Wednesday, November 13, 2013

உலகத் தமிழர்களே, ஒருசேர எழுவோம்; நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

உலகத் தமிழர்களே, ஒருசேர எழுவோம்;நீதி கிடைக்கும் வரை போராடுவோம்! என்று புன்னக்காயல் புது நன்மை விழாவில் பேசிய #மதிமுக பொதுச் செயலா ளர் #வைகோ அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தட்டுங்கள்; திறக்கப்படும்!
கேளுங்கள்; தரப்படும்!
தேடுங்கள்; கண்டு அடைவீர்கள்! 

வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கின்ற வர்களே, என்னிடத்தில் வாருங்கள்; நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன். இரக்கப்படுகின்றவர்கள் பாக்கிய வான்கள்; சாந்த குணம் உடையவர்கள் பாக்கியவான்கள்.பசியோடு நீதிக்காகப் போராடு கின்றவர்கள் பாக்கியவான்கள். என்ற,விவிலியத்தின் இனிமையான மறை மொழிகளை மனதில் நிறுத்தி, மகிழ்ச்சி அலைமோதுகின்ற புன்னக் காயல் வளனார் மண்டபத்தில், உங்களையெல்லாம் சந்திக்கின்ற பேறு பெற்ற மைக்காக மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தப் புன்னக்காயலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ கத்தின் அவைத்தலைவர் என்ற பொறுப்பை வகித்த மதிப்பிற்குரிய தனராஜ் பெர்னாந்து,அவரது துணைவியார் திருமதி தனமேரி லோபோ ஆகியோரு டை ய பெயரனும், நினைவில் வாழுகின்ற தோமஸ் பர்ணாந்து ,பெனிட்டோ ஆகி யோரின் பேரப்பிள்ளை களும்,என்னுடைய ஆருயிர்த்தம்பி தாமஸ்,தெரசிற்றா தாமஸ் ஆகியோருடைய இனிய குழந்தைகள்,அருமைப் புதல்வன் தனரோ கித்-அருமைப்புதல்வி தன பிரிட்னி ஆகியோருக்கு, புது நன்மை எனப்படு கின்ற  திருவிருந்து நிகழ்ச்சி, இன்று பொற்காலைப் பொழுதில் கத்தோலிக்க
கிறித்துவத் தேவாலயத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தம்பி ஜோயல் தலைமையில், இங்கே வாழ்த்து அரங்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை
இணைத்துக் கொண்டவர்களை வரவேற் கிறேன், நன்றி தெரிவிக்கின்றேன்.
புன்னக்காயலின் பழம்பெருமை


சரித்திரப் பிரசித்திப் பெற்ற நகரம் இந்தப் புன்னக்காயல். புன்னை மரங்கள் வளர்ந்து  இருந்த சோலைக்கு அருகில், பொருநை ஆறு கடலோடு கலப்ப தால்,‘காயல்’என்ற பெயரை இந்த ஊர் பெற்றது.இங்கே இயற்கை எழில் கொஞ் சுகிறது. நெய்தலங்கானலில் கடலோடு அலைகளில் மீன்கள் நீந்து வதைப் போலத் துள்ளி விளையாடுகின்ற வீரப்பிள்ளைகள்; கடலில் முத்துக் குளிப்ப தும், கடல்வாழ் மீன் செல்வத்தைக் கொண்டு வந்து உணவுக்குப் பயன்படுத்து வதும், நெடுந்தொலைவுக்கு மரக்கலங்களில், தோணிகளில், படகுகளில், கப் பல்களில் இங்கே விளைகின்ற பொருள்களை ஏற்றிச் செல்வதும், வெளிநாடு களில் இருந்து கப்பல்களில் கொண்டு வருகின்ற பொருள்களை இங்கே இறக் குமதி செய்வதும், அப்படிச் சிறந்து இருந்த கொற்கைத் துறைமுகம் அருகில்
இருக்கின்றது. கடலால் அது அழிந்த காலத்தில்,அங்கேயிருந்து இந்தப் புன்னக் காயலுக்கு மக்கள் வந்தார்கள் என்பதை நான் அறிந்து இருக்கின்றேன்.

இத்தனை வரலாற்றுச் சிறப்புக்கு உரிய இந்தப் புன்னக்காயலில்தான், சேவை
செய்வதற்காக, வழிந்தோடும் கண்ணீரை முகங்களில் இருந்து துடைப்பதற் காக,நோயின் பிடியில் அவதிப்படுகின்றவர்களின் துன்பத்தைப் போக்குவதற் காக, கல்வியைப் போதிப்பதற்காக, ஏழை எளிய மக்களுக்குக் கல்வியைத் தரு வதற்காக, தொண்டு செய்வதற்காக,சேவையைப் பரப்புவதற்காக வந்தது
கிறித்துவ மார்க்கம்.

போர்த்துகீசிய நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையினர் புறப்பட்டு வந்து, இந் தத் தெற்குச் சீமையில் அவர்கள் அடி எடுத்து வைத்தார்கள். இந்த மண்ணில்
தான், ஃபிரான்சிஸ் சேவியர் உலவினார்.இந்த மண்ணில்தான், ஹென்ரிக்ஸ்
பாதிரியார் உலவினார். 1542-1544 ஆம் ஆண்டுகளில் பிரான்சிஸ் சேவியர் இங் கே வருகிறபோது, மண் சுவர்கள் மீது எழுப்பப்பட்ட ஓலைக்குடிசைகளில்
தேவாலயங்கள் அமைக்கப்பட்டன.

1578 ஆம் ஆண்டு, ஹென்ரிக்ஸ் பாதிரியார் இங்கே வந்தபோது, அழகிய கட்ட டத்தைக் கொண்ட தேவாலயமாக உருப்பெற்றது. தமிழ் மண்ணில் முதன்
முதலாக ஒரு அச்சகம் இந்தப் புன்னக்காயலில்தான் தொடங்கப்பட்டது.
‘அடியார்கள் வரலாறு’ என்ற நூல் ‘அடியார்கள் வரலாறு’ வெளியிடப்பட்டது.

போர்த்துகீசியர்களின் புகலிடம் புன்னக்காயல்

இங்கே இருந்து கிறித்துவ மார்க்கத்தை,மணப்பாடு, பெரிய தாழை, உவரி,வேம் பார் வரையிலும், தூத்துக்குடி நகரிலும்,சேசு சபையை நிறுவுகின்ற பணிகளில், ஃபாதர் பிரான்சிஸ் சேவியர்,ஃபாதர் இக்னேஷியஸ் லயோலா ஆகியோரு டை ய காலத்தில், இந்தத் திருச்சபைகளின் மூலமாக இங்கே மிகப்பெரிய அளவில் சேவைப்பணிகள் நடைபெற்றன. பின்னர் டச்சுக்காரர்கள் வந்து போர்த்துகீசி யர்களோடு மோதிய காலத்தில்,அடைக்கலம் தேடி வந்த அந்தப் போர்த்துகீசிய மக்களுக்கு, புன்னக்காயல்தான் சரணாலயமாகத்திகழ்ந்தது.

இத்தனை வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டு இருக்கின்ற இந்தப் புன்னக்
காயல் மக்கள், நீண்ட நெடுங்காலமாக கடல் கடந்து சென்று வாழ்கிறார்கள்.
தாமசும் அப்படித்தான் கடல் கடந்து சென்று, திரைகடல் ஓடி திரவியம் தேடுகி றவராகத் திகழ்கிறார். அவரது தந்தை அனைந்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

எனவே, அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், நமது இல்ல நிகழ்ச்சிக்கு வந்து இருக்கின்றார்கள். என்னுடைய அன்புத்தம்பியின் அருமைப் பிள்ளைகளுடைய புது நன்மைக்காக,எல்லோரும் வந்து சிறப்பித்து இருக்கின்றார்கள்.

தாமசின் உள்ளத்தில் தாயகம் இருக்கிறது; தாமசின் உள்ளத்தில் வைகோ இருக்கிறான். எனவேதான்,தனது பெற்றோரின் பெயரையும் சேர்த்து ‘தாயகம் தனமேரி இல்லம்’ என்ற, அப்பா-அம்மா பெயரையும் சேர்த்து, தான் கட்டிய அழகிய இல்லத்துக்குப் பெயர் சூட்டி இருக்கின்றார்.

நான் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் சொல்லுவது இதுதான்;தாயிற் சிறந் த தொரு கோயிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை; எனவே,
தாயை வணங்கு; தந்தையை மதித்து வாழ்க்கையை நடத்து.அப்போது நீ வாழ்க் கையில் உயர்வாய் என்பதைச் சொல்லி வருகிறேன்.

இந்த இனிமையான நாளில், 1997 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள், இங்கே நிகழ்ந்த அவரது இல்லத் திறப்புவிழா குறித்து அவர் இங்கே குறிப்பிட்டார்.

வீரத் தம்பி ஜோயல் 

என் ஆருயிர்த் தம்பி வழக்கறிஞர் ஜோயல் அவர்கள்,தூத்துக்குடி நாடாளு மன் றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மறுமலர்ச்சி மக்கள் சந்திப்புப் பயணத் தைத் திட்டமிட்டு நடத்தியபோது, என்னைச் சந்திப்பதற்காக, தாமஸ் வந்தார். நள்ளிரவில் ரைமண்ட் அவர்களோடு வந்து என்னைச் சந்தித்து, இந்த நிகழ்ச் சிக்கு வர வேண்டும் என்று கேட்டபோது,எனக்கு அவகாசம் இல்லையே என்று நான் கூறினேன். ஆனால், ரைமண்ட் விடுவதாக இல்லை. கட்சிக்கு ஒரு கரு வூலமாக இருக்கின்ற தம்பி தாமஸ்,மிகுந்த விருப்பத்தோடு இருக்கிறார். என வே, கண்டிப்பாக வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, என் ஆருயிர்த் தம்பி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அவர்கள்,நான் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என வலியுறுத்தி ஒப்புதல் தரச் செய்தார் என்பதை நான் நன்றியோடு இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன். சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் தம்பி ஜோயல்;அவர் அண்ணாவின் இயக்கத் தின் வார்ப்பு. சேலம் சட்டக்கல்லூரியில் அவர் படித்துக்கொண்டு இருந்த பொழுது, நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட காலம். என்னை அங்கே அழைத்துச் சென்று, கல்லூரி வாயிலில் கட்சிக் கொடியை ஏற்றச் சொல்லி, சட்டக்கல்லூரி மாணவர்கள் நடுவே என்னை உரை ஆற்றச் செய்த அந்த வீரத்தம்பிதான் ஜோயல் என்பதை, நான் மகிழ்ச்சியோடு எண்ணிப்
பார்க்கிறேன்.

புது நன்மை

இந்தப் புது நன்மை என்பதன் பொருள் என்ன?

இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று தீர்ப்பு அளித்த போண்டி யஸ் பிலாத்து, இந்த இரத்தப் பழிக்கு நான் சம்பந்தப்பட்டவன் அல்ல என்று தன் கைகளைக் கழுவிக் கொண்டான். புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்க தா வில் கல்வாரியில் இயேசு பெருமான், இரண்டு திருடர்களுக்கு நடுவே, சிலு வையில் அறையப் பட்டார்.

அவரைச் சித்திரவதை செய்து, சவுக்கால் அடித்தபோது கொடூரமான சித்ரவ தை களை விவிலியத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. பழைய ஆவணங் களில் உள்ள செய்திகளில்,இயேசு சவுக்கால் மட்டும் அடிக்கப்பட வில்லை; மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டார் என்ற குறிப்புகள் இருக்கின்றன. அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான், பிரேவ் ஹார்ட் என்ற வீரஞ்செறிந்த திரைப்படத்தை,ஸ்காட்லாந்து விடுதலைக் காவியத்தைத் தந்த மெல் கிப்சன், Passion of the Christ  என்ற அற்புதமான காவியத்தைத் திரைப்
படமாக எடுத்தார். அதைப் பார்க்க முடியாது; பார்த்தால் இருதயம் பதறும்.
இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் கொட்டக்கொட்ட அவரைச் சவுக்கால்
அடித்துக்கொண்டே இருப்பார்கள்.சிலுவையைத் தூக்க முடியாமல் அவர் தடு மாறிக் கீழே விழுவார். அப்போதும் அடிகள் விழுந்துகொண்டே இருக்கும். அவ ரைச் சிலுவையில் அறைவதற்கு முதல்நாள் வியாழக்கிழமை, தன்னுடைய
12 சீடர்களையும் உடன் அழைத்து, இதோ இந்த அப்பத்தைப் பங்கிட்டுத் தரு கிறேன்; என் சரீரத்தைப் பங்கிட்டுத் தருவது போல; இதோ இந்தத் திராட்சை
ரசத்தைத் தருகிறேன், என் உடலில் இருக்கின்ற இரத்தத்தைத் தருவதைப் போல; உங்களுள் ஒருவன் மெய்யாகவே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார்.

அப்போது, ரபி அது நான்தானோ? என்று யூதாஸ் காரியத் கேட்டான். ஆம் அப் படியே என்றார் இயேசு பெருமான். சீமோனைப் பார்த்து, சேவல் கூவுவதற்கு
முன்பு மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய் என்றார்.

அதன்பின்னர், வேத பாலகர்களும்,மூப்பர்களும் அழைத்துக் கொண்டு வந்த
சேவகர்கள் இயேசுவைத் தேடி வந்தபோது, ஜூடாஸ், நான் எவர் கையை
முத்தம் இடுகிறேனோ, அவர்தான் இயேசு கிறிஸ்து என்று காட்டிக் கொடுத் தான். சிப்பாய்கள் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது இயேசுவுடன் இருந்த சீடர்களுள் ஒருவன், அவன் காதை வெட்டினான். இயேசு கைது செய்யப்பட்டு, சபையில் கொண்டு போய் நிறுத்தப்பட்டார்.

நீதான் யூதர்களுக்கு ராஜாவா? என்று கேட்டபொழுது, ஆமாம் அப்படித்தான்
என்றார்.

இவன் தேவ தூஷனம் சொல்லுகிறான்.தேவாலயத்தை இடித்து மூன்று நாள் களில் கட்டி விடுவேன் என்று சொல்லுகிறான் என்று குற்றம் சாட்டினார்கள்.

ஆனால், இயேசுவைப் பார்த்த பிலாத்துவின் மனைவிக்குப் பயம் வந்து,.இந்த நல்ல மனிதருக்கு நீ ஏதாவது துன்பத்தைச் செய்து விடாதே என்று எச்சரித் தாள். அதன் விளைவாக பிலாத்து, இங்கே குற்றம் சாட்டப் பட்டவர்களுள் யார் ஒருவரை நான் விடுவிக்கலாம்? என்று கேட்டபொழுது,கலகக்காரனும், கொள் ளையடித்தவனும் கொலைகாரனுமாகிய பரபாசை விடுவிக்கச் சொல்லிச் சத்தமிடுமாறு மக்கள் கூட்டத்தை மூப்பர்கள் தூண்டி விட்டார்கள். இது ஒரு கட்டம்.

அதற்கு முதல் நாள், திராட்சை ரசத்தையும், அப்பத்தையும், என் மேனியைத் தருவதாக நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதன் விளைவாகவே, அதற்கு ஞாபகப்படுத்துகின்ற விதத்தில், பலிகள் வேண்டாம்; நல்ல நினைவு களோடு சேவை செய்வோம் என்ற உணர்வோடு,குழந்தைகள் பெரியவர்களாக ஆகின்ற அந்தக் கட்டத்தில் இந்தப் புது நன்மை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

பல அமைப்புகளில் பிறந்தவுடன் ஞானஸ்நானம்; சில பிரிவுகளில் பெண் பிள் ளைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஞானஸ்நானம்; கொஞ்சம் பெரிய வர்கள் செய்யப்படுகின்ற இந்தப் புதுநன்மை என்கின்ற முதல் திருவிருந்து தான் இன்றைக்கு இங்கே நடத்தப்பட்டு இருக்கின்றது. அந்தக் குழந்தைகளை நான் வாழ்த்துகிறேன். 

நாதி இருக்கின்றதா?

மீனவர்களின் துயரங்களைத் தாமஸ் சொன்னார். அலைகள் எப்படி ஓய்வது
இல்லையோ, அதைப்போல மீனவர்களின் துயரங்களும் ஓய்வது இல்லை.
அடியேன் வைகோவின் போராட்டங் களும் ஓய்வது இல்லை (பலத்த கைதட் டல்). இந்த உடலில் உயிர் இருக்கின்றவரையில் போராடுவேன் தமிழர்களுக் காக, ஈழத்தமிழர்களுக்காக,பிரபாகரன் கட்டி எழுப்பிய தமிழ் ஈழம் மலர்வதற் காக!

நேற்றைக்கு ஒரு மத்திய அமைச்சர், முன்னாள் முதல் அமைச்சர் வீட்டுக்குச்
சென்று உரையாடுகிறார். வெளியே வருகையில் அவரிடம் செய்தியாளர்கள்
கேட்கிறார்கள்.

‘இசைப்பிரியா கொடூரமாகக் கற்பழிக்கப் பட்டுக்கொல்லப்பட்டதாக வந்த செய் தியை, சிங்கள அரசு மறுத்து இருக்கிறதே?’ என்று கேட்கிறார்கள்.உடனே இந்த மகானுபாவர், ‘இசைப் பிரியா கொலை செய்யப்பட்டது கொடூர மானதுதான். அந்த வீடியோ காட்சி தத்ரூபமாகத்தான் இருக்கிறது’ என்கிறார்.

ஏ... பெரிய மனிதனே! இதுவே முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வைகோ பேசி இருந்தால், இந்த இடத்தில் எரிமலையின் சீற்றத்தைப் பார்த்து இருப்பீர் கள்.இப்போது நான் ஒரு கட்சிக்குப் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன்.
காயங்கள் நிறைந்த என் போராட்ட வாழ்க்கையில் நான் அமைதியைக் கடைப் பிடிக்கிறேன்.

2008 ஆம் ஆண்டில் என்ன நடந்தது தெரியாதா? டிசம்பர் 2 ஆம் தேதி, 15 க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவ வெறிநாய்களால் இசைப்பிரியா நாசமாக்கிக் கொல்லப்பட்டாள்.கொடூரமாக அவளைச் சித்திரவதை செய்து சின்னாபின்ன மாக்கினார்கள்.

நான் ‘ஈழத்தில் இனக்கொலை,இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்த கட்டை, இரண்டு மாத காலமாக இரவு பகலாக விழித்து இருந்து உருவாக்கினேன். அவற்றை நானே கொண்டு போய் கல்லூரி வாயில்களில் நின்றுகொண்டு,
மாணவர்களைச் சந்தித்து அவர்கள் கைகளில் நேரடியாக வழங்கினேன்.அந்தக் காலகட்டத்தில் மற்றவர்கள் தேர்தலுக்காக ஓட்டு வேட்டையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபக்கம்; திராவிட
முன்னேற்றக் கழகம் மறுபக்கம்;காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள், பாரதிய ஜனதா கட்சி இவர்களெல்லாம் இன்னொரு பக்கத்தில். அப்போது, நானும்,தம்பி ஜோய லும், தேவதாசும், ஒரு வார காலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை வளாகத்துக்கு உள்ளே ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தோம்.

அந்த ஒளிப்படக் குறுவட்டை உருவாக்குகையில், கொடூரக் காட்சி களைப் பார்க்கும் போதெல்லாம் எத்தனை முறை என் இருதயம் கலங்கித் துடித்து இருக்கும்? என் கண்கள் குளமாகி இருக்கும்? என் நெஞ்சம் எரிமலையாக வெடித்து இருக்கும்? இசைப்பிரியா கொல்லப்பட்ட காட்சியைப் பற்றி, சேனல் 4 தொலைக் காட்சி வருணனையாளர் என்ன சொல்லுகிறார் தெரியுமா?

அந்தப் பெண்ணைப் பாலியல் வன் கொடுமை செய்த கொடியவர்கள், அவளை நான் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தேன் என்று சிங்கள மொழியில் சொல்லுவதை, நாங்கள் இந்தப் படத் தொகுப்பில் சேர்ப்பதற்கு, எங்கள் மனம் இடம் தரவில்லை என்கிறார்.

நாதி இருக்கிறதா இந்தத் தமிழ்ச் சாதிக்கு? இந்த உலகின் 65 நாடுகளில் பத்துக் கோடித் தமிழர்கள் வாழுகிறார் களா? நாம் உயிரோடுதான் உலவுகி றோமா? அல்லது நடைபிணங்களா? அல்லது, பிணங்களாகவே பிறந்தோமா? நமக்கு உயிர் இருக்கிறதா? இது வள்ளுவன் பிறந்த நாடா? கரிகாலன் படை நடத்திய நாடா? செங்குட்டுவன் வாழ்ந்த நாடா? நெடுஞ்செழியன் வாழ்ந்த நாடா? கடல் கடந்து படை நடத்திச் சென்ற இராஜராஜ சோழன் உலவிய நாடா? ஆங்கிலே யனை எதிர்த்து வங்கக் கடலில் கப்பல் ஓட்டிய வீர சிதம்பரம் பிறந்த நாடா? கட்ட பொம்மன், பூலித்தேவன், மருது பாண்டியர்கள், சுந்தரலிங்கம், வெள் ளை யத் தேவன், தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, வாஞ்சிநாதன் இவர்கள் எல்லாம் பிறந்த நாடா?

இசைப்பிரியா படுகொலை

இசைப்பிரியா காட்சியை அந்த ஒளிப் படத்தில் சேர்க்கும்போது, ஒருநாள் முழு வதும் நான் யோசித்தேன்.ஏனென்றால், அவள் உடலில் ஆடைகள் இல்லை. அப்படியே போடுவதா? அல்லது மறைத்துப் போடுவதா? என்று எனக்குள் மனப் போராட்டம். கடைசியாக,ஈழத்துச் சகோதரர்கள் சிலரைக்கேட்டேன். அண்ணே அப்படியே போடுங்கண்ணே; அப்பதாண்ணே தமிழனுக்கு நடந்தது தெரியும்
என்றார்கள்.

அதனால், முதலில் வெளியிட்ட ஒளிப்படக்குறுவட்டில் அதைச் சேர்த்தேன். இங்கே இருக்கின்ற மத்தேயு அவர்களை வைத்துத்தான் அதைப் படிகள் எடுத் தோம். மனசு கேட்க வில்லை. இரண்டாம் முறையாக படிகள் எடுக்கும்போது, மார்பகத்தையும், பிறப்பு உறுப்பையும் மறைத்து விட்டேன். 

மிஸ்டர் நிதி மந்திரி...அப்போது நீ இந்த நாட்டில்தான் இருந்தாயா? அல்லது
சுயநினைவு இன்றிக் கோமாவில் கிடந்தாயா? 2010 அக்டோபர் 25 ஆம் நாள், எட்டுத் தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, நாயைக் கட்டி இழுப்பது போல அம்மணமாக இழுத்துச் சென்று, கீழே தள்ளுகிறான்.மிதிக்கிறான். அந்த இளைஞர்களின் பின்னந்தலையில் துப்பாக் கியால் சுடுகிறான். கபாலம் உடைந்து சிதறுகிறது. இரத்த வெள்ளத்தில் துடி துடித்துச் சாகிறான். இதையெல்லாம் இலட்சக்கணக்கான படிகள் எடுத்து நாடு
முழுவதும் கொடுத்தோமே?

இந்த நிதி அமைச்சர் நேற்றைக்கு ஒரு முன்னாள் முதல்வரைப் போய்ப் பார்த் தார் அல்லவா, அவரிடம் அப்போது செய்தியாளர்கள் ஒலிவாங்கியை நீட்டி னார்கள். எட்டுத் தமிழ் இளைஞர் களைச் சுட்டுக் கொன்றதாக, சேனல் 4 தொ லைக் காட்சி ஒளிபரப்பாக்கி இருக்கின்றதே?என்று கேட்டார்கள்.அதற்கு அவர், ‘இது எப்போதோ வந்த பழைய படம் மாதிரி தெரிகிறது’ என்று, எகத்தாளமாக ஏளனம் செய்தார். இப்படி ஒரு ஈனப்பிழைப்பு பிழைப்பதை விட இல்லாமல் போவதே மேல்.

இப்போது இங்கே வந்த கொடூரமாகத் தான் இருக்கிறது என்கிற நிதி அமைச்ச ரே, நீங்கள்தானே ஆயுதம் கொடுத்தீர்கள்? உன்னையும் உன் அமைச்சரவை யையும் இயக்குகின்ற,இத்தாலியில் பிறந்த சோனியா காந்திதானே இத்த னைக்கும் காரணம்? இவர்கள்தான் இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்; விடுதலைப்புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை, பன்னாட்டுக் கடல் பரப்பில் தாக்கி மூழ்கடித்தது இந்தியக் கடற்படை. குழந்தைகள், பெண் கள், வயது முதிர்ந்தவர்கள் என 1,47,000 தமிழர்களைக் கொன்று குவித்தான்
சிங்களவன். தமிழ்ச்சாதிக்கு நாதி இருக்கிறதா?

மன்னிப்பே கிடையாது

பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர் களிடம் நேரடியாக எழுதிக்கொடுத்து
இருக்கிறேன். இந்த துரோகம் தொடர்ந்தால், எங்கள் வருங்கால இளைஞர்கள் மன்னிக்க மாட்டார்கள்; விளைவுகள் விபரீதமாக இருக்கும். இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்கிறோம் என்கிற பெயரில், இந்தியாவின் ஒருமைப் பாட்டைப் பலியிட்டு விடுவீர்கள் என்று நேரடியாக எச்சரித்து இருக்கிறேன். இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு, இன்றைக்கு அதே இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை ஏற்பாடு செய்து கொடுத்ததும் இந்தியாதான்.
இங்கே ஒரு மகானுபவர், ‘காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு ஏற்கக்
கூடாது’ என்கிறார். நீங்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கு ஏற்று இருந்த
இந்திய அரசுதானே, இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது? குற்ற வாளிகள் எவரிடமும் தப்பிக்கலாம்; வைகோவிடம் இருந்து தப்பிக்கமுடியாது. (கைதட்டல்).

ஊரை ஏமாற்றத் தீர்மானமா?

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளில் வாக்கு அளிக்கின்ற வகையில், ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி, தமிழகச்சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று, மார்ச் 24 ஆம் நாள் நான் ஒரு அறிக்கை கொடுத்தேன்.

மார்ச் 27 ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில், இலங்கையில் பொது வாக்கெ டுப்பு நடத்த வேண்டும்; ராஜபக்சே மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்ட தமிழக முதல் அமைச்சர் தீர்மானம்
போட்டபோது, வரலாறு பொன் மகுடம் சூட்டும் என்று நான் அறிக்கை விடுத் தேன். எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால், முதல்அமைச்சர் அவர்களே, இப்போது இலங்கையில் தமிழர்கள் சிங்களவர் களோடு சமமாக வாழுகின்ற வரையில்,காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கி வைக்க வேண்டும் தீர்மானம் போடுகிறீர்களே, இது யாரை ஏமாற்ற? அப்படி யா னால் மார்ச் 27 தீர்மானம் ஊரை ஏமாற்றவா? 

உண்மையான கொள்கைப் பிடிப் பும், உண்மையான இலட்சியமும் இருதயத் தில் இருந்தால், இந்த ஏமாற்று வேலை நடக்காது. நான் இன்றைக்குப் பகிரங்க மாகச் சொல்லுகிறேன்.விடுதலைப்புலிகளின் போராட்டக் களத்துக்கு அடித்த ளம் அமைத்துக் கொடுத்தவர், புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படகு மூலமாகவே ஆயுதங்களை அனுப்பினார். உலகத்தில் எவரும் செய்யத் துணியாததை,அன்றைக்கு எம்.ஜி.ஆர். செய்தார்.

இளைஞர்களே, நமக்கு நாதி நாம்தான்.எவனும் நம்மைக் காப்பாற்ற மாட்டான்
அமெரிக்கா காப்பாற்றும்; ஐ.நா.காப்பாற்றும்; நீதி கிடைத்து விடும் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம்.உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள், இளைஞர் கள், பெண்கள், நாம் ஒரு சேர எழுவோம், நீதி கிடைக்கும்வரை போராடுவோம். நம் இனத்தை அழித்த கொடியவனைக் கூண்டில் நிறுத்துவோம். தமிழர் தாய கத்தில் இருந்து சிங்களவனை வெளியேற்ற ஏற்பாடு செய்வோம்.

ஏ... இந்திய அரசே! மும்பைக் கடற்கரையில் நடந்த சம்பவத்துக்காக, பாகிஸ் தானோடு யுத்தம் நடத்துவோம் என்று முண்டா தட்டினாயே, எங்கள் தமிழக மீனவர்கள் 578 பேர்களைப் படுகொலை செய்தானே சிங்களவன், அவனை எச் சரிக்க நீ ஒரு டம்மி வேட்டாவது வெடித்தது உண்டா? ஒரு எச்சரிக்கையாவது செய்து இருக்கிறாயா? அப்படியானால், தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? தினமும் அடிக்கிறான், சுடுகிறான், இழுத்துக் கொண்டு போய்ச் சிறையில் பூட்டுகிறான். அம்மணமாக்கிக் கடலில் தூக்கிப் போடுகிறான். எங்க ளுக்கு நாதி இல்லையா? நீ ஒரு அரசாங்கமா? 

இங்கேயிருந்து முதல்அமைச்சர் கடிதம் எழுதுகிறார்;முன்னாள் முதல் அமைச் சர் எழுதுகிறார். உடனே அவர்கள் அங்கே இருந்து ஒரு பதில் கடிதம் போடு கிறார்கள்.

கையாலாகாத இந்தியக் கடற்படை

சட்டமன்றத் தேர்தலுக்காக எல்லோரும் ஓட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தார் கள். நான் ஸ்டெர்லைட் ஆய்வில் இருந்தேன். இராமேஸ்வரத்தில் இருந்து கராத்தே பழனிச்சாமி பேசினார்.அண்ணே ரொம்பக் கொடுமை நடந்து விட்டது. மண்டபத்தில் இருந்து பேட்சிக் பேசினார். அண்ணே நான்கு மீனவர் களை வெட்டிக் கடலில் போட்டு விட்டார்கள். ஊரே அழுதுகொண்டு இருக்கிறது என்றார்.

நான் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு,தங்கச்சி மடத்துக்குப் போனேன். விக் டஸ், சேவியர், ஆண்டனிராஜ்,மாரிமுத்து நான்கு மீனவர்களைக்கொன்று விட் டான். எப்படி? ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக. கையை வெட்டி, காலை வெட்டி கடைசியில் தலையை வெட்டிக் கொன்றார்கள்.துண்டான உடல்தான் கரையில் ஒதுங்கியது.

எதற்காகக் கொன்றான்? உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட் டத்தில், இந்தியா இலங்கையைத் தோற்கடித்து விட்டது. அதற்காகப் பழி வாங் கினான். நான்கு நாள்களுக்கு முன்னாலே அந்தப் பக்கமாக வந்து, இந்தியா ஜெயிச்சா, உங்களைக் கொன்று போடுவோம் என்று எச்சரித்து விட்டுப் போ னான். போட்டி நாளன்று காலையில் கடலுக்குப் போகையில், விக்டஸ் மனை வியை அழைத்து, சர்ச்சில் போய் இந்தியா தோற்க வேண்டும என்று ஜெபம் செய்; இல்லாவிட்டால் எங்களைக் கொன்று விடுவான் என்று சொல்லிவிட் டுச் சென்றான். அன்றைக்கு இந்தியா ஜெயித்து விட்டது. அவன் சொன்னது போலவே, நான்கு மீனவர்களை வெட்டிக் கொன்று பழிவாங்கி விட்டான்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்று ஆறுதல் சொன்னேன். அப்போது ஓட்டுக்
கேட்டுக் கொண்டு இருந்த வேறு எந்தக் கட்சிக்காரர்களும் அந்த ஊர்களுக்கு
வரவில்லை என்று அங்கே இருந்த தாய்மார்கள் என்னிடம் சொன்னார்கள்.
விக்டஸ் மனைவி கைக்குழந்தையுடன் உட்கார்ந்து இருந்தார்.

ஐயா, இந்தப் பெண்ணுக்கு வேறு யாரும் ஆறுதல் இல்லை. இந்த வீடும் அவ ளுக்குச் சொந்தம் இல்லை. குடிசை கூடக் கிடையாது. நீங்கள் இந்தப் பெண் ணை டீச்சர் டிரெய்னிங் படிக்க வைத்தால் பிழைத்துக் கொள்வாள் என்றார்கள். அவள் கண்ணீரைத் துடைக்க வழி இல்லை. நான் உடனே அதை ஏற்றுக்கொண் டு,  படிக்க வைக்கிறேன் என்றேன். அப்போது அந்தப் பெண் என்னைப் பார்த்த
பார்வையில் அவள் சொன்ன நன்றியை என்னால் மறக்கவே முடியாது. இரண் டு ஆண்டுகளில், 90,000 ரூபாய் கட்டணம்,என் சொந்தச் செலவில் கட்டிப்படிக்க வைத்தேன். நேற்று முன்தினம் பேட்ரிக் வந்தார். அண்ணே அந்தப் பெண் படித் து முடித்து விட்டார்.வேலைக்கும் ஏற்பாடு ஆகிக்கொண்டு இருக்கிறது என் றார்.வேலைக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள். அதற்கும் உதவுகிறேன் என்றேன். இதையெல்லாம் நான் விளம்பரம் செய்து கொண்டது இல்லை.

கடலோடு போராடுகின்ற இந்த மீனவ மக்கள் உடல் உறுதியானது; உள்ளம்
வெண்மையானது. இடிந்தகரையில் இரண்டு ஆண்டுகளாகப் போராடு கிறார்
களே, இந்தியாவில் வேறு எங்காவது இப்படி நடந்தது உண்டா? அவர்களுக் காகப் போராடவில்லை, ஒட்டுமொத்தத் தென் தமிழகத்தைக் காப்பாற்றப் போ ராடுகிறார்கள்.மணப்பாட்டில் அந்தோனி ஜானைச் சுட்டுக்கொன்றபோது, இது வரை வழக்குப் பதிவு செய்தாயா? சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரியைப்
பணி நீக்கம் செய்தாயா? அண்ணா தி.மு.க அரசைக் கேட்கிறேன்.

இடிந்தகரையில் சகாயத்தை இந்திய விமானப்படையின் சிறிய ரக விமானம்
தாழ்வாகப் பறந்து வந்து கடலில் தள்ளிக் கொன்றதே, வழக்கு உண்டா? மத்திய
அரசைக் கேட்கிறேன். அன்றைக்கே, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியைக்
கைது செய்ய வேண்டும் என்று சொன்னேன். எதற்குமே நாதி கிடையாதா?

ஒற்றுமையே உயர்வு

மீனவ மக்களே,உங்களுக்கு என் வேண்டுகோள். இந்தக் கிழக்குக் கடற்கரை நெடுகிலும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். எந்தக்காரணத்தை முன்னிட்டும் பிளவுபட்டு விடாதீர்கள்.ஸ்டெர்லைட்டை எதிர்த்தது, விவசாயிகளுக்காகவும்,
மீனவர்களுக்காகவும்தான். இன்னும் நிறையப் போராட வேண்டியது இருக் கிறது. என் மனதில் கொந்தளித்த உணர்வுகளைக் கொட்டுவதற்காக தாமஸ் இந்த நிகழ்ச்சியில் இடம் கொடுத்தார். தொடர்ந்து போராடுவேன்;தமிழர்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடுவேன்!

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment