திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! #வைகோ அறிக்கை
மத்திய தொல்லியல் துறையின் 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத் தால், திருப்போரூர், மாமல்லபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம் பகுதியில் வாழும் மக்கள் புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி, மத்திய தொல்லியல் துறை யை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். மறுமலர்ச் சி திராவிட முன்னேற்றக் கழகமும், இப்போராட்டங்களில் பங்கு ஏற்றது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலை வர் திருமதி சக்தீஷ்வரி சிவராமன், துணைத்தலைவர் திருமதி சசிகலா லோகு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் தலைநகர் டில்லி சென்று, தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாதிப்புகளை விளக்கி கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
‘விரைவில் உங்கள் பிரச்சனைகள் தீரும்’ என்று மக்கள் பிரதிநிதிகளிடம் உத் தரவாதம் வழங்கியதன் அடிப்படையில், கடந்த 28.8.2013 அன்று புதிய மின் இணைப்பு பெறுவதற்கான தொல்லியல் துறையின் ஆட்சேபனையை விலக் கிக் கொள்வதாக, தொல்லியல் துறையின் தென்மண்டலக் கண்காணிப்பாளர், திருப்போரூர் உதவி மின் பொறியாளருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து 2.9.2013 அன்று தமிழ்நாடு பேரூராட்சி இயக்குனருக்கும், 23.9.2013 அன்று தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், மத்திய அரசின் தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளருக்கும் கடிதம் எழுதி உள்ளதை மக்கள் வர வேற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு தங்கள் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
இந்நிலையில், மக்கள் போராடிப் பெற்ற வெற்றியைத் தடுக்கின்ற விதத்தில், மத்திய அரசின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால், இரண்டு மாதங்கள் ஆகியும் புதிய மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
எனவே, மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கண்காணிப்பாளரின் நடைமுறை கடிதத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து, புதிய மின் இணைப்பு வழங்கிட, தமிழக அரசு ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
07.11.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment