Friday, November 15, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 8

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

நந்தினிக்கும், கரிகாலனுக்கும் வாதம் நடக்கிறது.

‘என்னைக் கொலை செய்யவேண்டும் என்று தானே இங்கு வரவழைத்தாய்? உன் கையில் இருக்கும் மீன் சின்னம் பொறித்த வாள், என்னைக் கொல்வதற் குத்தானே? என்னைக் கொன்று விடு’ என்று சொல்கிறான்.

நந்தினி கூறுகிறாள்: கொலை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன்.ஆனால், எனக்குக் கடைசியாகக் கிடைத்த தகவல், ஊமைராணி மந்தாகினியின் மகள் நான் என்றும், என் தந்தை யார் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதை நினைக்கிறபோது, அந்த எண்ணம் எல்லாம் விட்டுவிட்டேன் என்கிறாள்.

கரிகாலனும், ‘நீ காலில் விழுந்து மன்றாடியும், அதைப் புறக்கணித்துவிட்டு நான் வீரபாண்டியன் தலையை வெட்டினேன். அன்றுமுதல் என் மனதில், வாழ் வில், அமைதி இல்லை. எனவே எனக்கு என் உயிரைப் போக்கிக் கொள்வது ஒன்றுதான் பிராயச்சித்தம்’ என்று கரிகாலன் சொல்கிறான்.



இந்த நேரத்தில், வந்தியத்தேவன் விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்று ஓடி வருகிறான். இரு கரங்கள் அவன் கழுத்தைப் பிடித்து நெரிக்கின்றன. வஜ்ர வலிமை பெற்ற இரு கரங்கள் கழுத்தை நெரிக்கின்றன, மயங்கி விழுகிறான். சதிகாரன் ரவிதாசன் அறைக்குள் நுழைகிறான். சோழர் குலத்தைக் காப்பாற்ற வருகிறார் பெரிய பழுவேட்டரையர். அந்த நேரத்தில் விளக்கு அணைகிறது. ‘ஆ’ என்ற அலறல் சத்தம் கேட்கிறது. அதன்பிறகு பார்த்தால், ஆதித்த கரி காலன் இறந்து கிடக்கிறான்.

கொன்றது யார்?

இதை ஏன் கல்கி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்றால், கரிகாலன் சம்புவராயர் மாளிகையில் கொல்லப்பட்டார் என்றுதான் செய்தி.கொலைக்குக் காரணமான ரவிதாசன்,சோமன் இடும்பன்காரி,பரமேஸ்வரன்,கிரமவித்தன் என்றுகல்வெட்  டில் பெயர் இருக்கிறது. யார் கொலை செய்தார்கள் என்று சரியாகத் தெரியாது. ஆகவே, இந்த இடத்தை நான் ஒரு 20 தடவைப் படித்து இருப்பேன். இன்றுவரை யில் யார் கொலை செய்து இருப்பார் என்று என்னால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

கரிகாலன் கையில் வாள் இருந்தது என்கிறார். அடுத்து கரிகாலன் உடம்பில்
அந்த வாள் பாய்ந்து இருக்கிறது. அப்படியானால், அவனே தற்கொலை செய்து கொண்டானா? காளாமுகத்தோற்றத்திலே வந்த பழுவேட்டரையர் திருகு கத்தி யை வீசி எறிகிறபோது, அது தவறி கரிகாலன் மேல் விழுந்துவிட்டதா? ரவிதா சனே கரிகாலனைக் கொன்று விட்டானா, நந்தினி கொல்லவில்லை. இது சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. நான் பலமுறை படித்தும் இதன் மர்மம் தீரவில்லை.

இதற்குப் பிறகு சதிகாரர்கள் தப்பிச்செல்கிறார்கள். வந்தியத்தேவன் மிது பழி விழுகிறது. சபையில் விவாதம் வருகிறது. மதுராந்தகத் தேவர் உண்மையான இளவரசர் அல்ல.ஆம்,அதாவது நான் குறிப்பிட்டேன் அல்லவா,அரசு உரிமைக் கு யார் உரியவர்? என்று பார்க்கிறபோது, மதுராந்தகத்தேவர் அல்ல. பூ தொடுத் துக்கொண்டு இருந்த சேந்தன் அமுதன்தான் உண்மையான அரசு உரிமைப் பிள்ளை.

சிவாலயங்களுக்கு எல்லாம் விரும்பிச் செல்லக்கூடியவர்கள் இந்த நிகழ்ச்சிக் கு தலைமை தாங்குகிற அய்யா அவர்கள்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னர் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே, மழபாடியுள் மாணிக்கமே
என்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

என்கிறாரே, இதில், ‘மழபாடியுள் மாணிக்கமே’ என்கிற வரியை இதில் எழுது கிறார் கல்கி. மழவரையர்கள் கொஞ்சகாலம் வேற்றுமையாக இருந்தார்கள், பின்னாளில் அந்த மாவரையர் குலத்தில் பிறந்த மகளை, சிவன் மேல் பற்றுக் கொண்ட அந்தப் பெண்ணை, கண்டராதித்தர் மணம் செய்து கொண்டார். ஆக வேதன், ‘மழபாடியுள் மாணிக்கமே’ என்று சொல்கிறார்கள்.

நம்பியாண்டார் நம்பி அவர்கள் திருப்பதிகங்களை தொகுத்தார்கள்.இந்த நூலில், நம்பியாண்டார் நம்பியை அவ்வளவு உயர்வாகக் காட்டுகிறார் கல்கி ஆசிரியர். கண்டராதித்தரும், அவருடைய துணைவியார் செம்பியன்மாதேவி யும், இவர்களது பிள்ளைதான் சேந்தன் அமுதன்.

பொன்னியின் செல்வனில், முதல்பாகம், புது வெள்ளம் - இரண்டாம் பாகம் சுழல் காற்று - மூன்றாம் பாகம், கொலைவாள் - அடுத்த பாகம், மணிமகுடம் - கடைசி பாகம் தியாக சிகரம். தியாக சிகரத்தின் கடைசிக் கட்டத்தில், கரிகால னின் உயிரைக் காப்பாற்றத் தவறி விட்டேன். என்னால்தான் அவர் மடிந்தார், என்னை வெட்டிக்கொண்டு மாய்வேன் என்று பழுவேட்டரையர் வாளை வீசப் போகிறார். அப்படி வீசப்போகின்றபோது, அருள்மொழிவர்மர் கையைப் பிடித்து நிறுத்துகிறார். மேலும் விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது.

திருகு கத்திதான் அவர் மீது பாய்ந்தது என்கிறபோது, அது இடும்பன்காரியின் கத்தி என்கிறார்கள். ‘அந்தக் கத்தியை நான்தான் நந்தினியின் மீது வீசினேன். அது கரிகாலன் மீது விழுந்து இருக்கலாம். எனவே, சோழர் குலத்தைக் காக்க வேண்டி துர்காபரமேஸ்வரி கோவிலில் நான் எடுத்த சத்தியம் என்ன ஆவது? என் உயிரைக் கொடுப்பேன் என்கிறபோது, சின்னப் பழுவேட்டரையர், ‘நானே உன் கையை வெட்டுகிறேன்’ என்கிறார்.

மருதுபாண்டியர்களைப் போல, அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள் இருவ ரும், 'சோழர் குலத்தைக் காக்கத் தவறிய உன் கைகளை நான் வெட்டுகிறேன்’ என்று கத்தியை எடுத்துக்கொண்டு, சின்ன பழுவேட்டரையர் வருகிறார் அண் ணனை நெருங்கி!

‘சுந்தரச் சோழர் வேண்டாம் வேண்டாம்’ என அலறுகிறார்.

இந்தத் திருகுக் கத்தியை எடுத்து நானே மடிகிறேன் என்று, பழுவேட்டரையர் மார்பில் குத்திக் கொண்டு கீழே விழுகிறார். தேவதாரு மரம் சாய்ந்ததைப் போல, பழுவேட்டரையர் கீழே விழுந்து மடிகிறார்.

வாரிசு யார்?

யாருக்குப் பட்டாபிஷேகம் நடத்துவது, அருள்மொழிவர்மருக்கு மணிமுடி சூட் டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள் இதுதான் கடைசிக் கட் டம். அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத் துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடி யைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். தனக்குக் கிரீ டம் வேண்டும் என்று இவர் நினைக்கவில்லை.

அந்த சேந்தன் அமுதன்தான் உத்தமச்சோழர். உத்தமச்சோழரும் பெயர் பெற் றார். பின்னாளில், அருள்மொழிவர்மன் சோழ நாட்டின் மன்னன் ஆனான்.கடல் கடந்து சென்று, கீழ்த்திசையில் பல நாடுகளை வென்றார்.

நாடாளுமன்றத்தின் வெளிச்சுவற்றில், இந்த நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்களக் காட்சிகள் இந்த நாட்டுச் சரித்திரத்தின் புகழ்மிக்க காட்சிகள் அழ கிய அஜெந்தா வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு இருக்கின்றன.

நான் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உரையாற்றும்போது சொன்னேன்: அதோ பாருங்கள்! ஈழத்தில் எங் கள் மக்கள் மடிகிறார்கள். எங்கள் தமிழ்க்குல மக்கள் மடிகிறார்கள்.ஆனால், ஒரு  காலத்தில் தென்திசையை ஆண்டவர்கள் எங்கள் சோழ மன்னர்கள். பண் டித ஜவஹர்லால் நேரு சொன்னார், சோழ மாமன்னர்களிடம் கப்பல் படை இருந்தது. போர் யானைகளை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்கள், இந்தியாவில் வேறு எவனிடமும் கிடையாது. நான் இந்தியத் தேசத்தைத் போற்றக்கூடிய ஒரு குடிமகன்தான்.

ஆனால், சரித்திரம் என்று பார்க்கிறபோது,இந்தியத் துணைக்கண்டத்தில் இருந் து, வெளிநாடுகளுக்குப் படை எடுத்துச் சென்றவர்கள் சோழர்கள் மட்டும் தானே தவிர, வங்காளிகளோ மராட்டியர்களோ பஞ்சாபிகளோ கிடையாது. இது வரலாறு. நேரு எழுதுகிறார்: “வலிமை வாய்ந்த சோழ சாம்ராஜ்யம் கடல் கொள்ளைக்காரர்களை அடக்கி, கீழ்திசை நாடுகளில் எல்லாம், புலிக்கொடி யை வெற்றிக்கொடியாகப் பறக்க விட்டார்கள்” என்று எழுதி இருக்கிறார். 
அதைத்தான் நான் நாடாளுமன்றத்தில் சொன்னேன். இந்த நாடாளுமன்றத்தின் வெளிச் சுவற்றில், 56 ஆம் எண் கொண்ட அந்தச் சித்திரத்தை பாருங்கள். கரை யில் நிற்கின்றான் ராஜராஜசோழன். அவன் ஏவுகிறான். கையில் வேல் ஏவுகிற தோற்றம் இருக்கிறது. மரக்கலங்களில் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களது கைகளில் வேலும் வாளும் இருக்கிறது. கப்பலில் புலிக்கொடி பறக்கிறது. இது தான் எங்கள் வரலாறு என்று நாடாளுமன்றத்தில் சொன்னேன்.

ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்று சொன்னேன். அடுத்த 10 ஆவது நாள், இந்திய நாடாளுமன்றச் வெளிச்சுவற்றில் ராஜராஜசோழன் படை எடுத் துச் செல்கிற அந்த அழகான ஓவியம் அகற்றப்பட்டு விட்டது. இன்றுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா ஓவியமும் இருக்கிறது அதை மட்டும் காணோம். ஏன்? ஏன்?

அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி!

பண்பாட்டைக் காப்போம்

‘பொன்னியின் செல்வன்’ போன்ற காவியங்கள் எதற்காக? சோழ மன்னர் களின் உயர்வைப்பற்றி மட்டும் சொல்வதற்காக அல்ல. இந்தக் காவியத்தில், ‘கலைகள் வளர்ந்தன, மன்னனும் குடிமகனும் ஒன்றே என்பதற்கான காட்சி கள் இருக்கின்றன. ஒழுக்கம் என்று சொன்னார்கள் அல்லவா, ஆதித்த கரி காலன் சொல்கிறான் ‘பிறன்மனை விரும்பும் தவறை இந்தக் குலத்தில் நாங் கள் செய்ய மாட்டோம்’ என்று சொல்கிறார்.

இவை எல்லாம் காலம்காலமாகப் போற்றப்பட்ட பண்பாடுகள். இவற்றை எல்லாம் இந்தப் பொன்னியின் செல்வனில் படிக்கிறபோது, பல்லாயிரக் கணக் கான மேடைகளில் ஏற்படுத்த முடியாத உணர்வுகளை, இந்த நூல் கோடான கோடி மக்கள் மனதில் ஏற்படுத்தியது.

அப்படிப்பட்ட அற்புதமான காவியம் ‘பொன்னியின் செல்வன்’. இதைத் தந்த கல்கி மறைந்து விட்டார், அருள்மொழிவர்மர் மறைந்து விட்டார். ஆனால், பொன்னியின் செல்வன் காட்சிகள், அந்தப் பழைய சோழ நாட்டையே கொண்டு வந்து கண்ணுக்கு முன்னால் நிறுத்துகிறது.

சோழர் குலத்தின் புகழ் வாழ்க!

அவர்கள் போற்றி வளர்த்த இசையும் பெருமையும் வாழ்க! வளர்க!

தமிழர் பண்பாடு வெல்க!

அரிய வாய்ப்புக்கு, நன்றி வணக்கம்.

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 7

No comments:

Post a Comment