பஞ்சாப்பில் சீக்கிய இன உரிமைகளுக்காகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த, பேராசிரியர் புல்லார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கிலிட முனைந்துள்ள இந்திய அரசைக் கண்டித்தும், பேராசிரியர் புல்லாரை விடுவிக்கக் கோரியும் நேற்று(21.04.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில், பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை, பேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

சென்னை சீக்கிய இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த திரு. பேஜ்தீப் சிங் உள்ளிட்ட சீக்கிய இனத் தலைவர்களும், இளைஞர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வை, மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராஜ் முருகையன், தோழர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
இப்போராட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், மனித நேயர் ஆர்வலர்களும் மட்டுமின்றி, சீக்கிய இன இளைஞர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தை, பேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி,
பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா,
ம.தி.மு.க. வெளியீட்டுப் பிரிவுச் செயலாளர் திரு. வந்தியத்தேவன்,
நாம் தமிழர் கட்சியின் தோழர் ராஜன்,
இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான்,
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்,
தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான்,
தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி
உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.
மாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமா வளவன் பழரசம் அளித்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
இந்நிகழ்வை, மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராஜ் முருகையன், தோழர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
இப்போராட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், மனித நேயர் ஆர்வலர்களும் மட்டுமின்றி, சீக்கிய இன இளைஞர்களும் பங்கேற்றனர்.
நன்றி
வெளியீடு :- பெரியார் தளம்
No comments:
Post a Comment