தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டமாக நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை 300 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
2-வது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். 3-வது கட்டமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து இன்று காலை நடைபயணத்தை தொடங்கினார்.
பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தும் சந்திப்பில் இருந்து பயணத்தை தொடங்கினார். அவருடன் மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார் (கோவை மாநகர்), குகன்மில் செந்தில் (கோவை புறநகர்), மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் இன்று தொடங்கும் நடைபயணம் வருகிற 28-ந்தேதி ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் முடிவடைகிறது. செல்லும் வழிநெடுகிலும் வைகோவும் தொண்டர்களும் மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகிக்கிறார்கள்

No comments:
Post a Comment