‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு’ என நெஞ்சிலே உறுதி கொண்டு தமிழர் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்களும் ஊர் ஊராக, வீதி வீதியாக நாட்டு மக்களைச் சந்தித்து வருகின்றனர். முதற் கட்ட மாக 12.12.2012-இல் உவரியில் நடைப்பயணம் எழுச்சியுடன் தொடங்கப் பட்டது. 25.12.2012-இல் கூடல் நகரில் நிறைவுற்றது.
2013 பிப்ரவரி காஞ்சியிலே தொடங்கி பிப்ரவரி 28-ல் மறைமலை நகரிலேயும், ஏப்ரல் 16-இல் பொள்ளாச்சியிலே தொடங்கி ஏப்ரல் 28-இல் ஈரோட்டிலும், ஜூன் 20-இல் விழுப்புரம் தொடங்கி ஜூன் 30-இல் கடலூரில் நிறைவடையும் வண் ணம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மது விலக்குப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்திட இருக்கிறார்.நாடெங்கும் நடை பெறும் நிகழ்ச்சியில் மதுவின் கொடுமைகளை விவரித்து ஒழித்தாக வேண்டி யது மது என்று ஓங்கி முழக்கமிட்டு வருகிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் மதுவிலக்குக் கருத்துகள் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைத் தொடர்ந்து தருகிறேன். முதலில் அதிக அளவில் இலக்கிய கர்த் தாக்களாலும், இலக்கிய விமர்சகர்களாலும் பேசப்படும் கம்ப இராமாயணத் தில் மதுவை ஒழிப்பது பற்றி கவிச் சக்கரவர்த்தி கம்பர் என்ன சொல்கிறார்?
திராட்சைக்குப் பெயர்போன பாரசீக நாட்டில் அதனைப் பதப்படுத்து வதற்காகப் பெரும் ஜாடிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த திராட்சைப் பழங்கள் அழுகி, புளித்து,காடி போன்ற திரவமாகிக் கசிந்தது. தீய சக்திகளால் விஷமாக மாறி விட்டதென்று கருதி அதை அப்புறப்படுத்தி விடுமாறு பாரசீக மன்னர் கட்டளை யிட்டார்.
இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்யும் எண்ணத்தில் ஒரு கிழவி விஷமென நினைத்துக் குடித்தார்; ஆனால் சாகவில்லை.உடலிலே ஏதோ ஒரு உற்சாகம்.
மயக்கம் தெளிந்தவள் அரசவைக்குச் சென்றாள்;நடந்ததைக் கூறினாள். அரச வையில் உள்ளவர்கள் ஜாடியில் இருந்த திரவத்தைக் குடித்துப் பார்த்து விட்டு
‘ஒயின்’ என்று பெயர் சூட்டினர். பாரசீக மொழியில் ஒயின் என்றால் மகிழ்ச்சி தரும் விஷம் என்று பொருள். விஷம் மகிழ்ச்சி தருமா? போதையில் வைத்த பெயர் அல்லவா!
இவ்வாறு தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட மதுவை,கி.மு.3500-இல் எகிப் தில் முதன்முதலாக திராட்சையிலிருந்து செயற்கையாகத்தயாரித்தார்கள்.
அதன்பின் பழங்கள், பால், தேன், அரிசி, பார்லி, ஓட்ஸ்,மரச்சாறுகள், பல உணவுப் பொருள்கள் இவைகளிலிருந்து மது தயாரிக்கப்பட்டது.ஸ்பிரிட் எனும் சாராயமும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈத்தேல் ஆல்கஹால், (எத்தனால்) மீத்தேல் ஆல்கஹால், பியூட்டைல் ஆல்க ஹால்,ஐஸோபிரேலைக் ஆல்கஹால் என நான்கு ஆல்கஹால் இருந்தாலும் மனிதன் பருகக் கூடாத ஆனால் குடித்துக் கொண்டிருப்பது ஈத்தேல் ஆல்க ஹால் மட்டுமே.
சரி! இந்த மதுவின் சனி பிடித்த சரித்திரம் நிற்கட்டும்.கவிச்சக்கரவர்த்தி கம்ப ரின் கூற்றைப் பார்ப்போம்!
இராமன் காட்டுக்குப் புறப்படும்போது பரதன் ஊரில் இல்லை; பாட்டன் வீட்டுக் குப்போயிருந்தான். இராமன் காட்டுக்குப் போன பின்புதான் அவன் அயோத் திக்கு வந்தான். தன் தாய் கைகேயியினால் விளைந்த விளைவை அறிந்து
வருந்தினான். அவனது உள்ளத்தை அறிந்திட கோசலை “கைகேயி செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா?”என்று கேட்டாள்.
உடனே பரதன் சொன்னான்:
“கைகேயி ஆற்றிய வஞ்சனையை நான் அறிந்திருப்பேனாயின் - நானும் அவ் வஞ்சனைக்கு உடந்தையாக இருந்திருப்பேனாயின் நான் மாபாதகன்;பெரும் பெரும் பாவங்களைப் புரிந்தவர்கள் அடையும் நரகத்தை அடைவேன்,” என்று ஆத்திரத்துடன் கூறினான் பரதன்.
அவன் அப்போது தொகுத்து உரைத்த பாவங்களில் மதுபானத்தையும் ஒரு பாவமாகச் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கம்ப ராமாயணம் - அயோத்தியா காண்டம்;பள்ளிப்படைப் படலம்; பாடல் எண்: 2211 (சென்னைக் கம்பன் கழகம் தந்த வரிசை எண்)
“கன்னியை அழிசெயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை
பொன்இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறுகதி என்னது ஆகவே”
(நறை = மது; பன்னி = பத்தினி)
‘கன்னியைக் கற்பழிக்க நினைத்தவன்; குருவின் மனைவியைக் கெட்ட எண் ணத்துடன் நோக்கியவன்; மதுவை அருந்தியவன், பொன்னைத் திருடிச் சேர்க் கும் இழிதொழிலிலே ஈடு பட்டவன்; இவர்கள் அடையும் கதியை நானும் அடை வேன் என்றான் பரதன்.
இதனால் மது குடிப்பது மகா பாவம் என்பது கம்பர் காட்டும் உண்மை.
கிட்கிந்தா காண்டம் - வாலி வதைப் படலம் - பாடல் எண்.4068
‘பூ இயல் நறவம் மாந்தி, புந்திவேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றும்’
மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட தேனை நுகர்ந்து அறிவு வேறுபட்டபோது அவ்வறிவு தீவினைகளைச் செய்யத் தூண்டும் என்று வாலியின் வாய்மொழி களால் மதுவின் தீமைகளைக் கம்பர் சுட்டிக் காட்டுகின்றார்.‘மதுவை உண் ணும் பழக்கம் உள்ளவன் சுக்ரீவன். அவன் மது அருந்தி மயங்கி கடமை மறந்து விட்டால் என் மீது செலுத்திய அம்பை அவன் மீது செலுத்தி விடாதே’ என்று
வாலி இராமனிடம் கேட்கும் பாடல் இது.
வாலியை வீழ்த்திய பிறகு, இராமனுக்கு உதவுவதாகச் சொன்ன சுக்ரீவன் மது அருந்தி மயங்கிக் கிடக்கிறான்; சொன்ன வார்த்தை தவறிய சுக்ரீவனைப் பார்த்து வரதம்பி இலக்குவனை அனுப்புகிறார் இராமர்.இலக்குவனது சீற்றத் தைத் தாரை தணிக்கிறாள்.இலக்குவனது சினம் தணிகிறது. மது அருந்தி மயங் கிய மோச நிலைக்கு வருந்திய சுக்ரீவன் மது பானத்தைக்கடிந்து வெறுத்த தாகக் கம்பன் காட்டுகிறான்.
கிட்கிந்தைப் படலம் - பாடல் எண். 4363
வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபுஇல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்,
கஞ்சமெல் அணங்கும் தீரும், கள்ளினால், அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே?
சுக்ரீவன் வாயினால் மதுவின் தீமைகளைச் சொல்லிக் காட்டிய கம்பன் சுக்ரீ வன் வாயினாலே இனி மது அருந்துவதில்லை; அதைக் கையாலும் தொடுவ தில்லை; கருத்தாலும் எண்ணுவதில்லை என்று உறுதிகூறும் பாடல் அதே காண்டம், அதே படலம் பாடல் எண். 4365.
அய்யநான் அஞ்சினேன் இந்நறவினின் அரியகேடு
கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
கம்பர் காலத்தில் மதுவிலக்கு நல் ஒழுக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது.
கம்பன் அறிந்திருந்ததால் காப்பியத்தில் அதனைப் புகுத்தினான்.
நாட்டில் அனைவரும் மதுவைக் கையாலும் தொடுவதில்லை; கருத்தாலும் எண்ணுவ தில்லை; கட்டாயம் குடிப்பதில்லை என்ற கொள்கையுடன் வாழும் நிலை வந்தே தீரும்!வருவதற்காக தினமும் ஓய்வறியாமல் உழைத்து வரும் உத்தமத் தலைவர் வைகோ காட்டும் வழியிலே தமிழகம் நடை போடட்டும்!
கட்டுரையாளர் :- செ.திவான்

மது முளைத்த மோச வரலாறு

அயோத்தியா காண்டம்

கிட்கிந்தா காண்டம்
கிட்கிந்தைப் படலம் - பாடல் எண். 4363
வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபுஇல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்,
கஞ்சமெல் அணங்கும் தீரும், கள்ளினால், அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே?
“வஞ்சகம் செய்யத் தூண்டும்; களவு செய்யத் தூண்டும்;பொய் உரைக்கத் தூண் டும்; மயக்கத்தை உண்டாக்கும்;முறையற்ற வழியிலே அறிவை அலையச் செய்யும்;சரணம் அடைந்தவரை உதைத்துத் தள்ளச் செய்யும்;நற்குணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்; செல்வமும் நீங்கி விடும். இத்தீமைகள் எல்லாம் மது பானத்தால் உண்டாகும்; கள்ளுண்டவர்களை அக்கள்ளில் உள்ள நஞ்சே கொன்று விடும்”
(பாடலுக்கு உரை: சாமி. சிதம்பரனார்)
சுக்ரீவன் வாயினால் மதுவின் தீமைகளைச் சொல்லிக் காட்டிய கம்பன் சுக்ரீ வன் வாயினாலே இனி மது அருந்துவதில்லை; அதைக் கையாலும் தொடுவ தில்லை; கருத்தாலும் எண்ணுவதில்லை என்று உறுதிகூறும் பாடல் அதே காண்டம், அதே படலம் பாடல் எண். 4365.
அய்யநான் அஞ்சினேன் இந்நறவினின் அரியகேடு
கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
கம்பர் காலத்தில் மதுவிலக்கு நல் ஒழுக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது.
கம்பன் அறிந்திருந்ததால் காப்பியத்தில் அதனைப் புகுத்தினான்.
நாட்டில் அனைவரும் மதுவைக் கையாலும் தொடுவதில்லை; கருத்தாலும் எண்ணுவ தில்லை; கட்டாயம் குடிப்பதில்லை என்ற கொள்கையுடன் வாழும் நிலை வந்தே தீரும்!வருவதற்காக தினமும் ஓய்வறியாமல் உழைத்து வரும் உத்தமத் தலைவர் வைகோ காட்டும் வழியிலே தமிழகம் நடை போடட்டும்!
நன்றிகள்
கட்டுரையாளர் :- செ.திவான்
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment