Sunday, April 28, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -27

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 12 வது நாள் பயணத்தில் நேற்று(27.04.13)  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு  வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ராஜீவ் படுகொலையில் நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோரின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தமிழக அரசு உள்ளது. அதற்காக இநதக் கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தங்களது அமைச்சரவையை கூட்டி 161-வது சட்டப்பிரிவின் படி தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க கவர்னரை வைத்து அறிவிக்க வேண்டும்.



மது என்ற அரக்கனின் பிடியில் இருந்து தமிழக மக்களை மீட்க வேண்டும் என்ற வேள்வியை தொடங்கி உள்ளேன். ஏற்கனவே குடிக்கு அடிமை யான வர்களை மீட்க செல்லவில்லை. இனி யாரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடை பயணம் சென்று வருகிறேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.



கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட செயலாளர் டி.என்.குருசாமி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி. அப்துல்லா பெரியார்தாசன். துணை பொது செயலாளர் மல்லை சத்யா, கணேசமூர்த்தி எம்.பி., உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் குமாரபாளையம் நகர செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.

முடிவில் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் நன்றி கூறினார். இரவு 10-40 மணிக்கு கூட்டம் முடிந்ததும் நகர செயலாளர் சிவக்குமார் வீட்டில் வைகோ தங்கினார். இன்று காலை 7 மணிக்கு வைகோ மீண்டும் நடை பயணத்தை தொடங்கினார். அவருடன் ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் நடைபயணம் சென்றனர்.

எம்.ஜி.ஆர். நகர், குப்பாண்டம் பாளையம், செங்கத்தாம்பாளையம், ஆவித்திபாளையம் வழியாக பள்ளிப்பாளையம் செல்கிறார். அங்கு உள்ள ஜி.வி மகாலில் பகல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு தங்குகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு காவிரி ஆற்று பாலம், கருங்கல்பாளையம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக சம்பத் நகர் சென்று அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

No comments:

Post a Comment