2012 ஆம் ஆண்டு
ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத் -தால் ரத்து செய்த பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.
தேசிய கடல் பூங்கா எனும் 21 தீவுகள் இருக்கின்ற கடற்கரையிலிருந்து 25 கி.மீ.க்கு அப்பால்தான் ஆலையை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனையை மீறி இந்த ஆலை அமைக்கப் பட்டதாலும் அதுபோல பசுமை வளாகம் நிபந்தனைப்படி அமைக்கப்படாத -தாலும் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்துவதாலும் சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூடிட ஆணை பிறப்பித் -தது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் இலட்சக்கணக்கான மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படும். விவசாயம் நாசமாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்ற கடல் செல்வம் அழிந்து போகும்.
கடந்த 44 மாதங்களாக லைசென்ஸ் இல்லாமலேயே இந்த ஆலை இயக்கப் படுவது சட்டத்திற்கு விடப்படும் சவாலாகும்.
கடந்த 44 மாதங்களாக லைசென்ஸ் இல்லாமலேயே இந்த ஆலை இயக்கப் படுவது சட்டத்திற்கு விடப்படும் சவாலாகும்.
ஆஸ்திரேலியாவிலிருந்து தாமிர அடர்த்தியை இந்த ஆலை இறக்குமதி செய்கிறது. அதில், பேராபத்தை விளைவிக்கக் கூடிய நச்சு உலோகங்களான யுரேனியம், ஆர்கானிக், பிஸ்மத், ஃபுளோரின் பல நூற்றுக்கணக்கான டன்கள் இருப்பதைத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகளிடம் விவரங்களைப் பெற்று இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்.
இந்த ஆலையில் இதுவரை நிர்வாகம் கணக்கிட முடியாத கொள்ளை இலாபத்தைச் சம்பாதித்து இருக்கிறது. அதனாலே ஆலையை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான் அந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் வழியாகும்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் ஆலையை இயக்குவதற்கு லைசென்சுக்காக 15 நாட்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப் பிக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் கொடுப்பதா? இல்லையா? என்பதை நன்கு ஆய்வு செய்து வாரியம் முடிவு எடுக்க வேண்டும் என்றும், விசாரணை யை மறு தேதி குறிபிட்டு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள் .
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் ஆலையை இயக்குவதற்கு லைசென்சுக்காக 15 நாட்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப் பிக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் கொடுப்பதா? இல்லையா? என்பதை நன்கு ஆய்வு செய்து வாரியம் முடிவு எடுக்க வேண்டும் என்றும், விசாரணை யை மறு தேதி குறிபிட்டு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள் .
“ஸ்டெர்லைட் ஆலை, தொடக்கத்தில் இருந்தே சட்டத்தை, மாசு கட்டுப்பாட்டு
விதிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அந்தப் பகுதியில் வாழுகின்ற மக்களுக்குப் பேராபத்தை விளைவித்து வருவதால், இது நிரந்தரமாக அகற்றப் பட வேண்டும்.
தேசிய கடல் பூங்காவுக்கு 25 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் ஆலை அமைக்கப் பட வேண்டும் என்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனையை அப்பட்டமாக மீறி, 15 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே அமைத்து இருப்பதால், இந்த ஆலையை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை இறக்குமதி செய்யும் தாமிர
அடர்த்தியில், யுரேனியம், ஆர்செனிக், பிஸ்மத், ஃபுளோரைன் ஆகிய நச்சு
உலோகங்கள் டன் கணக்கில் சேர்ந்து உள்ளன.
இந்திய அரசு பல ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டும், ஆஸ்திரேலிய அரசு கடந்த ஆண்டு வரையிலும், இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டது.
இந்நிலையில், சட்டவிரோதமாக, உயிர் ஆபத்து விளைவிக்கக்கூடிய யுரேனியத்தை, ஸ்டெர்லைட் ஆலை கொண்டு வந்து குவித்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வட்டாரத்தில் இருந்து நீர், மண், ஆகியவற்றைச் சோதனைக் காக, உலகப்புகழ் பெற்ற அமெரிக்கச் சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். அதில், கடுமை யான நச்சுத்தன்மை இருப்பதாகவும், எண்ணற்றவர்களுக்குப் புற்று நோய் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டப்படியான அனுமதி இல்லாமல், ஸ்டெர்லைட் ஆலை 44 மாதங்கள் இயங்கி உள்ளது என்பதை, கடந்த அமர்வில் நான் ஆதாரங்களோடு நிரூபித்து இருக்கிறேன்.
தற்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தான் விதித்த நிபந்தனை களைச் செயல்படுத்தாத ஸ்டெர்லைட் ஆலைக்கு,2012 ஜூன் மாதம் வரை இயங்குவதற்கு அனுமதி கொடுத்து இருக்கிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீரி நிறுவனம் ஆகியவை, முன்னுக்குப்பின் முரணான அறிக்கை களைத் தந்து வருவதால், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகி விட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான், அப்பகுதி வாழ் மக்களைப்
பாதுகாக்கக் கூடியது ஆகும்” என வைகோ வாதிட்டார்.
நீதி அரசர் லோதா அவர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் போக்கு -க்கு ஆட்சேபணை தெரிவித்துக் குறிப்பிட்டதாவது:
“மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை, ஸ்டெர்லைட் ஆலை செயல் படுத்தவில்லை என்று கூறிக்கொண்டே, எப்படி நீங்கள் இப்போது அனுமதி கொடுத்தீர்கள்? இதற்கு எந்த விளக்கமும் இல்லையே?” என்று கூறினார்.
முந்தைய பதிவுகளை படிக்க :
No comments:
Post a Comment