உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு ஒன்று மனித உரிமை ஆர்வலர்களையும், குறிப்பாக -தமிழ் சமுதாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. 1993 செப்டம்பர் மாதத்தில், டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குண்டுவெடித்ததில் 9 பேர் பலி ஆனார்கள். இச்சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்சிங் பிட்டா படுகாயத்துடன்
உயிர் தப்பினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பஞ்சாபில் தனிநாடு கேட் டுப் போராடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புதான் பின்னணி யில் இருந்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர் தேவிந்தர் பால் சிங் புல்லர் என் றும் காவல்துறை அவரை கைது செய்தது. ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற புல் லர் அந்நாடு அடைக்கலம் தராமல் 1995 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய போது,புல்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2001 ஆகஸ்டு மாதம் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது,2002 மார்ச் 26 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, புல்லரின் மரண தண்டனை உறுதி யானது. பின்னர் புல்லரின் மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித் தது.
தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி 2003 ஆம் ஆண்டு ஜனவரி 14 இல்,தேவிந்தர் பால்சிங் புல்லர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தார்.அவரது கருணை மனு 8 ஆண்டுகள் கழித்து 2011 மே 25 ஆம் தேதி குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்தபோது நிராகரிக்கப் பட்டது.புல்லரின் கருணை மனு மீது மிகவும் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டு
இருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க வேண்டும் என்று புல்லரின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் மரணதண்டனைக் கைதி, தண்டனை யை எதிர்நோக்கி நீண்ட காலம் சிறையில் இருப்பது மிகவும் கொடுமையானது
என்றும், இது அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கியுள்ள அடிப்படை
உரிமைகளை மீறுவதாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே முகோபாத் யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து,கடந்த ஆண்டு ஏப்ரல் 19 இல் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஏப்ரல் 12 ஆம் நாள், உச்ச நீதிமன்றம் அளித்தது. புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினர் .
மிகவும் முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு இதே போன்று இன்னும் நிலுவை யில் உள்ள பல தூக்கு தண்டனைக் கைதிகளின் மனுக்களை உச்ச நீதிமன்றம், புல்லர் வழக்கினை முன்னுதாரணமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குமானால் என்ன செய்ய முடியும்? என்ற ஐயத்தை எழுப்பி உள்ளது.குடியரசுத் தலைவ ரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மொத்தம் 16 மனுக்கள் உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூன்று
தமிழரின் கோரிக்கை மனுவும் அடங்கும்.
புல்லர் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்த உடனேயே ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவ ரை யும் தூக்கிலிடுவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தமிழின எதிரி களும், சில ஊடகங்களும் துள்ளிக் குதிக்கிறார்கள். எந்த வகையிலும் ராஜீவ் கொலையில் தொடர்பில்லாத மூன்று தமிழரை தூக்கில் போட்டால்தான் டெல் லி தேவதையின் பலி பீடத்திற்கு இரையாக்கினால்தான் திருப்தி கிடைக் கும் என்பதில் சிலர் அக்கறையாக உள்ளனர். அதனால்தான் சென்னை உயர்நீதி மன் றத்திலிருந்து மூன்று தமிழர் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.
இந்நிலையில்தான் மறுமலர்ச்சி தி.மு.க.உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்
செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 13 ஆம் நாள் தெளிவான
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.
“தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி,மாநில ஆளு நருக்கு அனுப்பும் பட்சத்தில்,அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 இன் படி ஆளுநர் தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க முடியும்.” எனவே, முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து மூன்று தமிழரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் வலி யுறுத்துகிறது.
அரசியல் சட்டப்பிரிவுகள் 72 மற்றும் 161 ஆகியவை என்ன கூறுகின்றன என்ப தைக் காண்போம்.
Art 72(1): The president shall have the power to grant pardons, reprieves or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence,
a) In all cases where the punishment or sentence is by a court martial;
b) In all cases where the punishment of sentence is for an ofence against any law relating to matter to whcih the executive power of the Union extends;
c) In all cases where the sentecne is a sentence of death.
Art 72(2): Nothing in sub-clause (a) of clause (1) shall affect the power confered by law on any officer of the Armed Forces of the Union to suspend, remit or commute a sentence passed by a Court Martial.
