2011 ஆம் ஆண்டு
6.9.2011 அன்று வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்’ என்று ஆலை நிர்வாகத் தரப்பில் வாதாடினார்கள்.
வைகோ தன்னுடைய வாதங்களை, ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வைத்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 94 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, தடை இல்லாச் சான்றிதழ் வழங்கும்போது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து 25 கிலோமீட்டருக்கு அப்பால்தான், தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக நிபந்தனை விதித்தது.
1995 மே 22 ஆம் தேதி, ஆலையை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தபோதும், அதே நிபந்தனையைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவித்தது.
ஆனால், தூத்துக்குடி அருகில் உள்ள தேசிய கடல் பூங்காவில் இருந்து, 15 கிலோமீட்டருக்கு உள்ளாகவே தொழிற்சாலையை அமைத்து உள்ளனர்.
இந்த ஒரு காரணத்துக்காகவே, இந்த ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்று வைகோ கூறியவுடன், ஆலைத்தரப்பு வழக்கறிஞர், ‘அந்தக் கடல் பகுதி 2000 ஆம் ஆண்டு வரையிலும், தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்படவில்லை’ என்றார்.
அதற்கு வைகோ, ‘ஆலைத் தரப்பினர் தாக்கல் செய்த மனுவிலேயே, 144 ஆம் பக்கத்தில், 1987 ஜனவரி 28 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு பதிவு இதழிலேயே இது தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை ஒப்புக் கொண்டு உள்ளனர்’ என்றார்.
நீதிபதி பட்நாயக், அப்படியானால், ‘ஆலையை இந்தியாவில் எங்கு அமைக்கலாம்?’ என்று கேட்டார்.
‘சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாத இடத்தை முடிவு செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அது எங்கள் வேலை அல்ல. குஜராத், கோவா மாநிலங்கள் அனுமதிக்காததால், மராட்டிய மாநில அரசு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால், இந்த நாசகாரக் கம்பெனியை, எங்கள் தமிழர்கள் தலையில் கொண்டுவந்து போட வேண்டுமா?’ என்று வைகோ கேட்டார்.
250 மீட்டர் பசுமை வளாகம் அமைக்கின்ற அளவுக்கு, தொழிற்சாலைக்கு உள்ளே இடம் இருக்க வேண்டும் என்று, அதே மாசு கட்டுப்பாட்டு வாரியம், 1994 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிபந்தனை விதித்தது.
12 ஆம் தேதி, ஸ்டெர்லைட் நிர்வாகம், ‘எங்களுக்கு அவ்வளவு நிலம் இல்லை. எனவே, அதை 15 மீட்டராகக் குறைக்க வேண்டும்’ என்று விண்ணப்பித்தது. அடுத்த ஏழாம் நாள், ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று, 250 மீட்டர் என்பதை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 மீட்டராகக் குறைத்து விட்டது.
இதற்குக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இது பல சந்தேகங் களை இது எழுப்புகிறது என்று குறிப்பிட்டது என்பதை, உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் என்று வைகோ குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இன்று (6.9.2011), ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அறிக்கை தந்து இருக்கின்றது.
இதே வாரியம், 2010 டிசம்பர் 7 ஆம் நாள் கொடுத்த அறிக்கைக்கு நேர்மாறாக இன்று அறிக்கை கொடுத்து இருக்கின்றது என்று, அந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, எனவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு முழுக்க ஆதரவாக மாறி விட்டது என்றார் வைகோ.
இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞரும், ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
‘வைகோ கடுமையாகச் சொல்லிவிட்டார்’ என்றார் நீதிபதி ரவீந்திரன்.
மேலும் வைகோ பேசும்போது, ‘ஆஸ்திரேலியாவில் இருந்து அடர்த்தியான தாமிரத்தை, நச்சுப்பொருள்கள் கலந்த தாமிரத்தை இறக்குமதி செய்து உள்ளனர். 19 லட்சம் டாலர் லாபத்துக்காக, அதை வாங்கி உள்ளனர். இதில் யுரேனியம், ஆர்செனிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் எத்தனை டன் உள்ளது என்பதை, தகவல் அறியும் சட்டத்தின்கீழ், தூத்துக்குடி சுங்க இலாகாவிடம் இருந்து பெற்று இருக்கின்றோம்.
ஸ்டெர்லைட் ஆலையால், தூத்துக்குடி பகுதி வட்டார விவசாயிகள், மீனவர்கள், பெரும் பாதிப்புக்கு ஆளாகி விட்டனர். மீன்வளம்அழிகிறது, கடல் வளம் நாசமாகிறது, விளைநிலங்கள் நாசமாகி விட்டன. இன்று, நீதிபதி ரவீந்திரன் அவர்கள், இன்றைய செய்தித்தாள்களில், மாசு காரணமாக ஏற்படுகின்ற புற்றுநோய் குறித்த செய்தியை இங்கே சொன்னார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையால், தூத்துக்குடி பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் மிகவும் அதிகம்.
இந்தியாவிலேயே இதுபோல ஒரேயொரு தொழிற்சாலைதான் இருக்கின்றது என்று ஆலை நிர்வாகம் இங்கே கூறியது. அமெரிக்காவிலும் இதுபோல, அசார்கோ என்ற ஒரேயொரு தொழிற்சாலைதான், 1889 ஆம் தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகளாக அந்தப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி, நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்து, 1986 இல் அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. சுமார் 40 கல் அளவுக்கு அந்தப் பகுதியை, இன்றுவரையிலும் சீரமைக்க முடிய வில்லை.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் ஒவ்வொரு நாளும், போபால் விஷவாயு நாசத்தை, தூத்துக்குடி வட்டார மக்கள் அனுபவிக்க நேரும். ஆலையை நிரந்தரமாக மூடினால்தான், அப்பகுதி மக்களைக் காப்பாற்ற முடியும் என்றார் வைகோ.
ஒரு கட்டத்தில் நீதிபதிகள், ‘மாசு கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை ஆலைத்தரப்பினர் முறையாகச் செய்து இருக்கின்றார்களா? என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அறிக்கை கொடுக்கலாமே? என்று கேட்டனர்.
தொடர்ந்து வாதங்கள் நடைபெற்றன. ஆலைக்கு எதிராக வழக்கறிஞர் பிரகாஷ் வாதாடினார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டப்படியான அனுமதி இல்லா -மலேயே, 40 மாதங்கள் இந்த ஆலையை இயக்கி இருக்கின்றார்கள். 2010 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து, இன்றுவரை, ஆலையை இயக்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடையாது. சட்டத்துக்கு எதிராகவே ஆலையை இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று வைகோ குறிப்பிட்டபோது, ஆலை நிர்வாகம் அதை மறுக்கவில்லை.
நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

No comments:
Post a Comment