பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு
இயற்றியது யார்?
சோழ சாம்ராஜ்யத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் குந்தவை நாச்சியார். சோழ மன்னர்களின் வரலாற்றில் பெருமைக்கு உரியவர். குந்தவை பிராட்டி சிறிய வயதில் இருக்கிறபோது புலவர்கள் வந்து பாடி விட்டுப் போன உடனே, குந்தவை சொல்கிறார். ‘அப்பா, புலவர்கள் உங்களை பற்றிப் பாடிய பாடல்கள் ரொம்ப நல்லா இருந்ததே?’ என்கிறாள்.
உடன் மன்னர், ‘அப்படியா நானே என்னைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடட்டுமா?’ என்று கேட்க, ‘பாடு’ என்றவுடன், இந்தப் பாட்டைப் பாடிவிட்டு ‘எப்படி இருக்கி றது?’ என்று கேட்டேன். என் முதுகில் ஏறி உட்கார்ந்து, என் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள்’ என்று சொல்லிவிட்டு, ‘இந்தப் பாட்டை யாரிடமோ குந் தவை சொல்லி இருக்கிறாள், அந்தப்புலவன் எழுதிக் கொண்டுவந்து இங்கே பாடி இருக்கிறான்’ என்கிறார்.
இவ்வளவு நகைச்சுவையைக் கூறிவிட்டு, அடுத்துச் சொல்கிறார். ‘இன்றைக்கு இந்தப் பாடலை எழுதுவதாக இருந்தால், இதோடு இன்னும் ஒரு அடியையும் சேர்த்து இருப்பேன். இந்திரனுக்கு யானை தந்தார் - சூரியனுக்குக் குதிரை தந் தார் - சிவனுக்கும் பார்வதிக்கும் பல்லக்கத் தந்தார் சுந்தரசோழர்’ என்று அதோ டு நிறுத்தி இருக்க மாட்டேன். இன்றைக்கப் பாடினால், ‘மறலியை உதைத்தார் சிவபெருமான், மார்க்கண்டேயனைக் காப்பதற்கு எமனை உதைத்தார் சிவன், எமன் தப்பித்துக் கொண்டான். எருமைக் கிடா இறந்துவிட்டது. சிவன் உதைத் ததில், எமன் தப்பித்தான் - எருமை இறந்துவிட்டது. என்னடா செய்வது? என்று திகைத்துப் போய் நிற்கும்போது, எமன் சுந்தரச் சோழரைப் பார்க்கிறார். ‘உனக் கு நான் ஒரு எருமைக்கிடா அனுப்புகிறேன் என்று சுந்தரச்சோழர் அனுப்பு கிறார்.
அந்த எருமை மீது ஏறி, எமன் வந்துகொண்டு இருக்கிறான். கோட்டைக்கு உள்
ளே சின்னப் பழுவேட்டரையர், காலந்தக கண்டராலும், அந்த எமதர்மராஜ னைத் தடுக்க முடியாது. அதாவது எனக்குச் சாவு வந்துவிட்டது என்று சுந்தரச் சோழர் இவ்வளவு நகைச்சுவைக்கு மத்தியில். ‘எமன் இப்பொழுது என்னை நோக்கி வருகிறான், சின்னப் பழுவேட்டரையர்,காலந்தக கண்டராலும் இதைத் தடுக்க முடியாது’ என்று சொன்னவுடன், அருகில் இருந்த வானவன்மாதேவி யின் கண்களில் இருந்து கண்ணீர் மழையாக கொட்டுகிறது.
ளே சின்னப் பழுவேட்டரையர், காலந்தக கண்டராலும், அந்த எமதர்மராஜ னைத் தடுக்க முடியாது. அதாவது எனக்குச் சாவு வந்துவிட்டது என்று சுந்தரச் சோழர் இவ்வளவு நகைச்சுவைக்கு மத்தியில். ‘எமன் இப்பொழுது என்னை நோக்கி வருகிறான், சின்னப் பழுவேட்டரையர்,காலந்தக கண்டராலும் இதைத் தடுக்க முடியாது’ என்று சொன்னவுடன், அருகில் இருந்த வானவன்மாதேவி யின் கண்களில் இருந்து கண்ணீர் மழையாக கொட்டுகிறது.
இப்படி எழுத, கல்கியைத் தவிர இனி வேறு எவரால் முடியும்?
காவியத்தின் கரு
இதன்பிறகு நிகழ்ச்சிகள் வேகமாக நடக்கின்றன. சதி ஆலோசனை நடந்து அல் லவா? அதற்குப்பிறகு தென்னாட்டில், பாண்டிய நாட்டு மன்னனாக இருந்த வீர பாண்டியன், சேவூர் போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனால் கொல்லப்பட்டார். ‘வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலச் சோழன்’ வாழ்க என்று கோஷம் போடுகிறார்கள். 12 ஆவது வயதில் போர்க்களத்திற்குச் சென்று 16 ஆவது வயதில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டித் தூக் கிக் கொண்டு வருகிறான். இது நடந்த சம்பம். கற்பனை அல்ல. இதுதான் இந் தக் காவியத்தின் உயிர்க் கருவான நிகழ்ச்சி.
ஆதித்த கரிகாலனையும், சோழ குல வம்சத்தையும் பழிவாங்க வேண்டும், என்று பூண்டோடு அழிக்க வேண்டும் என்று பாண்டிய நாட்டு ஆபத்து உதவி கள் முடிவு செய்து திட்டமிட்டு, அவர்கள் இங்கே வருகிறார்கள். பெரிய பழு வேட்டையருடைய தர்ம பத்தினியாகிய பழுவூர் ராணி நந்தினிதேவி இந்தக் காவியத்தில் ஒரு அருமையான பாத்திரம். நந்தினி தேவியைப் பற்றிச் சொல் கிற போது. அவளைப் பார்த்தமாத்திரத்தில் பழுவேட்டரையர் மட்டும் அல்ல, வீராதி வீரரும் வீழ்ந்து விடுகிறார்கள் என்றார்.
நந்தினியின் சபதம்
ஆதித்த கரிகாலன் நெஞ்சில், நந்தினிதேவி மீது சிறிய வயதில் அன்பு உரு வாகி, காதலாகி வளர்ந்த விட்டது. இதுதான் நிலைமை. ஆனால்,சேவூர் போர்க் களத்தில் வீரபாண்டியனை வெட்டுகிறபோது காயப்பட்ட கரிகாலனுக்கு பக்கத் தில் இருந்து பணிவிடை செய்துகொண்டு இருந்த நந்தினி, காலில் விழுந்து, ‘இவரை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று மன்றாடுகிறாள். அவளை உதைத்துத் தள்ளி விட்டு, தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டான் கரிகா லன். ஆகவே, அவள் மனதில் எரிமலையாக இருக்கிறது அந்தச் சம்பவம்.
அதற்குப்பிறகு, பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் அவளைக் கொண்டு போய், ‘நீ பககத்தில் இருக்கும் போது தானே இந்தச் சம்பவம் நடந்தது’ என்று,வீரபாண் டியன் உடல் எரிகிற சிதைநெருப்பில் அவளைத் தள்ளிவிட்டுக் கொல்லப்பார்க் கிறார்கள்.
‘என்னை விட்டுவிடுங்கள்; நான் பழி வாங்குகிறேன்’என்று நந்தினி சபதம் செய் கிறாள்.
அதற்குப்பிறகு, பாதை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த நந்தினியைக் கண்டு, அவள் அழகிலே மயங்கிய பெரிய பழுவேட்டரையர், அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், நந்தினியும் - பெரிய பழுவேட்டரையரும் மண வாழ்க்கை நடத்தவே இல்லை. அவள் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறாள். இல்லற வாழ்க்கையை நடத்தவே இல்லை.
பெரிய பழுவேட்டரையர் சின்னப் பழுவேட்டரையர் இருவரும் பழுவூர் மன்னர் கள்.பெரிய பழுவேட்டரையர் நிதி மந்திரி. கோட்டைக் காவல் யாரிடம்? சின் னப் பழுவேட்டரையரிடம். அவர்கள் சோழ மன்னருக்காக உயிர்களைத் தியா கம் செய்த பரம்பரையினர்.
அதற்கு அடுத்த கட்டம். சோழ நாட்டுக்கு ஒரு முதல் அமைச்சர் இருக்கிறார். அவர்தான் அன்பில் அநிருத்த பிரமராயர். ஒரு முதல் அமைச்சர் என்றால் இப் படித்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு, அன்றைக்கு மன்னர் காலத் தில் இருந்தார்கள். எல்லாவிதமான ஆற்றல், சூழ்ச்சி, ஒற்றர்களைப் பயன் படுத்துகிற தன்மை அவர்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஒற்றன்தான் ஆழ்வார்க்கு அடியான் நம்பி.
தொடரும்.......
No comments:
Post a Comment