Thursday, April 18, 2013

"செங்காந்தள் புரட்சி" -தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

சென்ற 13-04-2013இல் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் நடைபெற்றது.

இது குறித்து திரு,பாரி மைந்தன் தெரிவித்த்  செய்தி 

1976 இல் இனி சிங்களரோடு சேர்ந்து வாழ முடியாது தனி ஈழம் ஒன்றே தீர்வு என தந்தை செல்வா கூறிய வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நாளான மே 14 ஆம் நாளை "தமிழீழ விடுதலை நாள்" என அறிவித்து உள்ளோம். 


மேலும் அந்தநாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்து வது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஈழ உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெறலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்காந்தள் மலரினை சூடுவதே எங்கள் இலக்கு ஆகவே இந்த மாணவர் போராட்டத்திற்கு "செங்காந்தள் புரட்சி" என்று பெயரிட்டுள்ளோம்.



தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு– ஊடகவியலாளர்கள் சந்திப்பு
தீர்மானங்கள்

1. தனித்தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு.

2. இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்.

3. ஈழத்தில் சர்வதேச பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் நாடுகடந்த தமிழீழ உறவுகளும் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். இதை ஐநா மன்றத்தில் இந்திய அரசு முன்மொழிய வேண்டும்.

4. ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

5. தமிழீழ வரலாற்றை தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடநூலில் அதை இடம் பெறச் செய்ய வேண்டும்.

6. விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்

7. ஈழத்தில் தமிழர் பகுதியில் கடல்சார் உரிமை சிங்களவர்களுக்கு அளிக்கப் படுவதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் குடியேற்றப் பட்ட சிங்களர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்

8. கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்

9. தமிழக மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

10. தமிழகத்தில் இருந்து இலங்கை இணை தூதரகத்தை அகற்றிட வேண்டும்.

11. தனித்தமிழ் ஈழம் வேண்டும் என்பதை முதன் முதலாக ஈழத்தமிழர்கள் வலியுறுத்திய நாளான மே 14-ஐ தமிழீழ விடுதலை தினமாக நாங்கள் கடை பிடிக்க இருக்கிறோம், மேலும் இந்த மாணவர் புரட்சிக்கு ஈழத்தின் தேச மலரான செங்காந்தள் மலரின் பெயரை மையப்படுத்தி செங்காந்தள் புரட்சி என்று பெயரிடுகிறோம்.


இந்த செய்தி எத்தனை ஊடகங்களில் வந்தது என தெரியவில்லை ....

No comments:

Post a Comment