Wednesday, April 24, 2013

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 1

ஒவ்வொரு தேசிய இனமும்,
தனித்தனி அரசுகளை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு;
அதுவே, தன்னாட்சி உரிமை; சுய நிர்ணய உரிமை!
இதுதான் உலக நியதி!

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார். 

அவரது உரை வருமாறு:

பல்லாயிரம் ஆண்டுகளான பழம் பெருமையும், உலகம் போற்றுகின்ற உயர்ந்த நாகரிகமும், வளையாத நீதிக்கு உரிய அரசும், தழைத்து ஓங்கிய சோழவள நாட் டில், தஞ்சைப் பெரு உடையார் இராஜராஜேச்சுரமாக உலகோரின் விழிகளை யும், கருத்தையும் ஈர்த்து இருக்கக்கூடிய இந்த மாநகரில்,200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புகழுக்கு உரிய தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில்  நடை பெறுகின்ற இந்தக் கருத்து அரங்கத்துக்குத் தலைமை ஏற்று இருக்கின்ற,தஞ்சை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அன்புக்குரிய வழக்கறிஞர் மதியழகன் அவர்களே,



ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்,வீரத்தை நிலைநாட்டிய பாஞ்சாலங் குறிச் சிக்குப் பக்கத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கிய விழாவில், கல்லூரி மாணவனாக உரை ஆற்றச் சென்ற என் நெஞ்சை ஈர்த்த மறக்க இயலாத உரை தந்த நாள் முதல்,பழகிடும் கேண்மையாலும, காட்டப்படு கின்ற பரிவினாலும் என் மனதில் உயர்ந்து நிற் கின்ற, மூத்த வழக்குரைஞர் அண்ணன் தஞ்சை இராமமூர்த்தி அவர்களே,

நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து,வரவேற்பு உரை நல்கிய தஞ்சை வழக்குரைஞர் சங்கத்தின் செயலாளர் வழக்குரைஞர் வடிவேல் அவர்களே,

முதிர்ந்த வயதிலும் மூத்த வழக்குரைஞராக இந்த நிகழ்ச்சிக்கு வந்து, என்னை யும் ஒரு பொருட்டாக மதித்துப் பாராட்டிப் பேசிய மூத்த வழக்குரைஞர் மதிப் பிற்குரிய பெருமாள் அவர்களே,

வழக்குரைஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர், உரை ஆற்றிய வழக்குரைஞர்
தீபக்குமார் அவர்களே,

நன்றி சொல்ல இருக்கின்ற, தஞ்சை வழக்குரைஞர் சங்கத்தின் இணைச்செயலா ளர் வழக்குரைஞர் கேசவன் அவர்களே,

மதிப்பிற்குரிய வழக்குரைஞர்களே,செய்தியாளர்களே, தொலைக் காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களே,

இந்தக் கற்று அறிந்தோர் சபையில் நடக்கின்ற கருத்து அரங்கத்தில்  உரை களைச் செவிமடுக்க வந்து இருக்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களே,

என் தலை தாழ்ந்த வணக்கம்.

நன்றி உணர்வோடு நான் உரையைத்தொடங்குகின்றேன். என்னை அறிமுகப்
படுத்தி உரை ஆற்றும்போது, “நான் தியாகச்சுடர் காமராசர் அவர்களைத் தலை வராக விளித்துப் பழக்கப்பட்டவன்;இன்று வைகோவையும் அதுபோல தலைவர் என்று விளிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று தஞ்சை இராமமூர்த்தி அவர் கள் கூறினார்.

அந்தச் சொல்லுக்குத்தகுதி உள்ளவனாக என்னை ஆக்கிக் கொள்ளுகின்ற விதத் தில், நான் தொடர்ந்து தன்னலம் இன்றித் தமிழ்நாட்டுக்கும், தமிழ்க் குலத்துக் கும், நான் பிறந்த புண்ணிய பூமியாகிய இந்தத் தமிழகத்துக்கும்,ஐம்பது ஆண்டு களாக நான் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற பொதுவாழ்வுக்கும்,நேர்மைமாறாமல்,
நாணயம் தவறாமல், கொள்கையில் உறுதி குறையாமல், இந்த உயிர்த்துடிப்பு
அடங்குகின்ற வரையில், நான் தொடர்ந்து உழைப்பதற்கு, உறுதி கொள்ளுவ தற்கு உரிய உந்துதலை,தஞ்சை வழக்குரைஞர் சங்கத்தில் தந்து இருக்கின்ற, மதிப்பிற்குரிய அண்ணன் தஞ்சை இராமமூர்த்தி அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துகள் பரிமாறப்படுகின்ற இடம்தான் வழக்குரைஞர் சங்கம். எதிரிலே
வழக்கறிஞர்கள் அமர்ந்து இருக்கின்றீர்கள்.எதிரும் புதிருமாக நீங்கள் நீதிமன் றங் களில் வாதங்களை எடுத்து வைக்கின்றீர்கள். கடந்த முறை நான் இதே அரங்கத்தில், இதே திடலில்,இதே நீதிமன்ற வளாகத்தில், சரித்திரம் சந்தித்த வழக்குகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது, விருப்பு வெறுப்பு அற்ற நிலை யில், காய்தல் உவத்தல் அகற்றி,நடுநிலையோடு தீர்ப்பு அளிக்கின்ற துலாக் கோல் நீதிமன்றங்களைப் பற்றிநான் சொன்னேன்.

இப்பொழுது நான் உங்களுக்கு முன்னால் ஒரு வழக்குரைஞன்.உங்களை நீதிபதி
களாகக் கருதி வாதிடுகின்றேன்.நீதிபதிகள், முன்கூட்டியே ஒரு கருத்தைத் தங்கள் மனதில் பதித்துக் கொள்வது இல்லை. வாதியின் தரப்பிலோ, பிரதிவாதி யின் தரப்பிலோ,இதுதான் சரி என்று முன்கூட்டியே முடிவுக்கு வராமல், எடுத்து வைக்கப்படுகின்ற வாதங்களின் அடிப்படையில்,எது தக்கது? எது தள்ளக் கூடி யது? எது நீதிக்கு வழி வகுப்பது? என்று முடிவு எடுப்பவர்கள்தாம் நீதிமான்கள். 

கருத்துகள் பரந்து இருந்த நாடு 

எனவே, இன்றைக்கு உலகத்தின் கோடானு கோடி மக்களின் இருதயங்களில் ஓங்கி எழுகின்ற ஒரு குரலை, உலகத்தின் எண்ணற்ற தேசிய இனங்கள் தங்கள் மீது பூட்டப்பட்ட அடிமை நுகத்தடிகளை உடைத்துக் கொண்டு, விடியலின் வெளிச் சத்துக்குஉள்ளே நுழைகின்ற ஒரு காரணத்தை,கற்று அறிந்தோர் சபை மூலம்,இதைப் பற்றி எதிர்கால இளந்தலைமுறை சிந்திக்க வேண்டும், மாண வர் உலகம்,வாலிபர் உலகம் இதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்கின்ற அர்ப்பணிப்பு நோக்கத்தோடு, இந்த எளியவன், இந்த மன்றத்தில் அதுபற்றிய கருத்துகளை முன்வைக்க விரும்புகின்றேன்.

இது கருத்துகள்பரந்து இருந்த நாடு. மலர்கள் பூக்கின்ற சோலைகள் இருந்தது
என்று இளங்கோ வருணித்தாரே,அப்படிப்பட்ட திருநாடு இந்தச் சோழ வளநாடு.
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், காவிரிப் பூம் பட்டினத்தையும், இந்தச் சோழ வளநாட்டையும் பற்றிக் குறிப்பிடுகின்ற பொழுது, ஆங்காங்கு கருத்துகளைச்சொல்லக்கூடிய நிலைமை இருந்தது என்று இந்திர விழாவைப் பற்றி வருணித்ததைப்போலவும், இயற்கை வளத்தைப் பற்றி யெல்லாம் சொன்ன பட்டினப்பாலையின் உருத்திரங்கண்ணனார்,

பல்கேள்வித் துறைபோகிய தொல் ஆணைநல்லாசிரியர்
உறழ்குறித்து எடுத்த உறுகெழு கொடியும்

கொடிகள் ஓங்கி உயர்ந்து இருந்தன என்று குறிப்பிடுகின்றார்.

அங்கே கொடிகள் உயர்த்தப்பட்டு இருந்தன. ஆனால், இங்கே இந்தப் பொது மன்றத்தில், இந்த நிகழ்வில், நான் சார்ந்து இருக்கின்ற அரசியல் இயக்கத்தின் கொடியைக் கட்டாதீர்கள் என்று, என் தோழர்களிடம் குறிப்பிட்டேன்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறு கின்றபொழுது, முரண் ஏற்படும்.அந்தந்தக் கருத்துகள் இங்கே வாதிடப் படுகின் றன என்பதைக் காட்டுவதற்காக,கொடிகள் உயர்த்தப்பட்டு இருக்குமாம்.இங்கே ஒரு கொடி பறக்கிறது; ஒரு விவாதம் நடக்கிறது. அங்கே ஒரு பதாகை காற் றிலே பறக்கிறது; அங்கே ஒரு விவாதம் நடக்கிறது என்று, ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்னரே கருத்துகள் பரிமாறப்பட்ட அரங்கங்கள் இருந்தன என்பத னால் தான், கம்பன் கோசல நாட்டை வருணிப்பதாக இருந்தாலும்,தான் பிறந்து தவழ்ந்து தமிழ் கற்றுக் காவியம் தீட்டிய இந்தச் சோழ மண்ணை,சோழத் திரு நாட்டை எண்ணிய வனாகவே கம்பன் காப்பியத்தைப் படைத்தான்.

இங்கே எப்படிப்பட்ட வாதங்கள் நடைபெற்றன என்பதைக் குறிப்பிடுகின்ற வகை யில்தான்,

மன்னர் தரு நிறை அளக்கும் மண்டபம் 
அன்ன மென்னடையவர் ஆடும் மண்டபம்
மன் அருந்திரு மறை ஓதும் மண்டபம்
பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்

என்று, பாலகாண்டத்தில் எழுதுகிறான்.

மனிதன் தொடக்க காலத்தில் காடுகளில் உலவியபோது, இயற்கையின் தாக்கு
தலுக்கு அஞ்சிக் குகைகளில் பதுங்கிய போது, விலங்குகளோடு போரிட்டபோது,
காலது கொண்டு மேலது தழுவி கையது கொண்டு மெய்யது போர்த்தித் தனித்
தனியாக வாழ்ந்த போது, தன்னைப்போன்ற உருவங்கொண்டவர்களை மனிதர் களாகக் கண்டு, பின்னர் தாக்க வருகின்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒரு கூட்டமாகச் சேர்ந்து அவற்றோடு போரிட்டு, அவர்களுக்கு இடையே உறவுகள் வளர்ந்து, தமது எண்ணங்களை வெளிப்படுத்த சைகை மூல மாக அவர்களுடைய உணர்வு களைப் பரிமாறி, அந்தச் சத்தத்தின் மூலமாகச் சொற்களைப் பகிர்ந்து வாழ்ந்தார்கள்.

இப்படிக் கூட்டமாகக் கூடி வாழுகின்றபொழுது, இன்னொரு பகுதியில் இருந்து
வேறொரு கூட்டம் வந்தால், அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தங்களுக் குள் வலிமை உள்ள ஒருவனைத்தலைவனாக ஆக்கிக்கொண்டு, அப்படிக் கூட் டம் கூட்டமாக உருவாகி உருவாகி,வாழ்வதற்கு, வசிப்பதற்கு வீடுகள் கட்டிக் கொண்டு, பாதுகாப்பதற்கு ஆயுதங்களைத் தாங்குகின்ற படை வீரர்களை அமைத்துக் கொண்டு, படிப்படியாக வளர்ந்து அரசுகளாக உயர்ந்து,அந்த அரசு களுக்குத் தலைவனாக மன்னன் ஒரு நிர்வாகத்தை அமைத்தான்.

மன்னன் மகன் மன்னனாக, அவர்கள் அமைத்த அரசுகள் பிற அரசுகளோடு மோதுகின்ற காலங்கள் வளர்ந்து,படிப்படியாக, பல நூற்றாண்டுகளாக, அதனு டைய வரப்புகளை உடைத்துக்கொண்டு, மனித குல வரலாற்றில் புதிய அரசுகள் எழுந்தன. அந்த அரசுகள்,மன்னர் ஆட்சிகளாக உருவாயின.

அந்தக் காலகட்டத்திலேயே மக்கள் தங்களுடைய தலைவனைத் தாங்களாகவே தேர்ந்து எடுத்துக்கொள்ளக்கூடிய, மக்கள் விரும்பும் கருத்தின்படிதான் ஒரு அரசன் அரசைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளக்கூடிய அரசு அமைத்து, யூப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் மிகப்புராதனமான நாகரிகம் சுமேரிய நாகரிக மாக மலர்ந்த மெசபடோமியாவில் உருவாயிற்று என்று நான் படித்து இருக் கின்றேன்.

பழந்தமிழர்களுக்கும், மெசபடோமியா வாழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு கள் உண்டு. எகிப்து,மெசபடோமியா, பழந்தமிழகம், சிந்து நதிக்கரை நாகரிகம் வரையிலும் தொடர்புகள் உண்டு. காலத்தின் அருமை கருதி, அதற்குள் விரி வாகச்செல்ல எனக்கு அவகாசம் இல்லை. அதைப்போலவே,கிரேக்கத்தின் நகர நாடுகள். அது ஸ்பார்ட்டா ஆகட்டும்,ஏதென்ஸ் ஆகட்டும், மக்களாகக் கூடி, அவர்களாகத் தங்கள் உரிமையின்படி, ஒரு தலைவனை, பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு, அந்த நகர நாடுகளின் நிர்வாக சபைகளை அமைத் துக் கொண்டார்கள்.

தேசிய இனத்தின் அடையாளம்

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான், காலப்போக்கில்,தங்களுக்குத் தாங்களே அரசுகளை அமைத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு தேசிய இனத்திற் கும் உரிமை உண்டு என்ற கோட்பாடு தோன்றியது.

ஒரு தேசிய இனம் என்பது என்ன?

வாழும் நிலம், பேசுகின்ற மொழி, பின்பற்றுகின்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, கடைப்பிடிக்கும் நாகரிகம்,அதனால் ஏற்பட்ட குருதி உறவுகள்,அவர்கள் அமைத் துக் கொண்ட அரசுகள், அந்தப் பகுதி மக்கள் ஒரு தேசிய இன மக்களாக அடை யாளம் காணப்பட்டனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,மாமேதை லெனின் அவர்கள்,1914ஆம் ஆண்டு, தன்னாட்சி உரிமையை, சுய நிர்ணய உரிமையைப் பற்றிக் குறிப் பிட் டார். நான் இங்கே பேசுவதற்கு, சுய நிர்ணய உரிமையும், பொது உரிமையும், பொது வாக்கெடுப்பும் வாக்கெடுப்பும் என்ற தலைப்பைத்தேர்ந்து எடுத்ததற்குக் காரணம், இன்றைக்கு உலகம் அதைப்பற்றிப் பரவலாக விவாதிக்கின்றது.

இந்தப் புவியில் வாழக்கூடிய பல்வேறு தேசிய இன மக்கள்,அந்த உரிமையின் அடிப்படையில் தங்களுக்கு அரசுகளைஅமைத்துக் கொண்டு, புதிய புதிய நாடு கள், நாளும் இந்த உலகப் பூந்தோட்டத்தில் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.
அந்த அடிப்படையில்தான் லெனின் சொன்னார்: “மக்கள் தங்களுக்குத் தாங் களே ஒரு அரசை அமைத்துக் கொள்வதுதான், சுய நிர்ணய உரிமை.”

இந்தத் திட்டவட்டமான கருத்தைத் தம் வாழ்நாள் நெடுகிலும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் வலியுறுத்தி வந்தார்.அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.கருத்து மறுப்பு உரைகள் வந்தன. லெனின் கருத்தை ஏற்காதவர்களும்உண்டு. ஆனால், கால ஓட்டத்தில், ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடந்து பார்க்கிறோம்; இது 2013.
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு லெனின் கூறியது,அந்தச் சோவியத்து மண்ணிலேயே நிறைவேறி விட்டது.தொலைநோக்கோடு அவர் அந்தக் கருத் தைச் சொன்னார்.

இங்கே மதியழகன் குறிப்பிட்டதைப் போல, 1918 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட் டின் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், பிப்ரவரி 11ஆம் நாள், அவர் இன்னும்
திட்டவட்டமாகச் சொன்னார்:

People are governed only by their consent. மக்கள், தங்கள் விருப்பப்படிதான் அவர்களு டைய ஆட்சியை அமைத்துக் கொள்ளுகிறார்கள். That is the right of selfdetermination.. அதுதான் தன்னாட்சி உரிமை It is not mere a a phrase;. ; இது வெறும் சொற்றொடர் அல்ல;

It is a compulsory imperative இது, கட்டாயமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய ஒன்று என்று உட்ரோ வில்சன் அறிவித்தார்.

அடுத்து,League of Nations; உலக நாடுகள் மன்றம் வருகிறது. அடுத்து, ஐக்கிய நாடு கள் சபை அமைகின்றது. 1945 இல், இதைப்பற்றிய விவாதம் எழுகிறது. சுய நிர் ணய உரிமை Their fundamental right to decide their own destinyஒவ்வொரு தேசிய இன மக்களும்,அவர்களது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளுதல்.

நமது தஞ்சை இராமமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டதைப்போல, 1948 ஆம் ஆண்டு,
டிசம்பர்10 ஆம் நாள், மனித உரிமைகள் பிரகடனம் (Human Rights Declaration) செய் யப்பட்டன. அந்தப் பிரகடனத்தின் 15 ஆவது பிரிவு: All the people shall have the right of self-determination என்று குறிப்பிடுகின்றது.

அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1941 இல், இரண்டாம் உலகப் பெரும் போர் நடைபெற்றுக்கொண்டு இருந்தபொழுது, அதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாத காலத்தில், எந்த பிரித்தானிய அரசின் ஆளுமையை உடைத்துக் கொண்டு அமெரிக்கா வெளியேறியதோ, சுய நிர்ணய உரிமையை ஃபிலடெல்பி யாவில் பிரகடனம் செய்ததோ,அதனுடைய குடியரசுத் தலைவர் ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்டும், பிரித்தானியப் பிரதமர்வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களும்,திட்ட வட்டமாக அவர்கள் அறிவித்த அட்லாண்டிக் பிரகடனத்தில் (Atlantic Charter) மூன்றாவது பிரகடனம், சுய நிர்ணய உரிமை (Right of self-determination). அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.

அதேவேளையில், அவர்களுக்கு எதிராக, இந்த பூபாகத்தின் மற்றொரு பாகத் தில் இருந்து,ரஷ்யாவில் இருந்து லெனின் கூறினார்: சுய நிர்ணய உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்று.

ஐ.நா. மன்றத்தில் பொதுச்சபை தீர்மானம்,1514 ஆம் எண் தீர்மானம்,சுய நிர்ணய
உரிமையைப் பிரகடனம் செய்கின்ற தீர்மானம்.

அதே தீர்மானம், 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள், 2200 ஆவது தீர்மான மாக முன்வைக்கப்பட்டது.International Covenant on Civil and Political Rights..

அதுபோலத்தான், சமூக,பொருளாதார அரசியல் உரிமைகளின் அனைத்து உலக
ஒப்பந்தமாக, International Covenant on Cultural Social Economic Rights கலாச்சார, பொருளா தார, சமூக உரிமைகளாக, இது 1916 டிசம்பர் 16 இல் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தம். 1976 ஆம் ஆண்டு, மே மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

அப்போது, அதில் பங்கு ஏற்றுக்கொண்ட நாடுகள் 167. இந்தியாவும், இலங்கை யும் பங்கு ஏற்றன. ஆனால், அவற்றுள் 76 நாடுகள் மட்டுமே, அதில் கையெ ழுத்து இட்டன. அதில்தான், சுய நிர்ணய உரிமை பிரகடனம் செய்யப்பட்டது.
எனவே, ஐ.நா. மன்றத்தின் அனைத்து உலக ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. All the People have the right of self-determination.

இந்த ஒப்பந்தத்தில், இந்தியாவும்,இலங்கையும் கையொப்பம் இடவில்லை.

இந்த உரிமைகளை, தங்கள் சட்டப் புத்தகத்திலேயே கொண்டு வர எந்தெந்த
நாடுகள் முன்வந்தன என்பதை, இந்த வழக்குரைஞர் மன்றத்தில் எடுத்து
உரைக்க விரும்புகின்றேன்.

“மாகாளி கடைக்கண் வைத்தாள்;ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என் றானே கவிஞன் பாரதி, அந்த போல்ஷ்விக் புரட்சி எழுந்ததற்குப் பிறகு,1918 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. அதில், சோவியத் கூட்டு ஆட்சிக் குடியரசு, ( Union of Soviet Socialist Republics) மொத்தம் 90 பிரிவுகள்.அதில், 49 ஆவது பிரிவாக,Every State have the right to secede...பிரிந்து செல் லக் கூடிய உரிமை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் உண்டு.

இதற்கு ஏறத்தாழ 18 ஆண்டுகள் கழித்து,சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டம் மறு வரையறை செய்யப்பட்டது. சில பிரிவுகள் நீக்கப்பட்டன. அப்படி, 1936 ஆம் ஆண்டு மறு வரையறை செய்யப் பட்ட புதிய அரசியல் சட்டத்தில்,
முந்தைய 49 ஆவது பிரிவு, இப்போது 17 ஆவது பிரிவாக இடம் பெற்றது. ஒவ் வொரு மாநிலமும் பிரிந்து செல்லக்கூடிய உரிமையை மீண்டும் உறுதிப்படுத் தியது.

லெனின் மறைவுக்குப் பிறகு, அவருடைய இறுதிச் சடங்கில் பங்கு ஏற்க வேண் டிய லியன் ட்ராட்ஸ்கி விளாடிவாஸ்டாக்கில் இருக்கின்றான். நீ வருவதற்குள் இறுதிச்சடங்குகள் முடிந்து விடும் என்று தகவல் வருகிறது. அவர், வெளிநாட்டு
அமைச்சர். ஆனால், இறுதிச் சடங்குகள் பின்னரே நடைபெற்றன. நிலைமைகள்
மாறின. ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஆனார்.சோவியத்
ஒன்றியத்துக்கு உள்ளே, ஜார்ஜியாவும்,உக்ரைனும் ஒடுக்கப்பட்டன.அந்த
மாநிலங் களுடைய உரிமைகள் நசுக்கப் பட்டன.

இதயக் கதவுகளைத் தட்டுகிறேன்

என் உரையின் பிற்பகுதியில், என் வாதங்களுக்கு வலுச் சேர்ப்பதற்காக, நடை பெற்ற நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் முன் வைக்கின்றேன். மதிப்பு மிக்க வழக்குரைஞர்களே, உங்கள் அன்பான இருதயத்தின் மென்மை யான கதவுகளை, நான் என்னுடைய சன்னமான சொற்களால் தட்டுகிறேன்.

எதிர்காலத்தில், இளைய தலைமுறையினர் என்றாவது ஒருநாள், மாணவர்
சமுதாயம், இந்த இனத்தினுடைய குரலை அவர்கள் பரிசீலிக்கின்ற வேளை யில், அடியேனின் உரையையும் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற் காக, அந்த உணர்வோடுதான் இந்த நேரத்தை நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றேன். அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, குமுறிக் கொண்டு இருக்கின்ற என்னுடைய இருதயத்தின் வேதனைகளை, என் நெஞ்சில் எழு கின்ற சில துயர ஓலங்களை, இந்த வழக்கறிஞர் சங்கத்தின் வாயிலாக, நான் உயிரினும் மேலாகப் போற்றுகின்ற இந்தப் புண்ணிய மண்ணிலே நான் பதிவு செய்கிறேன்.

நமக்கு அருகிலே இருக்கின்றது, பரந்து பட்ட நிலப்பரப்பைக் கொண்டு இருக் கின்ற செஞ்சீனம். இன்றைக்கு உலகச் சந்தையில் அனைவரையும் வீழ்த்தி முதல் இடத்துக்கு வரத் துடித்துக் கொண்டு இருக்கின்றது. அங்கே,எண்ணற்ற மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர்.எண்ணற்ற தேசிய இனங்கள் உள்ளன. அவை குவிந்து கிடந்த காரணத்தால்,பாட்டாளித்தோழர்களை மாவோ ஒன்றாக அணி திரட்டிக் கொண்டு இருந்த காலத்தில்,ஆயுதம் ஏந்திக் கொண்டு இருந்த
நாள்களில், நடந்தே மக்களைச் சந்தித்துக்கொண்டு இருந்த வேளை களில், கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றுக் கொண்டு இருந்த காலத்தில், அவர்களது
தலைக்கு விலை வைக்கப்பட்டு இருந்த காலத்தில், கோமிண்டாங் கட்சி அரசின்
கை ஓங்கி இருந்த காலத்தில், செஞ்சீனத்துக்காக அரசியல் சட்டத்தைக் கம்யூ னிஸ்டுகள் வகுக்கின்ற வேளை யில், “நாங்கள் அமைக்கின்ற அரசில்,எந்த ஒரு இனமும், எந்த ஒரு மாநிலமும் பிரிந்து செல்லக்கூடிய உரிமையைக் கொடுப் போம்” என்று 1931 ஆம் ஆண்டு வரையறுத்து வெளியிட்டார்கள்.

மாவோவின் செம்படை வெற்றி பெற்று, 1949 இல், பீகிங் அரச மாளிகையில்,
செங்கொடியை உயர்த்தியபொழுது,அங்கே எவரும் உரிமைக்குரல் எழுப்ப முடி யாத நிலை எழுந்தது.

1982 ஆம் ஆண்டு,அதே சீன தேசம்,அரசியல் சட்டத்தை மறு வரையறை செய்து, எந்த ஒரு மாநிலமும் எந்த ஒரு இனமும் பிரிந்து செல்லலாம் என்ற அந்தச் சட் டத்தை, அடியோடு நீக்கியது. இனி அதுபற்றிப் பேசவே கூடாது என்றது.

இதோ பக்கத்தில் இருக்கின்றது மியான்மர் (பர்மா). அங்கே ஆங் சான் கொல்லப் பட்டதற்குப் பிறகு, படைத்தலைவர்களின் பிடிக்குள் நாடு சிக்கியது.ஆங் சானின் அருமை மகள், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுக் கிடந்தார்.அந்த பர்மாவில், 1947 இல் அமைக்கப் பட்ட அரசியல் சட்டத் தில், பர்மாவில் உள்ள எந்த மாநிலமும் தனியாகப் பிரிந்து செல்லுகின்ற உரிமை உண்டு என்று வகுத்தார்கள். ஆனால், 1974 இல், அந்த உரிமையை எவரும் கடைப்பிடிக்க அனுமதிக்காத பர்மிய இராணுவ ஆட்சி,அரசியல் சட்டத் தில் இருந்து அந்தப் பிரிவை அகற்றியது.


தேசத்துரோகக் குற்றச்சாட்டு

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும்,இறையாண்மைக்கும் எதிராக எவரும் பேசினால், அது தேசத்துரோகம் என்று அவர்கள் மீது நடவடிக்கை பாயும் நிலையில், 124 ஏ பிரிவு என்கிற ஆயுதம் பாயும் என்ற நிலையில், தேசத் துரோகக் குற்றச் சாட் டுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில், இங்கே குறிப்பிட்டார்களே அதுபோல, அப்படிப் பேசியதற்காக,ஈழத்தில் நடப்பது என்ன? என்று,சென்னை உயர்நீதி மன்ற வளாகத்துக்கு அருகிலே இருக்கக்கூடிய, கல்விக்கும் இசைக்கும் பெருந் தொண்டு புரிந்த அண்ணாமலை அரசர் குடும்பத்தினர் அமைத்துத் தந்து இருக் கக்கூடிய அண்ணாமலை மன்றத்தில் பேசிய தற்காக, என் மீது தேசத்துரோகக்
குற்றச்சாட்டு பதிவு செய்து, குற்றப்பத் திரிகையும் தாக்கல் செய்து விட்டனர்.
நான் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கின்றேன். ஆனால், நான் கூறிய கருத்தை மறுக்கப் போவது இல்லை.நீதிமன்றத்தில் நான் நிறுத்தப்பட்டால்,நானே குறுக்கு விசாரணை செய்வேன்.நான் பேசியது தவறு என்று தண்டிக்கப்பட்டால், இந்த வைகோ மனமகிழ்ச்சி யோடு அந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்வேனே தவிர, அப்படி நான் பேசவில்லை என்றோ, நான் பேசிய கருத்து தவறுதான் என்றோ, அதை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்றோ கூறப்போவது இல்லை. (பலத்த கைதட்டல்).

இந்த 124 ஏ பிரிவு எப்போது வந்தது?

1806 ஆம் ஆண்டு உதித்தது இந்தத் தஞ்சை வழக்குரைஞர் மன்றம் என்று வடி வேல் கூறினாரே, மெக்காலே தயாரித்துக் கொடுத்து, 1870 வரையிலே நடை முறை யில் இருந்த சட்டத்தில்,இந்தத் தேசத்துரோகம், sedition என்ற பிரிவு கிடையாது.

அதற்குப் பிறகுதான், நாட்டுக்குத் துரோகம், தேசத்துரோகம் என்ற பிரிவு வரு கிறது.

வங்கக் கடல் அலைகளில் எங்கள்  கரிகாலன் கலம் செலுத்தினான்; எங்கள்
ராஜராஜன், புலிக்கொடி பறந்த கடற் படையை, கீழை நாடுகளுக்கு எல்லாம்
கொண்டு சென்று வெற்றிக்கொடி நாட்டினான். பல தீவுகளை வென்றான். அங் கெல்லாம் எங்கள் கொடி, புலிக்கொடியாகப் பறந்தது. அந்த அலை கடலில், தமிழர்களின் நாவாய்கள்,கிரேக்கத்துக்கும், ரோமாபுரிக்கும்,எகிப்து, மெசபடோ மியாவுக்கும் சென்று வந்த பண்டைய நாள்களை நினைவூட்டுகின்ற வகையில், அலைகடலை அடக்கி ஆள்வது பிரித்தானியம், , Britania rules the waves; Britons never shall be slaves என்றதற்கு அறைகூவல் விடுகின்ற வகையில், இந்தியத் துணைக்
கண்டத்தில், கரிகாலன் வழிவந்த நான் கலம் செலுத்துகிறேன் என்றார் ஒட்டப்
பிடாரத்து வீர சிதம்பரம். 

அவருக்கு மரக்கலம் வாங்கிக் கொடுக்க,மும்பை நகரத்தில் உதவியாக இருந்து,
அந்தக் கப்பல் அங்கிருந்து பயணிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தாரே லோக மான்ய பால கங்காதர திலகர்,சுயராஜ்யம் எனது பிறப்பு உரிமை என்று முழங் கினாரே, அவர் மீது, இந்த 124 ஏ பிரிவு பாய்ந்தது.

திலகருக்காக வாதாடிய ஜின்னா

திலகர் ஒரு தலைசிறந்த வழக்குரைஞர்அவருக்காக வாதாடியவர் முகமது அலி
ஜின்னா. அந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டார்.அதை எதிர்த்து மேல் முறை யீடு செய்தார். லண்டன் பிரிவியு கவுன்சிலுக்குப் போனார். அங்கும் தண்டிக்கப் பட்டார். பர்மாவின் மாண்டலே சிறையில், ஆறு ஆண்டுகள் இருந்தார். அங்கே தான் இரண்டரை ஆண்டுகள் நேதாஜியும் இருந்தார். ஆறு ஆண்டுகள் அங்கே சித்திரவதை அனுபவித்து இருக்கின்றார் திலகர். அவர் எழுதிய ஒரு நூல்தான் கீதா ரகசியம். அது,அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால்,அந்த மாண்டலே சிறை யில் பட்ட துன்பங்களைப் பற்றி இன்னொரு நூலில்,அங்கே ஏற்பட்ட துன்பங் களை அவர் விவரித்து இருப்பதைப் படித்தால், நம் இருதயத்தில் குருதி கொட் டும். அதை நான் உணர்ந்து இருக்கின்றேன். அவர் மீது பாய்ந்தது இந்த 124 ஏ பிரிவு.

ஆனால், நாட்டைத் துண்டாட விரும்பு கிறார்கள் என்றோ, இறையாண்மைக்கு
ஆபத்து வருகிறது என்றோ, அந்த அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் படவில்லை. இதுதான் முக்கியம்.இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பது குற்றம் என்று சட்டப்படி அந்த நிலை எடுக்கப்பட வில்லை.

இந்தக் கட்டத்தில், 1950 ஆம் ஆண்டு,இந்திய அரசியல் சட்டம் அரங்கேறுகிறது.
அதற்கான முன்வரைவிலே (Drafts),அடிப்படை உரிமைகள் 13 (2) என்ற பிரிவில், பொது அமைதி ( ( Public order), அதற்குக் குந்தகம் விளைவித்தால், அது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தாது; அது பேச்சு உரிமை என்ற எல்லைக்குள் வராது என்ற கட்டுப்பாடு வராத காலம்.

மார்ச் மாதம். ரமேஷ் தாப்பர் என்பவர்,மும்பையில் இருந்து நடத்துகின்ற ஒரு
ஆங்கில ஏடு கிராஸ்ரோட்ஸ் கிராஸ்ரோட்ஸ் (Crossroads). குறுக்குச்சாலை
நான் தஞ்சையில் இருக்கின்றேன்.இங்கிருந்து நான் மயிலாடுதுறைக்குச் செல் வதா? அல்லது வேதாரண்யத்துக்குச் செல்வதா?அல்லது திருச்சிக்குச்செல்வதா? அல்லது பட்டுக்கோட்டைக்குப் போவதா? புதுக்கோட்டைக்குச் செல்வதா?எப் பக்கம் செல்வது? எந்தத் திசையில் செல்வது? என்று தெரியாமல், திக்குத் தெரி யாமல் ஒரு இடத்தில் நின்று கொண்டு திகைத்து நிற்பதைத்தான் ஆங்கிலத்தில் we are at crossroads என்பார்கள். அது ஒரு நாற்சந்தி.

அந்தத் தலைப்பில் ஒரு வார ஏடு வந்து கொண்டு இருந்தது. அப்போது,சென்னை மாகாண பொது அமைதி ஒழுங்கு பாதுகாப்பு என்ற சட்டத்தின் ஒழுங்கு பாது காப்பு படி, (Madras Public Order Maintenance Act) இந்த ஏடு, சென்னை மாகாணத்துக்கு உள்ளே வரக்கூடாதுஎன்று தடை செய்யப்பட்டது. ஆம்,சென்னைதான் இதற்கு அடிப்படை.

அதே காலகட்டத்தில், டெல்லியில், பூரே பூஷண் என்பவருடைய பத்திரிகை,
கிழக்குப் பஞ்சாப் சட்டத்தின் அடிப்படையில், டெல்லிக்கு உள்ளே நுழையக் கூடாது என்று தடை செய்யப்பட்டது.

சென்னை மாகாணத்தின் இந்தச் சட்டம்,எழுத்து உரிமைக்குத் தடை விதிப்பதை
எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தலைமை நீதிபதி கன்னா, புகழ் பெற்ற நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, புகழ்மிக்க நீதிபதி பசல் அலி,மகாஜன்,முகர்ஜி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்விலே விசாரிக்கப் படுகிறது.

பதஞ்சலி சாஸ்திரி பிரதானமாக எழுதுகிறார்.அந்தக் கருத்தைத்தான்,தலைமை நீதிபதி உட்பட பசல் அலி தவிர மற்றவர்கள் அனைவருமே ஏற்கிறார்கள். அதன் படி,

“கருத்துகளைச் சொல்லுவதற்கு உரிமை உண்டு; பொது அமைதி என்று கூறி, கருத்துச் சொல்லுவதைக் கட்டுப்படுத்த முடியாது.ஏனென்றால் அரசு அமைப்புச் சட்டத்தை வகுக்கின்ற பொழுது, அதை உருவாக்கிக் கொடுத்த மாமேதை பாபா
சாகேப் அண்ணல் அம்பேத்கர், அவர் உட்பட எவரும், வரைவில் இருந்த 13 (2)
பிரிவை ஏற்கவில்லை. பொது அமைதி என்பது இங்கே கிடையாது. இந்தப்பொது
அமைதிக்கு,ஒழுங்குக்கு ஆபத்து நேரும் என்று கருதி,பேச்சு உரிமையை,கருத்து
உரிமையைத் தடுக்க முடியாது. எனவே,இது அடிப்படை உரிமைகளின் (Funda mental Rights) கீழ் வரவில்லை”என்று அவர்கள் அறிவித்ததன் விளைவாக, சென்னை மாகாணத்தின் பத்திரிகைத் தடைச்சட்டம் செல்லாது என்று அவர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டார்கள்.

ஆனால், நீதிபதி பசல் அலி மட்டும் அதற்கு மாறாக, பொது அமைதிக்கு ஒழுங் குக்கு ஊறுநேர்ந்தால், அது அடிப்படை உரிமை என்று அனுமதிக்கக்கூடாது; இது நாட்டுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியது என்று தீர்ப்பு எழுதினார்.

1951 இல் முதலாவது அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. அதில்
19 ஆவது பிரிவு, அடிப்படை உரிமை;பேச்சு உரிமை, கருத்து உரிமை. அதன் 2
ஆவது உட்பிரிவில், பொது அமைதிக்கு ஊறு நேர்ந்தால், சட்டப்படி அது குற்ற மாகத்தான் கருதப்படும் என்ற விதத்தில், முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தைக் கொண்டு வந்தார்கள்.

நாள்கள் சென்றன. திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கை வலுத்தது. காரணம், அன்றைய சென்னை மாகாணத்துக்கு உள்ளே, கர்நாடகத்தின் பகுதி கள் இருந்தன; ஆந்திரத்தின் பகுதிகள் இருந்தன; கேரளத்தின் பகுதிகள் இருந் தன. உலகத்தின் தொன்மைத் தமிழ் மொழியின் உதிரத்தில் இருந்துதான், இந்த
மொழிகள் உதித்து எழுந்தன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கூறியது
மட்டும் அல்ல, மேற்கு நாடுகளின் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் படி அது நிறுவப்பட்டது.

அந்த அடிப்படையில் தந்தை பெரியார் எழுப்பிய குரல், தமிழ்நாடு தமிழருக்கே;
தனித்தமிழ்நாடு என்ற குரலை, 1937 இல் வைத்து இருந்தாலும், இந்தத் திராவிட
நாடு என்ற தனிநாட்டுக் கோரிக்கையை அவர்கள் வைத்த காலகட்டத்தில், இந்தக் குரலை எப்படி அடக்குவது என்று கருதிய தில்லி அரசு, 1961 ஆம் ஆண்டு,
இந்தியக் குற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது (ஊசiஅiயேட ஹஉவ
ஹஅநஅநனேஅநவே) .அதன்படி, தனிநாடு கோரிக்கையைத் தடுப்பதற்கு,பொது
அமைதிக்கு ஒழுங்குக்குக் கேடு நேருகின்ற கருத்தைத் தடுப்பதற்கு,மாநிலங்கள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று கொண்டு வந்தார்கள்.அத்தோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. 1963 பிறந்தது.அரசியல் சட்டத்துக்கு 6 ஆவது திருத் தத்தைக் கொண்டு வந்தார்கள்.இதில்,அடிப்படை உரிமைகள் பிரிவான 19 ஆவது பிரிவின், 2,3,4 ஆகிய உட்பிரிவுகளில், Sovereignty and integrity என்ற சொற்களைச்
சேர்த்தார்கள்.

மாநிலங்களவையில் அண்ணா

அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக் கின்றது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமை ஒருமைப் பாட் டுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பேசுவதற்கு,பேச்சு உரிமைகளில் இடம் இல்லை.Reasonable restrictsions என்ற வரையறைக்குள் இது வந்து விடும்.இதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று திருத்தம் கொண்டு வந்தார்கள்.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது.கருத்துப் பரிமாற்றங் கள் நிகழ்ந்தன. அப்போது,பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினர். ஜனவரி 25 ஆம் நாள் சபை கூடுகிறது. எந்த அன்னைத் தமிழ் மொழிக்காக, இதோ அருகிலே இருக்கக்கூடிய மலைக்கோட்டைத் திருநகராம் திருச்சி ராப் பள்ளியில், கீழப்பழுவூர் சின்னச்சாமி, தணலின் நாக்குகளுக்குத் தன் உயிரைத் தாரை வார்த்துக் கொடுத்தானோ, அதே ஜனவரி 25 ஆம் நாளில்; 1963 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் பேசுகிறார். அவையின் துணைத் தலைவரான சகோதரி மார்கரெட் அமர்ந்து இருக்கின்றார்.

அறிவுக்கடல் அல்லவா அண்ணா ? ஆகாயம் போன்ற அவரது சிந்தனை ஓட்டத் தை நான் அந்த உரையில் பார்க்கிறேன். அதில் முதல் வாக்கியத்தை மட்டும் நான் இந்த மன்றத்தில் வைக்கிறேன். இதே தஞ்சை வழக்குரைஞர் மன்றத்தில், 1966 ஆம் ஆண்டு, அண்ணா வந்து பேசி இருக்கின்றார். அவர் உருவாக்கிய பாச றையில் இருந்து வந்தவன் நான்.அதில் வார்ப்பிக்கப்பட்டவன்.பேரறிஞர் அண்ணா காலம் விரைவாகக் கொத்திக் கொண்டு போனதால் ஏற்பட்ட துன்பங் களை எண்ணி, இன்று வரையிலும் கலங்குகின்றவன்.

ஆக்கிரமிப்பாளனை அழைத்துப் பேசுகிறீர்கள்:

அமைதி வழியில் கேட்டால்,புறக்கணிக்கின்றீர்களே?


அண்ணா பேசுகிறார்:

Madam Deputy Chairman; It is a painful pardaox that we are discussing today the amendment of the constitution, to give a legal weapon to the government என்று சொல்லிவிட்டு,to pull down not an
antagonist, but a protagonist for a cause எப்படிப்பட்ட காலகட்டத்தில் when we are meeting the Chinese aggressor, we are in the discussion table for a negotiation,

சீன ஆக்கிரமிப்பாளர்கள், இமயத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட வேளை. நம் படை வீரர்களைப் பலியாக்கியவர்கள்,ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து,பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அழைத்து இருக்கின்ற நேரத் தில், அப்போதுதான் போர் நிறுத்தம் வந்த நேரத்தில், பேச வாருங்கள் என்று
அழைத்து இருக்கின்றபொழுது,நீங்கள் தடுப்பதற்காக, ஒரு கொள்கையைச் சொல்லு கின்ற வனுடைய கருத்தைத் தடுப்பதற்காக,அரசியல் சட்டத்தில் ஒரு
திருத்தத்தைக் கொண்டு வந்து இங்கே விவாதிப்பது ஒரு வேதனையான, விசித் திரமாகஇருக்கின்றது.

It is a painful pardox என்றுஅண்ணா கூறுகிறார்.

அவர் அந்தச் சொல்லை எப்படிப்பயன்படுத்தினார் என்பதை நான் எண்ணிப் பார்த்தேன். புரோட்டகானிஸ்ட் Protagonist என்பது ஒரு கிரேக்கச்சொல்.

ஒரு காவியத்தில் அல்லது ஒரு கவிதை நாடகத்தில், மூன்று பாத்திரங்கள்
இருப்பார்கள். ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன், புரோட்ட கானிஸ்ட் (Protagonist).

அடுத்து வருவது டியூட்ராகானிஸ்ட்.(Deutragonist). அவன் உடந்தை யாகவும் இருக்கலாம்; அல்லது விலகியும் செல்லலாம். (குழப்பவாதி;சந்தர்ப்பவாதி)
அடுத்தது, டிரைடகானிஸ்ட் (Tritagonist) அவன், துன்பங்களை,கேடுகளை விளை விப்பவன்; இலட்சிய வாதிக்கு எதிரான நிலை எடுப்பவன்.

இந்த மூவரும் சேர்ந்ததுதான் ஒரு காவியம், ஒரு இலக்கியம்.

அண்ணா அழகாக அந்தச் சொல்லைப்பயன்படுத்துகிறார்.

நான் ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்லுகிறேன்.கிரேக்கத்தின் காவி யங்களில் ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச்செல்லுகிறவன் புரோட்டகா னிஸ்ட் என்று சொல்லப்பட்டான்; அப்படிப்பட்ட கருத்தை நான் இங்கே முன்
வைப்பதைத் தடுப்பதற்கு, ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கின்றீர்களே? சீன ஆக்கிரமிப் பாளனை அழைத்து, ஒரு மேசையில் அமர வைத்துப் பேச முற் பட்டுவிட்ட இந்த அரசு, எங்களை ஏன் அழைத்துப் பேச முற்படவில்லை? நான் திராவிட நாடு கேட்டேன். நாகர்களுக்குத் தனிநாடு கேட்ட பிஜோவைப் போல
என்று, வரலாறு தெரியாதவர்கள் சொல்லுகிறார்கள். நாங்கள் பிஜோவைப் பார்த்துக் கேட்கவில்லை.

நாங்கள் தனிநாடு கேட்கிறோம்.எங்களை ஏன் அழைத்துப் பேசவில்லை. தேசிய ஒருமைப் பாட்டுக்குழு (National Integration Committee) ஒன்றை அமைத்து இருக்கின் றீர்கள். அதற்குத் தலைவராக யாரைப் போட்டு இருக்கின்றீர்கள்? ஒரு வலிமை யான மனிதரை. தேசிய ஒருமைப்பாட்டில் உறுதியான, திறமையான ஒரு மனிதரை. அந்தக் கொள்கைக்காகவே இருக்கின்ற சர் சி.பி.இராமசாமி அய்யரை அல்லவா அதற்குத் தலைவராக அறிவித்து இருக்கின்றீர்கள்? அவர் யார்?

அவர்தான், 1947 ஆகஸ்ட் 15 அன்று,இந்தியா விடுதலை பெற்ற நாளில், திருவி தாங்கூர் திவானாக இருந்து கொண்டு, இனி திருவிதாங்கூர் சமஸ்தானம் தனி நாடு என்று மன்னரைப் பிரகடனம் செய்ய வைத்து,பாகிஸ்தானோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர். இன்று, அவரை, இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்குழு வுக்குத் தலைவராக நியமித்து இருக்கின்றீர்கள்.

நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கருத்துகளைக் கேட்பதற்காக, ஒருமைப் பாட்டுக் குழுவினர் பயணித்தார்களே, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தை ஏன் அழைத்துப் பேசவில்லை? எங்களை ஏன் சந்திக்கவில்லை. என்னை ஏன் சந்திக்கவில்லை என்று நான் கேட்க வில்லை.

ஏனென்றால், நாங்கள் அரசாங்கத்தின் விருந்தாளிகளாக, வேலூர் சிறைக்குள் இருந்தோம். சின்னச் சின்னக் கொட்டடிகளுக்கு உள்ளே அடைக்கப்பட்டு இருந் தோம்.

ஆனால், எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் வெளியில் இருந்தாரே?எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம் வெளியில் இருந்தாரே?
அவர்களை அழைத்துப் பேசி இருக்கலாமே? சி.பி.இராமசாமி அய்யர் சிறைக்கு வந்து என்னைப்பார்க்கவில்லை என்று நான் கூற மாட்டேன். நான் மிகச் சாதா ரண மானவன். அவர் பெரிய மனிதர். அவர் பிறரைச் சிறைக்கு உள்ளே அடைத் துத்தான் பழக்கப்பட்டவரே தவிர, சிறைக்கு உள்ளே போய்ப்பார்த்துப் பழக்கப் பட்டவர் அல்ல.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஏன் தயக்கம்? தமிழ்நாட்டில் 50 இலட்சம்
வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்றது. நாங்கள் 35 இலட்சம் வாக்குகளைப் பெற்று இருக்கின்றோம். காலம் சீராகச் செல்லுமானால், அடுத்த
தேர்தலுக்குப் பிறகு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில்
இருக்கும்.

எங்கள் கருத்து தவறு என்றால் திருத்துங்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள் வதற்கே இடம் கிடையாதா? ஒரு கருத்தை நசுக்கு வதற்காக இப்படி ஒரு சட்ட மா? நாங்கள் சொல்லுகின்ற கருத்து தவறாக இருந்தால், எங்களைத் திருத்துங் கள். உங்களிடம் நல்ல ஆழமான, ஆணித்தரமான கருத்து இருந்தால், அதைக் கொண்டு, எங்கள் கருத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆனால், எங்களை வற்புறுத்தாதீர்கள். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்.

இப்படியெல்லாம் அருமையாக அவர் கருத்துகளை எடுத்து வைத்த வாதம்,
அரசியல் சட்டத்தின் 6 ஆவது திருத்தத்தின்போது நடந்தது.

அப்போதுதான், நாட் டின் ஒற்றுமை,ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதை ஏற்க முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

அதற்குப்பிறகுதான், 1967 இல், Ulnawful Activities Prevention Act சட்டவிரோத நடவடிக் கைகள் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அது பின்னர் புதிய புதிய வடிவங்களை எடுக்கிறது.Maintenance of Internal Security Act -MISA என்றார்கள். Prevention of Terrorism Act-POTA  என்று ஒரு வடிவத்தை எடுக்கிறது. அதே பிரிவு
களைக் கொண்டுதான் இன்றைக்கும் சட்டம் இருக்கின்றது. அதன் அடிப்படை யில்தான் ஒரு இயக்கம் தடை செய்யப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கின்றது.

அந்தத் தடை தவறானது என்று நான் தீர்ப்பு ஆயத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வாதாடுகின்ற பொழுது,அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழம், இந்திய ஒருமைப் பாட்டுக் கும், இறையாண்மைக்கும் எவ்விதத்தில் கேடு விளை விக்கின்றது? அது எப்படி ஆபத்தானது? அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழத்தில்,தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூடக் கேட்கவில்லை.

தந்தை செல்வாவோ, மாவீரர் திலகம் பிரபாகரனோ கேட்கவில்லை. ஆனால்,
தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தமிழ் ஈழம் அமைக்கப் போவதாக, பொய் யாக, மத்திய அரசு வகுத்து இருக்கின்ற,அபாண்டங்கள் நிறைந்த இந்த வழக்கு கள் மூலமாக, இந்தச் சட்டத்தைப்பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தைத் தடை செய்து இருக்கின்றீர்கள். அது செல்லாது; அதை நீக்க வேண்டும் என்று என் வாதங்களை எடுத்து வைத்து இருக்கின்றேன்.

தொடரும் .....                                                                   

No comments:

Post a Comment