Sunday, April 21, 2013

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள்!


சங்கொலி தலையங்கம் 



உள்ளாட்சித் தேர்தலைப்போல கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு
சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இதனையடுத்து தமிழகத்தில் 11ஆண்டு களுக்கு பின்னர் கூட்டுறவு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தமிழக
அரசு 2013, மார்ச் 4 ஆம் தேதி வெளியிட்டது. கூட்டுறவு தேர்தலை நடத்திட
தனித்தேர்தல் ஆணையத்தையும் முதல் முறையாக அ.தி.மு.க. அரசு அமைத் தது.கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையராக ம.ரா.மோகன்
பொறுப்பேற்றுக்கொண்டார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், பால்வளம், மீன்வளம், தொழில், வணிகம், கதர்,கிராம தொழில்துறை ஆணையர்கள், கைத்தறி, கால்நடை பராமரிப்பு, சர்க்கரை,வீட்டு வசதி, சமூக நலம், வேளாண்துறை ஆகியவற்றின் இயக்குநர் கள் கட்டுப்பாட்டில் 22,532 கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன. இவற்றுக்கான
தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக
கூட்டுறவு விற்பனை சங்கங்களைத் தவிர, இதர தொடக்க கூட்டுறவு சங்கங் களுக்கும்; இரண்டாவது கட்டமாக, கூட்டுறவு விற்பனை சங்கங்கள்,கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளமத்திய வகை கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. மூன்றா வதாக மத்திய கூட்டுறவு வங்கிகள், மொத்த விற்பனைப் பண்டக சாலைகள் மற்றும் இதர தலைமை கூட்டுறவு சங்கங்களுக்கும்,நான்காவது கட்டமாக, மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, நுகர்வோர் கூட்டுறவு இணையம், தொழில் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறும். இறுதியாக தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டார்.

முதல் கட்டமாக ஏப்ரல் 5 இல் 5,855 கூட்டுறவு சங்கங்களுக்கும், இரண்டாம்
கட்டமாக ஏப்ரல் 12 இல் 5,603 கூட்டுறவு சங்கங்களுக்கும், மூன்றாம் கட்டமாக
ஏப்ரல் 19 இல் 5,481 கூட்டுறவு சங்கங்களுக்கும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 27
இல் 5,253 கூட்டுறவு சங்கங்களுக்கும், ஐந்தாம் கட்டமாக தமிழ்நாடு கூட்டுறவு
ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு தேர்தல் அட்டவணை யை கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

கூட்டுறவுத்தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதிசெய்ய
மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும், விதி மீறல் இன்றி அமைதியான தேர்தலை பார்வையாளர்கள் உறுதி செய்வர் என் றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கண்டறியப்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு மற்றும் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறி வித்திருந்தார்.

ஆனால், ஏப்ரல் 5 மற்றும் 12 தேதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு கட்டத்
தேர்தல்கள், கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்தது போன்று நேர்மையாக வும்,சுதந்திரமாகவும் நடந்ததா? என்று கூட்டுறவு தேர்தல் ஆணையர் மனச் சாட்சி இருந்தால் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கூட்டுறவு தேர்தல் தொடக்கமே முரண்பாடுகளும், முறைகேடுகளும் மலிந்த தாக இருந்தது. கூட்டுறவு சங்கங்களுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை வெளிப்படை யாகவும், உண்மையாகவும் இல்லை. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங் களில் ஆளும் கட்சியினரை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு ஏதுவாக அதிமுக
அரசு 29.01.2013 அன்று கூட்டுறவுச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது.
அந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், கூட்டுறவு சங்கங்கள் தனி அலுவலர்களின்
தலைமையில் நிர்வாகம் இருக்கும்போது ‘பொதுக்குழு’ மூலம் புதிய உறுப்பினர் களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட உண்மையான கூட்டுறவு சங்க உறுப் பினர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வாறு பல வழக்குகள் தமிழகம் முழுவதில் இருந்தும் உயர்நீதிமன்றத்தில் குவிந்தன.

கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு 2013, ஜனவரி 29
இல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகக் குழுக்கள் 25.5.2001 இல் கலைக்கப்பட்டது. தொடர்ந்து தனி அதிகாரி களின் காலத்தில் சேர்க்கப்பட்ட அனைவரையும் வாக்குரிமை உள்ள ‘அ’
வகுப்பு உறுப்பினர்களாக மாற்றவும், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வர்கள் கண்டறியப்பட்டு நீக்கவும், உண்மையான பயனாளிகளை உறுப்பினர் களாக சேர்க்கவும், முறையான திருத்திய வாக்காளர் பட்டியலை வெளியிட வும், கூட்டுறவு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வில்லை.

ஆளும் கட்சியினரின் விருப்பம்போல, கூட்டுறவு சங்கங்களில் நூற்றுக்கணக் கில் போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். ஜனநாயக நெறிமுறைகளின்படி
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்கு கூட்டுறவு தேர்தல் ஆணை யம் முன்வராததால், தேர்தலுக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில்
தொடரப்பட்டன. இத்தேர்தலில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 19 சத விகிதம் இடஒதுக்கீடு வழங்கிட தேர்தல் ஆணையருக்கு உத்திரவிடக்கோரி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.வழக்கைவிசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் அகர்வால், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு உயர்நீதிமன்றம் அதில் தலையிடாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இதேபோல் பெண்களுக்கும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கும் கூட்டுறவு
சங்கத் தேர்தலில் உரிய இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும்.அதுவரை
தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட
இன்னொரு வழக்கிலும், இட ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்த கூட்டுறவு சங்கத் தேர்தலின்போது முதன்மைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என்று
உத்திரவிட்டு மனுவை நீதிமன்றம் முடித்து வைத்தது. எம்.ஆர்.கே. சர்க்கரை
ஆலையும், பரமசிவன் என்பவரும் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கூட்டுறவு
சங்கத் தேர்தலுக்கு தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் நிஜார் மற்றும் கோஷ் ஆகியோர் முன்னி லையில் ஏப்ரல் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி கூட்டு றவு சங்கத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு
எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவை தேர்தல் நடத்த அறி விப்பு செய்யப்பட்டுவிட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், அதற்கான
காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதை கூட்டுறவு தேர்தல் ஆணையம்
உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஏப்ரல் 5 இல் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 5,269 சங்கங்களுக்கு 57,409
நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். அதில் 4,735 சங்கங் களின் 49,879 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள் ளனர். இதுபோலவே, இரண்டாம் கட்டமாக 4,575 சங்கங்களுக்கு,44,057 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மாநில கூட்டுறவுத் தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறி யுள்ளார். போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டஅனைவரும் ஆளும்கட்சியினர் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

கூட்டுறவு தேர்தலில் ஆளும் கட்சியினர் தவிர மற்ற கட்சிகளோ சுயேச்சை யானவர்களோ வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவே இல்லை.இதை யும் மீறி சில இடங்களில் ஆளும் கட்சியினர் அல்லாதவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டு, அதிமுகவினரின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டு அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிப்புப் பலகையில்
இரகசியமாக ஒட்டிவிட்டு நடையைக் கட்டிவிட்டனர். இன்னும் சில இடங்களில்
வேட்புமனு தாக்கல் செய்ததற்கான ஒப்புகை ரசீது கூட கொடுக்காமல் இழுத் தடித்து உள்ளனர்.

பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில் ஆளும் கட்சியினர் தவிர வேறு எவருக் கும் நிர்வாகத் தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுக்கள் கூட வழங்கப் படவில்லை.அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலமே முதல் இரண்டு கட்டத் தேர்தல்களிலும், கூட்டுறவு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட் டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. நடை பெற இருக்கின்ற இதர கட்டத்தேர்தல்களும் இதே இலட்சணத்தில் தான் நடக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட பல கூட்டுறவு, நாணய சங்கங் களுக்கான தேர்தலில் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு
மட்டுமே வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன. சில இடங்களில் ஏற்பட்ட மோதல் களால், பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப் பட்டாலும் அவை பரீசிலனையின் போது, நிராகரிக்கப்பட்டு, ஆளும் கட்சியினர் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.இதைவிட இன்னும் ஒருபடி மேலாக, கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே கூட்டுறவு சங்கத்தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு ஆளும் கட்சியினர் தேர்வு செய்யப்பட்டதாக அறி விப்பு வெளியிட்டு ஜனநாயகத்தை படுகொலை செய்து இருக்கின்றனர்.

‘கூட்டுறவே நாட்டு உயர்வு’ என்னும் தாரக மந்திரத்தின் அடிப்படையையே
தகர்க்கின்ற வகையில் தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களால் ஆளும்
கட்சியினரே உயர்வடைந்து உள்ளனர். சுதந்திரமாகவும், நேர்மையாகவும், முறையாகவும் கூட்டுறவுத் தேர்தல்கள், அனைத்துத் தரப்பு மக்களின் உண்மை யான பங்களிப்புடன் ஜனநாயகத் தன்மையுடன் நடைபெற்றால்தான் கூட்டுறவு இலட்சியம் பயன் தருவதாக இருக்கும். இல்லையெனில் ஆளும் கட்சியினரின் ‘மேய்ச்சல் இடமாக’ கூட்டுறவு சங்கங்கள் முற்றிலுமாக சீரழிந்துவிடும்.

நன்றி :- சங்கொலி

No comments:

Post a Comment