எங்கள் இனத்திற்காக தூக்கு மேடை ஏறவும் தயார்!
வஞ்சிக்கப்பட்ட வரலாறு
“இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தில் கரிய இருள் சூழ்ந்துவிட்ட நேரம் இந் நேரம். அவர்களின் வரலாற்றில் ஒவ்வொரு அத்தியாயமும் அவமானத்தை யும் அடக்குமுறையையும் சந்தித்த வரலாறாக, துன்பப் புலம்பலையும் சோகப் பெருமூச்சையும் சுமந்த வரலாறாக போராட்டமும் தியாகமும் நிறைந்த
வரலாறாக அமைந்து போயிற்று.
உலகம் பூராவிலும் உள்ள தமிழர்கள் பயங்கரமான அதிர்ச்சிக்கு ஆளாகி
உள்ளனர்.
ஏனெனில் எந்த மண்ணிலிருந்து ஆதரவும் ஆறுதலும் கிடைக்கும் என நம்பி னார் களோ, எந்த மண்ணில் சொந்த பந்தத்தால் பிணைக்கப்பட்ட ஐந்துகோடி
மக்கள் வாழ்கிறார்களோ, அந்த இந்தியா,எவரும் சற்றும் எதிர்பாராத வகையில்
இலங்கைத் தமிழர்களை அழிக்கப் போர் தொடுத்திருப்பது இரக்கமற்ற கொடூர மான படுகாயங்களை (The Most unkindest Cuts) விளைவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் மீது பிரதமர் ராஜீவ்காந்தி பலவிதமான குற்றச் சாட்டு களைச் சொன்னார்.ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்புக் கொண்டு விட்டு,கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மீறினார்கள் என்றும், ஒப்பந்தத்தை உடைப்பது ஒன்றே அவர்கள் நோக்கம் என்றும், குற்றம் சாட்டினார். இந்தக் கடுமையான குற்றச்சாட்டை பிரதமர் நிரூபிக்க வேண்டும்.எந்தெந்த கட்டத்தில் புலிகள் என்னென்ன வாக்குறுதிகள் தந்தனர். அவற்றை எப்படி மீறினார்கள் என்பதை வரிசைப்படுத்தி சாட்சிகளோடு பிரதமர் விளக்க வேண்டும்.
ஏனெனில் இந்தியாவின் முப்படைகளும் இலங்கைத் தமிழர்கள் மீது போர்
தொடுத்துள்ளன. இந்த யுத்தத்தை நியாயப்படுத்த முயலும் பிரதமர் அவர்களே!
உங்கள் குற்றச்சாட்டு வெறும் பித்தலாட்டம் என்பதை நான் நிரூபிக்கிறேன்.
கொழும்பு ஒப்பந்தம் பற்றிய அடிப்படையான கேள்விக்கு வருகிறேன். இந்த ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டார்களா? இல்லை. ஒப்புதல் அளித்தார் களா? இல்லை; எந்தக் கட்டத்திலும் இல்லை. இதுவரை விடுதலைப் புலிகளின் சம்மதம் பெறாமலே ஏன் பிரதமர் கொழும்பில் கையெழுத்துப்போட்டார்? இந்தக் கேள்வியை நான் அப்போதே கேட்டேன். ஆனால்,அரசாங்கம், எனது கேள்விக்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை. ஆகஸ்டு 4 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில், சுதுமலையில்,இலட்சக்கணக்கான தமிழர்கள் மத்தியில்,உலக நாடுகளின் பத்தி ரிக்கை நிருபர்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்ட கூட்டத்தில், பிரபாகரன் ஆற்றிய உரையிலே கூட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் சொன்னார்.
ஒப்பந்தத்துக்கு புலிகள் ஒப்புதல்,அளிக்கவில்லை என்பதைத்தானே பிரபாகர னின் அந்தப் பேச்சு உறுதிப்படுத்துகிறது. பிரதமர் பேச விரும்புகிறார் என்று சொல்லி ஒப்பந்தத்தைப்பற்றி தெரிவிக்காமல் பிரபாகரனை டெல்லிக்கு அழைத் து வந்து அசோகா ஓட்டல் அறையில் பூட்டி வைத்தது அயோக்கியத் தனம் அல்லவா? பத்திரிக்கை நிருபர்கள் எவரும் பிரபாகரனை சந்திக்க அனுமதிக்கப்
படவில்லை. நான் சந்திக்க முயன்றேன்.முடியவில்லை. மறுநாள் மத்திய அரசு
அதிகாரிகளுடன் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து பல இடையூறு
களுக்குப் பின்னர் பிரபாகரன் என்னோடு தொலைபேசியில் பேசினார்.
“நாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம்.எங்கள் முதுகில் குத்திவிட்டனர். நாங்கள்
இந்திய இராணுவத்தோடு மோதும் நிலை ஏற்பட்டுவிடும் என்றுதான் என் மனக் கொதிப்பையும் வெளியிட்டேன்.எனது வாசகம் கடுமையானதாக இருப்ப தாகச் சொல்லி, இந்திய அரசு என்னை சமாதானப்படுத்த முயன்றது.
எங்கள் பிரச்சினையில் பிரதமருக்கு அனுதாபம் இருக்கிறது என்றுதான் நான்
தெரிவித்தேன். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக நான் எந்தக் கட்டத்திலும்
சொல்லவில்லை. இந்தியாவையும் இந்திய மக்களையும் நான் புண்படுத்தி விடக்கூடாது என்பதால்தான் நான் எனது வாசகத்தின் கடுமையை மாற்றி னேன். ”இதுதான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணி.
அடக்குமுறையாளர்களும் மத்தியஸ்தம் பேசியோரும் போட்டுக்கொண்ட
ஒப்பந்தத்திற்கு புலிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்?
ஒப்பந்தத்தை உடைப்பது யார்? ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்ட ஜெயவர்த் தனே ஒப்பந்தத்திற்கு விரோதமாக அடுக்கடுக்கான காரியங்களைச் செய்து வரு கிறார்.

ஒப்பந்தம் புலிகளால் ஏற்கப்பட்டதா?

ஒப்பந்தத்தை உடைப்பது யார்?
ஒப்பந்தத்தை உடைப்பது யார்? ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்ட ஜெயவர்த் தனே ஒப்பந்தத்திற்கு விரோதமாக அடுக்கடுக்கான காரியங்களைச் செய்து வரு கிறார்.
வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஒன்றாக இணைக் கும் திட்டத்துககு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்று மூன்றாவது நாளே ஜெய வர்த் தனே அறிவித்தாரே. ஒப்பந்தத்தின் மீது விழுந்த முதல் மரண அடிதானே இந்தப் பேச்சு.இந்திய சர்கார் ஏன் இதனை ஆட்சேபிக்கவில்லை?
இலங்கைத் தமிழர்களை நிரந்தர இன்னலுக்கு உள்ளாக்கும் சிங்களக் குடியேற் றம் அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்போடு ஒப்பந்தத்துக்குப் பின்னால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக மண்ணில் நடத்தப்பட்டது தான் ஒப்பந்தத்தின் மீது விழுந்த இரண்டாவது மரண அடியாகும்.

ஒப்பந்தத்துக்கு விரோதிகள் ஜெயவர்த்தனேயா? புலிகளா? எங்கே உங்கள் ஒப்பந்தம் இருக்கிறது? இலங்கை அரசு தனது நடவடிக்கைகளால் ஒப்பந்தத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்து விட்டது.
கோரிக்கைகள் ஏற்கப்பட்டதா?
நமது பிரதமர் இராஜீவ் காந்தி சொல்கிறார்,இலங்கைத் தமிழரின் அனைத்து
கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு விட்ட தென்று. தமிழர்களின் கோரிக்கை என்ன?
அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் என்ன என்பதை பிரதமர் உணர்ந்தாரா?
ஈழத்தமிழர்களின் ஒரே இலட்சியம் தமிழ் ஈழம்தான். அதனை நீங்கள் ஏற்க வில்லை.
ஆனால், வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் நிலம் தமிழர் களின் பூர்வீகத் தாயகம் என்பதை இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை தொடக் கத் திலிருந்து வலியுறுத்தப் பட்டது பிரதமருக்கு ஞாபகம் இல்லையா?
ஒப்பந்தத்துக்கு மறுநாளே ஜெயவர்த்தனே தனது பேச்சில் பூர்வீகத் தாயகம்
என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டது பிரதமருக்குத்
தெரியாதா? தமிழ் மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரங்களே இல்லை என்ப தைத் தானே இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா தாக்கல்உறுதிப் படுத்துகின்றது.

மிதவாதிகள்கூட இதைச் சொல்லிவிட்டார்களே,நிலத்தை நிர்ணயிப்பது மத்திய அரசுதான் என்ற முடிவு தமிழர்களின் தலையில் மண்ணைக் கொட்டுவது தானே?
தாங்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் சுய நிர்ணய உரிமைக்கு அங்கீகாரம்
வேண்டும் என்பதையும் அத்தனை குழுக்களும் வலியுறுத்தி வந்தார்களே? அந்தக் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப் பட்டு விட்டதே? இத்தனைக்கும் பிறகு இராஜீவ் காந்தி எல்லாம் ஏற்கப்பட்டுவிட்டதாக நா கூசாமல் பேசுகிறார்.
வேண்டும் என்பதையும் அத்தனை குழுக்களும் வலியுறுத்தி வந்தார்களே? அந்தக் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப் பட்டு விட்டதே? இத்தனைக்கும் பிறகு இராஜீவ் காந்தி எல்லாம் ஏற்கப்பட்டுவிட்டதாக நா கூசாமல் பேசுகிறார்.
தியாகத் தீயில் திலீபன்
சிங்களக் குடியேற்றத்தை எதிர்த்து புலிகளின் அரசியல் பிரிவு பிரச்சாரச்செயலர் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் கண்ணீரோடு காத்துக்கிடந்தனர்.தண்ணீர் பருகாமல் திலீபன் மரணத்தை எதிர்நோக்கிக்காத்திருந்தார்.அந்த வீரஇளைஞன் தியாகத் தீயில் தன்னைபலியிட்டுக் கொண்டான்.
இந்தியத் தூதர் தீட்சித் திலீபனைப் போய் அணுகி உண்ணாவிரதத்தை நிறுத்தச்
சொல்லி ஏன் வேண்டுகோள் வைக்க வில்லை? அவரது கோரிக்கைகளுக்கு ஏன்
உத்தர வாதம் அளிக்கவில்லை? அகில இந்திய வானொலி திலீபனின் உண்ணா
விரதத்தைக் கிண்டலும் கேலியும் அல்லவா செய்தது. இந்த யுத்தம் ஏன் ஏற் பட்டது?
புலிப்படை வீரர்களின் மரணமும்! போர்ப்புயலும்
அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவம்தான் திருப்புமுனையாக
அமைந்தது. பருத்தித்துறைக்கு அருகே கடலில் படகில் பயணம் செய்த 17 புலி கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.17 பேரும் புலிகள் இயக்கத் தில் மிக முக்கியமானவர்கள். அவர்களில்,புலிகளின் பிரதான தளபதிகளில்
இருவரான புலேந்திரன், குமரப்பாவும் அடங்குவர். அந்தப் படகில் அவர்களிடம்
இயந்திரத் துப்பாக்கி இருந்ததாக இராஜீவ் காந்தி சொல்கிறார். சொந்தப் பாதுகாப் புக்கு ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என்று இராஜீவ் காந்தியே அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தை துச்சமெனக் கருதுகின்ற இந்த மாவீரர்கள் சிங்களக் கடற்படை யின ரோடு போரிட்டு செத்திருக்கலாமே! ஏன் அவர்கள் சிங்களர்களோடு மோத வில்லை? தங்களுக்கு பொது மன்னிப்பு ஜெயவர்த்தனே அறிவித்திருந்ததால்,
இந்திய அமைதிப்படை தங்களை விடுவிக்கும் என்று பூரணமாக நம்பியதால்
அவர்கள் மோதவில்லை. பலாலி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பிரபா கரன் இந்தியத் தூதரிடம் 17 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறினார். அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல நேருமானால், புலிகள்
சயனைடு விஷமருந்திச் சாக நேரிடும் என்ற அச்சத்தைத் தெரிவித்தார். சிங்கள
இராணுவத்தின் சித்திரவதைக்கு பயந்து அல்ல. அதனை அவமானம் என்று
கருது வதால் தற்கொலை செய்துகொள்வார்கள்.
மூன்று நாட்கள் வரை அவர்களை விடுவிக்க இந்திய அரசு தக்க முயற்சிகள்
எடுக்கவில்லை. 5 ஆம் தேதி கொழும்புக்கு இலங்கை விமானப்படை விமானத் தில் அவர்களைக் கொண்டுசெல்ல முனைந்த போது சயனைடு விஷம் அருந்தி அந்த வீராதி வீரர்களில் 12 பேர் மாண்டார்கள். திரிகோணமலை புலிப்படைத் தளபதி புலேந்திரனின் கழுத்திலும் மார்பிலும் பத்துக்கு மேற்பட்ட படுகாயங்கள்
இருந்தன. இதிலிருந்து சிங்களவர்களால் அவர்கள் சித்திரவதை செய்யப் பட்ட னர் என்பதுதானே தெரிகிறது. இந்தப் பொல்லாத மரணம் திரிகோணமலை
வட்டாரத்தில் தமிழர்களிடம் பெரும் புயலை உருவாக்கிற்று.
ஆக்கிரமித்துக் குடியேறிய சிங்களவர்களை புலிகளும் தமிழர்களும் சேர்ந்து கொன்றனர்.இந்த படுகொலைகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், இராஜீவ்காந்திக்கு நினைவூட்டுகிறேன். இந்திரா காந்தி அம்மையார் கொல்லப் பட்டபோது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் டெல்லியில் படுகொலை செய்யப் பட்டனர். அதுபற்றிகுறிப்பிட்ட இராஜீவ் காந்தி “பெரிய விருட்சம் சாய்கிறபோது, பூமி நடுங்கத்தான் செய்யும்” என்று நியாயப்படுத்தினார்.
எத்தனையோ போர்க்களங்களில் சிங்கள சைன்யங்களை எதிர்த்துப்போரிட்டு
வெற்றிகளைக் கண்ட வீரத்தளபதிகளான புலேந்திரனையும், குமரப்பாவையும்
தங்களைக் காப்பாற்றும் காவல் தெய்வங்களாக தமிழர்கள் போற்றி வந்தனர். அந்தத் தளபதிகளின் சாவு தமிழர்களை வெகுண்டெழச் செய்தது.
இந்த வீர வேங்கைகளின் மரணத்தைப்பற்றி பிரதமர் இராஜீவ்காந்தி குறிப்பிட்ட
வார்த்தைகள் என்னை பதைபதைக்கச் செய்கின்றன. கலவரம் ஏற்படட்டும் என்று வேண்டுமென்றே தற்கொலை செய்திருக்கலாம் என குத்தலாகப் பேசி னார். நமது பிரதமரிடம் இருந்து மனிதாபிமானமற்ற -இரக்கமற்ற இந்த வார்த் தைகளை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நேற்றைக்கு முன்தினம் சிங்கள வெறியர்களால் 200 தமிழ் மக்கள் கொல்லப்
பட்டார்களே; அந்த வெறியர்கள் மீது உங்கள் துப்பாக்கிகள் ஏன் திரும்ப வில்லை? விடுதலைப்புலிகளை ஒடுக்கு வதற்கு இந்திய அரசு காரணம் தேடிக்
கொண்டிருந்தது.
புலித்தளபதிகள் மரணத்திற்கு இந்திய அரசே பொறுப்பு!
எனவேதான் விடுதலைப்புலிகள் மீது இந்திய அமைதிப்படை தாக்குதலைத்
தொடங்கியது. தளபதிகள் உட்பட 12 புலிகளின் சாவுக்கு இந்தியாதான் பொறுப் பேற்க வேண்டும்.
இந்திய அமைதிப்படையின் பிரதான தளபதி தீபிந்தர்சிங் கொடுத்த பேட்டி அக்டோபர் 25 ஆம் தேதி “ஹிந்து” பத்திரிக்கையில் வந்துள் ளது. “அக்டோபர் 6 ஆம் தேதியே புலிகளின் பாசறைகளை இந்திய இராணுவம் வேட்டையாடியது.
அக்டோபர் 9 ஆம் தேதி புலிகளின் டி.வி.நிலையமும், வானொலி நிலையமும்
தாக்கப்பட்டன” என்று கூறுகிறார். 10 ஆம் தேதியன்று ஈழமுரசு, முரசொலி என்ற இரண்டு தமிழ்ப் பத்திரிக்கை அலுவலகங்களை இந்திய இராணுவம் வெடி வைத்து தகர்த்து தரைமட்டம்ஆக்கியது.

இந்த பாசிச வெறியாட்டத்துக்கு இந்திய அரசு எந்த நியாயமும் கற்பிக்க முடி யாது.புலிகளை அழிக்க இந்திய இராணுவம் புறப்பட்டது. தற்காப்புக்காக புலிகள்
திருப்பித் தாக்கினார்கள்.
இம்மன்றத்தில் அமர்ந்துள்ள உறுப்பினர்களே! குரூரமாக வதைக்கப்பட்டு அழிந்து கொண்டிருக்கிற ஒரு இனத்தின் அவலக்குரலை செவி கொடுத்துக் கேளுங்கள்.ஆயிரக்கணக்கிலே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முனைக்கு நேரடியாகச் சென்று திரும்பிய நிருபர்கள் தந்த தகவல்களை இதோ தருகிறேன். (ஹிந்து பத்திரிக்கையில் அக்டோபர் 24 இல் (1987) ஜெயராஜ் எழுதி யிருந்ததை மேற்கோள் காட்டுகிறார்.)
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற்ற விவா தத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றஉறுப்பினர் கென்ட் என்ன பேசினார் என்பதை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்.
“இந்திய - இலங்கை ஒப்பந்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது, ரத்தக்களரி யை சந்திக்கத்தான் நேரிடும் என்று நினைத்தேன். தற்போது எனக்கு கிடைத் துள்ள செய்திகளின்படி, தமிழ்ப்போராளிகளை அடியோடு ஒழிக்க இந்திய ராணு வம் முழு மூச்சான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்பாவி மக்களின்
பாதுகாப்பைப் பற்றி இந்திய இராணுவம் பொருட்படுத்தவே இல்லை என்றும்
அறிகிறேன்.”
ஆயுதங்களைப் பறிக்கவா? அடியோடு அழிக்கவா?
புலிகளின் ஆயுதங்களைப்பறிமுதல் செய்யத்தான் இந்த இராணுவ நடவடிக்கை
என்று இந்திய அரசு கூறுகிறது. ஆனால்,30 ஆயிரம் துருப்புகளும் 100க்கும் மேற் பட்ட இராணுவ டாங்குகளும் போர் விமானங்களும், இராணுவக் கப்பல்களும்
போர் தொடுத்திருப்பது ஆயுதங்களைப் பறிக்க அல்ல. புலிகளை அடியோடு
அழிக்கும் நோக்கத்தோடு அல்லவா?
அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடுமையைப் படமாக வீடியோ கேசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதோ என் கையில் இருக்கிறது. இம் மன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரும் அதைப் பார்த்தார்கள். போட்டுக் காட்டட்டுமா? (கேசட்டைத்தூக்கி) அமைச்சருக்குக் காண்பித்தார்.
அவைத் தலைவர்: இங்கு காட்ட அனுமதிகிடையாது.
வைகோ: மைய மண்டபத்தில் போட்டுக்காட்ட அமைச்சர் ஒப்புக்கொள்வாரா?
உண்மைகளை சந்திக்க நீங்கள் தயாராகஇல்லை. புலிகள் முஸ்லிம்களைத்தாக் கிய தாக பிரதமர் இராஜீவ் காந்தி ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஜெயவர்த்தனே முன்பு உருவாக்க முயன்ற சதி நடக்கவில்லை.இப்போது ராஜீவ் காந்தி இந்த அற்பத்தனமான பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். இந்தியத் துருப்புகளை புலிகள் உயிரோடு கொளுத்தியதாக பித்தலாட்ட பிரச்சாரத்தை இந்திய அரசு செய்தது. ஆனால், புலிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள இந்தியச் சிப்பாய்களை நேரில் கண்டு திரும்பிய சுமிர்பால் கூறிய விவரம், அக்டோபர் 30 தேதி ‘டெலிகிராப்’பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.தாங்கள் புலிகளால் உபசரிக்கப்படுவதாகவும் புலிகள் தங்களின் உணவுகளைப்பகிர்ந்து கொள்வ தாகவும் கூறியதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், இந்திய அரசு வானொலி தொலைக்காட்சி மூலம் கோயபல்ஸ் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது.
பிரபாகரன் தலைக்கு விலையா?
சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால்,பிரபாகரன் தலைக்கு 10 இலட்சம் பரிசு என்று ஜெயவர்த்தனே அறிவித்த அதே மேடையைப் பகிர்ந்துகொண்ட இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த், வெட்கம் மானம் இல்லாமல் மறுப்பும் சொல்லாமல் திரும்பி இருக்கிறார். போர் நிறுத்தத்திற்கு இந்தியா மறுக்கக் காரணம் என்ன? மிகப்பெரிய வலிமையான இராணுவம் வைத்துள்ள இந்தியா தானே பெருந்தன்மையோடு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ஆனால், புலிகள் இராணுவத்திடம் மண்டியிட வேண்டும்,சரணடைய வேண்டும் என்று பிரதமர் இராஜீவ் காந்தி திமிரோடு பேசுகிறார்.புலிகள் அழிக்கப்பட்டால் அடுத்த கணமே ஜெயவர்த்தனே இந்திய இராணுவத்தை வெளியேறச் சொல்வார்.
இந்தியத் துருப்புகளின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்த பிரதமர் இராஜீவ்
காந்தி இலங்கையில் கொல்லப்பட்டஅப்பாவித் தமிழர்களுக்காக ஒரு வார்த்தை
கூட அனுதாபம் தெரிவிக்காதது அவரது மனப்பான்மையைக் காட்டுகிறது.
இந்தியத் துருப்புகள் சிந்துகிற இந்திய இரத்தத்திற்கும் இலங்கைத் தமிழர்கள்
சிந்துகிற இரத்தத்திற்கும் இராஜீவ் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க இந்திய இராணுவம் இனப்படுகொலை
நடத்துகிறது என்று முரசொலி மாறன் சொன்னதற்கு பிரதமர் ஆத்திரப்பட்டார்.
அதற்காக தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். ஆனால், இலங்கையில் ‘சன்’
என்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் முன்பு இலங்கை இராணுவத்தின் மீது இந்தியா என்ன பழி சுமத்தியதோ அதைத்தான் தற்போது இந்திய இராணு வம்நடத்துகிறது எனத் தெரிவிக்கிறது.
இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று 1983 இல் இந்திராகாந்தி சொன்ன தை இந்திய இராணுவமே தற்போது செய்து கொண்டிருக்கிறது.
வெளி விவகார அமைச்சர் நட்வர்சிங்:இந்திய இராணுவம் குறித்து கோபால் சாமி சொன்னதை திரும்பப் பெற வேண்டும்.
வைகோ: நிச்சயம் முடியாது; சொன்னகருத்தில் உறுதியாக நிற்கிறேன்.
(இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் பலத்தகூச்சல், அமளி)
தூக்குமேடை ஏறத் தயார்
வைகோ : எங்கள் இனத்தை அழிக்கும் இந்திய இராணுவத்தின் வெறியாட்டத் தை வெளிப்படுத்துவதை தேசத்துரோகம் என்றுகூட நீங்கள் குற்றம்சாட்டலாம். இந்த அரசு ஏவியுள்ள படுகொலைகளை அம்பலப்படுத்துவது குற்றம் என்றால்,
இந்திய இராணுவத்தின் வெறி யாட்டத்தை சுட்டிக்காட்டுவது குற்றம் என்றால், எங்கள் மக்களுக்காக நீதி கேட்பது குற்றம் என்றால், அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்ய நான்தயார். முரசொலி மாறன் பேசியதற்கு விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று பிரதமர் மிரட்டிப் பார்த்தார்.நெருக்கடி காலக் கொடுமைகளை அனுபவித்தவர்கள் நாங்கள். மாறன் உடல் நலமே அடக்கு முறையால் பாதிக்கப்பட்டது.
என்ன விளைவுகள் வரும்? சொல்லுங்கள்! விபரீதத்தின் உச்சகட்டம் தூக்கு மேடையாகத்தான் இருக்க முடியும். எங்கள் இனத்திற் காகப் போராடுவதற்கு தூக்கு மேடை தான் தண்டனை என்றால் அதை வெகுமதி என்று ஏற்றுக் கொள்ளத்தயார்.
(இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்.வைகோவை பேசவிடாமல் ரகளை)
வாஜ்பாய், உபேந்திரா: கோபால்சாமி தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும்.
பண்டாரி (இ.காங்): இலங்கையின்ஒருமைப்பாட்டை பாதுகாப்பது மிகமிக
அவசியம்.
அவசியம்.
வைகோ: வங்கதேசத்தை ஏன் உருவாக்கினீர்கள்? தனி ஈழமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் இலங்கைத் தமிழர்களே,நீங்கள் அல்ல.
அவர்களின் அரசியல் தலைவிதிக்கு உத்தரவிட நீங்கள் யார்? தனி ஈழம்தான்
பிரச்சினைக்குத் தீர்வு. இது என்னுடையகருத்து.
பண்டாரி: பெண்களையும், சிறுபிள்ளைகளையும் சண்டையில் பயன் படுத்து கிறார்கள். புலிகள் கோழைகள்.
வைகோ: கோழை யார்? வீரன் யார்? என்பது உலகத்துக்குத் தெரியும். இது மக்கள் யுத்தம். இப்படித்தான் வியட்நாமில் நடந்தது. இது கொரில்லா யுத்தம்.
ஜெயந்தி நடராஜன் (இ.காங்):கோபால்சாமி இங்கே கொரில்லா யுத்தம்
நடத்துகிறார்.
நடத்துகிறார்.
மோத்திராம் பட்டேல் (இ.காங்):கோபால்சாமி இலங்கைக்கு போய் சண்டை
போடட்டும்.
வைகோ: இலங்கையில் போய் யாரை எதிர்த்துப் போரிடுவது? உங்கள் இந்திய
இராணுவத்தை எதிர்த்தா? அதுதான் முடிவாகுமானால் அதனை இங்கேயே
செய்யலாம்.
ஆனந்த் சர்மா (இ.காங்): பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு இந்திய இராணுவம் சென்றபோது அங்குள்ள மக்கள் இனிப்பு வழங்கி வரவேற் றார்கள்.
வைகோ: மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது,இங்கே இந்தியா விலுங் கூட சில இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதற்காக காந்தியின்
படுகொலையை இந்தியா கொண்டாடியது என்று நீங்கள் ஒப்புக்கொள்ளத் தயாரா?
தன்பாட்டியா (இ.காங்): இந்தியத்துருப்புகளின் இரத்தத்தில் விடுதலைப்புலி களின் கரங்கள் நனைந்திருக்கின்றன.அத்தகைய புலிகளுக்காக கோபால்சாமி
பரிந்து பேசுகிறார்.
வைகோ: தமிழர்களின் இரத்தத்தால் இந்திய அரசாங்கத்தின் கைகள் நனைந்து
இருக்கின்றன. நான் இந்த அரசாங்கத்தை வலியுறுத்துவதெல்லாம் போர் நிறுத்தம் அறிவியுங்கள். அக்டோபர் 2 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலைக்கு இந்திய இராணுவம் திரும்பட்டும். புலிகளோடு பேச்சு வார்த்தை நடத்துங்கள். இலங்கைத்தமிழர்களின் பலிபீடத்தின் மீது இலங்கையின் ஒருமைப்பாட்டைப்
பாதுகாக்க நீங்கள் விரும்பினால் இந்தியாவின் ஒருமைப்பாடு அபாயத்துக்கு
இலக்காகும் என எச்சரிக்கிறேன்.
பிரிவினை விதைகளை தமிழர்களின் இதயங்களில் நீங்கள் விதைக்கிறீர்கள் என எச்சரிக்கிறேன். இந்த மன்றத்தில் தரப்பட்ட இந்த அறிக்கையை ஜெயவர்த் தனே தயாரித்துக் கொடுத்து வெட்கமில்லாமல் இங்கே இராஜீவ்காந்தி வாசித் துக்காட்டியுள்ளார்.
இராஜீவ் காந்தி - வைகோ மோதல்
இன்றைய தினம் இலங்கைக்கும் தென்ஆப்பிரிக்கா வுக்கும் அத்தகைய கள்ள
உறவுகள் இருக்கிறதா? இல்லையா? இதுபற்றி அந்த மாநாட்டில் விவாதிக் கப் பட்டதா?
இராஜீவ் காந்தி: தென் ஆப்பிரிக்காவோடு ஒரு சில நாடுகளுக்கு இரகசிய வணிக உறவுகள் இருக்கக்கூடும். அதனைக்கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.ஆனாலும், அதுபற்றி ஆய்வு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
வைகோ : இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு என்று சொன்னீர்கள். இரண்டு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டால் பொது வாக மற்ற நாடுகள் வரவேற்கத்தான் செய்யும். ஆனால், என்னுடைய கேள்வி கள் எல்லாம் இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுடைய நலன்கள் காப்பாற்றப் படு கிறதா என்பதுதான். கடைசியில் இரத்தக் களறி தான் தமிழர்களுக்கு மிச்சம். தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக கனடாவில் கூறி இருக்கிறீர்கள். இது முழுக்க முழுக்க உண்மைக்கு மாறானது. தமிழர்களின் நலன்கள் எதுவும் காப்பாற்றப்படவில்லை.உலகிற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஐ.நா. பொதுச்சபையில் நீங்கள் உரை ஆற்றியதாகக் கூறினீர்கள். ஆனால், அதே
பொதுச் சபையில் இலங்கை பிரதமர் பிரேமதாசா இந்தியாவை சகட்டுமேனிக்கு
திட்டித் தீர்த்துள்ளார். தமிழ் பயங்கர வாதிகளை உருவாக்கிய இந்தியாவை
உலகமே கண்டனம் செய்ய வேண்டும் என்று கொக்கரித்திருக்கிறார்.
இராஜீவ் காந்தி அவர்களே, பிரேமதாசாவின் பேச்சை ஏன் நீங்கள் மறுக்க வில்லை ? ஏன் கண்டனம் செய்யவில்லை? அதிபர் ஜெயவர்த்தனாவோடு கைகுலுக்கி கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
இராஜீவ் காந்தி: கொழும்பு ஒப்பந்தத்தை பல நாடுகள் பாராட்டுகின்றன. உலகில் இதைப் பாராட்டாத சக்திகள் இரண்டுதான்.ஒன்று பாகிஸ்தான். இன்னொருவர் என் எதிரில் இருக்கிற உறுப்பினர் (வைகோவை சுட்டிக்காட்டிச் சொன்னார்)
வைகோ: ஒப்பந்தத்தை தமிழர்கள் பாராட்டவில்லை. பிரேமதாசா கூறியதற்கு
என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவாதீர் கள். (காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்)
உபேந்திரா: கோபால்சாமி கேட்டகேள்விக்கு பிரதமர் பதில் கூறவேண்டும்.
இராஜீவ் காந்தி: இலங்கை நாடாளுமன்றத்தில் ஜெயவர்த்தனா சிலரை
சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல இங்கே நான் சிலபேரை சமாளிக்க
வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு ஞானமும் புரிகிற சக்தியும் இல்லை.
சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல இங்கே நான் சிலபேரை சமாளிக்க
வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு ஞானமும் புரிகிற சக்தியும் இல்லை.
வைகோ: புத்திசாலித்தனத்தை நாங்கள் உங்களுக்குப்புகட்ட முடியாது.
இராஜீவ் காந்தி: அவர்களுக்கு விசாலமான நோக்கு இல்லை என்பதற்காக வருந்து கிறேன்.
வைகோ: உங்கள் பார்வை எங்களுக்குக் கிடையாது. ஏனென்றால் உங்களுக்கு
ஆகாயத்தில் விமானம் ஓட்டிப்பழக்கம் இருக்கிறது.பிரேமதாசா பிரச்சினைக்குப்
பதில் கூறுங்கள்.
இராஜீவ் காந்தி: இலங்கைப் பிரதமர் பேசுவதற்கெல்லாம் நான் பதில்கூற
வேண்டியது இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளவில் ஒருவர் பதில்
சொன்னால் போதும். இலங்கைப்பிரச்சினையைப் பற்றி உறுப்பினர் கேட்டால் அதற்குரிய விவாதத்தின்போதுபதில் சொல்லுகிறேன்.
தொடரும்..............
நன்றிகள்
கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்
கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment