Sunday, November 3, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 1

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

அனைவருக்கும் வணக்கம்.

‘சோழமண்டல இயல் இசை நாடக மன்றத்தினர் விழா எடுப்பதாகவும், அதில் ‘இயல்’ குறித்து உரையாற்றிட வேண்டும் என்றும் அழைத்த நேரத்தில், கலை வளர்த்த தரணியில், இசை வளர்த்த தஞ்சையில், தமிழர்களின் மகோன்னத மான மன்றத்தில், உரை ஆற்றுகின்ற வாய்ப்பு எனக் கருதி அகமகிழ்ந்து, நான் இசைவு அளித்தேன்.

கல்விக் காவலர், மாட்சிமைக்கு உரிய துளசி அய்யா வாண்டையார் அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று, உதயகுமாரும், துரை. பாலகிருக்ஷ்ணனும் என்னிடத்தில் கூறியபோது, அது திகட்டாத தேறலாக என் நெஞ்சில் இனித்தது. என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து அவரை மதிக்கின்றவன் நான். இன்றுதான் முதன்முதலாக அவர்களோடு ஒரு மேடையில் பங்கு ஏற்கின்ற பேறு எனக்கு கிடைத்து இருக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க இசைவு அளித்தமைக்கும், அரிய உரை தந்தமைக்கும், இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்கி படைத்த காவியம்


சோழ நாட்டின் பெருமையை முறையாக வரலாற்றுச் சுவடிகளில் பதிவு செய் ய நமது முன்னோர்கள் தவறி இருந்தாலும், செப்பு ஏடுகளில், கல்வெட்டுகளில் தமிழ் மக்கள் குறித்து வைத்து இருக்கிற செய்திக் குறிப்புகளைக் கொண்டு ஒரு காவியம் படைத்தார் கல்கி ஆசிரியர். ‘பொன்னியின் செல்வன்’ எனும் இந்த வரலாற்றுப் புதினத்தைப் படைத்தார்.


இசை பிறந்தது, கூத்து பிறந்தது. பின்னால் இயல் வளர்ந்தது. நான் காலத்தின் அருமை கருதி இந்த இயல், உரைநடை இலக்கியம் எப்படிப் பரிணமித்தது என்பதைப் பிரித்துக்கூற இயலாது. குறுங்கதையும் நெடுங்கதையும் உரை நடை இலக்கியத்தின் பகுதிகளாக வளர்ந்து வந்த காலத்தில், ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னால் தமிழர்களின் உன்னதமான சரிதத்தை, போற்றிய நெறி களை, கல்கி ஆசிரியர் சரித்திர நவீனங்களாகத் தந்தார். நான் மிகச்சிறிய வய தில், பள்ளி மாணவனாக இருந்த பருவத்தில் , என் இல்லத்திற்கு நாளேடாக ‘சுதேசிமித்திரனும்’, வார ஏடாக ‘கல்கி’யும் வந்த காரணத்தால், ‘பாத்திபன் கனவு - சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வன்’ தொடர்கள் தொகுக் கப்பட்ட பைண்டு வால்யூம்களை நான் ஆர்வத்துடன் படித்தேன், அதில் இல யித்துப்போனேன்.

உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாக வே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண் ணற்ற முறையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவ தைப் போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து.

சோழ வள நாடு


சோழ நாட்டின் சிறப்புகளைப் பற்றிக் கல்கி ஆசிரியர் பொன்னியின் செல்வ னில் தருகிறார். சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடு களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.

“அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வள நாடு - கேரளாந்தகன் வளநாடு” என்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடு’ என்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது.

அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடை பெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம்.

இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னி யின் செல்வன் கட்டிய ஆலயம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற, இந்தத் தஞ்சைப் பெருவுடை யார் கோவிலில், 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இன்றைக்கும் இருக்கிறது.

அந்தக் கோவில் கல்வெட்டில்,

‘நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய
ஓலோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’

என்று கல்வெட்டு இருக்கிறது.

அதுதான் இன்றைக்கு பிரகதீக்ஷ்வரர் ஆலயத்தில் காணப்படுகிறது . ஆயிரக் கணக்கான கழனிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூமி, மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் குடும்பம், இன்றைக்கு அந்தப் பெயரிலேயே கல் லூரி அமைத்து, வசதியற்ற ஏழைப்பிள்ளைகளுக்கும் கல்வியைத் தருகிறார் கள். அந்தப் பூண்டி மண்டலத்தைத்தான் ‘நித்தவிநோத வளநாட்டு வெண்ணி கூற்றத்துக் கீழ்ப்பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேரித மங்கலம்’ என்று ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுக் கூறுகிறது.பூக்கள் மண்டி கிடந்ததாலே பூ மண்டி - ‘பூண்டி’ ஆயிற்று.

எத்தனைப் பூக்கள் குறிஞ்சிப் பாட்டிலே கபிலன் தருகின்ற பூக்கள்! அப்படிப் பூக்கள் மண்டிய பூமியாம் பூண்டியின் காவலர், இவ்விழாவின் ஏற்றமிகு தலைவர்!

தொடரும்...

No comments:

Post a Comment