப்பைப் பார்த்து, நம் இருப்பை ஒத்துக் கொள்ளாதவர் கள் கூட ஒத்துப்போக சம்மதித்தார்கள். ஒரு பத்திரிகையாளர் பேசுகின்றபோது வைகோ-வைத்தவிர வேறு எவரிடத்தும் இந்தத் தீரத்தை, தியாக உணர்வை பார்க்க முடியாது.
அன்றைக்கு சொன்னார், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு ஆபத்து வருமா னால்,படையெடுத்து வருவேன் என்றார். இன்று முதல் தலைவராக படையெ டுத்து வந்து உள்ளார். உண்மை யாகவே நான் வைகோவைப் பார்த்து ஆச்சரி யப்படுகிறேன் எனப் பாராட்டினார். மாலை 5.30 மணிக்கு நாம் தமிழர் இயக்கத் தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் நம் தலைவரிடம் வந்தார். அவரை எழுந்து நின்று வரவேற்ற தலைவர், எங்கே,உங்கள் துணைவியார் எனக்கேட்டு, கயல்விழி சீமான் அவர்களையும் அழைத்து வரச் சொல்லி, அமர வைத்தார். தோழர் சீமானிடம் அவரது மாமனார் நண்பர் காளிமுத்து தொடர் பாக நினைவுகூர்ந்து பேசினார். இருவரும் அய்யா நெடுமாறன் விடுதலையாகி வரும் வரை இங்கேயே இருப்போம் என்று கூறினார்கள்.
இரவு 9.30 மணி வரை அமர்ந்த இடத்தை விட்டு நகராது நம் தலைவர் வைகோ
இருந்த தீரத்தைப் பார்த்து, திருச்சி மண்டல காவல் துறை துணைத் தலைவர்
அமல்ராஜ் நம் தலைவர் வைகோவிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அய்யா நெடுமாறன் மற்றும் தோழர்களை காவலில்வைக்க மேலிடம் உத்தரவு என்றும், சில வேண்டு கோள்களை தனியாகப் பேசினார்.
அதன் பின்னர் இரவு 10 மணிக்கு அய்யா நெடுமாறனும், தோழர்களும் அடைக் கப் பட்டிருந்த ‘மக்கள் மன்றம்’ சென்று தலைவர் வைகோ தனியாக ஆலோச னை நடத்தி விட்டு, தமிழக அரசின் இந்த அக்கிரமத்தைக் கண்டித்து ஆவேச மாக பேட்டியளித்தனர்.உங்கள் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுங்கள், நாங் கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கின்றோம். தமிழக அரசு ஏதாவது செய்ய முனைந்தால், நாங்களும் தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்ச ரித்துவிட்டு தஞ்சையில் இருந்து புறப்பட்டார் தலைவர் வைகோ.
ஏற்கெனவே, முற்றத்தின் முன்பு பூங்கா வைத்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டு, திடீரென முந்தைய தேதியைக் கணக்கில் காட்டி அவசர நோட்டீஸ் கொடுத்து, முற்றம் திறந்ததற்குப் பிறகு இடித்த தமிழக அரசின் போக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்... வெல்வோம் என்றார்.தோழர்களிடம் பத்தி ரமாக செல்லுங்கள் எனக்கூறிவிட்டு தலைவர் வைகோ நகர்ந்தார்.
களம் கண்ட வேங்கைத் தலைவனின் கார் போன பாதையில் பின்தொடர்ந் தோம். ஆளுமை எவரிடம் இருக்கிறதோ, அவரிடம்தான் உண்மை மிளிரும்.
உண்மை எவரிடத்தில் மிளிர்கிறதோ, அவரிடம்தான் நேர்மை கோலோச்சும்.
நேர்மைத் திறத்தோடு எவர் ஒருவர் கோலோச்சுகின்றாரோ அவர் மட்டுமே
நம்மையும், நம் இனத்தையும் காக்க முடியும்.
செய்தி தொகுப்பு :- மணவை தமிழ்மாணிக்கம்
No comments:
Post a Comment