Monday, April 29, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -35

பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் மூன்றாம் கட்ட நடைபயணத்தை, 13ஆம் நாளான நேற்று (28.04.13) குமாரபாளையத்தில் தொடங்கிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பள்ளிப்பாளையம் வழியாகச் சென்று இரவு ஈரோட்டில் நிறைவு செய்தார். வரும் வழியில்,

ஈரோடு கருங்கல்பாளையம் பட்டாளி படிப்பகத்தில் நடைபெற்ற இந்த உண் ணாவிரத போராட்டத்தில் பட்டாளிபடிப்பகம், கலைத்தாய் அறக்கட்டளை, குக்கூ குழந்தைகள் அமைப்பு, நீர்துளிகள் உள்ளிட்ட அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இந்த போராட்டத்தை காந்திவாதி சசிபெருமாள் தொடங்கி வைத்தார். வக்கீல் மோகன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை மதிமுக பொதுசெயலாளர் வைகோ பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.




அவர்கள் மத்தியில் பேசிய வைகோ, “என் அரசியல் வாழ்க்கையில் எத்தனை யோ போராட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். குழந்தைகள் போராட்டத்தை இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். காலையிலிருந்து சாப்பிடாமல் இவ்வளவு நேரம் பொறுமையாக இருக்கின்றீர்கள். உங்களிடம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இந்தக் குழந்தைகளுக்காகவாவது மதுக்கடைகளை மூடுங்கள். தமிழகத்தில் சராசரியாக 1 கோடி பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்றுவதற் காகத்தான் நான் நடக்கிறேன்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். மாணவச் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், வரும் வழியெங்கும் மதுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகிறேன். அப்போது பெண்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு மதுவை ஒழிக்க வேண்டும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். அதற்காகவாவது தமிழகத்தில் மதுக்கடைகளை பூட்ட வேண்டும். வீட்டில் உங்கள் தந்தை மதுப்பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களைத் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் மதுப்பழக்கத்தை விட்டுவிட மாட்டார்கள். மதுக்கடைகளை அடைத்தால் ஒழிய, இந்தப் பழக்கத்தை விட முடியாது” என்று வைகோ பேசினார்.

பின்னர், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பழச்சாறு கொடுத்து உண் ணாவிரதத்தை முடித்து வைத்த வைகோ, நடைபயணத்தை தொடர்ந்தார். ஈரோட்டில் இன்று இரவு 9 மணிக்கு நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

No comments:

Post a Comment