Thursday, April 11, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 11

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

ஜெயவர்த்தனே தரும் கூலிக்கு கொலை செய்யும் இந்திய அரசு!

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ்-ஜெயவர்த்தனே கையெழுத்து இட்ட உடனேயே இந்திய இராணுவம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங் களுக்கு வந்து இறங்கியது.இலங்கையில் அமைதியை நிலைநாட்டப் போவதாக இந்திய அரசு படையை அனுப்பி வைத்தபோது கூடவே,கனரக ஆயுதங்களை யும், பீரங்கிகளையும் கொண்டுசென்றனர். அமைதிப்படைக்கு இத்தகைய போர் தளவாடங்கள் எதற்கு?புலிகள் இயக்கம் இந்திய அரசின் “உள்ளார்ந்த” நோக்கத் தைப் புரிந்து கொண்டுவிட்டது.விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபா கரன் ஒரு தீர்க்கதரிசி. இராணுவ வியூகம் அமைப்பதிலும், அரசியல் முன்னெ டுப்பு களிலும் அவரது தொலைநோக்குப்பார்வை தோற்றதாக சரித்திரம் இல்லை.சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியை தனது குள்ளநரித்தனத்தால் வீழ்த்தி, புலிகளுக்கும் இந்தியாவுக்கும் பகைமை யை வளர்க்க திட்டமிட்டுள்ளதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். அவர் நினைத்த
படியே பின்னர் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.



இந்திய அமைதிப்படையின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தீபிந் தர் சிங்,பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையின் தலைமை
அலுவலகத்தில் வந்து இறங்கிய உடனேயே, யாழ்ப்பாணம் சென்று  புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். அப்போது ஒப்பந்தப்படி புலிகள் இயக்கம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதன்பின்னர் புலிகள் இயக்கம் தங்களின் உயிருக்கும் மேலான ஆயுதங்களை பலாலி இராணுவ தளத்தில் வைத்து ஒப்படைத்தனர்.இதற்குப் பிறகு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா (RAW) வின் சதித்திட்டம் அரங்கேறத் தொடங் கியது.

துரோகக் குழுக்களுக்கு இந்திய ஆயுதம்

விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களைப்  பறிக்க அவசரம் காட்டிய இந்திய அமைதிப்படை, விடுதலைப் போர்க்களத்தில் துரோகக் குழுக்களாக புலிகளுக்கு எதிராக ‘ரா’ உளவு நிறுவனத்தின் கைக்கூலிப்பட்டாளமாக இருந்த ஈ.என். டி. எல்.ஃப்., ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ இயக்கங்களிடம் ஆயுதங்களைப் பறிக்க
முயற்சி செய்யாதது மட்டுமல்ல, இந்திய முத்திரை பதிக்கப்பட்ட ஆயுதங்களை யும் அவர்களுக்கு இரகசியமாக அல்ல, வெளிப்படையாகவே வழங்கியது.

இந்திய இராணுவத்தின் துணையைப்பெற்றுக்கொண்ட துரோகக் குழுக்கள்,
விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தபின்னர் வவுனியா, கிளிநொச்சி, மன்னார்,
திருகோணமலை மாவட்டங்களில் புலிகள் இயக்கத்தவர்கள் மீது ‘கைக்கூலிக் கும்பல்கள்’ தாக்குதலை நடத்தின. புலிகளுக்கு எதிராக இவர்களை ‘ரா’ தூண்டி விட்டதால் இந்திய அமைதிப்படையும் இதனைக்  கண்டு கொள்ள வில்லை. மேலும், துரோகக் குழுக்களைச் சேர்ந்த 150 பேருக்கு இந்திய இராணுவம் பயிற்சி யும்கொடுத்து வந்தது. கொதித்துப்போன பிரபாகரன், இந்திய அமைதிப்படைத்
தளபதி ஹர்கிரத்சிங், பார்வைக்கு இதைக்கொண்டு போனார். ஆனால், அவரோ,
‘இந்தியாவின் தூதர் ஜே.என்.தீட்சித் இந்திய அரசின் உத்தரவை செயற்படுத்து கிறார். நாங்கள் ஏதும் செய்வதற்குஇல்லை’ என்று கைவிரித்து விட்டார்.

பிரபாகரனைக் கொன்றுவிட தீட்சித் உத்தரவு

1987, செப்டம்பர் 14 இரவில், இந்திய அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத் சிங்கை தொலைபேசியில் அழைத்த இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித்,“இந்தியத் தளபதி யைச் சந்திக்க வரும் பிரபாகரனைச் சுட்டுக்கொன்றுவிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

“சமாதானப்பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுட்டுக்கொல்வது இந்திய இராணு வத் தின் பாரம்பரியத்திற்கு அழகல்ல, எங்களால் முடியாது” என்று  தளபதி ஹர்கிரத்சிங் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், அதை ஏற்காத தீட்சித், “இது டெல்லியின் உத்தரவு; பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தரவு. நீங்கள் உத்தரவுக்கு கீழ்படிய வேண்டும்” என்று கோபம் கொப்பளிக்கக் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு வரும்போது, புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொன்று விடுமாறு தன்னிடம் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் கூறியதை
அமைதிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், தன்னுடைய
“Intervention in Sri Lanka” நூலில் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by J.N.Dixit, to Indian High Commissioner, was 16 -17 September 1987.

On the night of 14/15 September 1987, I receiveed a telephone call from Dixit, directing me to arrest or
shoot Prabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed
a call to the OFC.LT.Gen.

DepinderSingh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message Omphassising that I would not obey his directive.

I pointed out that the LTTE Supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord.

Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions’ to me and the Army should not drag
its feet, and you as the Goc,IPKF will be responsible for it”

Maj.Gen.Harkirat Singh ‘Intervention in SriLanka’
Book Page 57.
Published by Manohar Publishers.
New Delhi - 2

பிரபாகரனைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட்டதன் மூலம் புதுடெல்லியின்
நோக்கம் என்ன என்பதை அமைதிப்படை தளபதியே அம்பலப்படுத்தி இருக் கிறார்.


திலீபன் உயிர்த்தியாகம்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில்,தெரிவிக்கப்பட்டுள்ள ஒன்றைக்கூட நடை முறைப் படுத்த சிங்கள ஜெயவர்த்தனே முன்வரவில்லை. அதை வலியுறுத் தவும் இந்தியா தயாராக இல்லை. தமிழர் பகுதிகளில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்; பயங்கரவாதத் தடைச் சட்டத் தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி இடைக்கால அரசை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியத் தூதருக்கு கடிதம் மூலம் தெரியப் படுத் தியது. ஆனால்,இந்தியத்தூதர் ஜே.என்.தீட்சித் மிகவும் அலட்சியமாக இதனைப்
பொருட்படுத்தாமல் இருந்ததால், புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளரான திலீபன், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்து 1987, செப்டம்பர் 15 அன்று சாகும்வரை உண்ணாவிரத அறப் போராட்டத்தைத் துவக்கினார். மருத்துவம் பயின்றவரான திலீபன், யாழ்ப் பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த உண்ணா விரத மேடையில் பட்டினிப் போரைத் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான
மக்கள் திலீபன் உண்ணாவிரதம் மேற்கொண்ட இடத்தில் திரண்டு வந்தனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து இரண்டு இலட்சம் ஈழத்தமிழ் மக்கள் திரண்டுவிட்டனர்.


ஒரு சொட்டு நீர்கூட பருகாமல்,உண்ணாவிரதம் தொடர்ந்தார் திலீபன்.அகிம் சை யை போதித்த மகாத்மா காந்தியின் நாடு இந்தியா, திலீபனின் உண்ணா விரதத் தைத் திரும்பிப்பார்க்கவில்லை.

இந்திய இராணுவத்தை தமிழீழத்தில் கொண்டுபோய் நிறுத்திய ராஜீவ்காந்தி,
இராணுவத்திற்கு எதிராகவோ,இந்தியாவுக்கு எதிராகவோ இல்லாமல் தங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரதப் போராட் டத்தில் இறங்கிய திலீபன் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

உண்ணா விரதமிருந்த திலீபனை சந்தித்து பிரபாகரன் உணர்ச்சிவயப்பட்டார். திலீபனின் போராட்டம் குறித்து இந்தியத் தூதருக்கு பிரபாகரன் மடல் தீட்டி னார். அமைதிப்படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங், இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் ஆகியோர் புலிகள்தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி னர்.

ஆனால், புலிகளின் கோரிக்கைகள் குறித்தோ, திலீபனின் உண்ணாவிரதப் போராட் டத்தை நிறுத்தவோ எவ்வித உறுதிமொழியும் தருவதற்கு அவர்கள்
தயாராக இல்லை.

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக திலீபன் உண்ணா விரதமிருந்த இடத்தைவிட்டு அசையாமல் இருந்தனர். உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் 

“திலீபன் அழைப்பது சாவையா? 
இந்த சின்னவயதில் இது தேவையா?” 

என்ற கவிதை வரிகளை உண்ணாவிரத மேடையில் வாசித்தபோது, ஒட்டு
மொத்தக் கூட்டமும் கதறி அழுதது.ஆனாலும் பிரதமர் ராஜீவ்காந்தி,திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

தியாக தீபம் திலீபன் கொஞ்சம் கொஞ்சமாக அணையத் தொடங்கியது. உடல் உறுப்புகள் செயலிழந்தன. உண்ணாவிரதம் தொடங்கிய 12 ஆம் நாள் திலீபன் உடல்நிலை மோசமாகி செப்டம்பர் 26 ஆம் நாள் (1987) காலை 10.50 மணிக்கு அந்தத் தியாகச்சுடர் அணைந்தது.

ஆனால், இந்திய அரசுக்கு எதிரான கோபக்கனல் புலிகளின் நெஞ்சில் எழுந்தது.

குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட தளபதிகள் வீரச்சாவு

தியாகச்சுடர் திலீபனின் உயிர்த்தியாகம், தமிæழத்தில் உருவாக்கிய “அக்கினி
அலை” மறைவதற்குள்ளாக, புலிகள் இயக்கத் தளபதிகள் 12 பேரின் தற்கொலை தமிழீழத்தை உலுக்கியது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர் இலங்கைத்தீவிலிருந்து கடலில் இந்தியா சென்று, தங்கள் சென்னை
அலுவலகத்தை மூடிவிட்டு ஆவணங்களை கொண்டுசெல்ல ‘கடல்புறா’ எனும்
படகில் கடலில் புறப்பட்டனர்.

இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டின்கீழ் வடக்கு, கிழக்குப்பகுதி இருந்த தால், புலிகள் ஆயுதங்கள் ஏதுமின்றி கடற்பயணம் புறப்பட்டபோது, சிங்களக் கடற்படை அவர்கள் படகைச்சுற்றி வளைத்தது.குமரப்பா,புலேந்திரன் உள்ளிட்ட 17 புலிகளும் கைது செய்யப்பட்டு (1987 அக்டோபர் 3இல்) பலாலி இராணுவத் தளத்தில் காவலில் வைக்கப்பட்டனர். இந்திய இராணுவம்,புலிகளுக்கு எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் விளைவுகள் விபரீதம் ஆகும் என்று ஒரு கட்டுக்காவல்
அமைத்தனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அனைத்துப் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விட்டதாக கூறியபிறகு, புலிகளின் தளபதிகளை சிங்களக் கடற் படை கைது செய்தது சரியல்ல என்று புலிகள் இயக்கம் இந்திய அமைதிப் படைக்கு எடுத்துக் கூறியது.தலைவர் பிரபாகரனும் அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத்சிங்கிற்குக் கடிதம் எழுதினார். அவரோ இந்தியத் தூதர் தீட்சித் உத்தர வுக்காகக் காத்திருந்தார்.

இந்திய அரசின் சார்பில் ஜே.என்.தீட்சித்,கைதுசெய்யப்பட்ட புலிகள் தளபதி களை சிங்கள இராணுவம் கொழும்பு கொண்டு செல்லட்டும். அதைத் தடுக்கக் கூடாது என்று அமைதிப்படை தளபதிக்கு உத்தரவிட்டார். விடுதலைப்போர்க் களத்தில் களமாடிய அந்த மாவீரர்களை சிங்கள இராணுவம் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடத் தீர்மானித்தது. இந்தியப் படையின் கட்டுக் காவலை நீக்கிட டில்லி உத்தரவிட்டது. சிங்களப் படையினர் புலிகளைக் கைது செய்து கொழும்பு கொண்டு செல்ல நெருங்கினர்.இந்நிலையில் குமரப்பா, புலேந் திரன் உள்ளிட்ட வீராதி வீரர்கள் 12 பேர் சயனைட் அருந்தி அக்டோபர் 5 ஆம்
நாள் வீரச்சாவைத்தழுவினார்கள்.தன்னையொத்த வீரத்தளபதிகளுக்கு நேரிட்ட இந்நிலையைக் கண்டு கொந்தளித்த பிரபாகரன், மாவீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.அப்போது பிரபாகரன் கண்கள் மட்டுமல்ல, தமிழீழமே சிவக்கத் தொடங்கிவிட்டது.

பிரபாகரன் தலைக்கு விலை

இந்திய அரசின் ‘உண்மை முகம்’ அம்பலமாகிவிட்ட நிலையில், இந்திய ராணு வத் தளபதி சுந்தர்ஜி கொழும்பு சென்றார். அங்கே இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் ஏற்கனவே விஜயம் செய்திருந்தார். சிங்கள அதிபர் ஜெய வர்த்தனே, இவர்கள் இருவரையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு,அக்டோபர் 6 ஆம் நாள் (1987) செய்தியாளர்களைச் சந்தித்தான்.

‘வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கு இடைக்கால நிர்வாகசபை அமைக்க முடியாது. புலிகள் இயக்கம் தடை செய்யப்படுகிறது. பிரபாகரனை உயிருடனோ, பிணமாக வோ பிடித்துத் தருபவர்   களுக்கு ரூபாய் பத்து இலட்சம் பரிசு அளிக்கப்படும். இலங்கையில் இந்திய அமைதிப் படை இனி எனது ஆணைப்படிதான் செயல் படும்.

’ஜெயவர்த்தனேவின் இந்த அறிவிப்புகள் யாவும் இந்தியப் பாதுகாப்புத்துறை
அமைச்சர் கே.சி.பந்த் முன்னிலையில் பிரகடனப்படுத்தப்பட்டது எனில், என்ன
அர்த்தம்? ஜெயவர்த்தனே இந்திய அரசின் பிரதமர் ராஜீவ்காந்தியின் ஒப்புதலு டன்தான் பிரபாகரன் ‘தலைக்கு விலை’ அறிவிக்கிறான்.

புலிகள் மீது தாக்குதல் தொடங்கிய அமைதிப்படை 

இந்திய அரசும்-ஜெயவர்த்தனேவும் கூட்டுச்சேர்ந்து விடுதலைப்புலிகளை அழித்து ஒழிக்கவே திட்டமிட்டு ஒப்பந்தம் போட்டார்கள் என்பது வெட்ட வெளிச் சம் ஆகிவிட்டது.1987, அக்டோ பர் 10 ஆம் நாள் இந்திய அமைதிப்படை, புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகளான முரசொலி,ஈழமுரசு அலுவல கங்கள் மீது குண்டுவீசி அவற்றைத் தகர்த்தன.புலிகளின் வானொலி நிலைய மும்,நிதர்சனம் தொலைக்காட்சி நிலையமும் நிர்மூலமாக்கப்பட்டு விட்டன.

எந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து துப்பாக்கி நீட்டமாட்டேன் என்று சுது மலைக் கூட்டத்தில் பிரபாகரன் அறிவித்தாரோ, அதே இந்திய இராணுவத்தை எதிர்க்கக் களத்தில் போராட வேண்டிய நிலைமைக்கு பிரபாகரன் தள்ளப் பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அருகே புலிகள் அலுவலகம் மீது இந்தியப் போர்
விமானங்கள் குண்டு வீசின. 40 தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். சாவகச்சேரி பகுதியில் இந்திய இராணுவம் குண்டு வீசியது. 30 பொதுமக்கள் பலியாயினர். புலிகள் தலைவர் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து அதிரடித் தாக்கு தல் நடத்தி அவரைக் கொன்றுவிட இந்திய இராணுவத்தின் கமாண்டோ படை, யாழ் புறநகரில் கொக்குவில், பிரம்படி பகுதியை முற்றுகையிட்டது.

புலிகளின் அதிரடித் தாக்குதலில் கமாண்டோ படை நிர்மூலம் ஆனது.

இந்திய அமைதிப்படையின் தாக்குதல் தொடங்கியவுடனே புலிகள் தலைவர்
பிரபாகரன், போரை தவிர்க்குமாறு பிரதமர் ராஜீவ்காந்திக்கு இரு கடிதங்கள்
எழுதினார். ஆனால், அமைதிப்படையின் போர் நடவடிக்கை மேலும் தீவிரப் படுத்தப்பட்டது.

அக்டோபர் 21 (1987) அன்று பருத்தித்  துறை மருத்துவமனை மீது இந்திய
இராணுவம் குண்டு வீசியது. அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள்,செவி லியர்கள் உட்பட் 50 பேர் மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் எரிமலை ஆனார் வைகோ

இந்திய அமைதிப்படை எதற்காக இலங்கைசென்றது? தமிழர்களைப்பாதுகாக் கவா? அடியோடு கொன்று ஒழிக்கவா? இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி  யின் இத்தகைய கர்ண கொடூர நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் கடுமையாகக் கண்டித்து ஈழத்தமிழர்களுக்காக அந்தக் காலகட்டத்தில் தலைவர் வைகோ எரிமலையாக வெடித்துச் சீறினார். நாடாளுமன்றம் அதிர்ந்தது.

1987, நவம்பர் 6 ஆம் தேதி,மாநிலங்களவை கூடியதும் இலங்கைப் பிரச்சினை யை எழுப்ப தலைவர் வைகோ, முரசொலி மாறன் இருவரும்  அறிவிக்கை கொடுத்தனர். ஆனால்,பிரதமர் ராஜீவ்காந்தி இதை அறிந்த உடன் அவை யி லிருந்து வெளியேற முயன்றார். அப்போது தலைவர் வைகோ எழுப்பிய இடி முழக்கக் குரல் நாடாளுமன்றத்தின் உயர்ந் தோங்கிய கட்டடத்தில் ஓங்கி எதிரொலித்தது.

இந்திய நாடாளுமன்றத்தின் சரித்திரத்தில், எந்த ஒரு உறுப்பினரும் வைகோ போன்று பிரதமரின் பிடரியைப் பிடித்து உலுக்கி இருக்க முடியாது.நாடாளு மன்றத்தில் வெப்பச் சூறாவளி வீசிய விவாதங்களைக் காண்போம்.

வைகோ: பிரதமர் ராஜீவ்காந்திஅவர்களே! எங்கே ஓடுகிறீர்கள்? முரசொலி மாறன் பேச்சைக் கேட்க உட்காருங்கள். இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொலை பாதகரே! எங்கே ஓடுகிறீர்கள்?

அரவிந்தகணேஷ் குல்கர்னி (இ.காங்கிரஸ்):கோபால்சாமி பிரதமரை கொலை பாதகர் என்று குற்றம் சாட்டியது சகிக்க முடியாதது. அதை வாபஸ்
பெறவேண்டும்.

வைகோ: கொலைகாரரை கொலைபாதகர் என்று அழைக்காமல் வேறு என்ன
சொல்லி அழைப்பது?

மீண்டும் நவம்பர் 9 இல் (1987) நாடாளுமன்றம் தொடங்கி யவுடன் வைகோ, இந்திய அமைதிப்படையின் அக்கிரமம் குறித்து அனல் கக்கினார்.

வைகோ: யாழ்ப்பாணத்திலும், வட மராச்சியிலும் கடந்த 48 மணி நேரத்தில்
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இளைஞர்களை
வீடு வீடாகத் தேடிக் கொல்கிறார்கள்.தமிழ்ப் பெண்களை கைது செய்து பணயக் கைதிகளாக வைத்துள்ளனர்.மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டு உள்ளன. எந்த வித மருத்துவ வசதியும் இல்லை. இது கொலைகார அரசு; இரத்த வெறிபிடித்த அரசு.

(அவையில் இ.காங்கிரஸ் கூச்சல்... பெரும் அமளி)

அவைத்தலைவர்: பிரதமர் பற்றி வை.கோபால்சாமி கூறிய வார்த்தைகள்
நீக்கப்படுகின்றன. அவர் அப்படி பேசக்கூடாது. உட்கார வேண்டும்.

வைகோ :எங்கள் இனமே அழிக்கப்படும் பொழுது, தமிழ் இரத்தம் ஆறாக ஓடும் போது, நாங்கள் பிண்டங்களாக உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? பிரபாகரன் தலைக்கு ஜெயவர்த்தனா விலை அறிவிக்கிறார்.ஜெயவர்த்தனே தரும் கூலிக்கு கொலை செய்யும் அரசாக இந்த அரசு மாறிவிட்டது.

(தலைவர் வைகோவின் ஆவேசமான இந்தப்பேச்சு அவையில் பெரும் அமளி யை உருவாக்கியது. மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த வைகோ அவர்களை, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வாஜ்பாய் அருகில் சென்று சமா தானப்படுத்தினார்.தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர் உபேந்திரா மற்றும் ஜனதா கட்சி உறுப்பினர் குருபாதசாமி ஆகியோரும் வைகோவுக்கு பக்கத்தில் சென்று
ஆறுதல் கூறினர்.)

அவைத்தலைவர்: விவாதம் வரும் பொழுது இது பற்றி பேசலாம்.

வைகோ:இப்படித்தான் கடந்த வெள்ளிக்  கிழமை சொன்னீர்கள்.ஆனால், இரண்டு நாளில் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எங்கள் இனத்தை கருவறுக்கும்பொழுது, இந்த சபையை நடத்தவிடமாட்டேன். வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்.

அவைத்தலைவர்: கோபால்சாமி நடத்தை முறையற்றது. ஒழுங்கு நடவடிக் கைக்கு உள்ளானது என கண்டனம் செய்கிறேன்.

குருபாதசாமி (ஜனதா): கோபால்சாமியின் உணர்ச்சிக்கொந்தளிப்பை நாங்கள்
உணருகிறோம்.அதில் பங்கேற்கிறோம்.அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகூடாது.

இ.காங்கிரஸ் உறுப்பினர்கள்: பிரதமர் பற்றி கோபால்சாமி பேசிய வார்த்தை களை அவர் திரும்பப்பெற வேண்டும்.

வைகோ: எங்கள் சகோதர, சகோதரிகளை நீங்கள் கொன்றுகுவிக்கும் பொழுது,
நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இந்த அரசும், பிரதமரும்
செய்யும் பாவத்திற்கு ஒருநாள் பதில் சொல்லத்தான் வேண்டும் என்று நான்
எச்சரிக்கிறேன்.

அவைத்தலைவர்: கோபால்சாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறேன்.அவர்
சபையை விட்டு வெளியேற வேண்டும்.

வைகோ: உங்கள் நடவடிக்கை பற்றி எனக்குக் கவலையில்லை.

(பிரதமர் ராஜீவ்காந்தியை எதிர்த்து மன்றம் அதிர முழக்கமிட்ட வைகோ அவர் களை எதிர்க்கட்சித்தலைவர்கள் சமாதானப்படுத்தி அவைக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.)

1978 ஆம் ஆண்டிலிருந்து 9 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகஇருக்கும் வைகோ மீது முதல் முறையாக அவையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. ஆனாலும், தலைவர் வைகோ தமிழீழத்தில் கொல்லப்படும் நம் இனத் திற்காக, நாடாளுமன்றத்தில் ஒற்றைக் குரலாக முழங்கியபடியே இருந்தார்.

                                                                                                      தொடரும்................

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment