Tuesday, April 9, 2013

தேயிலை தொழிலாளர் தினக் கூலி உயர்த்து - மதிமுக

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ.300 வழங்கிட மதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் மாநில இளைஞரணிச்செயலாளர் வே.ஈஸ்வரன் பேசினார்.

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் மதிமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் வால்பாறை ஒன்றியச்செயலாளர் எஸ்.கல்யாணி தலைமை வகித்தார். அவைத் தலைவர் ஏ.டி.செல்வின், பொருளாளர் அம்பிகை சுப்பையா முன்னிலை வகித்தனர். இதில் மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் பேசியது:

தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ.300 வழங்கிட மதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வால்பாறை அரசு மருத்துவமனை மற்றும் எஸ்டேட் பகுதியில் நிர்வாகத் தினருக்குச் சொந்தமான மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் அவசரச் சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் பெரும் பாலானோர் உயிரிழக்கின்றனர்.

எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்கைத் தரம் உயராமல் இருப்பதால் பெரும் பாலானோர் இப்பகுதியை விட்டு வெளியேறி தற்போது வால்பாறை பகுதியில் சுமார் 75 ஆயிரம் பேர் மட்டும் வசிக்கின்றனர். இந்த நிலையை போக்க மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மணிவேந்தன், மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஈ.க.சி.பொன்னுசாமி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment