Sunday, November 17, 2013

நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு -தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று (16.11.13) மாவட்ட தலைநகரங்களில் #மதிமுக வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக சார்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செய லர்கள் டி.ஜி.மாதையன் (கிருஷ்ணகிரி), சம்பத் (தருமபுரி) ஆகியோர் தலைமை வகித்தார்.

கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவினருடன் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் 

நாமக்கல்லில் அண்ணா சிலை முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் டி.என்.குருசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சக்திவேல், மாவட்ட சட்டதிட் டக் குழு உறுப்பினர் என்.எஸ்.ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

போலீஸாரின் அனுமதியின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக கட்சியின் ஒன்றியச் செயலர்கள் முத்துமணி (திருச்செங்கோடு), வி.ஏ.மணி (கபிலர்மலை), குருசாமி (மோகனூர்), நகரச் செயலர்கள் டி.தனகோபால் (நாமக்கல்), ஜோதிபாசு (ராசிபுரம்), சிவக்குமார் (குமாரபாளையம்) உள்பட டோர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் 

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு மதிமுக மாநிலப் பொருளாளர் ஆர்.மாசிலாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி துணைச் செயலர் பாபு.கோவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் தேவதுரை, சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் குமரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச்செயலர் தமிழ்வேங்கை, மதிமுக திண்டிவனம் நகரச் செயலர் கா.மு.இஸ்மாயில் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் 

வேலூர் தலைமை தபால் நிலையம் முன் சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் உதயகுமார் தலை மை தாங்கினார்.

கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ந.சுப்பிரமணி, மேற்கு மாவட்டச் செயலர் பன்னீர், வேலூர் மாநகரச் செயலர் பழனி, நிர்வாகிகள் திருநாவுக்கரசு, முனீர் பாஷா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

சென்னை மாவட்டம் 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா 

மதிமுக மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன் (வடசென்னை), மணிமாறன் (தென் சென்னை) 

தஞ்சாவூர் மாவட்டம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் சி. சந்திரகுமார் தலைமை வகித்தார்.

மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சி நிறுவனர் பெ. மணியரசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், பாஜகவைச் சேர்ந்த கர்ணன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் மழை பெய்தபோதும் குடை பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் 

நாகை புதியப் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக ஒன்றியச் செயலாளர் கே. அய்யாப்பிள்ளை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் ஷ்ரீதர், ராமமூர்த்தி, நகரச் செயலாளர் க. ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் 

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக மாவட்டச் செயலர் பரணி கே. மணி தலைமை வகித்தார்.

திருப்பூர் மாவட்டம் 

திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. டாக்டர்.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் மாநகர செயலாளர் சிவபாலன், நகர செயலாளர்கள் நாகராஜ் (15.வேலம்பாளையம்), மணி(நல்லூர்), ஒன்றிய செயலாளர் சந்திர மூர்த்தி, இளைஞர் அணி நிர்வாகி சதீஸ்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி முத்துக்குமார், ஆதிதமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகி பவுத்தன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் 

ம.தி.மு.க.வினர் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், மாநில இளை ஞரணி அமைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தியாகராஜன், ராம கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, கணபதி செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் சூலூர் கருணாநிதி, ராஜேந்திரன், சற்குணம், தூயமணி, துர்கா காளிமுத்து, பாக்யலட்சுமி, கவுன்சிலர் ராஜேந்திரன் உள்பட 250–க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்மாவட்டம் 

திண்டுக்கல்லில் ம.தி. மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலா ளர் செல்வராகவன் தலைமை வகித்தார். நகர செயலாளர் செல்வேந்திரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி, தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தேனி மாவட்டம் 

மதிமுக மாவட்டச் செயலர் சந்திரன் தலைமை வகித்தார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுத் தலைவர் அன்புவடிவு லிங்காலிங்கம், மதிமுக மாவட்டத் தலைவர் பி. பாஸ்கரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மதிமுக நகரச் செயலர் பெரியகருப்பன் வரவேற்றார். மாவட்ட துணைச் செய லர் எஸ். பொன்முடி, பெரியகுளம் ஒன்றிய செயலர் பெரியசாமி ஆகியோர் பேசினர்.

தேனி ஒன்றிய செயலர் போஸ், நகரச் செயலர்கள் போடி ஆரோ. செல்வன், பெரியகுளம் முகமது சலீம், கம்பம் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் என்.எஸ். தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்தேன் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் முகமது சபி நன்றி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் 

வகங்கை மாவட்ட மதிமுக சார்பில் சனிக்கிழமை அரண்மனைவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக மாவட்டத் தலைவர் செவந்தியப்பன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் சார்லஸ், தங்கப்பாண்டி, நகர செயலர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலர்கள் சேகர், நாச்சியப்பன், தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் 

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில், காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சந்திரசே கரன் தலைமையேற்றார். 

ராமநாதபுரம் மாவட்டம் 

ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.எம்.ராஜா தலைமை வகித்தார்.

தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பசுமலை, தமிழர் தேசிய பொதுவுடமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் சௌந்தரபாண்டியன் வரவேற்றுப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் பேரவையின் தலைவர் நாகேசுவரன், மதிமுக நகர் செயலாளர்கள் குணா (பரமக்குடி), சுப்பிரமணியன் (ராமநாதபுரம்), மண்டபம் ஒன்றிய மதிமுக செயலாளர் பேட்ரிக், சமூக ஆர்வலர் வீராச்சாமி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் 

மதுரை திருநகர் 2–வது பஸ் ஸ்டாப்பில் உள்ள திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வீர.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் சரவணன், மேற்கு மாவட்ட செயலாளர் முனியாண்டி, மற்றும் நிர்வாகிகள் சாமி, துரைச்செழியன், புஷ்பலதா, சக்திவேல், பொடா கணேசன், செல்வம், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணியின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழர்களின் மேல் உள்ள ஆர்வத்தாலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மேல் கொண்ட பற்றால் ஜெர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி மார்ட்டீன் என்பவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

முடிவில் திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஒச்சா தேவன் நன்றி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் 

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், ம.தி.மு.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மாவட்ட செயலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் அர்ஜூன் ராஜூ, முன்னாள் எம்.பி., சிப்பிப்பாறை ரவிச் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வரதராஜன், ஞானதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் 

மாவட்ட மதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, மதிமுக மாவட்ட துணைச் செயலர் வீரபாண்டி செல்லச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் வீரபாண்டி சரவணன், கணபதி பாண்டியன், ராஜ கோபால், வித்யா சுரேஷ், நிர்வாகிகள் மாரிமுத்து, முருகபூபதி, டேவிட் ராஜ், பொன்னுச்சாமி, முருகேசன், செல்வராஜ், ஜெகவீரபாண்டியன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் 

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத் துக்கு புறநகர் மாவட்டச் செயலர் பா.அ. சரவணன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் முன்னிலை வகித்தார். மாநில மாணவரணிச் செயலர் ராஜேந்திரன் பேசினார்.

மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாநில விவசாய அணியைச் சேர்ந்த கல்லத்தியான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நகர, பேரூர், வட்ட, பகுதிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment