Monday, April 8, 2013

தூத்துக்குடிமுழு அடைப்பு - மாநரகம் முடங்கியது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று (8.04.2013) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்திருந்தது.
இந்த போரட்டத்திற்கு வைகோ யும் மதிமுகவும் அழைப்பு விடுத்தது , இதை தொடர்ந்து அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைத்து ,இன்று மாநகரமே முடங்கி விட்டது .





இந்த போராட்டத்திற்கு அனைத்து
வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, டாக்சி, வேன் ஓட்டுனர்கள் சங்கம் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் முழு அடைப்பு போராட்டம் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதனால் தூத்துக்குடி நகரில் உள்ள அனைத்து கடைகளும், நிறுவனங்களும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. சிறிய டீக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. புதிய பஸ் நிலையம் பகுதியில் மட்டும் ஒருசில கடைகள் திறந்திருந்தன. மற்றபடி அனைத்தது கடைகளுமே மூடப்பட்டிருந்தன.

மேலும் ஆட்டோக்கள், வாடகை கார் மற்றும் வேன்கள் எதுவும் ஓடவில்லை. அது மட்டுமின்றி ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மினிபஸ்களும் இயக்கப் படவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததாலும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் மினிபஸ்கள் ஓடாததால் அனைத்து ரோடுகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் வாகனங்களில் ரோந்துவந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

5 comments:

  1. sterlitekaga southla mattum than poradanuma .... chennaila oru rally panalama nanbargalae muthupudiavan andarsan

    ReplyDelete
    Replies
    1. அடுத்தடுத்த போராட்டங்கள் அதுவாக தான் இருக்கும்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. முதலில் அந்த மக்கள் முழுமையாக போராட வரவேண்டும் , இன்னும் அந்த பகுதி யில் முழுமையாக மக்களுக்கு சென்று சேரவில்லை ,

      Delete
    2. உங்களின் பின்னோட்டம் தெரியாமல் நீக்கம் ஆகிவிட்டது , எங்களின் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்

      Delete