புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைத் திரும்பப்பெற வேண்டுமென மதிமுக வலியுறுத்தியது.
புதுச்சேரி மாநில மதிமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம்
அண்மை யில் நடைபெற்றது. பொறுப்புக்குழுத் தலைவர் ஹேமா க.பாண்டு ரங்கன் தலைமை வகித்தார். தொழிற்சங்கத் தலைவர் செ.முத்து, மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.அப்பர்சாமி, தூ.சடகோபன், ப.பாவாடை சாமி, அ.கபிரியேல், வி.கலைவாணன், வ.செல்வராஜு, விசா எழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதைக் கண்டிக்கிறோம். உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும். 2012ல் நடந்த எழுத்தர் தேர்வில் வெற்றிபெற்றோருக்கு, நீதிமன்றத் தடையாணையால் பணி ஆணை வழங்கப்படவில்லை. அரசு தலையிட்டு, தடையாணையை ரத்து செய்யவும், பணியாணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, பல ஆண்டுகளாக வேலை செய்யும் தினக்கூலி, பகுதி நேர ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் தாக்கப்படும் காரைக்கால் மீனவர்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைகளைக் கண்டறிய முடியாதநிலையில், மீன் பிடித்தலின்போது ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதற்கான வழிவகை களை இந்திய கடற்படை மேற்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் நிலவும் நிதி நெடுக்கடியைச் சமாளிக்க, வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றோருக்கான ஓய்வூதியம் வழங்க ஆளுநர் உத்தரவிட்டும், அதை தற்போதுவரை அமல்படுத்தவில்லை. இதை உடனே அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment