#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008
இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திர மாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கி றான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட் டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இர வாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவரு கிற போது குதிரை மிரண்டுவிட்டது.
குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார் கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டு விட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக் குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறி யைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக் கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடு வோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்கு கிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.