Monday, November 18, 2013

விழுப்புரம் மாவட்ட தேர்தல் நிதியளிப்புக் கூட்டம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று (17.11.13) நடைபெற்றது. இதில் #வைகோ பேசியது:

நவம்பர் 12-ல் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். ஒரு சில இடங்களில் மட்டுமே கடையடைப்பு செய்தனர். முழு கடையடைப்புக்கு அதிமுக, திமுக ஆதரவு தரவில்லை.

இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேரூன் ஈழத்தின் வடபகுதியில் உள்ள யாழ்பாணத்துக்குச் சென்று பார்வையிட்டார். தமிழர்கள் தங்கள் கணவர், மகன் கள் 5,7 ஆண்டுகளாக காணவில்லை. நிலம், வீடுகளை இழந்து விட்டோம் என்று கதறி அழுதனர்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர், பூங்கா இடிக்கப் படு வதைக் கேள்விப்பட்டு அங்கே சென்று பார்த்தேன். வாயிலில் உள்ளே விடா மல் தடுத்தனர். தடையை மீறி உள்ளே சென்றேன். முற்றத்தில் இருந்த அறி விப்புப் பலகைகள், சுற்றுச்சுவர், வண்ண விளக்குகளை எல்லாம் உடைத்தனர். அதைக் கண்டு நெஞ்சம் கொதித்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடும். தொகுதி பற்றி இப் போது கூற முடியாது. தேர்தல் களத்தில் போராடி வெற்றி பெறுவோம் என்றார் வைகோ.

கூட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.நடராஜன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் இரா.மாசிலாமணி, மாவட்டத் தலைவர் பி.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் சவுக்கத்அலி, உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான ஜெய்சங்கர், நகரச் செயலாளர் வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மதிமுக சார்பில் நிதியளிப்புக் கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஏ.கே.மணி தலைமை வகித்தார். மாநிலப் பொருளர் டாக்டர் ஆர்.மாசிலாமணி முன்னிலை வகித்தார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்று மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியது:

விழுப்புரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம். இம் மாவட்டத்தில் இருந்து எங்களுக்கு பெரிய அளவில் தேர்தல் நிதி வசூல் செய்து கொடுத்துள்ளனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனோ, அதிமுகவுடனோ நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் பலத் தைக் காட்டுவோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் எங்களுக்கு மிக முக் கியமான இலக்கு.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு 2004-2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். என் வாழ்நாள் கனவு தனி ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்பது. அது நிச்சயம் நிறை வேறும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் 53 நாடுகள் பங்கேற்றுள் ளன. அதில் 30 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவில்லை. அதன் பிரதிநிதிகள்தான் பங்கேற்றனர். பிரிட்டன் அதிபர் டேவிட் கேம்ரூன் இலங்கை மார்ச் மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கெடு விதித் துள்ளார். இதுதான் இலங்கைக்கு ஆரம்பம். இனிமேல் அங்கு நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றார்.

No comments:

Post a Comment