மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி கம்பத்தில் வருகிற 4–ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று #வைகோ அறிவிப்பு
மதுரை புதூரில் #மதிமுக பிரமுகர் திருமண விழா இன்று (20.11.13 ) நடைபெற் றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசிய தாவது:–
ம.தி.மு.க.வில் மிக பற்றுள்ள இந்த குடும்பத்தின் திருமண விழாவில் வரலாற் று சிறப்புமிக்க ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தின் முது கெலும்பாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க மத்திய அரசு நிபுணர் குழு கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண் டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு எதிராக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறது.
இந்த நிபுணர் குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், வனப்பகுதியில் கட்டி
டம் கட்டவோ, அணை கட்டவோ, இடிக்கவோ முடியாது. முல்லை பெரியா றை குறிவைத்து அரசியல் நடத்தும் சில கட்சிகள் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை பாதகமான அறிக்கை என்று கூறி கேரளாவில் பந்த் நடத்து கிறார்கள்.
டம் கட்டவோ, அணை கட்டவோ, இடிக்கவோ முடியாது. முல்லை பெரியா றை குறிவைத்து அரசியல் நடத்தும் சில கட்சிகள் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை பாதகமான அறிக்கை என்று கூறி கேரளாவில் பந்த் நடத்து கிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க கூடாது. மார்க்கிஸ்ட் கம்யூ னிஸ்டு பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கேரள மாநிலத்தின் செயலாளர் போல், போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இது இந்திய இறையான் மைக்கு எதிரானதாகும்.
எனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலி யுறுத்தி ம.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் (வைகோ) தேனி மாவட்டம் கம்பத்தில் வருகிற 4–ந்தேதி விவசாய பெருங்குடி மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment