Thursday, April 25, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 18

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டவுடன், இந்திய இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படை எனும் பெயரில் அனுப்பப்பட்டு, தமிழீழ விடுதலைப் போராட் டத்தை நசுக்கவும், விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டவும் இந்திய
அரசு இராணுவ நடவடிக்கைகளை முடுக்கியபோது, இந்திய நாடாளுமன்றத் தில் தலைவர் வைகோ ஒருவர்தான் தமிழினத்தின் பிரதிநிதியாக குரல் கொடுத்தார்.

ஈழத்தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டு, இந்திய ராணு வம் அவர்களைக் கொன்று குவித்தபோது, தலைவர் வைகோ   எரிமலை
யானார்.இந்திய நாடாளுமன்ற சரித்திரம் காண இயலாத கடுமையான விவா தங்களை எழுப்பினார்.பிரதமர் இராஜீவ்காந்தியின் முதிர்ச்சியற்ற போக்கை யும், ஆணவ நடவடிக்கைகளையும் தயவு தாட்சண்யமின்றி கடும் விமர்சனத் திற்கு உள்ளாக்கினார். உலகம் முழுவதும் தமிழர்கள் இந்திய நாடாளுமன்றத் தினை உற்று நோக்கினர். தமிழகத்தில் இலட்சசோப இலட்சம் இளைஞர்கள் தலைவர் வைகோவின் நாடாளுமன்ற முழக்கங்களைக் கேட்டு இன உணர்வு கொண்டு இறும்பூதெய்தினர்.



இந்நிலையில் 1988 ஆம் ஆண்டு முடிந்து 1989 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஜனவரி மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திரா விட முன்னேற்றக் கழகம், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தது. கலைஞர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. அமைச்சரவை பதவி
ஏற்றது. தி.மு.கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் பொறுப்பினை ஏற்று வைகோ அவர்கள் சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் திறம்பட ஒருங்கிணைத் தது மட்டுமன்றி, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

ஆனால், தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த ஆட்சியில் எவ் வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தலைவர் வைகோவின் நெஞ்சம் நினைத்தது எல்லாம் தமிழீழத்தில் இந்திய இராணுவமும் சிங்கள ராணுவமும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழர்களை அழிப்பதைத்தான். தமிழ் ஈழப்போர்க் களத்திலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகள் தலைவர் வைகோவின் உள் ளத்தை வாட்டின. இந்திய நாடாளுமன்றத்தில் தமது சக்தி முழுவதையும் தி ரட்டி, இந்திய அரசுக்கு எதிராகப் போராடிய தலைவர் வைகோ ஒரு முடிவுக்கு வந்தார்.

வைகோவின் வரலாற்றுப் பயணம்

தமிæழத்திற்கு நேரில் சென்று யுத்த நிலைமைகளை அறிவது; தமிழ் மக்களை யும், விடுதலைப் போரில் ஈடுபட்டுள்ள புலிகள் இயக்கத்தையும் பாதுகாக்க
வேண்டிய நடவடிக்கைகளை, மாவீரர் பிரபாகரன் கவனத்திற்கு கொண்டு
சென்று, அதற்கு ஏற்ப திட்டமிடுவது என்றெல்லாம் முடிவு எடுத்தார்.

1989 ஜனவரி மூன்றாவது வாரம், இலங்கையில் இந்திய அமைதிப்படையின்
தாக்குதல்கள் அதிகரித்தன. பிரபாகரன் வவுனியா காட்டில் பாசறை அமைத்து
போர்ப்படையை இயக்கி வருகிறார். இந்திய இராணுவம் தரைமார்க்கமாகவும்,
கடல் மார்க்கமாகவும், வவுனியா காட்டை முற்றுகை இட்டு இருந்தது. விமா னப்படைகளும் குண்டுவீசின. இத்தகைய ஆபத்தான யுத்தம் உச்சகட்டத்தில் இருந்த பொழுதுதான் தலைவர் வைகோ தமிழீழத்திற்கு பயணம் செய்வது என் று திட்டமிட்டார். உயிருக்கு ஆபத்தான பயணமாக இருந்தாலும் தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்தார். புலிகள் தலைவர் வைகோவை தமிழீழம் அழைத்துச்செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை கச்சிதமாகச் செய்தனர்.

1989 பிப்ரவரி 6 ஆம் நாள் நள்ளிரவுக்குப் பின் தமிழ்நாட்டில், கோடியக்கரை கடல் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் படகில் தனது வரலாற்றுப் பய ணத்தை நடத்தினார் தலைவர் வைகோ. தலைவரின் பயணம் கடைசிவரை இரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.

தகவல் கசிந்தால் இந்திய இராணுவத்தின் கடற்படை தாக்குதலுக்கு இலக்காக வேண்டியிருக்கும் என்பதால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தலை வர் வைகோவின் பயணம் தெரிந்துவிடக்கூடாது என்று விரும்பினார்.காரணம் உலகத் தமிழர்களின் ஒற்றைக் குரலாக டெல்லி தர்பார் மண்டபத்தில் தலை வர் வைகோவின் குரல்தானே தமிழினத்திற்காக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் குரல் ஓய்ந்திடவோ, தலைவரின் உயிர்இனஎதிரிகளின் இராணுவத் தால் ஆபத்துக்கு உள்ளாகவோ கூடாது என்பதில்,விடுதலைப்புலிகள் மிக மிக கவனமாக இருந்தனர்.

உப்புக்காற்று சுழன்று வீசி, ஆலோலம் பாடும் அலைகடலில் படகில் பயணிப் பது என்பது ஆபத்தானது மட்டுமன்றி மிகுந்த சாகசம் நிறைந்த பயணமாகும். கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்தவர்களுக்குத் தெரியும். அலைகள் உயர்ந்து எழும்பி பேரிரைச்சலிடும் கடலில் சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசன் அருள்மொழிவர்மன் கடலில்பயணம் செய்து இலங்கையிலிருந்து தாயகம் வருவதில் எவ்வளவு ஆபத்துகள் சூழ்ந்திருந்தது என்பதை வர்ணிப்பார் கல்கி.

உயிருக்கு அஞ்சாத வைகோ

இவ்வளவு சோதனைகளும் ஆபத்துகளும் நிறைந்த பயணத்தைத் தொடங்கிய தலைவர் வைகோ தனது குடும்பத்தாருக்கும் கூட தனது பயணத்தைப் பற்றித் தெரிவிக்காமல் மிக இரகசியமாகவே வைத்திருந்தார்.இலண்டனுக்கும் பிரான் சு நாட்டின் பாரீசு நகருக்கும் செல்வதாகத்தான் தனது அருமை இல்லத்தரசி யிடமும் குழந்தைகளிடமும் தெரிவித்து இருந்தார். இந்தியாவின் முப்படை களும் தாக்குதல் நடத்துகின்றன. சிங்கள இராணுவமும் முற்றுகை யிட்டுள் ளது. யுத்தத்தில் பீரங்கிகள் கர்ஜிக்கும் சப்தம் நிற்கவில்லை. போருக்கு நடுவே தான் இந்த வீரப்பயணம். 

ஒருவேளை பயணத்தின்போது கடலிலோ அல்லது அடர்ந்த அரண்யமான வவுனியா காடுகளிலோ மரணம் சூழ்ந்து விட்டால்?... ஆனால்,  அது குறித்து
தலைவர் வைகோ அச்சமடையவில்லை. முன் வைத்த காலை பின் வைக்கும் வழக்கம்வைகோவின் வாழ்க்கையில் என்றைக்கும் இருந்ததில்லை. மரணமே வரினும் ஏற்றுக் கொள்வோம். அந்த மரணம் வரலாற்றில் இடம்பெற்று விட்டுப் போகட்டும் என்று துணிந்தார். புறப்படும் முதல் நாள் தனது பாசத்திற் குரிய குழந்தைகளையும்,இல்லத்தரசிகளையும் மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்று நெடுநேரம் உரையாடினார்.ஏன் தெரியுமா? ஒருவேளை திரும்ப வரமுடியாமல் போனால்... தன் குடும்பத்தினரின் நெஞ்சில் இந்த நிகழ்வு என்றும் நிழலாடிக்கொண்டே இருக்கும் அல்லவா? அதற்காக...!

ஒரு கட்சியின் முன்னணித் தலைவர், இலட்சோப இலட்சம் தொண்டர்களின் இதய சிம்மாசனத்தில் திராவிட இயக்கப் போர்வாளாக தென்பாண்டிச் சிங்க மாக இடம்பெற்றிருந்த தளர்கர்த்தர்,கட்சி ஆட்சிக்கு வந்தபோதும்கூட, உயி ரைப் பற்றி எள்ளளவும் பயமின்றி, இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற் கொண்டார் எனில், தன்னைவிட தான் நேசிக்கின்ற கொள்கைக்காக வாழ்ந்து மடியவும் சித்தமானார். திராவிட இயக்க சரித்திரத்தில் தலைவர் வைகோ படைத்த வீரவரலாற்றை இன்னொருவர் இனி படைக்க முடியாது.

இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில்,மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரசாகசம் நிறைந்த பயணம் இன்றும் பேசப்படுகிறது.

நேதாஜியின் சாகசப் பயணம்

இந்தியாவிலிருந்து பிரிட்டீஷ்காரர்களை விரட்டி விடுதலை பெறுவதற்கு ஆயுதப்போராட்டத்தை தொடங்குவதற்கு பிரிட்டீஷ் அரசின் எதிரியான இட் லரின் உதவியை நாடி ஜெர்மனி சென்றார் நேதாஜி.22 மாதங்கள் அங்கு தங்கி சிங்கப்பூர் சென்று ‘இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிட திட்டமிட்டார். ஆனால், ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் செல்வது அவ்வளவு சாதாரணமான தல்ல. கிழக்கில் இரஷ்யாவும், மேற்கில் பிரிட்டனும் ஜெர்மனிக்கு விரோதி கள். கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்வது ஆபத்தாகிவிடும். எனவே
ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சுபாஷ்சந்திர போஸ் அவர்களை இந்துமாக் கடலில் உள்ள ஒரு தீவுக்கு அனுப்புவது என்றும், அங்கு ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் டோக்கியோ அழைத்துச் செல்வது என்றும், ஜெர்மனி, ஜப்பான்
இருநாடுகளும் முடிவு செய்தன. 

அதன்படி 1943 பிப்ரவரி 18 ஆம் தேதி ஜெர்மனியிலிருந்து நேதாஜி புறப்பட்டார். பெர்லின் நகரிலிருந்து, வடக்கே பால்டிக் கடற்கரையில் உள்ள கீவ் துறைமு கத்தை அடைந்தார்.

கீவ் துறைமுகத்திலிருந்து யூ-190 என்னும் ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பலில் போஸ் தனது பயணத்தைத் தொடங்கினார். அது மேற்கு நோக்கிச் சென்று பால் டிக் கடலையும், வடகலையும் கடந்து, பிறகு அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கே திரும்பி பிரிட்டனையும் அயர்லாந்தையும் சுற்றிக்கொண்டு ஐரோப்பா ஆப்பிரிக்கா கண்டங்களைக் கடந்து நன்னம்பிக்கை முனைக்கு அருகில் கிழக்கே திரும்பியது.

மடகாஸ்கர்தீவுக்கு 400 மைல் தென்கிழக்கில் இந்துமாக்கடலில் ஒரு சிறிய தீவிற்கு வந்து சேர்ந்தது.கடலுக்கு மேலே உள்ள காட்சிகளை அந்த நீர்மூழ்கிக்
கப்பலில் இருந்த திரையில் டி.வி. படம் போல் பார்க்க முடிந்தது. பிரிட்டனுக்கு அருகில் நீழ்மூழ்கி வந்தபோது கடல்மேல் பிரம்மாண்டமான பிரிட்டீஷ் யுத்த கப்பல் நிற்பதும் அந்தத் திரையில் தெரிந்தது. அதனிடம் சிக்கியிருந்தால், நேதாஜி வாழ்க்கை அன்றே முடிந்துபோயிருக்கும்.

பின்னர் அந்தத் தீவில் காத்திருந்த ஐ-29 என்னும் ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்ப லுக்கு நேதாஜி மாறினார்.கடலின் அடியிலேயே மொத்தம் சுமார் 100 நாட்கள்
பயணம் செய்த நேதாஜி சுமத்ராத் தீவை அடைந்தார்.அங்கு அவருக்காக
யாமாட்டோ என்னும் ஜப்பானிய இராணுவத் தளபதி காத்திருந்தார். தனி விமா னத்தில் அங்கிருந்து நேதாஜி சிங்கப்பூர் சென்றடைந்தார்.

நேதாஜியை நெஞ்சில் வைத்துப் போற்றும் தலைவர் வைகோவும், நேதாஜி போன்றே சாகசப்பயணமாக தமிழீழம் புறப்பட்டார். எவ்வளவுதான் இரகசிய மானதாக இருந்தாலும் பத்திரிகைகள் எப்படியோ கண்டுபிடித்து விடுகின்றன. இப்படித்தான் தலைவர் வைகோவின் ஈழப்பயணமும் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.முதன் முதலில் ஜூனியர் விகடன் வார இதழ் (15.02.1989) “பிரபாகரனைச் சந்திக்க ரகசியப் பயணம்”என்று வைகோவின் பயணத்தை வெளியிட்டது.அதன்பின்னர் அனைத்து நாளிதழ்களிலும் தலைவர் வைகோ வின் ஈழப்பயணம் குறித்தே நாள்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.
வைகோவின் கடிதம் அல்ல; “மரண சாசனம்”

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களிடம் செய்தியாளர் கள், வைகோவின் இரகசியப்பயணம் குறித்து கேள்விகள் எழுப்பியவண்ணம்
இருந்தனர். அதற்கு கருணாநிதி அளித்த பதில்கள் வைகோவின் பயணத்தைக் கொச்சைப்படுத்துவதாக இருந்தது.அதைப்பற்றி எல்லாம் தனியாக ஒரு நூலே எழுத வேண்டும். ஆவணப்படுத்த வேண்டும் என்றுதான் கருதிக்கொண்டிருக் கிறேன்.

இலங்கைக்குப் பயணம் புறப்பட்ட தலைவர் வைகோ,தனது பயணம் பற்றிய விபரத்தை ஒரு கடிதமாக எழுதி,அதை தி.மு.க. தலைவர் கலைஞரிடம், தான் இலங்கை சென்று சேர்ந்தவுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தனது உயிர் நண்பர் குட்டி என்கிற சண்முகசிதம்பரம் மூலம் ஏற்பாடு செய்திருந்தார். அதன் படி வைகோ வவுனியா காட்டில் புலிகள் தலைவர் மாவீரர் பிரபாகரன் அவர் களை 1989 பிப்ரவரி இரண்டாவது வாரம் சந்திப்பதற்கு முன்பே, இங்கே முதல் வர் கருணாநிதி கையில் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கோபால புரம் இல்லத்தில் வைகோவின் கடிதம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அந்தக்
கடிதத்தை 1989 மார்ச்சு 3 ஆம் தேதிதான் பத்திரிக்கையாளர்களிடம் வெளி யிட்டார், கலைஞர் கருணாநிதி.தலைவர் வைகோ எழுதிக் கொடுத்துவிட்டுப் போன கடிதம் அல்ல அது; மரண சாசனம் என்பதை கடிதத்தின் சில பகுதிகளை இங்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வைகோ எழுதிய மடலின் முக்கிய பகுதிகள் “பல இரவிலும் பகலிலும்ஆழமாக சிந்தித்து எடுத்ததன் முடிவின் விளைவாக நான் எழுதிய இக்கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படா மல் இருக்குமேயானால், ஈழத் திருநாட்டின் வவுனியா காட்டுப்பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக்காணச் சென்றுகொண்டிருப்பேன்”

ஈழப் போர்க்களத்தில் பிரபாகரன் உறுதியான நிலை ஒன்றை எடுத்துக் கொண் டு ,அதிலேயே வலுவாக ஊன்றி நிற்கிறார். ‘காலமறிந்து இடமறிந்து மாற்றார் வலியறிந்து தன் வலிமையையும் கணித்து வியூகம் அமைப்பதே சாலவும் சிறந்தது என்ற தங்களின் உணர்வுகளை அவருக்குதெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனது ஈழப்பயண எண்ணத்திற்குக் காரணமாயிற்று.

13 ஆண்டுகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந் திட்ட நமது கழக ஆட்சிக்கு குன்றுமணி அளவுகூட குந்தகம் ஏற்பட்டுவிடாமல்,
மத்திய அரசுடன் மோதுகிற நிலையையும் தவிர்த்துக்கொண்டு, ஈழத் தமிழர் களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக,உத்தரவாதமாக வழங்கக்கூடிய வழிமுறைகளைக் காண பிரபாகரனுடன் பல கோணங் களிலும் இப்பிரச்சணையை விவாதித்து கருத்துகளைப் பரிமாறி அதன்மூலம் பேச்சுவார்த்தைக்கு தயாராகின்ற மனப்பான்மை உருவாக்கிடவும், உண்மை நிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

