Thursday, April 25, 2013

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில், மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

சென்ற பகுதியில் வெளியான அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


‘ஈழத்தை அமைப்பது இளைஞர்களின் கடமை’

இப்போது, இந்தியாவின் நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து பழங்குடியினரும்,பாகிஸ்தான் படையினரும் ஆயுதங்களோடு காஷ்மீருக்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள் என்று, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், நேருவுக்குத் தாக்கல் அனுப்பு கிறார். ‘எங்களைப் பாதுகாக்க வாருங்கள்;இந்தியப் படை களை அனுப்புங்கள்.இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு நான் ஒப்புதல் தருகிறேன்; அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறேன், என்கிறார்.


அப்போது, இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம், இந்திய யூனிய
னோடு இணைந்து கொண்டு இருந்த காலம். அதுபோல, எங்கள் காஷ்மீரமும்
இணையும் என்று, அக்டோபர் 26 ஆம் தேதி, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் தகவல்
தருகிறார்.
நேருவின் உறுதிமொழிகள்

அன்றைக்கே, இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லிக்கு, 1947 அக்டோபர் 26 ஆம் தேதியே, இந்தியப் பிரதமர் நேரு கடிதம் எழுதுகிறார்.

‘காஷ்மீருக்கு உள்ளே நாங்கள் படையை அனுப்ப நேர்ந்தது. ஆனால்,காஷ்மீர் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.They have to decide their destiny. இந்தியாவோடு
இருப்பதா? விலகுவதா? தனிநாடாக ஆவதா? என்பது, காஷ்மீர் மக்களுடைய முடிவு. கூhநல They have to give their consent.. அதை, பொது வாக்கெடுப்பின் மூலமாக
நிறைவேற்றுவோம். We will decide it a by a plebiscite..

இவ்வாறு கடிதம் எழுதிய நேரு, நவம்பர் 2 ஆம் தேதி, அனைத்து இந்திய
வானொலியில் உரை ஆற்றியபோதும்,இதே கருத்தைச் சொல்லுகிறார். ‘காஷ் மீரத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு,காஷ்மீர் மக்களுக்குத்தான் உண்டு. அது, வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறும்’என்று வானொலியில் அறிவித்து விட்டு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக் கு, ‘நாங்கள், வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்’ என்று கடிதமும் அனுப்பு கிறார். மறுநாள்,நவம்பர் மாதம் 3 ஆம் தேதியும் வானொலியில் பேசுகிறார்.

1948 மார்ச் 5 அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly )யில் நேரு பேசுகிறார்.

We have given a promise, not only to the union, but to the United Nations, to the whole world, that the fate of the Kashmir will be dcided by the people of Kashmir; That will be decided by a plebiscite.

நாம் ஒரு வாக்குக் கொடுத்து விட்டோம்.Well stood by it; we stand by it and we will stand by it.

இந்த வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக இருப்போம்’ என்கிறார்.

1951 இல், லண்டனுக்குப் போகிறார்.ஜனவரி 16. செய்தியாளர்களைச் சந்திக் கிறார். அவர்கள் கேட்கிறார்கள்.அப்போது சொல்லுகிறார்: We have made a commit ment for a plebiscite in Kashmir . காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நடக்கும். அதன் படி, அந்த மக்கள் முடிவு செய்வார்கள்.

மீண்டும், 1952 மார்ச் 26, ஆகஸ்ட் 7 ஆகிய நாள்களில், இந்திய நாடாளு மன்றத் தில் உரை ஆற்றும்போதும், இதையே குறிப்பிடுகிறார்.

நாம் வாக்குக் கொடுத்து விட்டோம்.ஒருவேளை, காஷ்மீர் நம்மை விட்டு விலகிச் செல்வதாக முடிவு எடுத்தால்,நம் இருதயங்கள் காயப்படலாம்; ஆனால், உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றித் தீர
வேண்டும்.

என்கிறார். 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசும்போதும், அதே கருத் தை மீண்டும் பேசி பதிவு செய்கிறார்.

நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும்தான் நான் இந்த மன்றத்தில் எடுத்து வைக் கின்றேன். விமர்சிப்பதற்காக அல்ல.

பத்து ஆண்டுகள் கழிகின்றன. 1964.எம்.சி. சாக்ளா, இந்தியாவின் கல்வி அமைச் சராக, ஐ.நா. சபையில் பேசுகிறார்.

1947 முதல் 1954 வரையிலும், பண்டித நேரு, உலகத்துக்கும், ஐ.நா. மன்றத்துக் கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும், அரசியல் நிர்ணய சபைக்கும் தெரிவித்த கருத்து,காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு.

எது பொது வாக்கெடுப்பு?

இப்போது, 64 இல், சாக்ளா பேசுகிறார்.

பொது வாக்கெடுப்பா? காஷ்மீரில் தான் நாங்கள் மூன்று பொதுத்தேர்தல்களை நடத்தி விட்டோமே? அதுதான், பொது வாக்கெடுப்பு.அதைத் தவிர வேறு எது வும் நடைமுறையில் சாத்தியம் இல்லை.பாகிஸ்தானில் பலூச் மக்கள் கேட் கிறார்கள்; பக்டூனிஸ்தான் மக்கள் கேட்கிறார்கள்; பட்டாணியர்கள் கேட் கிறார்கள்; கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கேட்கிறார்கள்; அங்கெல்லாம் நீங்கள் பொது வாக்கெடுப்பு நடத்துவீர்களா?

என்று கேட்கிறார்.

இப்படி, இந்தியா தன் நிலையை மாற்றிக் கொண்டது.

சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; சீன அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; பின்னர் அகற்றப் பட் டது; பர்மா சட்டத்தில் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது.இந்தியாவில், காஷ்மீரத்தில் பொது வாக்கெடுப்பு குறித்து மேற்கொள்ளப் பட்ட நிலைப்பாடு, பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டது.

மீண்டும் சொல்கிறேன். நான் நடந்த நிகழ்வுகளை மட்டுமே உங்கள் கவனத் துக்கு வைக்கிறேன். முடிவு எடுப்பது நீங்கள்தான்.

பொது வாக்கெடுப்பின் வகைகள்

ஒரு பொது வாக்கெடுப்பு என்பது, எப்பொழுது வருகிறது?

ஒரு தேசிய இன மக்கள், தங்களுடைய சுய நிர்ணய உரிமையை, தன்னாட்சி
உரிமையை நிலைநாட்டிக் கொள்ள பொது வாக்கெடுப்பு வருகின்றது.

இங்கே தஞ்சையார் அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டைப் பற்றிக் குறிப் பிட் டார்கள். அங்கே ஒரு குறிப்பிட்ட மக்கள், இதுகுறித்து வாக்கெடுப்பு வேண்டும் என்று, அவர்கள் கையெழுத்து இட்டுக் கோரிக்கை வைத்தால், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பொது வாக்கெடுப்பு என்பது, இரண்டு விதமாக அமையலாம். ஒரு நாட்டின்
எல்லைகளைத் தீர்மானிக்க; ஒரு நாடு,இன்னொரு நாட்டின் பகுதியாகச் சேரு வதற்கு அல்லது பிரிந்து செல்லுவதற்கு; அல்லது, பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க அல்லது மறுக்க. இது ஒருவிதமான பொது வாக்கெடுப்பு.

ஒரு நாட்டுக்கு உள்ளேயே பொது வாக்கெடுப்பு நடத்தலாம். (Domestic Referendum) ஓரு குறிப்பிட்ட பிரச்சினையை ஏற்க அல்லது மறுக்க;எடுத்துக்காட்டு, மது விலக்கு. மது வேண்டுமா? வேண்டாமா? என்றுகூட ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

நோர்வேயின் தோற்றம்

இந்த அடிப்படையில், தேசிய இனங்கள்,தங்கள் சுதந்திரத்தைத் தேடிக் கொள் ளத் தொடங்கியதன் விளைவாக, 1905 ஆகஸ்ட் 13 இல், அதுவரை ஒன்றாக
இருந்த ஸ்வீடனில் இருந்து பிரிந்து செல்வதற்காக, நோர்வே ஒரு பொது வாக் கெடுப்பு நடத்தியது.இத்தனைக்கும், நோர்வே மக்களை,சுவீடன்காரர்கள் ஆதிக் கம் செலுத்த வில்லை. நோர்வீஜியப் பெண்களுக்குப்பாலியல் கொடுமைகளை விளைவிக்க வில்லை. நோர்வீஜியர்களின் வழிபாட்டுத் தலங்களை, ஸ்வீடன்
காரர்கள் அழிக்கவில்லை. இராணுவத் திலோ, அரசுப் பணிகளிலோ, நோர்வீஜி யர்களுக்கு இடம் இல்லாமல் செய்யவில்லை. இருவரும்,சம அந்தஸ்து உள்ள வர்களாக இருந்தார்கள். சம உரிமை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

ஆனாலும்கூட, நாங்கள் தனி இனம்;தனித்து வாழ்வோம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 100 விழுக்காடு நோர்வீஜியர்களும், சுவீட னில் இருந்து பிரிந்து செல்வோம் என்று முடிவு எடுத்தார்கள்.

என் அன்புக்கு உரியவர்களே, நான் என்னை மையப்படுத்தி எந்தக்கருத்தையும் இங்கே பதிவு செய்யவில்லை என்பதைச் சொன்னேன்.ஆனால், ஒரு சம்பவத் தை மட்டும் குறிப்பிடுகின்றேன். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அதே நோர் வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், தெற்கு ஆசிய பிராந்திய அமைதி மாநாட்டில் நான் பேசினேன்.

உலகம் தமிழர்களை அநாதைகளாகக்கைவிட்ட வேளையில், ஆண்டன் பால சிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில், மரணத்தின் வாச லில் இருந்த அவரை அழைத்துக் கொண்டு வந்து, பழுதுபட்ட இரு சிறுநீரகங் களையும் மாற்றி, மாற்றுச் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த நோர்வே நாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று நான் பேசினேன்.

இரண்டாவது நாள் அமர்வுக்கு,ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு சகோதரி தலைமை தாங்கினார்.அமர்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது,எனக்கும், சிங்கள நாட்டில் இருந்து வந்த பெளத்த பிட்சுகளுக்கும் வாக்குவாதம் வந்தது. மோதல் ஒன்றும் இல்லை.

அவர் சொன்னார்: Eelam is a day dream. It is a mirageஎன்று சொன்னார்.

நான் உடனே எழுந்து சொன்னேன்:

Sometime back, an independent Norway was considered as a day dream.But, Independent Norway has become a reality. Likethat, a day will come; Tamil Eelam will usher as a separate nation.

நோர்வே என்ற தனி நாடு அமைவது ஒரு பகல் கனவு என்று,சென்ற நூற்றாண் டின் தொடக்கத்தில் கருதினார்கள். ஆனால்,அங்கே பொது வாக்கெடுப்பு நடந் தது.தனி நாடாக மலர்ந்து விட்டது.அதுபோல, தமிழ் ஈழமும் ஒரு தனி நாடாக அமையும் என்று நான் சொன்னேன்.இன்று, நோர்வே ஒரு தனிநாடாக மலர்ந்து விட்டது. இன்று நான் நோர்வேயில் இருந்து பேசுகிறேன் என்றேன்.

பிரிவுக்கு வாழ்த்துச் சொன்ன மன்னர்

1944 மே 22,23 ஆகிய நாள்களில், டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபடு வதற்காக, ஐஸ்லாந்திலே பொது வாக்கெடுப்பு நடந்தது. 95 விழுக்காடு மக்கள் வாக்குப்பதிவில் பங்கு ஏற்றார்கள்.அவர்களுள், 98 விழுக்காடு ஐஸ்லாந்து
மக்கள், தங்கள் நாடு டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபட்டு, தனி
நாடாக ஆக வேண்டும் என்று ஆதரித்து வாக்கு அளித்தார்கள்.

இந்த முடிவை, டென்மார்க் நாட்டு மக்கள் ஏற்கவில்லை. வேதனை அடைந் தார்கள். காரணம் என்ன தெரியுமா? அப்போது, டென்மார்க் நாடே,நாஜி ஜெர் மனி யின் பிடியில் இருந்தது.அங்கே ஸ்வஸ்திக் கொடி பறந்து கொண்டு
இருந்தது. நாங்களே அடால்ஃப் ஹிட்லரின் பிடிக்குள் சிக்கி இருக்கின்றோம். இந்த நேரத்திலா நீங்கள் வெளியேறுகிறீர்கள்? இப்பொழுதா,எங்களை விட்டுப் பிரிந்து செல்லுகிறீர்கள்? நாஜிகளின் அடிமைப்பிடியில் இருக்கின்ற எங்களுக் கே இது துக்கமான நேரம் அல்லவா? என்று மனம் குமுறினார்கள்.

ஆனால், டென்மார்க் மன்னர் 10 ஆவது கிறிஸ்டியன்சன் என்ன செய்தார் தெரி யுமா? “தனிநாடாகப் பிரிந்து செல்ல ஐஸ்லாந்து முடிவு எடுத்து விட்டது. அதை
நான் ஏற்றுக் கொள்கிறேன்.அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார். வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

வரலாறு விசித்திரங்களைச் சந்திக்கிறது. அதே டென்மார்க் நாட்டின் பிடியில்
இருந்து, ஃபரா என்ற ஒரு தீவு, தனியாகப் பிரிந்து செல்ல முடிவு எடுத்து, அவர் களும் பொது வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக இப்படி அடிவயிற்றில் இருந்து குரல் கொடுக்கின் றானே? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? என்று நினைப்பவர் களுக் காக, இந்த வாதத்தை வைக்கின்றேன். இந்த ஃபரா தீவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 11 ஆயிரத்து 146 பேர்தான்.அங்கே பொது வாக் கெடுப்பு நடக்கிறது.1946 ஆம் ஆண்டு மே மாதம். முடிவு என்ன தெரியுமா?

5656 பேர் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்கு அளிக்கின் றார் கள். 5490 பேர், பிரிந்து செல்லக் கூடாது, டென்மார்க்கோடுதான் இருக்க வேண் டும் என்ற வாக்கு அளிக்கின்றார்கள். அதாவது, 49.75 விழுக்காட்டினர் டென் மார்க்கோடு இருக்க வேண்டும் என்கிறார்கள். 50.25 விழுக்காட்டினர், தனி நாடாக ஆக வேண்டும் என்கிறார்கள்.

இந்த முடிவையும் டென்மார்க் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. இன்றைக்கு அந்த
ஃபரா தீவுகள் ஒரு தனி நாடாக ஆகி விட்டது.

இந்த நிகழ்வுகளை நீங்கள் வரிசைப்படுத்திப் பார்க்கிறபோது, இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்த இந்தக் காலகட்டத்தில், சோவியத் மண்டலமும் உடைகிறது.

ரஷ்யாவின் நிலைமை

சோவியத் ஒன்றியத்தில் இருக்கின்ற நாடுகள் விரும் பினால், தனியாகப் பிரிந்து செல்லலாம் என்று அரசியல் சட்டம் வகுத்த ரஷ்யா, பின்னர் அதை மறந்து,கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன் ஆதிக்கப்பிடிக்குள் கொண்டு வந்து ஒடுக்க முயன்றது. யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோ அதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார். அந்த வேளையில், ஹங்கேரி நாட்டில் ஒரு
புரட்சிக் குரல் எழுந்தது. அவரும்,கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்து உருவான ஒரு தலைவர்தான். ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர் தான். அவரது பெயர், இம்ரினாகி. ‘எங்கள் ஹங்கேரி நாடு, சுயேச்சையாகத் தான் முடிவு எடுக்கும்; சோவியத் ரஷ்யாவின் கட்டளைகளை, இனிமேல் நாங்கள் ஏற்க மாட்டோம்’என்று அவன் தன்மானக் கொடியை உயர்த்திய போது, ரஷ்யாவின் டாங்குகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன.

அப்பொழுது அவன் மக்களைத் திரட்டினான். ஒரு மாலை வேளையில், பனி பொழிந்து கொண்டு இருந்த மலைச்சரிவுகளில் மழையும் கொட்டிய பொழுது, அவன் பேசியதைக் கேட்பதற்காக, இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந் தார்கள்.

இங்கே, பனி சற்றுக் குறைந்து, குளிர் மாத்திரம் நிறைந்து இருக்கக்கூடிய ஒரு
முன்னிரவுப் பொழுதிலே, நான் தஞ்சையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். இம்ரினாகி பேசிய போது, மழை வலுத்தது. ஒவ்வொரு வரும் குடை கொண்டு வந்து இருந்தார்கள். எல்லோரும் குடைகளை விரித்துப் பிடித்துக் கொண்டார் கள். அதற்கு உள்ளே நின்றுகொண்டு, கொட்டிய  மழையிலும் இம்ரினாகியின் பேச்சைக் கேட்டார்கள். அந்த மழையிலும்,அவனது பேச்சு அனலைக் கொட்டி யது.மக்கள் மனங்களில் வேள்வியை மூட்டியது. மக்கள் அணி திரண்டு எழுந் தார்கள். அது, ‘குடைப்புரட்சி’ என்று வரலாறு வர்ணிக் கின்றது.

சோவியத்தின் படை அணிகள்,ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன.ஹங்கேரி ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இம்ரினாகி கைது செய்யப் பட்டான். 1958 ஜூன் மாதம் 30 ஆம் தேதி, தூக்கில் இடப்பட்டுக் கொல்லப் பட் டான்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி, அதே நாளில், இம்ரினாகி புதைக்கப்பட்ட இடம் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, ஒரு சின்னஞ்சிறிய கல்லறையைத் தோண்டி,அந்தச் சவப்பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து, குதிரைகள் பூட்டிய தேரில் வைத்து, பூக்களால் அலங்கரித்து,
இலட்சக்கணக்கானவர்கள் இம்ரினாகிக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்ப,
ஹங்கேரி வீதிகள் வழியாகக் கொண்டு சென்று, ஒரு எழிலார்ந்த கல்லறை யை அமைத்து, அங்கே அடக்கம் செய்தார்கள்.

இது ஹங்கேரி நாட்டில்.

1968 இல், செக்கோஸ்லோவேகியா, சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை
எதிர்த்தது. Dubcek தலைமை தாங்கினார். அங்கும் சோவியத் படைகள் நுழைந் தன. புரட்சியை ஒடுக்கினார்கள்.ஆனால், 1990 க்குப் பிறகு, நிலைமை மாறியது. நான் பேசுகின்ற இந்த நாள், பிப்ரவரி 11, 2013. 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, திருச்சி நகரில் மலைக்கோட்டை நகரில், இராணுவ மைதானத்தில், பிற் பகல் 1.45 மணிக்கு, இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு இருந்த திராவிட முன் னேற்றக் கழக மாநாட்டில், உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பி ல் உரை ஆற்றுகின்றபொழுது, ஹங்கேரி குடைப் புரட்சியைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

‘சோவியத் ரஷ்யாவில்,கிரெம்ளினுக்கு எதிரே குரல் கேட்கின்றது. தேசிய இனங்களின் விடுதலைக்குரல் கேட்கிறது.விண்வெளியில் ககாரினை நீந்த
வைத்த சோவியத் ரஷ்யா, லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பி
வைத்த சோவியத் ரஷ்யா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் படை அணிகளுக்கு அச்சத்தைத் தருகின்ற சோவியத் ரஷ்யா,ஹிட்லரின் நாஜிப்படைகள் லெனின் கிராடு, ஸ்டாலின் கிராடை முற்றுகை இட்டபோது விரட்டி அடித்த சோவியத் ரஷ்யா,உலகப் போரின் போக்கை மாற்றிக் காட்டிய கார்ல் மார்க்ஸ் தந்த மூல தனக் கொள்கைகளின் அடிப்படையில், பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தை நிலைநாட்டிய சோவியத் ரஷ்யா, பிற தேசிய இனங்களை ஒடுக்குகிறது; ஆனால், காலம் மாறும், நிலைமைகள் மாறும்; விடுதலைக் குரலை ஒடுக்க முடியாமல் போய்விடும்; சோவியத் தனித்தனி நாடுகளாக, துண்டுதுண்டாகப்
போகின்ற காட்சியை வெகு சீக்கிரத்தில் காண்பீர்கள்’ என்றும் சொன்னேன்.

நான் ஒன்றும் ஆரூடக்காரன் அல்ல; முற்றும் உணர்ந்தவன் அல்ல; தொலை
நோக்கோடு கண்டுபிடிக்கின்றவன் அல்ல; நான் வரலாறைப் படிப்பவன்; வர லாறைப் பார்ப்பவன்; வரலாறு பதிவு செய்த நிகழ்ச்சிகளைக் கண்டவன்; அத னால் சொன்னேன்.

அதுதான் நடந்தது, 91 டிசம்பரில்.சோவியத் ஒன்றியத்தில் இருந்து குடியரசுகள் பிரிந்தன. 15 நாடுகள் மலர்ந்தன. ஜார்ஜியா தனி நாடு ஆயிற்று.அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலமாகப் பிரிந்தது. 99 விழுக்காடு ஆதரவு.

ஸ்லோவேனியா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு. குரேஷியா, 91இல் பொது
வாக்கெடுப்பில் தனி நாடு. அலெக்சாண்டர் பிறந்த மாசிடோனியா, 91 இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

92 இல் போஸ்னியா-ஹெர்சகோவினா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு. 93
இல் ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியா பொது வாக்கெடுப் பில் ,98 விழுக்காடு மக்கள் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு. 94 இல், ருமேனியா வின் பிடியில் இருந்து நாங்கள் தனி நாடாகப் பிரிந்து செல்கிறோம் என்று
அறிவித்தது மால்டோவா.

99 ஆகஸ்ட் 31 இல் கிழக்குத் தைமூரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 78.5.
விழுக்காடு மக்கள், இந்தோனேசியாவின் பிடியில் இருந்து விடுபட்டுத் தனி நாடாக ஆவதற்கு ஆதரவு. தனிநாடு ஆயிற்று.

2006 மாண்டிநீரோ தனிநாடு. நூல் இழையில்தான் வெற்றி. 55 விழுக்காடு தேவை என்றார்கள். 55.4 விழுக்காடு வாக்குகள் கிடைத்து, தனிநாடு ஆயிற்று.

2011. தெற்கு சூடான். பல இலட்சம் உயிர்கள் பலியிடப்பட்ட பிறகு, குருதி கொப் பளித்து ஓடியதற்குப் பிறகு, ஆயுதப் புரட்சி நடந்ததற்குப் பிறகு, பொருளாதார
அடிப்படையில், தெற்கு சூடான் ஒரு தனி நாடாக இயங்க முடியாது; வடக்கு
சூடானை அண்டித்தான் பிழைக்க வேண்டும்; இவர்கள் நில அடிப்படையில்
தனி நாடாக ஆக முடியாது என்ற வாதங்களை எல்லாம் உடைத்து நொறுக்கி விட்டு, தெற்கு சூடான் தனிநாடு ஆகி விட்டது.

இன்றைக்கு என்ன நிலைமை?

இப்படி, 1936 க்கும் 60 க்கும் இடையில், கிட்டத்தட்ட 60 புதிய நாடுகள் மலர்ந்து
இருக்கின்றன. தன்னாட்சி உரிமையைப் பெற்று இருக்கின்றன. 1950 ஜனவரி 1
முதல், 1959 டிசம்பர் 31 வரையில், பத்து ஆண்டுக் காலத்தில், ஐக்கிய நாடுகள்
சபையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்த நாடுகளின் எண்ணிக்கை, தன் னாட்சி உரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 106. இதில், 99 நாடுகள், மற்ற அனைத்து நாடுகளாலும், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.ஆறு நாடுகள் அத்தகைய அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஒரு நாடு,முதலில் மறுக் கப் பட்டு, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து அறுபதுகள்.அடுத்த பத்து ஆண்டுகளில், 1960 ஜனவரி 1 முதல், 1969 டிசம்பர் 31 வரையிலும், 163 நாடுகள் ஐ.நா.சபையில் பதிவு பெற்றன. அதில் 155 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்றுக்
கொள்ளப்பட்டன.

பிறகு, 1970 ஜனவரி 1 முதல், 1979 டிசம்பர் 31 வரையிலும், 184 நாடுகள்,உறுப்பு நாடுகள் ஆயின. அவற்றுள், 169 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்கப்பட்டன. அடுத்து, 1980 ஜனவரி 1 முதல், 1989 டிசம்பர் 31 வரையிலும்,உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 184 தான். அவற்றுள், 171 நாடுகள் சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தமிழனுக்கு ஒரு நாடு இல்லையே?

இந்தக் கட்டத்தில்தான், 1984 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ ஜெர்சியில்
நடைபெற்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற நான், ஐ.நா.மன்றத்தை முதன்முதலாகப் பார்த்தேன்.

நியூயார்க் நகரத்தில் அமைந்து இருக்கின்ற ஐ.நா. மன்றக் கட்டடத்தை முழு மையாகச் சுற்றிப் பார்த்தேன்.அங்கே வரிசையாக அமைக்கப்பட்டு இருக்கின்ற கொடிக்கம்பங்களில், 171 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன.இந்தத் தரணி யில், தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், அன்றைக்கு 8 கோடி பேர்களாக இருந்த தமிழர்களுக்கு என்று, இந்த உலகில் ஒரு தனி நாடு இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி, நியூயார்க் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்குச் சென்ற நான் அங்கிருந்து,தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 690 நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களை அவர்கள் இன்னமும் பாதுகாத்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏக்கப் பெருமூச்சோடு, கவலை நிறைந்த கனத்த இதயத்தோடு, ஏக்க விழி களோடு, இந்த ஐ.நா. மன்றக் கட்டடத்துக்கு முன்னால் நடக்கின்றபோது, இத் தனை நாடுகளின் கொடிகளை நான் பார்க் கின்றேன்; ஆனால், இந்த உலகத் துக்கே நாகரிகத்தை, பண்பாட்டை, அரசை, நெறியை, மானத்தைக் கற்றுக் கொடுத்த, உலக நாடுகளில் எல்லாம் வணிகம் செய்த, வீரத்தால் சிறந்த, இன் றைக்கு உலகத்தின் ஒரு பகுதியில் நாதி அற்றுச் செத்துக் கொண்டு இருக் கின்ற தமிழர் களுக்கு ஒரு தனி நாடு இல்லையே? என்று நான் கவலைப் 
பட்டேன்.

அடுத்து, 1990 ஜனவரி 1 முதல், 1999 டிசம்பர் 31 வரை. ஐ.நா. உறுப்பு நாடுகள்,
204 ஆகி விட்டன. அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை,175 ஐத் தாண்டி விட்டது.

அடுத்து, புத்தாயிரம் பிறந்து விட்டது.2000 மலர்ந்து விட்டது. 2009 டிசம்பர் 31
வரையிலும், 213 நாடுகளுள், ஏறத்தாழ 193 நாடுகள் இறையாண்மை பெற்ற தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன.

இரண்டு நாடுகளுக்கு வாக்கு அளிக்கும் உரிமை இல்லை. வந்து அமரலாம்;
வாதங்களைப் பாக்கலாம். Observer Status.. ஒன்று, பாலஸ்தீனம்;மற்றொன்று, வாடிகன் நகரம். இன்னமும், 11 நாடுகள், ஐ.நா. மன்றத்தில் சுதந்திர நாடுகளாக உரிமை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன.வடக்கு சைப்ரஸ். துருக்கியின் பிடியில் இருந்து விடுபடத் துடிக்கின்றது.கொசோவாவின் விடுதலை இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

சோமாலியா லாண்ட், தைவான், தெற்கு ஒசேட்டியா ஆகியவை அந்த வரிசை யில் வருகின்றன. ஜார்ஜியாவில் இருந்து, சின்னஞ்சிறு பகுதியான தெற்கு
ஒசேட்டியா, நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்; தனி நாடாக ஆக வேண் டும் என்று போராடுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, அங்கே மொத்த மக்கள் தொகையே, 55 ஆயிரம் பேர்கள்தாம். 1990 ஆம் ஆண்டிலேயே,இவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்து கின்றார்கள்.

ஜார்ஜியா, ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறது. அந்த ஜார்ஜியாவில் இருந்து
இவர்கள் தனிநாடு ஆக வேண்டும் என்கிறார்கள். என்ன காரணம்? ‘நாங்கள்
தனி இனம். எங்களுக்கு என்று தனி இன வரலாறு இருக்கின்றது. ஜார்ஜியா வின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க நாங்கள் விரும்பவில்லை’ என்கிறார்கள்.
அதற்காக ஆயுதப் புரட்சி நடத்தினார்கள்.கவனிக்க வேண்டும்.

இந்தக் கட்டத்தில், ரஷ்யா, தெற்கு ஒசேட்டியாவுக்கு ஆதரவாக நிற்கின்றது.
போர் நிறுத்தம் வருகின்றது. 92 இல் அவர்கள் வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள். அதை உலக நாடுகள் ஏற்கவில்லை. இப்போது, 2008 நவம்பர் 12 இல், அதே தெற்கு ஒசேட்டியாவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. பார்வையாளர் களாக 34 பேர். ஜெர்மனி,ஆஸ்திரியா, போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச்சேர்ந்தவர்கள்.

95 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கு அளித்து, அவர்களுள் 99 விழுக்காட்டினர், தனிநாடாக ஆவதற்கு ஆதரவு அளித்தனர். இந்தப் பொது வாக்கெடுப்பை ரஷ்யா முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டது.

வெனிசூலா ஏற்றுக் கொண்டது; நிகரகுவா ஏற்றுக் கொண்டது. நேட்டோ நாடு களும், ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்க்கின்றன. பிரச்சினை அந்த அளவி லே யே இருக்கின்றது. இன்னமும்,11 நாடுகள், ஐ.நா. அங்கீகாரத்தைப் பெறக் காத்துக் கொண்டு இருக்கின்றன. 55000 மக்கள்தொகையைக் கொண்ட தெற்கு ஒசேட்டியாவும், அந்தப் பட்டியலில் இருக்கின்றது.

தோழர்களே, அயர்லாந்து நாட்டில் புரட்சி எழுந்தது. யேமன் டிவேலரா போரிட் டதும், நாடாளுமன்றத்துக்கு உள்ளே சென்றதும், இரண்டாவது முறை அவர் கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், உடனே வெளியேறியதும், விரிவாக விவரிக்க எனக்கு நேரம் இல்லை. அது தனி நாடாக மலர்ந்தது.அது ஒரு பக்கம்.



நம்பிக்கை கொள்வோம்

நான் இதையெல்லாம் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. நம்பிக்கை இழக்கக்
கூடாது.

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதைச் சிலர் விமர்சிக்கின்றார்களே, நான் சொல்லு கிறேன்; இத்தாலியின் பிடியில் இருந்து எத்தியோப்பியா விடுதலை பெற்றது. அதில் இருந்து ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியாவுக்கு, முதலில், சுயாட்சி அதிகாரம் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றினார்கள். எரித்ரியாவில் ஆயுதப்போராட்டம்தான் நடைபெற்றது.

எரித்ரியர்களை நசுக்குவதற்கு,சோவியத் ரஷ்யா, எத்தியோப்பியாவுக்கு ஆயுதம் கொடுத்தது. 1,20,000 எத்தியோப்பிய இராணுவத்தினர், எரித்ரிய விடு தலைப்படையை நசுக்க முயன்றார்கள். அதனால், எரித்ரிய விடுதலைப்படை பின்வாங்கியது. சில தோல்விகள் ஏற்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு அவர் கள் திரும்பத் தாக்கி, அசரியா என்ற இடத்தில், 40 விமானங்களைத் தவிடு பொடி யாக ஆக்கினார்கள்.அதைப்போலத்தான், கொழும்பு விமான நிலையத் தில் நின்றுகொண்டு இருந்த விமானங்களை, பிரபாகரனின் படை தாக்கி அழித்தது.

93 ஏப்ரலில் எரித்ரியாவில் பொது வாக்கெடுப்பு. தனி நாடாக அங்கீகரித்து
விட்டது. உலகம் அதை ஏற்றுக்கொண்டது; ஐ.நா. இடம் அளித்தது.இத்தனை நாடுகள் பிரிந்து இருக்கின்றதே, நான் கேட்கிறேன்; ஸ்லோவேனியாவிலே பாலியல் கொடுமைகள் நடந்தனவா? குரேஷியாவில் இனப்படு கொலை நடந்ததா? மால்டோவாவில் இனப்படுகொலை நடந்ததா? நோர்வே, ஐஸ்லாந் துக்கு என்ன குறை? எதுவும் நடக்கவில்லையே? ‘நாங்கள் தனி இனம்; எனவே, நாங்கள் பிரிந்து போகிறோம்’ என்று போய்விட்டார் களே? புதிய புதியநாடுகள் மலர்ந்து கொண்டே இருக்கின்றனவே?

அவற்றையெல்லாம் விட ஆயிரம் மடங்கு நியாயமான காரணங்கள் தமிழ்
ஈழத்துக்கு இருக்கின்றன. இலட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய் யப்பட்டார்களே?

நான் ஒரேயொரு செய்தியை உங்கள் கவனத்துக்கு வைக்கின்றேன். கிழக்குத்
தைமூரைப் பற்றிச் சொன்னேன்.இந்தோனேசிய நாடு, முதலில் போர்ச்சுகல் நாட்டின் ஆதிக்கத்துக்கு உள்ளே இருந்தது. பின்னர் விடுதலை பெற்றது. இந்தோனேசியாவின் ஆயிரக்கணக்கான தீவுகளுக்கு உள்ளே ஒரு தீவுதான் கிழக்குத் தைமூர். அது தனிநாடாக விரும்பியது. இளைஞர்கள் ஆயுதம் தாங் கிப் போராடினார்கள்.

அப்போது, முன்பு இந்தோனேசியாவை ஆண்ட போர்ச்சுகல் சொன்னது; அவர் கள் கேட்பது நியாயம். உங்களோடு இருக்க அவர்கள் விரும்பவில்லை. அவர் கள் தனிநாடாக ஆகட்டும் என்று, இந்தோனேசியாவோடு, போர்ச்சுகல் ஒப் பந்தம் போடவில்லையா? அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பொது வாக்கெடுப்பு நடந்தது; கிழக்குத் தைமூர் தனி நாடாக ஆனது.

                    தொடரும் ......

No comments:

Post a Comment