தண்டனைக் குறைப்பு, மன்னிப்பு முதலியவற்றை வழங்குவதற்கு இந்திய அரசி யல் சட்டப்பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கு வழங்கும் அதிகாரம்,மாநில ஆளு நருக்கு அரசியல் சட்டப் பிரிவு 161 இல் வழங்கப்படும், இதே போன்ற அதிகாரத் தைப் பறிப்பதோ,அதில் குறுக்கிடுவதோ இல்லை என்று தெளிவாகக் கூறப்பட் டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவரோ,ஆளுநரோ தாமாகவே சுயேச்சையாக முடிவு எடுக்க முடியுமா என்னும் கேள்வியை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து,இந்தியக் குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநரும் முறையே மத்திய, மாநில அரசு களின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும்.அந்த அறிவுரை அவர்களைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் உறுதிபட தெளி வாகத் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆகிய இரு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆக மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரம்,மத் திய அமைச்சரவைக்கும் மாநில அமைச்சரவைக்குமே உண்டு.
இந்தப் பரிந்துரையை ஏற்றுதான் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று தமிழக ஆளு நர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக்
குறைத்தார். மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டன.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாகக் குறைக்க ஏதுவாக,தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம்
கொண்டுவர வேண்டும் என்று 2013 ஏப்ரல் 13 இல் அறிக்கை விடுத்துள்ள கரு ணாநிதிதான், அவர் முதல்வர் பதவியில் இருந்தபோது, பத்து ஆண்டு களுக்கு முன்பு அவருக்கு அந்த வாய்ப்பு இருந்தபோது, மூன்று பேரின் கருணை மனுக் களை நிராகரித்து விடுமாறு 2000 ஏப்ரல் 19 அன்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே, மரண தண்டனை கூடாது என்பது நமது கருத்து என்று இப்பொழுது கூறுகின்ற கருணாநிதி பத்து ஆண்டுக ளுக்கு முன்பு, மூன்று பேரையும் தூக்கில் போடலாம் என்று ஆளுநருக்கு பரிந் துரை செய்தது ஏன்? தமிழக மக்களின் நினைவாற்றல் மீது கருணாநிதிக்கு அவ் வளவு நம்பிக்கை! இப்போது அவரது இரட்டை வேடம் தாமாகவே கலைந்து விட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம், 2011 ஆகஸ்டு 12இல், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப் பட்டுவிட்டதாகக்கூறியது.இதனைத் தொடர்ந்து 2011 செப்டம்பர் 7 ஆம் தேதி மூவரையும் தூக்கிலிடு வதற்கான தேதியும் குறிக்கப்பட்டு,தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும். இருபது
ஆண்டுக் காலம் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்ட மூவரையும் விடு தலை செய்ய வேண்டும் என்று தமிழகம் கொந்தளித்து போராட்டங்கள் வெடித் தன. இளைஞர்களும்,மாணவர்களும் களத்தில் குதித்துப் போராடினர். ஒட்டு மொத்தத் தமிழகமும் மூன்று தமிழரின் உயிரைக் காக்க உணர்ச்சிகரமான போராட்டங்களை நடத்தியது.
தமிழகம் போராட்டக் களத்தைச் சந்தித்தபோது, 2011 ஆகஸ்டு 29 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, “தமிழக முதல மைச்சராக இருக்கும் தனக்குக் கருணை வழங்கும் அதிகாரம் இல்லை.அதற் குக் காரணம், குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் மாநில ஆளுந ருக்கு இல்லை”என்று 1991 மார்ச் 5 ஆம் தேதி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் சட்டம் பிரிவு 72 இன் கீழ் கருணை வழங்கும் அதிகாரம் உடைய குடி யரசுத் தலைவர் குறிப்பிட்ட ஒருவரின் கருணை மனுவை நிராகரித்த பிறகு, அரசியல் சட்டப் பிரிவு 161 இன்கீழ் கருணை வழங்கும் அதிகாரம் உடைய மாநில ஆளுநரால் அந்த நபருக்குக் கருணை வழங்க முடியாது.அப்படி வழங்கு வது அரசியல் சட்டப்பிரிவு 257(1)க்கு எதிரானது” என்று தெரிவித்திருந்தார்.
Article 257 in the Constitution of India 1949, 257 control of the Union over States in Certain Cases.
(1) The executive power of every state shall be so excerised as not to impede or pre Judice the exercise of the executive power of the union, and the exceutive power of the union shall extend to the giving of such directions to a state as may appear to the Government of India to be necessary for that purpose.
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அதற் குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேதான் மாநில அரசாங்கத்தின் அதிகாரம் செயல் படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவின் சாரம்.
1991 மார்ச் 5 இல் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதம் நிர்வாகம்
தொடர்பான ஆணைதான் (directive).அது இந்தியத் தண்டனைச் சட்டம், குற்ற வியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டப் புத்தகங்களில் உள்ள சட்டத்தின் (Statute) தகுதியைக் கொண்டது அல்ல.
மத்திய அரசு 1991 மார்ச் 5 இல் இந்தக் கடிதம் அனுப்பியதற்கான பின்னணியைக் குறித்தும் ஆராய்வோம்.அதற்கு முன்பு இன்னொன்றைப் பார்ப்போம்.2011 ஆகஸ்டு 29 இல் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு மாறாக மறுநாள் ஆகஸ்டு 30 ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் ஒன்றை முதல்வர்
ஜெயலலிதா நிறைவேற்றினார்.
தேவிந்தர் பால்சிங் புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குப்
பின்னர், தூக்குமர நிழலில் காத்திருக்கும் மூன்று தமிழரின் உயிரைக் காப்பாற்ற
தமிழக முதல்வர் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏப்ரல் 13 ஆம் தேதி கழகம் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெளிவுபடக் கூறப்பட்டு இருக்கின்றது.
2011 ஆகஸ்டு 29 ஆம் தேதி சட்ட மன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டிய 1991, மார்ச் 5 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம் தொடர்பான வழக்கு,இப்போது தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.
இன்றைய பஞ்சாபும், ஹரியானாவும் ஒரே மாநிலமாக இருந்தபோது, பஞ்சாப்
மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் பிரதாப் சிங் கெய்ரோன். இவர் 1965 இல் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்ததாக ஹரியானா வைச் சேர்ந்த தயாசிங் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைதான தயாசிங் 1972 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக் கப்பட்டு இருந்தார். அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமர்வு நீதிமன்றம் 13.12.1978 இல் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. அத் தண்டனையை உயர்நீதிமன்றம் 22.03.1980 இல் உறுதி செய்தது.
அவரது மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தால் 1980 ஆகஸ்டு 21 இல்
நிராகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கேட்ட விண்ணப்பமும் 1981 செப்டம்பர் 2 இல் தள்ளுபடி செய்யப்பட்டது. மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அவர் குடியரசுத் தலை வருக்கும் மாநில ஆளுநருக்கும் அனுப்பிய கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
தயாசிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு
அவரது சகோதரர் லால்சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
செய்தார். இதனால் 1986 இல் தயாசிங்கின் மரண தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அன்றைய தேசிய முன்னணி அரசில் துணைப் பிரதமராக இருந்த தேவிலால்,
தயாசிங் வழக்கில் அக்கறை செலுத்தினார். அவரது தண்டனையைக் குறைப்ப தற்கு முயற்சி மேற்கொண்டார்.ஹரியானா மாநில ஆளுநரின் பரிசீலனைக்கு மீண்டும் சென்றது.
கல்கத்தாவிலுள்ள அலிப்பூர் சிறைக் கைதி ஒருவர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தயாசிங்கை விடுதலை செய்ய
உத்திரவிடுமாறு உச்சநீதிமன்றத்துக்கு 1990 டிசம்பரில் கடிதம் எழுதினார்.அந்தக் கடிதத்தை உச்ச நீதிமன்றம் ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டது. 1991 மார்ச் 27 இல் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய, மாநில அரசு களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
1988 நவம்பர் 18 இல் மாநில ஆளுநருக்கு தாம் அனுப்பிய கருணை மனு மீது இரண்டு ஆண்டுக் காலம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டிய தயாசிங், காலதாமதம் ஏற்படுவது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகக் கூறி இருந்தார். அவரது ரிட் மனு மீதான விசாரணையின் போது தான் மத்திய அரசு அரசியல்சட்டப் பிரிவு 257(1) ஐச் சுட்டிக்காட்டி மாநில அரசு களுக்கு 1991 மார்ச் 5 இல் எழுதிய கடிதம் அரசாங்கத் தரப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் வைக்கப் பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற அமர்வு, அந்தக் கடிதம் குறித்து எந்தக் கருத்தும் கூற வில்லை. அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மாறாக, தயாசிங் 1988 இல் ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து அதில் முடிவு எடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் குறை கூறியது.
தயாசிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், மூன்று தமிழர்
வழக்கிற்காக சில வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவராலும், மாநில ஆளுநராலும் ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டாலும், அவர் மீண்டும் மாநில ஆளுநருக்குக் கருணை மனு செய்யலாம். ஆனால்,கருணை கேட்பதற்கான அடிப்படைகள்,சூழ்நிலைகள் முந்தைய கருணை மனுக்களில் சொல்லப்பட்டவையாக இருக்கக்கூடாது. அதேபோல, மரண தண்டனை விதிக் கப்பட்டவர்,அத்தண்டனையைக் குறைக்கும்படி அரசியல் சட்டப் பிரிவு 72 இன் கீழ் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டாலும்,வேறு காரணங்கள், மாறிய சூழ் நிலை கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை
அணுகலாம்.
எனினும் இரண்டாண்டுக் கால தாமதம் என்பதை மரண தண்டனை பெற்ற
எல்லோருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான பொதுவான அளவு
கோலாகக் கொள்ள முடியாது என்றும்,ஒவ்வொருவரது வழக்கிலும் அவருக்கே
உரிய காரணங்கள் மாறிய சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை வழங்குமென்றும் இவ்வழக்கில் உச்ச நீதி மன்ற அமர்வு கூறி உள்ளது.
ஆக, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு அடிப்படை யில், அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது.
எனவே, முதல்வர் ஜெயலலிதா, தூக்குக் கொட்டடியிலிருந்து மூவர் உயிரைக்
காப்பாற்ற உடனடியாக அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவந்து,மாநில ஆளுநருக்கு அனுப்பிட வேண்டும். இல்லையேல் “டெல்லி தேவதையின்” (?) பலி பீடத்திற்கு மூன்று தமிழரின் உயிரை காவு கொடுக்கத் துடிக்கும் மத்திய அரசின் முயற்சி வெற்றிபெற்று விடும்.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்,பிரதமர் மன்மோகன்சிங்கை ஏப்ரல் 15
ஆம் தேதி சந்தித்து தேவிந்தர் பால்சிங் புல்லரை தூக்கில் போடக்கூடாது
என்றும், அப்படி தூக்கிலிட்டால் பஞ்சாப் மாநிலம் கொந்தளிக்கும் என்றும்
எச்சரித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி
உயிர் தப்பினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பஞ்சாபில் தனிநாடு கேட் டுப் போராடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புதான் பின்னணி யில் இருந்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர் தேவிந்தர் பால் சிங் புல்லர் என் றும் காவல்துறை அவரை கைது செய்தது. ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற புல் லர் அந்நாடு அடைக்கலம் தராமல் 1995 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய போது,புல்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2001 ஆகஸ்டு மாதம் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது,2002 மார்ச் 26 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, புல்லரின் மரண தண்டனை உறுதி யானது. பின்னர் புல்லரின் மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித் தது.
கருணை மனு நிராகரிப்பு
தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி 2003 ஆம் ஆண்டு ஜனவரி 14 இல்,தேவிந்தர் பால்சிங் புல்லர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தார்.அவரது கருணை மனு 8 ஆண்டுகள் கழித்து 2011 மே 25 ஆம் தேதி குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்தபோது நிராகரிக்கப் பட்டது.புல்லரின் கருணை மனு மீது மிகவும் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டு
இருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க வேண்டும் என்று புல்லரின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் மரணதண்டனைக் கைதி, தண்டனை யை எதிர்நோக்கி நீண்ட காலம் சிறையில் இருப்பது மிகவும் கொடுமையானது
என்றும், இது அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கியுள்ள அடிப்படை
உரிமைகளை மீறுவதாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே முகோபாத் யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து,கடந்த ஆண்டு ஏப்ரல் 19 இல் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஏப்ரல் 12 ஆம் நாள், உச்ச நீதிமன்றம் அளித்தது. புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினர் .
மிகவும் முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு இதே போன்று இன்னும் நிலுவை யில் உள்ள பல தூக்கு தண்டனைக் கைதிகளின் மனுக்களை உச்ச நீதிமன்றம், புல்லர் வழக்கினை முன்னுதாரணமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குமானால் என்ன செய்ய முடியும்? என்ற ஐயத்தை எழுப்பி உள்ளது.குடியரசுத் தலைவ ரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மொத்தம் 16 மனுக்கள் உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூன்று
தமிழரின் கோரிக்கை மனுவும் அடங்கும்.
புல்லர் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்த உடனேயே ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவ ரை யும் தூக்கிலிடுவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தமிழின எதிரி களும், சில ஊடகங்களும் துள்ளிக் குதிக்கிறார்கள். எந்த வகையிலும் ராஜீவ் கொலையில் தொடர்பில்லாத மூன்று தமிழரை தூக்கில் போட்டால்தான் டெல் லி தேவதையின் பலி பீடத்திற்கு இரையாக்கினால்தான் திருப்தி கிடைக் கும் என்பதில் சிலர் அக்கறையாக உள்ளனர். அதனால்தான் சென்னை உயர்நீதி மன் றத்திலிருந்து மூன்று தமிழர் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.
நாடாளுமன்ற தாக்குதலில் நேரடியாக தொடர்பில்லாத அப்சல் குருவை தூக் கில் போட்டு,மக்களின் கூட்டு மனசாட்சி அப்போது தான் சாந்தம் அடையும் என்று தெரிவித்தவர்கள், மூன்று தமிழரையும் தூக்கு மரக் கொட்டடியிலிருந்து
கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார் கள்.

கழகம் நிறைவேற்றிய தீர்மானம்
இந்நிலையில்தான் மறுமலர்ச்சி தி.மு.க.உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்
செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 13 ஆம் நாள் தெளிவான
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.
“தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி,மாநில ஆளு நருக்கு அனுப்பும் பட்சத்தில்,அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 இன் படி ஆளுநர் தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க முடியும்.” எனவே, முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து மூன்று தமிழரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் வலி யுறுத்துகிறது.
அரசியல் சட்டப்பிரிவுகள் 72, 161
Article 72:
Art 72(1): The president shall have the power to grant pardons, reprieves or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence,
a) In all cases where the punishment or sentence is by a court martial;
b) In all cases where the punishment of sentence is for an ofence against any law relating to matter to whcih the executive power of the Union extends;
c) In all cases where the sentecne is a sentence of death.
Art 72(2): Nothing in sub-clause (a) of clause (1) shall affect the power confered by law on any officer of the Armed Forces of the Union to suspend, remit or commute a sentence passed by a Court Martial.
Art 72(3): Nothing in Sub-Clause(c) of clause(1) shall affect the power to suspend, remit or commute a sentence of death exercisable by the Governeor of State under any law for the time being in force.
Article 161
The Governor of a State have the power to grant pardons, reprieves respites or remissions of punishment to suspend, remit or commute the sentence of any person convected of any offence against any law relating to a matter to which the exceutive power of the state extends
ஆளுநருக்கு அதிகாரம்
தண்டனைக் குறைப்பு, மன்னிப்பு முதலியவற்றை வழங்குவதற்கு இந்திய அரசி யல் சட்டப்பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கு வழங்கும் அதிகாரம்,மாநில ஆளு நருக்கு அரசியல் சட்டப் பிரிவு 161 இல் வழங்கப்படும், இதே போன்ற அதிகாரத் தைப் பறிப்பதோ,அதில் குறுக்கிடுவதோ இல்லை என்று தெளிவாகக் கூறப்பட் டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவரோ,ஆளுநரோ தாமாகவே சுயேச்சையாக முடிவு எடுக்க முடியுமா என்னும் கேள்வியை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து,இந்தியக் குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநரும் முறையே மத்திய, மாநில அரசு களின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும்.அந்த அறிவுரை அவர்களைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் உறுதிபட தெளி வாகத் தீர்ப்பு வழங்கி உள்ளது.
1. Mathu Ram V/s Union of India (1981) 1 SCC 107
2. Kehar Singh V/s Union of India (1989) 1 SEC 204
“The president and the Governor must act on the adivce of the central and state government respctively and that this advice is bindings on them”
நளினி தண்ட னைக் குறைப்பு
ராஜீவ் கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப் பட்ட நளினி, பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகியோர் தமிழக ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் தொடர்பாக அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை 2000 ஏப்ரல் 19 அன்று ஒரு தீர்மானம் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதில் “மேற்சொன்ன நால்வரில் நளினியின்
மரண தண்டனை ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட வேண்டும்.ஏனெனில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அவரது மகள் அனாதையாக் கப்பட்டுவிடுவாள்,(நளினியின் கணவர் முருகனும் தூக்குத் தண்டனை பெற்ற வர்) மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்படவேண்டும்” என்று இருந்தது.
மரண தண்டனை ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட வேண்டும்.ஏனெனில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அவரது மகள் அனாதையாக் கப்பட்டுவிடுவாள்,(நளினியின் கணவர் முருகனும் தூக்குத் தண்டனை பெற்ற வர்) மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்படவேண்டும்” என்று இருந்தது.
குறைத்தார். மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டன.
கருணாநிதி இரட்டைவேடம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாகக் குறைக்க ஏதுவாக,தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம்
கொண்டுவர வேண்டும் என்று 2013 ஏப்ரல் 13 இல் அறிக்கை விடுத்துள்ள கரு ணாநிதிதான், அவர் முதல்வர் பதவியில் இருந்தபோது, பத்து ஆண்டு களுக்கு முன்பு அவருக்கு அந்த வாய்ப்பு இருந்தபோது, மூன்று பேரின் கருணை மனுக் களை நிராகரித்து விடுமாறு 2000 ஏப்ரல் 19 அன்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே, மரண தண்டனை கூடாது என்பது நமது கருத்து என்று இப்பொழுது கூறுகின்ற கருணாநிதி பத்து ஆண்டுக ளுக்கு முன்பு, மூன்று பேரையும் தூக்கில் போடலாம் என்று ஆளுநருக்கு பரிந் துரை செய்தது ஏன்? தமிழக மக்களின் நினைவாற்றல் மீது கருணாநிதிக்கு அவ் வளவு நம்பிக்கை! இப்போது அவரது இரட்டை வேடம் தாமாகவே கலைந்து விட்டது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் 2000 ஆம்
ஆண்டு ஏப்ரல் 28 இல் மத்திய அரசுக்கு அனுப்பி, அவற்றை குடியரசுத் தலைவ ருக்கு அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

மூன்று தமிழர் கருணை மனுக்கள் நிராகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், 2011 ஆகஸ்டு 12இல், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப் பட்டுவிட்டதாகக்கூறியது.இதனைத் தொடர்ந்து 2011 செப்டம்பர் 7 ஆம் தேதி மூவரையும் தூக்கிலிடு வதற்கான தேதியும் குறிக்கப்பட்டு,தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும். இருபது
ஆண்டுக் காலம் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்ட மூவரையும் விடு தலை செய்ய வேண்டும் என்று தமிழகம் கொந்தளித்து போராட்டங்கள் வெடித் தன. இளைஞர்களும்,மாணவர்களும் களத்தில் குதித்துப் போராடினர். ஒட்டு மொத்தத் தமிழகமும் மூன்று தமிழரின் உயிரைக் காக்க உணர்ச்சிகரமான போராட்டங்களை நடத்தியது.
அரசியல் சட்டம் பிரிவு 72 இன் கீழ் கருணை வழங்கும் அதிகாரம் உடைய குடி யரசுத் தலைவர் குறிப்பிட்ட ஒருவரின் கருணை மனுவை நிராகரித்த பிறகு, அரசியல் சட்டப் பிரிவு 161 இன்கீழ் கருணை வழங்கும் அதிகாரம் உடைய மாநில ஆளுநரால் அந்த நபருக்குக் கருணை வழங்க முடியாது.அப்படி வழங்கு வது அரசியல் சட்டப்பிரிவு 257(1)க்கு எதிரானது” என்று தெரிவித்திருந்தார்.
அரசியல் சட்டப் பிரிவு 257(1) கூறுவது என்ன?
அரசியல் சட்டப் பிரிவு 257(1) கூறுவது என்ன என்பதையும் காண்போம்;
(1) The executive power of every state shall be so excerised as not to impede or pre Judice the exercise of the executive power of the union, and the exceutive power of the union shall extend to the giving of such directions to a state as may appear to the Government of India to be necessary for that purpose.
மத்திய அரசு 1991, மார்ச் 5 இல் மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதம்தான்,
அரசியல் சட்டப் பிரிவு 257(1) ஐச் சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால்,மாநில ஆளுநர் ஏதும் செய்ய முடியாது என்று விளக்கம் அளிக்கிறதே தவிர,அரசியல் சட்டம் அல்ல. இத்தகைய விளக்கம் எதையும் இதுவரை உச்சநீதிமன்றமும் வழங்கியதில்லை.
அரசியல் சட்டப் பிரிவு 257(1) ஐச் சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால்,மாநில ஆளுநர் ஏதும் செய்ய முடியாது என்று விளக்கம் அளிக்கிறதே தவிர,அரசியல் சட்டம் அல்ல. இத்தகைய விளக்கம் எதையும் இதுவரை உச்சநீதிமன்றமும் வழங்கியதில்லை.
1991 மார்ச் 5 இல் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதம் நிர்வாகம்
தொடர்பான ஆணைதான் (directive).அது இந்தியத் தண்டனைச் சட்டம், குற்ற வியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டப் புத்தகங்களில் உள்ள சட்டத்தின் (Statute) தகுதியைக் கொண்டது அல்ல.
மத்திய அரசு 1991 மார்ச் 5 இல் இந்தக் கடிதம் அனுப்பியதற்கான பின்னணியைக் குறித்தும் ஆராய்வோம்.அதற்கு முன்பு இன்னொன்றைப் பார்ப்போம்.2011 ஆகஸ்டு 29 இல் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு மாறாக மறுநாள் ஆகஸ்டு 30 ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் ஒன்றை முதல்வர்
ஜெயலலிதா நிறைவேற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் நேரில் ஆஜராகி வாதாட,பிரபல சட்ட நிபுணரும், மத்திய அரசின்
முன்னாள் சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி அவர்களை தலைவர்
வைகோ அழைத்து வந்து, உயர்நீதி மன்றத்தில் வாதிடச் செய்தார்.2011 ஆகஸ்டு 30 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இராம்ஜெத் மலானியின் சட்ட நிபுணத்து வம் வாய்ந்த வாதம்தான் நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு மூன்று பேரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கக் காரணம் ஆயிற்று.
உயர்நீதிமன்றத்திற்கு வெளியில் உணர்ச்சிமயமாகத் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை கிடைத்ததைக் கேட்டு, கண்ணீர் மல்க வழக்கறிஞர் இராம் ஜெத்மலானிக்கு நன்றி கூற முற்பட்ட போது, “எனக்கு நன்றி கூறுவதைவிட,என்னை இங்கு அழைத்துவந்த என் நண்பர் வைகோவுக்கு நன்றி கூறுங்கள்” என்று தெரி
வித்தார்.
இனி என்ன செய்ய வேண்டும்?
தேவிந்தர் பால்சிங் புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குப்
பின்னர், தூக்குமர நிழலில் காத்திருக்கும் மூன்று தமிழரின் உயிரைக் காப்பாற்ற
தமிழக முதல்வர் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏப்ரல் 13 ஆம் தேதி கழகம் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெளிவுபடக் கூறப்பட்டு இருக்கின்றது.
2011 ஆகஸ்டு 29 ஆம் தேதி சட்ட மன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டிய 1991, மார்ச் 5 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம் தொடர்பான வழக்கு,இப்போது தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.
ஹரியானா தயாசிங் வழக்கு
இன்றைய பஞ்சாபும், ஹரியானாவும் ஒரே மாநிலமாக இருந்தபோது, பஞ்சாப்
மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் பிரதாப் சிங் கெய்ரோன். இவர் 1965 இல் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்ததாக ஹரியானா வைச் சேர்ந்த தயாசிங் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைதான தயாசிங் 1972 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக் கப்பட்டு இருந்தார். அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமர்வு நீதிமன்றம் 13.12.1978 இல் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. அத் தண்டனையை உயர்நீதிமன்றம் 22.03.1980 இல் உறுதி செய்தது.
அவரது மேல் முறையீட்டு மனு உச்சநீதி மன்றத்தால் 1980 ஆகஸ்டு 21 இல்
நிராகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கேட்ட விண்ணப்பமும் 1981 செப்டம்பர் 2 இல் தள்ளுபடி செய்யப்பட்டது. மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அவர் குடியரசுத் தலை வருக்கும் மாநில ஆளுநருக்கும் அனுப்பிய கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
தயாசிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு
அவரது சகோதரர் லால்சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
செய்தார். இதனால் 1986 இல் தயாசிங்கின் மரண தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அந்த ரிட் மனு மீது நடத்தப் பட்ட விசாரணைக்குப் பிறகு, 1988 அக்டோபர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் லால்சிங்கின் கோரிக்கையை நிராகரித்தது. 1988 நவம்பர் 18 இல் தயாசிங் மற்றொரு கருணை மனுவை ஹரியானா மாநில அரசுக்கு அனுப்பினார்.அதன் காரணமாக அவரது தூக்குத் தண்டனைக்கு மீண்டும் இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கருணைமனு மீதான முடிவை மாநில அரசு உடனடியாக எடுக்கவில்லை.
தயாசிங் வழக்கில் அக்கறை செலுத்தினார். அவரது தண்டனையைக் குறைப்ப தற்கு முயற்சி மேற்கொண்டார்.ஹரியானா மாநில ஆளுநரின் பரிசீலனைக்கு மீண்டும் சென்றது.
வேறொருவர் தாக்கல் செய்த கருணை மனு
கல்கத்தாவிலுள்ள அலிப்பூர் சிறைக் கைதி ஒருவர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தயாசிங்கை விடுதலை செய்ய
உத்திரவிடுமாறு உச்சநீதிமன்றத்துக்கு 1990 டிசம்பரில் கடிதம் எழுதினார்.அந்தக் கடிதத்தை உச்ச நீதிமன்றம் ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டது. 1991 மார்ச் 27 இல் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய, மாநில அரசு களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஒருவரது கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தபின் மாநில
ஆளுநரால் அந்தக் குறிப்பிட்ட நபர் அனுப்பிய மற்றொரு கருணை மனுவைப் பரிசீலிக்க முடியுமா? அந்தப் பரிசீலனையின் அடிப்படையில் கருணை வழங்க முடியுமா என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக உச்ச நீதி மன்றத்தில் ஹரியானா மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அலிப்பூர் சிறையில் இருந்த கைதி தன் சார்பாகக் கடிதம் எழுதியிருப்பதை அறிந்த தயா சிங், தனது வழக்கைத் தானே நடத்துவதற்கு முன் வந்ததால், மேற்சொன்ன ரிட் மனு அரசியல் சட்டப்பிரிவு 32 இன் கீழ் தயாசிங்காலேயே தாக்கல் செய்யப்பட்ட தாகக் கருதப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

தூக்குத் தண்டனையை ஆயுளாகக் குறைத்த உச்ச நீதிமன்றம்
1988 நவம்பர் 18 இல் மாநில ஆளுநருக்கு தாம் அனுப்பிய கருணை மனு மீது இரண்டு ஆண்டுக் காலம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டிய தயாசிங், காலதாமதம் ஏற்படுவது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகக் கூறி இருந்தார். அவரது ரிட் மனு மீதான விசாரணையின் போது தான் மத்திய அரசு அரசியல்சட்டப் பிரிவு 257(1) ஐச் சுட்டிக்காட்டி மாநில அரசு களுக்கு 1991 மார்ச் 5 இல் எழுதிய கடிதம் அரசாங்கத் தரப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் வைக்கப் பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற அமர்வு, அந்தக் கடிதம் குறித்து எந்தக் கருத்தும் கூற வில்லை. அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மாறாக, தயாசிங் 1988 இல் ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து அதில் முடிவு எடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் குறை கூறியது.
1986 இல் தயாசிங்கின் சகோதரர் லால்சிங் தாக்கல் செய்த மனுவில், தனது சகோதரருக்கு அளிக்கப்பட்ட மர ணதண்டனை நிறைவேற்றப் படாமல் நீண்ட காலம் அவர் ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுக்கு ஆளாகி,வந்ததைச் சுட்டிக் காட்டி அதன் அடிப்படையில் அவரது மரணதண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
1978 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டவரும், 1972 இல் இருந்தே சிறையிலி ருந்தவருமான தயாசிங்கின் சூழ்நிலைகள் முழுவதையும் கருத்தில் கொண்டே
லால்சிங்கின் ரிட் மனு நிராகரிக்கப் பட்டது என்றாலும், ஏற்கனவே ஏற்பட்ட
காலதாமதம், 1988 அக்டோபர் 11 இல் தயாசிங் மாநில ஆளுநருக்கு அனுப்பிய
இரண்டாவது கருணை மனு மீது முடிவு எடுக்கப்படாததால் ஏற்பட்ட கால தாம தம் ஆகியவற்றை ஒட்டுமொத்த மாக பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம்,தயா சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 1991 ஏப்ரல் 24 இல் ஆணை பிறப்பித்தது.

(DayaSingh V/s Union of India, 1991(3), SCC61)
தயாசிங் வழக்கின் வழிகாட்டுதல்
தயாசிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், மூன்று தமிழர்
வழக்கிற்காக சில வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவராலும், மாநில ஆளுநராலும் ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டாலும், அவர் மீண்டும் மாநில ஆளுநருக்குக் கருணை மனு செய்யலாம். ஆனால்,கருணை கேட்பதற்கான அடிப்படைகள்,சூழ்நிலைகள் முந்தைய கருணை மனுக்களில் சொல்லப்பட்டவையாக இருக்கக்கூடாது. அதேபோல, மரண தண்டனை விதிக் கப்பட்டவர்,அத்தண்டனையைக் குறைக்கும்படி அரசியல் சட்டப் பிரிவு 72 இன் கீழ் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டாலும்,வேறு காரணங்கள், மாறிய சூழ் நிலை கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை
அணுகலாம்.
எனினும் இரண்டாண்டுக் கால தாமதம் என்பதை மரண தண்டனை பெற்ற
எல்லோருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான பொதுவான அளவு
கோலாகக் கொள்ள முடியாது என்றும்,ஒவ்வொருவரது வழக்கிலும் அவருக்கே
உரிய காரணங்கள் மாறிய சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை வழங்குமென்றும் இவ்வழக்கில் உச்ச நீதி மன்ற அமர்வு கூறி உள்ளது.
ஆக, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு அடிப்படை யில், அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது.
எனவே, முதல்வர் ஜெயலலிதா, தூக்குக் கொட்டடியிலிருந்து மூவர் உயிரைக்
காப்பாற்ற உடனடியாக அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவந்து,மாநில ஆளுநருக்கு அனுப்பிட வேண்டும். இல்லையேல் “டெல்லி தேவதையின்” (?) பலி பீடத்திற்கு மூன்று தமிழரின் உயிரை காவு கொடுக்கத் துடிக்கும் மத்திய அரசின் முயற்சி வெற்றிபெற்று விடும்.
2011 ஆகஸ்டு 30 இல் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று தமி ழரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையும் தமிழக முதல்வருக்கு இருக்கின்றது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்,பிரதமர் மன்மோகன்சிங்கை ஏப்ரல் 15
ஆம் தேதி சந்தித்து தேவிந்தர் பால்சிங் புல்லரை தூக்கில் போடக்கூடாது
என்றும், அப்படி தூக்கிலிட்டால் பஞ்சாப் மாநிலம் கொந்தளிக்கும் என்றும்
எச்சரித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
நன்றிகள்
கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment