Wednesday, November 20, 2013

பள்ளி விளையாட்டு மைதானம் சமூக சீர்கேடுகளின் களமா ?

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மதிமுக நகர செயலாளர் ஆர். அசோக்குமார் ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் மனு அளித்தார்.
மனு விவரம்: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் பகலில் பள்ளி மாணவர்கள் விளையாடும் இடமாகவும், அதி காலை,  மாலை நேரங்களில் பொதுமக்களின் நடை பயிற்சிக்கும் பயன்படு கிறது.

இந்த விளையாட்டு மைதான வளாகத்தில் இரண்டு மாணவர்கள் விடுதிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங் களும் உள்ளன.

இந்த நிலையில், இந்த மைதானத்தில் இரவு நேரங்களில் பல சமூகச் சீர்கேடு கள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக் க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment