Saturday, April 6, 2013

தூத்துக்குடியில் ஏப்ரல் 8 இல் பொது வேலை நிறுத்தம்

ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை அகற்ற,
தூத்துக்குடியில் ஏப்ரல் 8 இல் நடைபெறும்,
பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
வைகோ அறிக்கை

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றுவட்டாரத்திலும் வாழும் மக்களின் உடல் நலனுக் குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும் நாசகார நச்சு ஆலையை நிரந்தர மாக மூடிடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது. ஆலையை அகற்றும் வரை, இந்தப் போர் நடக்கும் என்று பிரகடனம் செய்யும் வகையில், தூத்துக்குடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு கடை அடைப்பு பொது வேலை நிறுத் தம் நடத்திட, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அறிவித்துஉள்ளது.



போபால் விஷவாயு அழிவைப் போல, தூத்துக்குடிக்கும், பேராபத்து ஏற்பட்டு விடக்கூடாது எனும், உன்னதக் குறிக்கோளோடு போராட்டம் தொடருகிறது. ஜனநாயகத்தில் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும்விட, மக்கள் சக்தியே மகத்தானது என்பதை, வரலாறு உலகெங்கும் நிரூபித்து வருகிறது.

நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலையால் நச்சுமய மாகி, கால்நடைகள் உயிருக்கும், பொதுமக்கள் உயிருக்கும் நாசம் விளைவிக் கக் கூடியது என்பதனை, உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக், ஸ்டெர்லைட் வளாகத்தில் இருந்து எடுத்து நாங்கள் அனுப்பி வைத்த மண், திடக்கழிவுகள், நீர் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து அறிக்கை தந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை இறக்குமதி செய்கிற, தாமிர அடர்த்தி உலோகம், கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த யுரேனியம், ஆர்சனிக், பிஸ்மத், புளோரின் உள்ளிட்ட நச்சு உலோகங்களைக் கொண்டதாகும். தூத்துக் குடித் துறைமுகத்திலும் இறக்குமதியாகும் இந்த உலோகம் குறித்து, சுங்கத் துறை யினரிடம், தகவல் அறியும் சட்டத்தில் கிடைத்த உண்மைச் செய்தியின் படி, 2009 ஜனவரியில் இருந்து 2010 செப்டெம்பர் வரை, டன் கணக்கில் இந்த நச்சு உலோகங்கள் கலந்த தாமிர அடர்த்தி, தூத்துக்குடி நகரத்தின் சாலைகள் வழி யாகவே, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொண்டு போகப்பட்டு உள்ளது. இதில், யுரேனியம், அணுக்கதிர்வீச்சைத் தந்து, உயிர்களைக் கொல்லக்கூடியது ஆகும். இப்பொழுதும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு இலட்சம் டன் தாமிர அடர்த்தி கப்பல்களில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

எனவே, மிகுந்த எச்சரிக்கையோடு மக்கள் அனைவரும், பெருநாசம் விளைவிக் கும் ஸ்டெர்லைட் ஆலையை,அகற்றினால்தான்,பாதுகாப்பாக நாம் வாழ முடியும்.


தூத்துக்குடி வட்டாரத்தில் எண்ணற்ற குடும்பங்களில் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட, தூத்துக்குடி வட்டாரத்தில் வாழும் மக்களின் ஆயுள்காலமும், ஸ்டெர் லைட்டால், குறைந்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில், இரத்தினகிரி மாவட்ட விவசாயிகள், கடப்பாறை சம் மட்டியோடு, ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கியதால், அம்மாநில அரசு லைசென்சை இரத்து செய்தது. குஜராத் மாநிலமும், கோவாவும் அனும திக் காத நிலையில், தென்தமிழ்நாட்டில், நம் தலைக்கு மேல், இந்த உயிர் குடிக் கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது.

அப்பகுதிவாழ் மக்கள் நலனைப் பாதுகாக்கும் விதத்தில், மார்ச் 30 ஆம் தேதி, தமிழக அரசு, தக்க முடிவு எடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம், ஸ்டெர்லைட் ஆலையை மூடச் செய்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், 2010 செப்டெம்பர் 28 இல், ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூடிடத் தந்த தீர்ப்பை எதிர்த்து, ஆலை நிர்வாகம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம், சென்னைத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து இருந்தாலும், தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியத்துக்கு ஆலையை மூடும் அதிகாரம் உள்ளது என்றே குறிப்பிட்டு உள்ளது.

தூத்துக்குடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி, பொது வேலைநிறுத்தம், முழு கடை அடைப்புப் போராட்டத்தில், ஆட்டோ, வேன், கார், லாரி ஆகிய வாகனங்களும் அன்று இயங்காது என போராட்டக்குழு அறிவித்து உள்ளது. மக்களுக்காக நடைபெறும் இந்தப் பொது வேலை நிறுத்தத்தில், தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கம், மத்திய சங்கம், வியாபாரிகள் சங்கம், மீனவர் சங்கம், வணிகர்கள் சங்கம், அரிமா சங்கங்கள், வாகன ஓட்டுநர்கள் சங்கம், மீனவர்கள், விவசாயி கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்ட பொது நல அமைப்புகள் பங்கு ஏற்கும் என அறிவித்து உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத் திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர் லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், தொடர்ந்து உள்ள தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனை வரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

கடந்த 17 ஆண்டுகளாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றியே தீர வேண்டும் என்ற நீதிக்கான யுத்தத்தில், தன்னலம் இன்றிக் களத்தில் போராடும் சிப்பாய் என்ற தகுதியோடு, இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறும், மக்கள் சக்தியின் வலிமையை நிலைநாட்டுமாறும் பணிவோடு வேண்டு கிறேன்.

‘தாயகம்’                                                                                       வைகோ
சென்னை - 8                                                                      பொதுச் செயலாளர்,
06.04.2013                                                                             மறுமலர்ச்சி தி.மு.க

No comments:

Post a Comment