Sunday, April 14, 2013

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - மதிமுக அறிவிப்பு!

காரைக்கால் மாவட்டத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை உடனே அகற்றாவிட்டால், மாவட்ட கலெக்டர் அலுவகலத்தை முற்றுகையிடுவோம் என மாவட்ட மதிமுக செயலாளர் அம்பலவாணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து, மாவட்ட மதிமுக செயலாலர் அம்பலவாணன் கூறியதாவது: காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான பல கோடி நிலங்கள், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால், காரைக்கால் மாவட்டத்தில் செல்வந்தர்களாக இருக்கும் ஒரு சிலர்தான் அதிகமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுவே ஏழை எளிய மக்கள் தங்க குடிசை அமைத்தால், மாவட்ட வருவாய் துறை போலிஸ் படையுடன் விரைந்து சென்று காலி செய்துவிடும். 


செல்வந்தர்கள் என்பதால், அவர்களை காலி செய்யவேண்டிய மாவட்ட வருவாய் துறை மற்றும் நகாரட்சி அவர்களிடம் பேரம் பேசிகொண்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், திருநள்ளாறு சாலை பச்சூர் இடுகாட்டிற்கு செல்லும் சாலைக்கு மேற்புறத்தில் நகராட்சிக்கு சொந்தமான பல கோடி நிலம், தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 

இதே போல், காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் வண்டி பாதை நிலம் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது மட்டுமின்றி, காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு வடிகால் வாய்க்கால் கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆற்றங்கரை ஓரங்கள், பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி மற்றும் மாதாகோவில் வீதிகளின் நடைபாதைகள் பல செல்வந்தர்களால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது.

எனவே, இன்னும் ஏப்ரல் இறுதிக்குள் மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் அகற்றாவிட்டால், வருகிற மே மாதம் முதல் வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்" என்றார்.

No comments:

Post a Comment