Tuesday, April 16, 2013

காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது - வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல்லில் நேற்று (15.04.13) நிருபர் களுக்கு பேட்டியளித்தபோது ,

"இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் தனிச் சிறப்பு வாய்ந்தது. உலக நாடுகளின் பிடியிலிருந்து இலங்கை இனியும் தப்பிக்க முடியாது. 

இதன் மூலம் சுதந்திர தனி ஈழம் விரைவில் நனவாகும் வாய்ப்புள்ளது. 

விடுதலைப் புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் வைகோ மட்டுமே குரல் கொடுக்கிறார் என்ற நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. 

அதனை மாணவ சமுதாயம் மாற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமைவதற்கு சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்ச் மாதம் 24ம் தேதி கோரிக்கை விடுத்தேன். அந்த தீர்மானம் 27ம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

இதே போல நாடாளுமன்றத்திலும் இத்தீர்மானம் நிறைவேறும் நாள்விரைவில் வரும். ஆனால் தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு அதைச் செய்யாது. 

இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் புதிய அரசு அமையும். அப்போது இந்த தீர்மானம் நிறைவேறியே தீரும். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், முல்லை பெரியாறு, மது ஒழிப்பு போராட்டங்களில் ம.தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் மக்களிடையே அதிக நம்பிக்கை பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த 2 வருடங்களில் மக்கள் ஆதரவு பெருகி உள்ளது," என்றார்.

பொள்ளாச்சியில் நாளை (16.04.13) மதுவிலக்கு கோரி நடைபயணத்தை துவங்க உள்ளேன். தமிழகம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதை மேற்கொள்கிறேன்.

தமிழக மக்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறேன். ஜாதி, மதம் இல்லாத மனித நேயமிக்க கட்சியாக ம.தி.மு.க., உள்ளது, என்றார். துணை பொதுசெயலாளர் சத்யா, மாவட்ட செயலாளர் செல்வராகவன் உடன் இருந்தனர்.



இதன் பிறகு கரூர் சென்ற வைகோ 

கரூர், காந்திகிராமம், குறிஞ்சிநகரை சேர்ந்தவர் மணிகுருசாமி, 65. இவர், ம.தி.மு.க., மாநில பொதுக்குழு உறப்பினராக இருந்தார். உடல் நலக்குறைவால் கடந்த, 5ம் தேதி இறந்தார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, நேற்று மாலை, 6 மணிக்கு, மணிகுருசாமி வீட்டுக்கு நேரில் சென்று, அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அவரது மனைவி லீலாவதி, மகன்கள் மணிமாறன், இளங்கோ, மகள்கள் கண்ணகி, மணிமேகலை, கண்மணி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்

No comments:

Post a Comment