என்னை பலியிட்டுக்கொள்வேன்

சிங்கள இராணுவத்திடமோ இந்திய இராணுவத்திடமோ நான் பிடிபட நேர்ந் தால், அது நமது கழக அரசுக்கோ,இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்சினை எது வும் ஏற்படாவண்ணம் நான் செயல்படுவேன். என்னை பலியிட்டுக் கொள்ள வும் சித்தமாக இருப்பேன்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர் அமைப்புகளின் அழைப்பினை ஏற்று, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செல்கிறேன் என்று எனது வீட்டாரிடமும்,
நண்பர்களிடமும் கூறியுள்ளேன். எனது பயண திட்டத்தை எவரும் அறியமாட் டார்கள்.’

இவ்வாறு தனது மரண சாசனத்தை எழுதி, 05.02.1989 தேதியிட்டிருந்தார் தலை வர் வைகோ. இந்த மடல்,வவுனியா காட்டில் தம்பி பிரபாகரனை வைகோ சந் திக்கும் வேளையில் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இருந்தும்,பத்திரிக்கையாளர்கள் கேட்டபோதும், சட்டமன்றத்தில்
கேட்கப்பட்டபோதும், வைகோ எங்கே போனார் என்றே தெரியவில்லை என்று தான் கருணாநிதி பதில் கூறினார்.

1989 பிப்ரவரி 21 ஆம் நாள், தமிழக சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், வைகோவின் ஈழப்பயணம் குறித்து கேள்வி எழுப்பினார். தி.மு.க.
முக்கியத் தலைவர் ஒருவர் இலங்கை சென்றுள்ளார்.அதே நேரத்தில் டெல்லி சென்ற நமது முதலமைச்சர் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரதமரு டன் பேசி இருக்கிறார்.எனவே, இலங்கை சென்றுள்ள தி.மு.க. முக்கிய தலை வர் முதலமைச்சரிடமி ருந்து ஏதாவது செய்திகொண்டு சென்றாரா? முதல மைச்சருக்கு தெரிந்துதான் அவர் அங்கு சென்று இருக்கிறாரா? என்று குமரி அனந்தன் அவர்கள் கேட்டார். 

அவரது கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி “இலங்கை சென்றுள் ள தி.மு.க. நண்பர் பற்றிய ஒரு குறிப்பை தி.மு.கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கல்வி அமைச்சர் பேராசிரியர் பத்திரிக்கைகளுக்கு விளக்கி இருக் கிறார். எனவே இலங்கைக்கு சென்றிருப்பவர் என்னிடத்தில் அறிவித்து விட்டுச் செல்லவும் இல்லை.நான் அவரை அனுப்பி வைக்கவும் இல்லை. இந்த இரண்டும் இல்லாததனால், என்னுடைய செய்தியைக் கொண்டு செல்ல வழியும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரதமரிடமும் அவரு டைய சொற்படி வெளி விவகாரத்துறை அமைச்சரிடமும் விரிவாகப் பேசி
இருக்கிறேன். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

என்னிடம் அறிவிக்காமலேயே அவர் சென்றிருப்பதால்,அதற்கும் இந்தப் பேச்சு வார்த்தைக்கும் தொடர்பு இல்லை.”

கருணாநிதியின் சட்டசபை பதிலை தினகரன் ஏடு 22.2.1989 அன்று வெளியிட்டு இருந்தது. இதன்மூலம் கருணாநிதியின் ‘நல்ல எண்ணம்’ வைகோவைப் பொறுத்தவரை எப்படி இருந்தது என்பதை அறிய முடிகிறது.


வைகோ எங்கே?

வைகோவின் ஈழப்பயணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்த சூழலில், பல வதந்திகளும் செய்தித்தாள்களில் பெரிய அளவில் செய்தி யாக வந்தன.இலங்கைக்கு சென்றுள்ள வைகோவை இந்திய இராணுவம் கைது செய்துள்ள தாகவும், அவரை இந்திய அமைதிப்படை முகாமில் சிறை வைத்துள்ளதாகவும்யு.என்.ஐ. செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 
அறிவித் தது.

“இப்போது கோபால்சாமி இலங்கையில் உள்ள இந்திய இராணுவ முகாமில் பத்திரமாக இருப்பதாக நம்பகமான வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள் ளது.இரண்டொரு நாளில் கோபால்சாமி விமானத்தில் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 5 ஆம் தேதி விடுதலைப் புலிகளுக் குச் சொந்தமான படகில் இலங்கை சென்றார். அங்கு அவரை இந்திய ராணுவம் கைது செய்தது. ஆனால், அவர் காட்டுக்குள் சென்று பிரபாகரனை சந்தித்துப் பேச்சு நடத்தாமல் சென்னைக்கு திரும்ப மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
பிறகு இராணுவ வீரர்கள் கோபால்சாமியை முகாமுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்” என்று 1989 மார்ச்சு 3 இல் யு.என்.ஐ. செய்தி நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

இதற்கிடையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ப.சிதம்பரம் மார்ச்சு 4 ஆம் தேதி 1989) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பத்திரிக்கை யாளர்கள் கேள்வி எழுப்பினர். “இலங்கை சென்றுள்ளதாகக் கூறப்படும்
கோபால்சாமி எம்.பி.யின் உயிருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்குமா?” என்று செய்தியாளர்கள் கேட்டபொழுது பதில் அளித்த ப.சிதம்பரம், “இலங்கை யில் கோபால்சாமி எம்.பி.,எங்கு இருக்கிறார் என்று மத்திய அரசுக்கு தகவல் இல்லை.கோபால்சாமியைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி முதலமைச்சர் கரு ணாநிதி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று அவரை இன்னும் வேகமாகத் தேடுவோம்.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியக் குடிமகன் ஒருவரை தேடுவதற்கு மத்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தும். மாநில அரசு உதவி கேட்டால் அவரை
கண்டுபிடிக்க மத்திய அரசு உதவி செய்யும்” என்றார்.

இந்திய இராணுவம் குண்டுவீச்சு

தலைவர் வைகோ இலங்கை சென்ற தகவல் வெளியானதும் இந்திய ராணுவத் தின் தாக்குதல் இன்னும் அதிகரித்தது. பிரபாகரனையும், விடுதலைப்புலிகளை யும் குறிவைத்து வன்னிக் காட்டுப்பகுதியில் இந்திய இராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. 1989 பிப்ரவரி 23 இல் வன்னிக்காட்டுப்
பகுதியான நெத்திக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத் தினர் முற்றுகையிட்டனர்.இந்த முற்றுகையை உடைக்க புலிகள் தீவிரமாக போரிட்டனர்.இந்திய ராணுவ ஹெலிக்காப்டர்கள் குண்டுவீச்சில் ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்து கொண் டு இருப்பதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியான தாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட செய்தியில் கூறியிருந் தனர்.

வைகோவை தேடி இந்திய இராணுவம் வன்னிக்காடுகளை முற்றுகை போட்டி ருந்த நேரத்தில் அவர் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வைகோ காயம்பட்டு உயிருக்கு போராடுவதாகவும்,தமிழக செய்தித் தாள் களில் பயங்கரமான செய்திகள் வெளிவந்தன.

தலைவர் வைகோ பற்றி வதந்திகள் நாட்டு மக்களை வேதனை அடையச் செய்து கொண்டிருந்த நேரத்தில்,இந்திய அமைதிப்படை தளபதி ஏ.எஸ்.கல்கத், பிப்ரவரி 19 ஆம் தேதி (1989) சென்னை வந்து முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்துவிட்டுச் சென்றார். கருணாநிதி -கல்கத் சந்திப்பிற்கு பின்னர்தான் இந்திய இராணுவத்தின் தாக்குதல் இன்னும் தீவிரம் அடைந்தது.

வைகோவின் ஈழப்பயணம் இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஈழப் பயணம் சென்ற தலைவர் வைகோ வவுனியா காடுகளுக்கு சென்றாரா? தம்பி பிரபாகரனைச் சந்தித்தாரா? வைகோவின் ஆபத்து நிறைந்த இந்தப் பயணம் எப்படி இருந்தது? இந்திய இராணுவம் அவரை கைது செய்து வைத்திருந்ததாக வந்த தகவல்கள் உண்மையா?

அடுக்கடுக்கான இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தலைவர் வைகோ ஈழத் திலிருந்து தாயகம் திரும்பிய பிறகுதான் கிடைத்தது. அதுகுறித்து விவரங் களைக் காண்போம்!

வைகோ குறித்து அன்றைய நாளில் வந்த செய்திகள் 






               
                                                                                                                                     - தொடரும்

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment