Saturday, November 2, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 8

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவ ரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத் துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர்.அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.

இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.

பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே - சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி
அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில் லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

அன்புக்கு உரியவர்களே, இதைப்பேசக்கூடிய தகுதி அடியேனுக்கு உண்டு என்ப தற்குக் காரணம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கழுகுமலைக் குத் தெற்கே இருக்கின்ற சிதம்பரபுரம் என்கின்ற மறவர் சீமையில் தென்னாட் டில் முதன்முதலாக பூலித்தேவருக்கு சிலை அமைத்தவன் இந்த வைகோ. நானும், என் தம்பியும் சொந்தச் செலவில் மண்டபம் கட்டினோம். நானும், என் தம்பி ரவிச்சந்திரனும் சேர்ந்து பூலித்தேவருக்கும், பசும்பொன் தேவர் திருமக னுக்கும் இரண்டு சிலைகளை எழுப்பினோம். மண்டபம் அமைத்து தமிழ்நாட் டில் முதல் சிலை அமைத்தவன் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கக் கூடிய வைகோ.

அந்த மண்டபத்திறப்பு விழா மாலையில் நடைபெற்றது. அந்த மண்டபத்தைத் திறந்து வைத்துவிட்டு அந்த இரவோடு இரவாக நான் சென்னைக்குச் சென் றேன். அந்த இரவில்தான் என்னுடைய தம்பி விடுதலைப்புலிகளை வீட்டில் வைத்திருக்கிறான் என்று அதே இரவில்தான் கைது செய்யப்பட்டான். நான் இதை இங்கே நினைவூட்டுவதற்குக் காரணம் எந்த வீரத்தை மதிக்கிறோமோ மண்ணின் மானம்காக்க அந்தப் பூலித்தேவரின் வடிவமாகத்தான் நான் ஈழத் துப் பிள்ளைகளைப் பார்க்கிறேன். ஈழத்துப் போர்க்களங்களைப் பார்க் கிறேன்.

இந்தப் பூலித்தேவனின் வழியில்தான் ஈழத்தின் விடுதலைப்புலிகளைப் பார்க் கிறேன். இதைச் சொல்லக்காரணம், மானஉணர்ச்சியும், வீரஉணர்ச்சியும் படை கண்டு அஞ்சாது படை பெருக்கத்தைக் கண்டு அஞ்சாது உயிரைப்பற்றிக் கவ லைப்படாது நாட்டின் விடுதலைக்கு முதலாவது அடிமை விலங்கை உடைப்ப தற்கு சம்மட்டி ஏந்திய முதல் மன்னன் இந்தியாவிலேயே 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்றும் முதல் சுதந்திரப்போர் என்றும் அழைக்கப்படுவதற்கு நூறு ஆண்டுக்கு முன்னரே போர்புரிந்து வெற்றிகளைக் குவித்தவன்தான் பூலித்தேவர்.

அதன்பின்னர் கொடுமையிலும் கொடுமை என்னவென்று தெரியுமா? மீண்டும்
அங்கே ஒரு புதுக்கோட்டை கட்டப்பட்டது. ஒரு கோட்டை அழிந்தபோது பூலித் தேவன் மன்னர் இன்னொரு கோட்டை எழுப்பினார். அதற்குப்பெயர் புதுக்கோட் டை. அந்த புதுக்கோட்டையும் தகர்க்கப்பட்டபோது மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையாரும், அவரது மூத்தமகள் கோமதிமுத்து தலைவச்சியும், ஆண் பிள்ளைகளில் மூத்தவனாகிய சித்திரகுப்த தேவனும், இரண்டாவது பிள்ளையாகிய சிவஞான பாண்டியனும், பாதுகாப்பாக இருக் கட்டும் என்று மறவர் மக்கள் பனையூருக்குப் பக்கத்தில் காட்டுக்குள் பாதுகாப் பாக வைத்திருந்தார்கள்.

துரோகிகள் அடையாளம் காட்டி அவர்கள் இருந்த பகுதிக்கு தீ வைத்தார்கள். மன்னர் பூலித்தேவனின் மனைவி கயற்கண்ணி அம்மையார் தீயில் கருகி இறந்தாள். அந்த இடத்தில் அவர்களைப் பாதுகாத்த கொத்தாளித் தேவரும், இன்னொருவரும் பாய்ந்து சென்று இவர்களைப் பாதுகாக்க முனைந்தார்கள். புதுக்கோட்டை சண்டையைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. நான் படித்து இருக்கிறேன். அந்த நாட்டுப்புறப்பாடலில் ஒரு செய்தி.

இந்தச் சம்பவம் நடந்த உடன் சின்னப்பிள்ளையாக இருந்த சித்திரகுப்தத் தேவ னை வெள்ளைக்காரன் அழித்துவிடுவான் என்று பாதுகாப்பாக இருக்க வேண் டும் என்று பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைக்குக் கொண்டு சென்று வீரபாண் டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்முதுரை அவன் அரண்மனையில் வைத்து பாதுகாத்து வளர்த்ததாக புதுக்கோட்டை நாட்டுப் புறப்பாடல் செய்தி சொல்கிறது.

ஆகவேதான், மன்னர் பூலித்தேவன் போர்க்களம் அமைத்து அந்த வீரப்போர் கள் நடந்த அதற்குப்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பிறகு பாஞ்சாலங் குறிச்சி போர் நிகழ்கிறது. ஆனால், இந்தப் பிள்ளையையும் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வந்த செய்தியும் இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு இருக்கக் கூடிய சூழலில் இந்த உணர்வுகளை சொல்வதற்குக் காரணம், அன்புக்குரிய இளைஞர்களே, நாட்டின் விடுதலைக்காக வீரப்போர் புரிந்த மன்னர்கள் நம் மண்ணைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எவனுக்கும் கிடையாது.

இந்த மண் வீரம் நிறைந்த மண். மானம் நிறைந்த மண். இந்த மன்னனின் புக ழைப் பாடுவது அப்படிப்பட்ட மன்னருக்குப் புகழ் நிலைநாட்டப்பட வேண்டும். சமூகஒற்றுமையை நிலைநாட்டுவோம். மதநல்லிணக்கத்தை பாதுகாத்தவர் பூலித்தேவர்.

வாசுதேவநல்லூரில் அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. காரணம் என்னவென்று தெரியுமா?மாபூஸ்கான் இருந்தபோது இஸ்லாமியர்கள் வழிபடு வதற்கு என்று பள்ளிவாசலை அமைத்துத்தந்தவர் பூலித்தேவர். வாசுதேவநல் லூரிலும் சரி, நெற்கட்டுஞ்செவலிலும் சரி. வழிபடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் பூலித்தேவன். அவரது படையில் பக்கத்தில் பீர்முகமது சாயுபு இருந்தார். மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும் இருந்த அந்தப் பண்பாட் டை நிலைநாட்டிய மாமன்னர் புகழ்பாடுவதற்கு இந்த இயற்கையும் ஒத்துழைத் து, மழைக்கும் விடுமுறை கொடுத்து மனம்போல இந்த விழா நடைபெறுவ தற்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றிதெரிவிக்கிறேன்.

வாழ்க மன்னர் பூலித்தேவர் புகழ்!

வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 7

No comments:

Post a Comment