Sunday, April 28, 2013

வைகோவின் அறப்போர் வாகை சூடும்!


முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, பொள்ளாச்சியில் 16.04.2013 அன்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தொடங்கிய மூன் றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத்தை வாழ்த்தி, பேரூர் ஆதி னம் இளையபட்டம் மருதாசல அடிகளார் ஆற்றிய உரை:

முழுமையான மதுவிலக்கு கோரி,மூன்றாவது கட்ட நடைபயணத்தை,இந்தப் பொள்ளாச்சி நகரில் தொடங்குகின்ற, உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கின்ற பாராட்டுதலுக்கு உரிய ஐயா வைகோ அவர் களுக்கும், உங்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள் கின்றோம்.





மதுவின் கொடுமையைப் பற்றி, நமது இலக்கியங்கள் பேசிக்கொண்டே இருக் கின்றன. மக்களிடம் அதுகுறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக,
வைகோ அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

பதினென்கீழ்க்கணக்கு நூல்கள்,அதிலும் குறிப்பாகத் திருக்குறள், மதுவின் கொடுமையைப் பற்றி விரிவாகச் சொல்லுகிறது. வள்ளுவர் அதற்காகவே ஒரு அதிகாரத்தைத் தனியாக வகுத்து, மதுவின் கொடுமையை வரிசையாகப் பட்டியல் இட்டுச் சொல்லுகின்றார்.

12 திருமுறைகளுள் பத்தாவது திருமுறையாக இருக்கின்ற திருமந்திரத்தில் திருமூலரும், ஒரு தனி அதிகாரத்தை வகுத்து, மதுவின் கொடுமையை எடுத்துக் கூறி இருக்கின்றார். மது, அது ஒரு கழிநீர் என்கிறார். மலத்துக்கு இணையாக இருக்கக்கூடிய அந்த மதுவை நீ ஏன் உண்ணுகிறாய்? என்று கேட்கிறார்.

நாம் அரிசியைக் கழுவுகின்ற தண்ணீரைக் குடிக்கின்ற பசு, நமக்காகப் பால் தருகின்றது. ஆனால் அதே பசு, அந்தத் தண்ணீர் புளித்து விட்டால்,அதைக் குடிக்காமல் ஒதுக்கி விடுகிறதே, பசுவை விட ஒரு அறிவு கூடுதலாகக் கொண்டு இருக்கின்ற மனிதனாகிய நீ ஏன் இந்த மது என்னும் கழிவு நீரைப்
பருகுகிறாய்? என்று திருமூலர் கேட்கின்றார்.

எங்களுடைய சாந்தலிங்கப் பெருமான் அவர்களும் இந்தக் கருத்தை வலியு றுத்துவார்கள். அப்போது, ஒருவன், நாம் மது உண்பதற்காகவும்,புலால் உண் ணுவதற்காகவுமே பிறந்து இருக்கின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதை மறுத்துச் சொன்னார்கள். மது என்பது, மனிதனுடைய மதியினை மயக்கக் செய்வது; மனிதனை, மனித நிலையில் இருந்து மிருக நிலைக்குக் கொண்டு செல்வது என்று அவர்கள் சொன்னார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் மது ஒழிப்புப் போராட் டங்கள் இருந்தன. இன்றைக்கு மனித சமுதாயம் எவ்வளவோ முன்னேறிக் கொண்டு இருந்தாலும், மதுவால் மிகவும் பின்னோக்கிப் போய்க் கொண்டு இருக்கின்றோம்.

எவையெல்லாம் கூடாது என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்களோ,
அதையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து இருக்கின்றோம். உழைப்பாளர்கள்
எங்களுக்குச் சோர்வை நீக்குகிறது என்று சொல்லிக்கொண்டு குடிக்கத் தொடங்கினார்கள்; அது குடும்பத்துக்கு உள்ளே புகுந்தது; இன்று, பள்ளி கல்லூ ரிகளிலும் புகுந்து விட்ட கொடுமையை நாம் பார்க்கின்றோம்.பள்ளியில் இருந்த மேசை நாற்காலி களைத் திருடி விற்று மாணவர்கள் மது குடித்தார்கள் என்ற செய்தியைப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு இந்த மதுவின் கொடுமை இந்தச் சமூகத்தைக் கெடுக்கிறது என்று எண்ணி வேதனைப் படுகின்றோம்.

ஐந்து வகையான கேடுகளை நாம் நீக்க வேண்டும்; அதில் ஒன்றான மதுப் பழக் கத்துக்கு அடிமை யானால், மற்ற நான்கு கேடுகளும் தானாகவே வந்து நம் மிடம் ஒட்டிக் கொள்ளும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.இன்று நாம் செய்தித்தாள்களைக் கையில் எடுத்துப் பார்த்தால், மதுவின் கொடுமை கள்தாம் செய்திகளாக வருகின்றன. திருடுவதற்கு, கொலை செய்வதற்கு, வன் கொடுமைகள் செய்வதற்கு அனைத்துக்குமே அடிப்படையாக இருப்பது இந்த மது.

எத்தனையோ பேர் மதுவை ஒழிக்க வேண்டும் என்று எழுதினார்கள், பேசினார் கள். ஆனால், முடியவில்லை. ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தலைவர் வைகோ அவர்கள், மூன்றாவது கட்டமாக, இந்தக் கொங்கு நாட்டில் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றார்கள். பாண்டிய மண்டலத்தில் தொடங்கினார்கள்; தொண்டை மண்டலத்தில் தொடர்ந்தார்கள்;
இப்போது இந்தக் கொங்கு மண்டலத்தில் புறப்பட்டு அவர்கள் ஈரோடு போய்ச் சேருகின்ற வேளையில், அரசின் அறிவிப்பு வரக்கூடிய அளவுக்கு எழுச்சியை உருவாக்கும் என்று நாம் நம்புகின்றோம். (பலத்த கைதட்டல்)

இந்த மண்ணின் மைந்தரான சி. சுப்பிரமணியம் அவர்கள், கள்ளுக் கடையை எதிர்த்தார்கள். ஈரோட்டிலே தந்தை பெரியார் அவர்கள் மதுவை எதிர்த்துப் போராடினார்கள். அத்தகைய ஒரு சான்றோரது மண்ணில் தொடங்கி, மற் றொரு சான்றோர் மண்ணில் இந்தப் பயணத்தை வைகோ அவர்கள் நிறைவு
செய்கின்றார்கள். இந்தப் பயணம் மூன்று மாவட்டங் களைக் கடந்து செல்லு கின்றது. இந்தப் போராட்டம் உறுதியாக வெற்றி பெறும்.

இந்தக் கொங்கு மண்டலம் பல்வேறு வகையான போராட்டங்களுக்கு வித்து
இட்டு இருக்கின்றது. விடுதலைப் போராட்டத்தின்போது, முதன்முதலாக கள்ளுக்கடைப் போராட்டம் நடைபெற்றது இங்குதான். இப்போது இங்கே மீண் டும் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கான போராட்டத்தை ஐயா வைகோ அவர்கள் தொடங்கி இருக்கின்றார்கள்.

மூத்தவர் வாக்கும் முதுநெல்லிக் கனியும்

முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

என்று சொல்லுவார்கள்; அதுபோல, அவர் இந்தப் பயணத்தைத் தொடங்கிய
போது பலர் ஏளனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்களே பாராட்டிக்
கொண்டு இருக்கின்றார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அவர்கள் அன்றே போராடினார்கள்.இன்று செய்தித்தாள்கள் அந்த ஆலையால் மாசு ஏற்படுகின்றது எனக்கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அதுபோலத்தான், முல்லைப்பெரியாறு போராட் டம். அதைத்தொடக்கத்தில் ஒரு சிறிய பிரச்சினை யாகக் கருதினார்கள். ஆனால்,  வைகோ அவர்களுடைய பிரச்சாரத்துக்குப்பின்னர்தான், அதனால் பின்னர் நமக்கு ஏற்படக்கூடிய அவலங்கள் வெளியே தெரிந்தன, விழிப்பு உணர் வை ஏற்படுத்தின. அதே போலத்தான்,ஈழத்துக்காகவும் அவரது குரல் ஒலித் துக்கொண்டு இருக்கின்றது. தொடர்ந்து அவர் அதைப் பேசிக்கொண்டு இருந்த
போது, மற்றவர்கள் அதை எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்று மாணவர் கள் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, பள்ளி கல்லூரி களைப் புறக்கணித்து வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலையை உரு வாக்கி இருக்கின்றார்கள். அந்த ஊக்கத்தைத் தந்தவர் ஐயா அவர்கள்தாம்.

ஒரு போராட்டத்தை நடத்து கின்றவர்கள், பெரிய ஊர்களிலே நடத்து வார்கள். ஆனால் வைகோ அவர்கள் இந்தப் பயணத்துக்கான பாதையில்,பெரிய ஊர் களை எல்லாம் புறக்கணித்து விட்டு, கிராமங்கள் ஊடாகச் செல்லு கின்றார் கள். அதன் மூலம் மக்கள் இடையே இந்தப் பிரச்சினையை ஊடுருவிக் கொண்டு செல்லுகின்றார்கள்.

வைகோ அவர்கள் இரண்டு நடைப்பயணங்களை நடத்தியதற்குப் பிறகு, இன் றைக்கு தாய்மார்கள் எல்லாம் சாலைக்கு வரத் தொடங்கி விட்டார்கள். சாலை யின் மையமான இடத்தில் இருக்கின்ற மதுக்கடைகளை அகற்றுங்கள் என்று போராடத் தொடங்கி விட்டார்கள்.அதற்கெல்லாம் மூல வித்தாக, முதன்மை யாக இருக்கின்ற ஐயா அவர்கள் தொடங்கி இருக்கின்ற இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு, எல்லாம் வல்ல இறைவனின் திருவருளை இறைஞ்சு கின்றேன்.

மருதாசல அடிகளார் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment